WRITTEN BY LONDON SWAMINATHAN AND
Post No. 10,352
Date uploaded in London – – 18 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே….”
—புறம் 378 ஊன்பொதி பசுங்குடையார்
Purananuru , Sangam Literature, verse 378
Xxx
அரனுறை தருகயிலையை நிலைகுலைவது செய்த தசமுகனது
கரமிருபது நெரி தரவினி றுவிய கழலடியுடையவன்
–திருவீழிமிழலை , சம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை
xxx
மலையான் மகளஞ்சவ் வரை எடுத்தவ் வலியரக்கன்
றலை தோளவை நெரியச் சரணுகிர் வைத்தவன்
–திருவேணுபுரம்
xxx
இசைகயிலை யையெழுதரு வகையிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல் பணி கொலுமவ னுறை பதி
இவ்வாறு ஒவ்வொரு பதிகத்திலும் இராவணன் கதறியதும், சிவ பிரான் அருளியதும் சம்பந்தர் தேவாரத்தில் காணக்கிடக்கிறது . ராவணன் ஒரு கிரிமினல் CRIMINAL என்பதால் அவனை நிசி சரன் NIGHT WALKER (ராத்திரியில் ஆட்டம்போடும் கள்ளன் ) என்றும் திட்டுகிறார் திரு ஞான சம்பந்தர்
–திருச் சிவபுரம்
இலங்கையில் இராவணன் விமானம் பற்றி ஆராய்ச்சி நடப்பதாக ஒரு நல்ல செய்தியை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. வரவேற்கத் தக்க ஆராய்ச்சி. அத்துடன் சில அசிங்கமான செய்தியும் வந்துள்ளது. இலங்கை ஒரு விண் கோளுக்கு ராவணன் பெயரை சூட்டி இருப்பதாகவும் அந்தப் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. அது உண்மையானால் இலங்கை அரசு சொல்லும் செய்தி இதுதான் : “பொம்பளைப் பொறுக்கி இராவணன் வாழ்க ; எல்லோரும் அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு வாங்க” . இது நல்லதல்ல. இதைத்தான் தமிழ் நாட்டு திராவிடங்கள் சொல்லுகின்றன. இதை இலங்கை அரசு பின்பற்றுவது ஆபத்தானது உடனே மாற்ற வேண்டும்.
தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் ஒவ்வொரு பதிக்கத்திலும் ராவணனை தாக்குவதும் ஆழ்வார்கள், இலங்கை அரக்கனைக் கண்டித்ததும் தமிழர்கள் நன்கு அறிந்ததே. இதற்கு நேர் எதிரானது புத்த மத வெறியர்களின் போக்கு. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய வெறியை இலங்கை இன்றும் கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது
மேலும் சில விஞ்ஞான உண்மைகளை ஆராய்வோம்:
இராவணன் விமானம் விட்டானா? இது என்னடா புதுக்கதை ?
உலகில் 3000 வகை ராமாயணங்கள் உண்டு (ராமன் பற்றிய பஜனைப் பாடலில் வரும் , கீர்த்தனைகளில் வரும் புதிய செய்திகளையும் சேர்த்து). புறநானூறு, அகநானூறு, ஆழ்வார் பாடல்களில் வரும் பல செய்திகள் கம்பன், வால்மீகி ராமாயணத்தில் இல்லை!) ஆனால் ராவணன் கொடியவன், ராமன் நல்லவன் என்ற அடிப்படை விஷயங்களில் மாற்றம் இராது.
உலகில் வால்மீகி எழுதிய ராமாயணம்தான் ORIGINAL ஒரிஜினல்; கம்பனும் தனக்கு கிடைத்த மூன்று ராமாயணங்களில், வால்மீகியையே தான் பின்பற்றுவதாகவும் சொல்கிறான். வால்மீகி ராமாயணத்தில் குபேரன் வைத்திருந்த புஷ்பக விமானத்தை இராவணன் பறித்துக்கொண்ட செய்தியும், பின்னர் அதை விபீஷணன் ராமணனுக்கு அயோத்தி செல்ல கொடுத்ததும் தெளிவாக உள்ளது. மேலும் அது அமெரிக்க , ரஷ்ய விஞ்ஞானிகளை பிரமிக்க வைக்கும் விமானம். ஆட்கள் ஏற ஏற விரிவடையும்; THOUGHT POWERED எண்ணத்தால் பறக்கும். ஐன்ஸ்டைன் தோற்றுப்போனார். அப்படிப்பட்ட விமானத்தை செய்தவன் இமயமலையில் வாழும் குபேரன். . இதை மறைக்கிறது இலங்கை அரசின் ராவண விண்கோள் செய்தி. !
சங்க இலக்கியத்தில் ராமன் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
4 Jun 2014 — Tagged with சங்க இலக்கியத்தில் ராமன் … தமிழ் ராமாயணம் வால்மீகி, கம்பன் சொல்லாத …
பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர் …
https://tamilandvedas.com › பிரா…
13 Nov 2017 — அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் … ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.
18ஆவது நூற்றாண்டில் ஏதோ சிங்களர்கள் எழுதிய சுவடியில் மயில் போன்ற வடிவில் விமானம் இருப்பதாகவும் அது பற்றி ஆராய்வதாகவும் ஒரு புதுக்கதை! அதுவும் ஒரிஜினல் அல்ல. படிக்காத மூடர்களுக்கு இதை மட்டும் காட்டினால் உண்மைகள் மறைக்கப்படும்; மறக்கவும்படும்.
அது என்ன மறக்கப்படும், மறைக்கப்படும் உண்மைகள்?
ரிக் வேதத்திலேயே மனிதர்கள் ஒளி வடிவில் பறக்கும் செய்திகள் உள்ளன. ராமாயணத்துக்குப் பின்னர் வந்த மஹாபாரத வன பர்வத்தில் அர்ஜுனன் வெளி உலகிற்குச் சென்று வந்த செய்தி விரிவாகவே உள்ளது. எண்ணத்தின் மூலம் விமானம் பறக்க முடியும் என்ற செய்தியை உலகப் புகழ்பெற்ற நரம்பியல் பொறியியல் NEURAL ENGINEERING பத்திரிக்கை வெளியிட்டதை 2013ம் ஆண்டில் இதே பிளாக்கில் நான் வெளியிட்டுள்ளேன்.
ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? – Tamil …
https://tamilandvedas.com › ராமர…
·
22 Jun 2013 — ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் …
விமானங்கள் பற்றி கம்பன் தரும் அதிசய தகவல்கள் …
https://tamilandvedas.com › விம…
·
31 Jan 2019 — ….ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து … ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?
How did Rama fly his Pushpaka Vimana/ Plane? – Tamil and …
https://tamilandvedas.com › 2013/06/22 › how-did-ram…
22 Jun 2013 — Ramayana wonders part -8. How did Rama fly his Pushpaka Vimana/ Plane? 1.This is the first time a flying robot has been controlled by human …
XXXX
XXXX
புத்த மதத்தினர் என்ன செய்தார்கள் ?
2300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் உலவி வந்த எல்லா பஞ்ச தந்திரக் கதைகள், புராண இதிஹாஸக் கதைகளை, போதிசத்துவர் பெயரில் ஏற்றி, ஜாதகக்கதைகள் என்ற பெயரில் கொடுத்தனர். அதில் தசரத ஜாதகம், பாண்டவர் பற்றிய ஜாதக்கதைகளும் உண்டு. அதுமட்டுமல்லாமல் இந்து விக்ரகங்கள் வழிபட்ட இடங்களில் புத்தர் சிலையை வைத்து மாற்றினார்கள். இது அதிகம் நடந்ததும் இலங்கையில்தான் .
அசோகன் என்ற மாமன்னன் நல்ல எண்ணத்தின் பேரில் தனது மகன் மஹேந்திரனையும் மகள் சங்க மித்திரையையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தான். ஆனால் அந்த நல்ல எண்ணம் புத்த பிட்சுக்களின் மண்டையில் ஏறவில்லை. இன்றும் சீனாக்காரன் வாழ்க என்று சொல்லும் அளவுக்குப் போய்விட்டது!
