மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? (Post.8784)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8784

Date uploaded in London – – 7 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

5-10-2020 அன்று ஞானமயம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ((Facebook.com/Gnanamayamஒளிபரப்பப்பட்ட கேள்வி – பதில்

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா?

ச.நாகராஜன்

QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN; THANKS

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? என்ற கேள்வி வந்துள்ளது.

பதில் : தவறாக உச்சரிக்காமல் உரிய முறைப்படி ஓதினால் நிச்சயம் அதற்குரிய பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது தான்.

விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மந்திரம் என்றால் என்ன?

மனனாத் த்ராயதே இதி மந்த்ர: மனத்தினால் மீண்டும் மீண்டும் சொல்லி அதாவது ஜபித்து உய்வைப் பெறுகின்ற ஒன்றே மந்திரம் ஆகும்.

சில மந்திரங்கள் பிரார்த்தனை மந்திரங்கள். சில பலன்களை எதிர்பார்த்து ஓதப்படும் மந்திரங்கள்.

இவற்றை குரு மூலமாகக் கற்று ஓதுவதே சிறப்பாகும்.

ஒவ்வொரு  மந்திரத்திற்கும் ஆறு பகுதிகள் உண்டு.

  1. மஹரிஷி – குறிப்பிட்ட ஒரு மந்திரத்தைக் கண்டவர்.
  2. ஸ்வரம் – அந்த மந்திரத்திற்கான குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது இசை அமைப்பு
  3. தேவதா – அந்த மந்திரத்தின் அதி தேவதை
  4. பீஜம் – மந்திரத்தின் வித்து போன்ற ஜீவ ஒலி.
  5. சக்தி – மந்திரத்திற்கான திவ்ய சக்தி
  • கீலகம் – கீலகம் என்றால் தூண் என்று பொருள்படும். அதை ஓதுபவர் இடைவிடாது முயன்று மந்திரத்தை அப்யசிப்பதை இது குறிக்கிறது.

இவை அனைத்தையும் அறிந்தவரே குரு. குறிப்பிட்ட மந்திரத்தை அப்யசித்து சித்தி பெற்று, உரிய சீடர்களுக்கு அவர் வழங்குவார்.

உச்சரிப்பு என்பது மிக முக்கியம். வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபு, வரைமுறை உள்ளது.

உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் ஆகிய இந்த நான்கும் உச்சரிப்பில் கையாளப்படுகின்றன.

உதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்தில் உச்சரிப்பதாகும்

அனுதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு  மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.

ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

தீர்க்க ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

மந்திரத்தில் ஒலி அதாவது உச்சரிப்பு மிக முக்கியமானது என்பதை உணர்த்த யஜூர் வேதத்தில் வரும் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஒரு சமயம் இந்திரனைக் கொல்ல எண்ணிய விருத்ராஸுரன் என்னும் அசுரன் தவம் செய்து இறைவனின் தரிசனத்தைப் பெற்றான்.

‘இந்த்ர சத்ரு வர்தஸ்வ’ என்று இந்திரனைக் கொல்ல வேண்டி அவன் கோரியது, ஸ்வர பேதத்தால் – அதாவது ஒலியை மாறுபட்டு உச்சரித்ததால் – இந்திரன் கொல்லும்படியான சத்ரு என்று ஆகியது; அவன் இந்திரனால் கொல்லப்பட்டான்.

இன்னும் ஒரு சம்பவம்.

தேவர்களை இல்லாமல் செய்வதற்காக பிரம்மனை நோக்கி கும்பகர்ணன் ஒரு பெரும் யாகம் செய்தான். பிரம்மா தரிசனம் தந்தார். அவரிடம் அவன் கேட்க நினைத்தது நிர்தேவத்வம் – அதாவது தேவர்கள் இல்லாத நிலை. ஆனால் அவன் கேட்டதோ நித்ராவத்வம். எப்போதும் தூங்குவது என்பதை! பிரம்மா அவன் கேட்டதைத் தந்தார்.பின்னர் அவன் வேண்டுதலின் பேரில் எப்போதும் தூங்காமல் ஆறு மாத தூக்கம், ஆறு மாத விழிப்பு என்ற நிலையைப் பெற்றான்.

ஆகவே சொல்லுக்கு சொல் தனித் தனியே பொருள் உண்டு.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை 170 விதமாக உச்சரிக்க முடியும் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னிபெஸண்ட் அம்மையாரோ இந்த பிரணவ மந்திரத்தை 250 விதமாக உச்சரிக்க முடியும் என்று கூறுகிறார். ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் பலன் வெவ்வேறாக இருக்கும். அதாவது அடையக் கூடிய சித்திகள் வேறு வேறாக இருக்கும்.

மந்திரத்தில் பிரதானமாக இருப்பது ஒலி. ஒலிக்குச் சக்தி உண்டு என்பதை க்ளாட்னி என்ற விஞ்ஞானி நிரூபித்திருக்கிறார்.

ஒரு தகட்டின் மீது நுண்ணிய  மணலைப் பரப்பி அதன் ஓரத்தில் வில் ஒன்றை இணைத்து வில்லை அதிரச் செய்வதன் மூலம் மணல் துகள்கள் அசைந்து அதிர்விற்கு ஏற்பப் பல்வேறு வடிவங்கள் உருவாவதை அவர் நிரூபித்துக் காட்டினார். இந்த வடிவங்களுக்கு க்ளாட்னி சித்திரங்கள் என்று பெயர். Chladni Patterns என்று  youtubeஇல் பதிவிட்டால் இவற்றை நீங்கள் பார்க்க முடியும்.

சரி அப்படியானால் மந்திரங்களை உச்சரிக்கவே முடியாதோ என்று யாரும் பயப்படத் தேவை இல்லை. இறைவன் திருமுன்னர் மனமும் நம் உணர்ச்சியுமே முக்கியம். எளிய உச்சரிப்பை யார் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்ல முடியும். ராம, நமசிவாய, நாராயணா, ஹரே கிருஷ்ணா போன்றவற்றை யார் வேண்டுமானாலும் உச்சரிக்க முடியும்.

 மந்திரத்தை ஒருமுனைப்பட்ட மனதுடனும் ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் சொல்ல வேண்டும் என்று பெரியோர் சொல்கின்றனர்.

மந்திர ஹீனம் கிரியா ஹீனம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் ஒன்றை பூஜை முடிவில் சொல்வது மரபு.

 அதாவது மந்திரத்தைத் தவறாக உச்சரித்தல், அல்லது பூஜை கிரியைகளில் சிலவற்றை விட்டு விட்டிருப்பது ஆகியவற்றை மன்னித்து எனது பிரார்த்தனையை ஏற்று அருள்க என ஒவ்வொரு பூஜையும் முடிவிலும் நாம் சொல்வது பாரம்பரிய மரபாகும்.

ஆகவே குரு மூலமாக மந்திரத்தை உச்சரிப்புடன் கற்று மனதை ஈடுபடுத்தி ஓதுவதால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. அதே சமயம், இறைவனது நாமங்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அவையும் நலம் தரும் மந்திரங்களே என்று கூறி வாய்ப்பளித்த ஞானமயம் குழுவினருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி,வணக்கம்!

tags – மந்திரம், சக்தி, உச்சரிப்பு

போப் சாப்பிட்ட பிஸ்ஸா (பீட்ஸா) !

Pope Francis as he celebrated Communion last July in Brazil.

Pope Francis as he celebrated Communion last July in Brazil.

Article: written by S NAGARAJAN

Post No.2218

Date: 6   October 2015

Time uploaded in London: 10-06 am

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

வாழ்வியல் அங்கம்

போப்பின் பிஸ்ஸா (பீட்ஸா)!

((தமிழ்நாட்டில் பிஸ்ஸாஎன்று எழுதுவதன் சரியான  இதாலிய மொழி உச்சரிப்பு பீட்ஸா (peetza); English Spelling Pizza)

 

.நாகராஜன்

 pope pizza

போப்புக்கு, இதாலி நாட்டில் நேபிள்ஸ் நகரத்தில, ஒரு அன்பர், பிட்ஸா அளித்தார்.

கையில் லண்டனிலிருந்து வெளி வரும் டைம்ஸ் இருந்தது. 5-9-2015 தேதியிட்ட இதழ்! சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த வேளையில் மனைவி முன்னே வரப் பின்னால் பதுங்கியவாறே எனது புத்திரர்கள்!

ஆஹா! வழக்கமான விஷயத்திற்கு வந்து விட்டார்களோ! இப்படிப்பட்ட வேளைகளில் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று தெரிந்ததால் பாதுகாப்புடன் அம்மாவைக் கேடயமாக வைத்து வருகிறார்கள்!

என்ன?” – நான்

ஒண்ணுமில்லை. லேசா உடம்பு சரியில்லை. அதுனாலே வெளியிலேர்ந்து..”

வெளியிலேர்ந்து..” – கொஞ்சம் குரலில் கடுமை தொனிக்கநான்

பிஸ்ஸாவை (Pizza) ஆர்டர் பண்ணி வாங்கலாமான்னு..?!”

 

நான் மௌனமாக இருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். ஏனெனில் இதற்குள் கூரை விழுமளவு ஒரு கூச்சல் போட்டிருப்பேன்.

எத்தனை பிஸ்ஸா?’ – இது அவர்களுக்கு ஆச்சரியமான ஒரு திருப்பம்.

அவசரம் அவசரமாக தைரியமாக முன்னே வந்த பையன்கள்,” ஒண்ணு போதும். உங்களுக்கோ பிடிக்காது. நாங்கள் மூணு பேரும் ஒண்ணையே எடுத்துக்கறோம். ஆர்டர் பண்ணவா?”

நாலா ஆர்டர் பண்ணு. எனக்கும் சேர்த்துத் தான்!”

 

 

ஹோவென்ற கூச்சலுடன் பையன்கள் அலற, மனைவியோ எனக்கு நட்டுகழண்டு விட்டதோ என்ற பாவனையில் பார்த்தாள்.

ஒரு வேளை ஏமாற்று வித்தையோ என்ற அவளது சந்தேகப் பார்வை எனக்குப் புரிந்தது.

வேண்டாம் வேண்டாம் ஆர்டர் பண்ண வேண்டாம்” – எனது குரலால் பையன்கள் சுருங்க மனைவியோ அப்பாடா, அது தானே பார்த்தேன், வேதாளம் எங்காவது முருங்கை மரம் ஏறாமல் இருக்குமாஎன்று பார்வையால் பேசினாள்.

 

 

கிட்ட தானே இருக்கு. ராஜஸ்தானுக்கே போய் சாப்பிட்டு வந்துடலாம். அங்க போனா நைட் டின்னரை முடிச்சுடலாமே!” ராஜஸ்தான் ஹோட்டல் பெங்களூரில் பிரசித்தி பெற்ற ஒன்று. பிஸ்ஸா அங்கு ஸ்பெஷல் ஐட்டம்!

ஆயிரம் வாட்ஸ் பல்ப்பையன்களின் முகம் பளிச்.

எனக்கு என்னவோ ஆகி விட்டது என்று தீர்மானித்த மனைவியிடம் ஃபைவ் மினிட்ஸ் டைம், கிளம்புங்கள் என்றேன்.

*

epa04657751 A handout photograph made available by the L'Osservatore Romano - Press Office showing Pope Francis receiving a gift of a special pizza during his weekly general audience in Saint Peter's Square, Vatican City, 11 March 2015.      +++ANSA PROVIDES ACCESS TO THIS HANDOUT PHOTO TO BE USED SOLELY TO ILLUSTRATE NEWS REPORTING OR COMMENTARY ON THE FACTS OR EVENTS DEPICTED IN THIS IMAGE; NO ARCHIVING; NO LICENSING+++  EPA/L'OSSERVATORE ROMANO / HANDOUT  HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES/NO ARCHIVES

A handout photograph made available by the L’Osservatore Romano – Press Office showing Pope Francis receiving a gift of a special pizza during his weekly general audience in Saint Peter’s Square, Vatican City, 11 March 2015. -ANSA 

வாசகர்களுக்கு ஒரு வார்த்தை! எப்போதுமே அவர்களை மறுத்துப் பேசும் நான் ஏன் மனம் மாறினேன் என்ற இரகசியத்தை உங்களிடம் மட்டும்  சொல்லி விடுகிறேன். மனைவியிடமும், பையன்களிடமும் போட்டுக் கொடுத்து விடாதீர்கள்!

