
Post No. 8736
Date uploaded in London – –25 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொடர்ந்து இலக்கண விஷயங்களைக் காண்போம்; இறுதியில் ஒவ்வொன்றுக்கும் உதாரணம் கொடுத்து அது தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் எப்படி அழைக்கப்படுகிறது என்று காட்டவும் ஆசை. முடிந்தவரை செய்கிறேன்
டாக்டர் K.மீனாட்சி, உலக மஹா சாதனை செய்து இருக்கிறார். பாணினியின் அஷ்டாத்யாயியில் உள்ள 4000 சூத்திரங்களையும் மொழிபெயர்த்து சுருக்கமான உரைகளையும் கொடுத்து இருக்கிறார். மூன்று பாகங்களாக வெளிவந்து இருக்கிறது. தொல்காப்பியத்தையும் கற்றவர் அவர். இந்தியாவில் தமிழ் மட்டும் படித்தவன் அரைவேக்காடு. சம்ஸ்கிருதம் மட்டும் படித்தவனும் அரைவேக்காடு. இரண்டு மொழிகளையும் கற்றவர்களே அறிஞர்கள் ; அந்தக் காலத்தில் பி.எஸ். சுப்ரமண்ய சாஸ்திரிகள் போன்றோர் இருந்தனர். இக்காலத்தில் டாக்டர் மீனாட்சி, டாக்டர் இரா. நாகசாமி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய அறிஞர்களே உள்ளனர்
டாக்டர் என்ற பட்டத்துடன் தமிழ் மொழி பற்றி நூல்களை எழுதிய சிலரைக் கண்டு கண்டு சிரிப்புதான் வருகிறது. கிரேக்க மொழி செத்துப் போச்சு ; ஹீப்ரு மொழி செத்துப் போச்சு , லத்தின் மொழி செத்துப் போச்சு, ஸம்ஸ்கிருத மொழி செத்துப் போச்சு என்று உளறு கின்றனர். கிரேக்க மொழி, ஹிப்ரு மொழி பற்றி விக்கிபீடியாவில் கூட உள்ளது. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை ‘தமிழ் வாழ்த்து’ என்று எழுதி வரிக்கு வரி சம்ஸ்கிருதத் சொல்லை புகுத்தி தமிழர்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கியது போலத்தான் இதுவும் .

நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்தபோது தமிழ் வினைச் சொற்கள் 75-0ஐப் பட்டியலிட்டேன். ஆனால் அவை அனைத்தும் தற்கால வினைச் சொற்கள். ஸம்ஸ்க்ருதத்திலோ 2700 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 வினைச் சொற்களைப் பட்டியலிட்டு விட்டனர். அப்போது கிரேக்க, எபிரேய, சீன, பாரசீக மொழிகளுக்கு இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. தமிழும் லத்தினும் அப்போது இருந்ததற்குச் சான்றுகள் இல்லை.
இதோ 1970 வினைச் சொற்களின் வகைகள்
தாது பாடம்
பாணினி தனது இலக்கணத்தில் விகரணங்களையும் CONJUGATIONAL SIGNS , அவைகளுக்குரிய ஓட்டுக்கள், அவைகளை நீக்குதல் , ஆகியவைகளை பற்றிப் பேசும்போது அவைகளை தாதுக்களின் வகுப்பு மூலம் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக 2-4-72, 2-4-75, 3-1-69, 3-1-73, 77, 78, 79, 81 ஆகிய சூத்திரங்களைக் குறிப்பிடலாம்
ஸம்ஸ்க்ருத மொழியில் காணப்படும் தாதுக்கள் அனைத்தையும் அவைகளையடிச் சொல்லாக மாற்றும்போது அவைகளோடிணைக்கப்படும் விகரணங்களின் அடிப்படையில் பத்து வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு தாது பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இத் தாதுக்களின் மொத்த எண்ணிக்கை 1970 ஆகும்.
பத்து வகைகளும் அதிலுள்ள தாதுக்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு—

தாது – வினை அடிச் சொல் , வேர் ROOT
1.பூ தாதி வகுப்பு – 1059
2.அ தாதி வகுப்பு – 72
3.ஹூ தாதி வகுப்பு – 25
4..தி வாதி வகுப்பு – 137
5. ஸ் வாதி வகுப்பு – 34
6.து தாதி வகுப்பு – 143
7.ரு தாதி வகுப்பு – 25
8. த னாதி வகுப்பு – 10
9. க்ரீ யாதி வகுப்பு – 81
10.கரா தி வகுப்பு — 395
மொத்தம் – 1970
பாணினி தனது சூத்திரங்களின் தாதுக்களை ‘கரம்’ அல்லது ‘இத்’ – தொடர்பாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய ‘கரம்’ பெற்ற தாதுக்கள் ‘இத்’ – தைக் கொண்ட தாதுக்கள் எவையெவை என்பதை அறிய தாது பாடத்தின் உதவியைத்தான் நாட்டை வேண்டியிருக்கும் ஏனென்றால் தாது பாடத்தில்தான் இவைகளின் பட்டியல் இருக்கிறது . இதனால் அதன் முக்கியத்துவம் விளங்குகிறது .
இதைப்போன்று 4-1-76 தொடங்கி ஐந்தாம் அத்தியாய இறுதிவரையில் ‘தத்தித’ ஓட்டுக்களைப் பற்றி பாணினி பேசுகிறார். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட வகுப்பின் பெயரை மட்டும்தான் குறிப்பிடுகிறார். அக்குறிப்பிட்ட வகுப்பினுள் அடங்கும் சொற்கள் எவை என்பதை அறிய கண பாடத்தின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும் ..
கணபாடம்
தாது பாடத்தில் தாதுக்களின் வகுப்பைக் கூறியிருப்பது போல், கணபாடத்தில் பெயர்ச் சொற்களை குறிப்பிட்ட ஒரு வரிசைக்ரமப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு வகை —
1. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைக்கப்பட்ட சொற்கள்
2.பெயர்ச் சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் அமைக்கப்பட்டவை .

யார் எழுதியது ?
தாது பாடம், கண பாடம் ஆகிய இரண்டின் ஆசிரியர் பாணினியா அல்லது வேறு ஒருவரா என்ற விவாதம் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது . ஆயினும் இவை பாணினி காலத்தில் நன்கு அறியப் பட்டிருந்தன. அஷ்டாத்யாயியை விளங்கிக் கொள்ள இவை இன்றியமையாதவை.
tags – இலக்கண அகராதி –7,கண பாடம், தாது பாடம்
TO BE CONTINUED……………………………