XXX
மீண்டும் விஞ்ஞானச் செய்திக்கு வருவோம்
ராமாயண மஹாபாரத விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தால், போஜன் எழுதிய வைமானிக சாஸ்திரம் முதலியன உள்ளன. உதயணன் முதலியோர் மயில் வடிவ விமானத்தில் பறந்த செய்தி உளது. அது சீவக சிந்தாமணியிலும் உளது. ஆக மயில் வடிவ விமானம் என்பதும் சிங்கள ஒரிஜினல் அல்ல. கள்ளக் காப்பி! யாரோ ஒருவர் சிங்கள மொழியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூலை வைத்து, உண்மையைத் திரித்து ,இராவணன் ஜிந்தாபாத்; பொம்பளைப் பொறுக்கி ஜிந்தாபாத்; என்று சொல்லும் இலங்கை ‘ மக்கு’-களுக்கு நல்ல புத்தி வர இராமபிரானை வேண்டுவோம் .
ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை
https://tamilandvedas.com › ராவ…
24 Jun 2014 — Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் கட்டுரை …
ராவணன் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ர…
·
this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. வீணைக் கொடியுடைய வேந்தனே!
இராவணன் யார் ?
இராவணன் சிவ பக்தன் ; வீணை வாசிப்பதில் மன்னன்; உலகம் சுற்றும் வாலிபன்; அடிக்கடி கோதா வரிக் கரை க்குச் சென்று பெண்களிடம் சில்மிஷம் செய்தவன், கார்த்த வீர்ய அர்ஜுநன் என்பவானால் நை யப் புடைக்கப்பட்டவன் ; எங்கெங்கு அழகிகள் கிடைத்தார்களாளோ அவர்களை எல்லாம் கடத்திக் கொண்டு வந்தவன். அராஜகத்தின் சின்னம்; அடக்கமின்மையின் மறு உரு ; சிவபெருமானின் கயிலை மலையை ஆட்டலாம் என்று நினைத்து முயன்று கை நசுங்கிக் கதறியவன் ; 50 சதவிகித பிராஹ்மணன்; 50 சதவிகித அரக்கன்; அகஸ்தியருடன் வீணைப் போட்டியில் தோற்றவன். பாண்டிய மன்னனுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவன்.
இவ்வளவு செய்திகளைச் சொல்லும் தமிழ் சம்ஸ்கிருத நூல்கள், நச்சினார்க்கினியர் உரைகள் எல்லாம் சிங்கள படைப்புக்கு முன்னர் வந்தவை. வால்மீகி ஒருவர்தான் அவன் விமானம் பற்றிய செய்தியையும், குபேரனிடமிருந்து அதை அவன் பறிமுதல் செய்ததையும் தெளிவாகக் கூறுகிறார்.
ஆகவே குபேரன் வைத்திருந்த புஷ்பக விமானத்தை அவன் பறித்து வந்ததை மறைக்கக்கூடாது ; மயில் வடிவ விமானம் முன்னரே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதை மறைக்கக் கூடாது
அமெரிக்காவில் ஹூஸ்டன் நுண்கலை மியூசியத்தில் கூட சிவபிரான் மயில் வடிவ விமானத்தில் பறக்கும் ஓவியம் உளது
எல்லாவற்றுக்கும் மேலாக இராவணனை வலியகை அரக்கன் என்று சங்க காலப் புலவர் சாடுவதை மறைக்கக் கூடாது. இராமனை 2000 ஆண்டுப் பழமை உடைய சங்க இலக்கியப் பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் முதலிய காவியங்கள் பாராட்டுவதை மறைக்கக்கூடாது ; எல்லா தமிழ்ப் புலவர்களாலும் கண்டிக்கப்பட இராவணன் பெயரை விண் கோளில் இருந்து நீக்க வேண்டும். இந்தியா போல வேத, புராண இதிஹாச பெயர்களை சூட்ட வேண்டும்; தொலைந்து போகட்டும்; புத்தர் பெயரையாவது வைத்து மகிழட்டும்.