*

எப்போதாவது வெளியே வருவேன் என்று முன்பு வாக்குக் கொடுத்தபடியே போப்பாண்டவர் வாடிகன் வாசஸ்தலத்தை விட்டு வெளியே வந்தே விட்டார்! யாருக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்லாமல் ரோமில் உள்ள கண்ணாடிக் கடைக்காரரிடம் அவரே வந்து விட்டார். வேறொன்றும் இல்லை, தன் மூக்குக் கண்ணாடியைச் சரி பண்ணிக் கொள்ளத் தான்!!

 

கண்ணாடி நிபுணரான, அலெஸ்ஸாண்ட்ரோ ஸ்பிஜியா (Alessandro Spiezia), வாடிகன் சென்று குறித்த நேரத்தில் போப்பாண்டவரைப் பார்த்துக் கண்ணாடியைத் தரலாம் என்று பரபரப்பாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் முன்னால் ரோமிலுள்ள சென்ட்ரல் ஸ்டோரில், போப்போண்டவரே நேரில் நின்ற போது பிரமித்து விக்கித்து விட்டார்.

 

எனக்கு புது ஃப்ரேம் வேண்டாம்! இதே ஃப்ரேமில் லென்ஸ்களை மட்டும் மாற்றிக் கொடுத்தால் போதும்என்றார் போப்பாண்டவர்.

 

அவசரம் அவசரமாக லென்ஸ்களை மாற்றிய அலெஸ்ஸாண்ட்ரோ பெருமிதம் பொங்க மூக்குக்கண்ணாடியை போப்பாண்டவரிடம் கொடுத்தார்.

அதற்கான கட்டணம் எதையும் அவர் வாங்கத் தயாரில்லை.

 

ஆனால் போப்போ, ‘இதற்கு எவ்வளவு ஆச்சு? நான் தந்து விடுகிறேன்என்றார்.

40 நிமிடங்கள் ஆயிற்று கடையில்கண் டெஸ்ட், லென்ஸ் மாற்றுதல் என்று எல்லாம் முடிய! கடையின் வெளியே பிரம்மாண்டமான கூட்டம், அவரைத் தரிசிக்க!

 

புன்முறுவலுடன் வெளியே வந்த போப்பாண்டவர் தன்னுடைய ஃபோர்ட் ஃபோகஸ் காரில் ஏறி வாடிகனுக்குத் திரும்பினார். அவருக்கு பிரம்மாண்டமான பெரிய கார்கள் எல்லாம் பிடிக்காது! அவர் காருக்குப் பின்னால் இன்னொரு காரில் வாடிகன் போலீஸ் படை சென்றது.

 

போப் சொன்னாராம்ஒரு நாளைக்கு வெளியே செல்ல விரும்புகிறேன், யாருக்கும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல், ஒரு பிஸ்ஸா (Pizza) சாப்பிட விரும்புகிறேன், அதற்குத் தான்!”

*

இப்போது சொல்லுங்கள் என் மனமாற்றம் சரி தானே! பெரிய போப்பாண்டவருக்கே பிஸ்ஸா ஆசை இருக்கும் போது என் மனைவி, குழந்தைகளுக்கு இருக்கக் கூடாதா, என்ன! பெங்களூரில் ராஜஸ்தான் ஹோட்டல் பிஸ்ஸா போல உண்டோ என்று அனைவருமே சொல்லும் போது அவர்கள் ஆசைப்படுவது, தப்பா, ஸார்!

 

அது தான் மனம் மாறி பிஸ்ஸா சாப்பிட நானும் கிளம்பி விட்டேன்!

லண்டன் டைம்ஸ் ஸார்! போப்பாண்டவர் பற்றிய செய்தி ஸார்!! 5-9-15 தேதியிட்ட இதழ்!

போகும் போது காஞ்சி பரமாசார்யாள் பல வருட காலம் மிக மிகக் கொஞ்சம் அளவே பொறி மட்டும் சாப்பிட்ட விஷயம் நினைவுக்கு வந்தது.

 

 

மனித மனம் என்றால் அப்படித்தான்! பல விஷயங்களில் மாறுதல் ஏற்படுகிறது. பல விஷயங்கள் நினைவுக்கு வருகிறது!

*