
Post No. 9690
Date uploaded in London – –5 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
HOMER

ஹோமர்- கிரேக்க நாட்டின் புகழ்பெற்ற புலவர். இலியட் (ILIAD) ஒடிஸி (ODYSSEY) ஆகிய இரண்டு காவியங்கள் இவரது படைப்புகள். ஆடிஸி என்றும் சொல்லுவார்கள். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இரண்டுவித உச்சரிப்புகள்.
எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னால் இவர் வாழ்ந்ததால் அவர் கைப்பட எழுதியிருக்க வாய்ப்பில்லை. அவர் சிந்தனையில் உதித்த கவிகள் கர்ண பரம்பரையாகி, செவிவழி மூலம் வந்திருக்க வேண்டும்.
அவருடைய படைப்புகளில் மிக நீண்டது இலியட். இது 24 புத்தகங்களை உடையது. அந்தக் காலத்தில் எல்லாரும் வட்டமாக அமர்ந்துகொண்டு ஒருவர் பாடியவுடன் மற்றவர் திரும்பப் பாடுவார்கள். இவ்வழியிலேயே ஹோமரின் காவியங்களும் பரவின.
ஹோமர்- இறந்த 300 ஆண்டுகளுக்குப் பின்னரே இரண்டு காவியங்களும் எழுத்து வடிவில் கொண்டு வரப்பட்டன.
TROY நகரம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஒடிஸியஸ் மேற்கொண்ட பயணங்களை “ஒடிஸி” கூறுகிறது.
கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் (TROJANS) இடையே நடந்த போரை “இலியட்” வருணிக்கிறது.
கிரேக்க நாட்டுக் கவிஞர்களில் ஹோமர்தான் மிகவும் பிரபலமானவர். ஆனால் அவரைப் பற்றிய முழுவிவரங்களும் கிடைக்கவில்லை. ஹோமரைப் பற்றி பல வரலாறுகள் இருக்கின்றன. அவை உண்மையா என்பதை அறியமுடியவில்லை.
இலியட்டும் ஒடிஸியும் இரண்டு ஆசிரியர்களால் படைக்கப் பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
துருக்கியிலுள்ள ஸ்மிர்னா (SMYRNA) என்ற இடத்தில் ஹோமர் பிறந்ததாகச் சிலரும் CHIOS தீவில் (ISLAND OF CHIOS) பிறந்ததாகச் சிலரும் கூறுகின்றனர்.
ஆனால் இவர் கியோஸ் தீவில் நீண்டகாலம் வழ்ந்ததும் இவர் கண் பார்வையற்றவர் என்பதும் உறுதியாகத் தெரிகிறது.
பழங்கால கிரேக்கத்தில் வாழ்ந்த சில பாடகர்கள், கவிஞர்கள் கண் பார்வையற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
MY OLD ARTICLES ON HOMER


ஹோமர் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag
12 Sept 2020 — Tagged with ஹோமர் … tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஹோமர் என்ற அந்தகக் கவிஞர் (blind poet Homer) எழுதிய இலியட், ஒடிஸி /ஆடிஸி (அமெரிக்க …
ஹோமர், உமர் கய்யாம் … – Tamil and Vedas
https://tamilandvedas.com › ஹ…
11 Nov 2019 — Blind Poet Homer of Greece. Compiled by London swaminathaan. swami_48@yahoo.com. Date: 11 NOVEMBER 2019. Time in London – 7-15 am. Post No. 7202. Pictures are taken from various sources; beware of copyright …
புத்தகம் எழுதுவது … – Swami’s Indology Blog
https://swamiindology.blogspot.com › …
1 Jun 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact … இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்).
—SUBHAM—


tags-இலியட், (ILIAD), ஒடிஸி, (ODYSSEY), ,ஹோமர்,