–subham–
NEWS PAPER REPORT FROM NOVEMBER 16,2021
ராவணனின் விமானம் குறித்து ஆய்வு; இந்தியாவும் இணைந்துகொள்ள இலங்கை அழைப்பு
இரண்டு வருடங்களுக்கு முன்பு, விமானப் போக்குவரத்து வல்லுநர்கள், வரலாற்றாச்சியர்கள், தொல்லியலாளர்கள், அறிவியலாளர்கள், புவியியலாளர்கள் பங்கேற்ற மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. அதில், அந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான யோசனை பிறந்தது. அந்த மாநாட்டில் ராவணன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளான் என்று முடிவுக்கு வந்தனர்.
அந்த மாநாட்டுக்குப் பிறகு, இதுதொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு 5 மில்லியன் இலங்கை ரூபாயை முதற்கட்ட நிதியாக அப்போதைய அரசு ஒதுக்கியது. இதுகுறித்த பேசிய இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் முன்னாள் அதிகாரி ஷாஷி தனதுங்கே, ‘கொரோனா ஊரடங்கின் காரணமாக அந்த ஆய்வு அப்போது நிறுத்தப்பட்டது. தற்போதைய ராஜபக்ச தலைமையிலான அரசும் இந்த ஆய்வை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதி இதனைத் தொடர்வதற்கு தற்போதைய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகள் அடுத்த ஆண்டுகள் தொடங்கும் என்று கருதுகிறேன்’ தெரிவித்தார். ஷாஷி வரலாற்றின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். ராவணன் காலத்துக்கு விமான நிலையம் குறித்து ஆய்வு செய்வதற்கு இலங்கை முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து டனதுங்கே பேசும்போது, ‘ராவணன் புராணக் கால கதாப்பாத்திரம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். அவர் நிஜ அரசன். அவர் உண்மையில் விமானம் மற்றும் விமான நிலையம் வைத்திருந்தார். அது தற்போதைய காலத்து விமானம், விமான நிலையம் போன்றதல்ல. பழங்கால இலங்கை மக்கள் மற்றும் இந்தியர்கள் சிறப்பான தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்துள்ளனர். இதுதொடர்பாக நாம் சிறப்பான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இருநாடுகளுக்கும் முக்கியமாக இருக்கும் இந்த ஆய்வில் இந்தியாவும் பங்கற்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கைவைத்துள்ளார். இந்த ஆய்வுக்கு ஆதரவாக ஷாஷி மட்டும் பேசவில்லை. இலங்கையின் முக்கியமான சுற்றுச்சூழல் கட்டிடக் கலைஞர் சுனிலா ஜெயவர்த்தனே எழுதிய த லைன் ஆஃப் லங்கா – தீவின் கட்டுக்கதைகள் மற்றும் நினைவுகள் என்ற புத்தகத்தில் ராவணனின் விமானச் சேவை குறித்து எழுதியுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த சுனிலா, ‘தற்போதைய உலகில் ராவணனின் விமானம் என்பது கற்பனையானது. தற்போதுள்ள படித்த இளைஞர்கள் எல்லாருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் கடந்த நூற்றாண்டில் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியும். ஆனால் மேற்கத்திய நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவர்களாக இருந்துள்ளனர் என்ற கருத்து கடந்த சில நூற்றாண்டுகளாக நம் மனதில் பதிந்துள்ளது. பண்டைக் கால விமானம் குறித்த எழுத்துகள் மிகவும் விரிவானவையாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உள்ளது. ஆனால், அது கட்டுக்கதை என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். அவருடைய மாமா இலங்கையின் நவீன விமானி மறைந்த ரே விஜிவர்த்தனேவும் ராவண கால விமானப் போக்குவரத்து என்ற கருதுகோளை நம்புவதாக தெரிவித்தார். சுனிலாவின் கூற்றுப்படி, தொட்டுபொலகந்தா, உசன்கோடா, வீஹீரங்கதோடா, ருமசல்லா, லகீகலா ஆகிய பகுதிகளில் விமானநிலையம் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார். ராவணன் மற்றும் அவனுடைய ஆட்சி குறித்து இலங்கையில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ராவணனை பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய பெயரில் செயற்கைக்கோளை ஏவி ராவணனுக்கு பெருமை சேர்த்துள்ளது இலங்கை அரசு.
–SUBHAM—
TAGS- ராவணன் விமானம், ஆராய்ச்சி , விண்கோள் ,இலங்கை அரக்கன், சம்பந்தர் ,கடும் தாக்கு,