குழந்தை பெற , செல்வம் செழிக்க, கல்வி சிறக்க  இலவச புஸ்தகம் (Post No.10,336)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,336

Date uploaded in London – –   14 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகில் நல்லோருக்கு குறைவில்லை .கவசம் செய்யும் அற்புதங்கள் பற்றி நான் இந்த ‘பிளாக்’கில் எழுதிய கட்டுரைகளைப் படித்த பின்னர் திரு. வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி கவச புஸ்தத்தை அச்சிட்டு இலவசமாக வழங்க முன் வந்துள்ளார்.

எதையும் இலவசமாகப் பெறக்கூடாது என்பது என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்ட விஷயம் .மதுரை எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவி வகித்ததாலும், மதுரை தினமணி பொறுப்பு ஆசிரியர் (V SANTANAM, NEWS EDITOR, Dinamani, Madurai) பதவி வகித்தாலும் வீட்டிற்கும், தினமணி அலுவலகத்துக்கும் வந்து புஸ்தகங்களை வழங்குவார்கள். தினமணி மதிப்புரை பகுதிக்கு இரண்டு புஸ்தகங்கள் கொடுக்கவேண்டும். அதைக் கொடுக்கச் சொல்வார் .பிறகு எனக்குக் கொடுக்கும் புஸ்தகத்துக்கு இதோ பணம் என்று கொடுப்பார். அவர்கள் பதறிப் போய் காலைத் தொட்டுக்கும்பிட்டு உங்கள்  கைகளில் எங்கள் புஸ்தகம் தவழ்வதே எங்கள் பாக்கியம் என்றெல்லாம் புகழ்வார்கள்; என் தந்தை வெ .சந்தானம் விடாப்பிடியாக கைகளில் பணத்தை திணித்துவிடுவார். அவர்கள் கண்களில் ஆனந்தக்  கண்ணீர் வருவதை சில நேரங்களில் நான் பார்த்ததுண்டு .

இப்போது வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட புஸ்தகத்துக்கு லாப விலை தரவேண்டியதில்லை ;தபால் செலவு முதலியவற்றையாவது அளிக்க வேண்டும் என்பது என் சொந்தக் கருத்து

காலச் சுவடு பதிப்பகம் வெளியிட்ட , திரு கைலாச நாத குருக்கள் எழுதிய ‘சைவத் திருக்கோயில் கிரியை  நெறி’ என்ற புஸ்தகத்தை லண்டன் வாழ் திரு பத்மநாத அய்யர் அனுப்பிவைத்தார். தபால் செல்வையும் சேர்த்து உடனே 15 பவுண்டுகள் அனுப்பினேன்.

ஐயரைத் தெரியாத இலங்கை புஸ்தக அன்பர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் வீட்டிற்குள் நுழைந்தால் புஸ்தகத்தை மிதிக்காமல் இருப்பதற்காக புஸ்தகக் கடல் மேல் நீச்சல் அடித்துதான் உள்ளே போக முடியும். வயது எண்பதைத் தாண்டிவிட்டதால் எல்லா புஸ்தகங்களையும்  இலங்கை நூலகங்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வருவதாகச் சொன்னார். அதைக் கப்பலில் அனுப்ப ஒவ்வொரு ‘லாட்’டுக்கும் 50 பவுண்ட் செலவாகிறது என்றார் . உடனே இந்த நற்பணியில் என் பங்கும் இருக்கட்டும் என்பதற்காக 50 பவுண்டு நன்கொடை அனுப்பினேன். இவை எல்லாம் ஒரிரு மாததங்களுக்குள்  நடந்தது . ஆக புஸ்தத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே நாம் சொல்லும் செய்தி.

இலவச புஸ்தகத்தை வெளியிட்டவர் நமக்காக தபால் செலவையும் செய்ய முன்வந்தாலும் நாமும் அவருக்கு உதவலாமே.

இதோ அற்புதம் நிகழ்த்தும் விநாயக கவசம் ,சிவ கவசம், சக்தி கவசம். சகல கலா வல்லி  மாலை , மக்கட் பேறு நல்கும் மக்கட் செல்வ  மாலை, இலக்குமி துதி , நல்கும் வேணுகோபால் கிருஷ்ண மூர்த்தியின் தொடர்பு டெலிபோன் எண் ;   புஸ்தகத்தைப் பெறும் வழிமுறைகளை அவரே செப்புவார்

Venugopal Krishnamoorthi <venugpl60@gmail.com>

 My mobile number for contact would be +91 94434 86117

With Best Regards,

K.Venugopal

PLEASE READ:–

கவச அற்புதங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

24 Aug 2021 — kanaka dhara – shower of gold coins. Compiled BY LONDON SWAMINATHAN. Post No. 10,014. Date uploaded in London – 24 AUGUST 2021.விநாயக கவச அற்புதங்கள் ; கவசம் எழுதியது யார் …

https://tamilandvedas.com › விந…

14 Aug 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. ஹெல்த்கேர் ராஜா, 13 …

–SUBHAM-

tags- இலவச புஸ்தகம், கவசம், மக்கட் செல்வ மாலை, கவச அற்புதம் , வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி