மஷ்ரும் , பூண்டு , வெங்காயம் சாப்பிடாதே – அம்பலவாணர் அட்வைஸ் (Post No.7565)

WRITTEN by  London Swaminathan

Post No.7565

Date uploaded in London – 12 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அம்பலவண கவிராயர் எழுதிய 100  , அருமையான நூறு  பாடல்களில் நல்ல பல அறிவுரைகளை வழங்குகிறார். அதில் சாப்பிடக்கூடாத உணவு வகை என்ன என்று சொல்கிறார். இப்பொழுது பிட்ஸா , பாஸ்தா (PIZZA AND PASTA) போன்ற உணவுகளில் காளான் எனப்படும் மஷ்ரும் (MUSHROOM) களைச் சேர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலை நாடுகளில் மேலும் பல அயிட்ட (ITEMS)ங்களில் மஷ்ரும் சேர்ப்பதோடு மஷ்ரும் சூப்பு வேறு விற்பார்கள் . இதில் ஏராளமான வகைகளும் உண்டு. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அறப்பளிச்சுர சாதகத்திலும் இது இருப்பது வியப்பானதே. கிராமப்புறங்களில் பயன்படுத்தி இருப்பர் போலும்!

சிவன் கோவில் நிர்மால்யம் பற்றியும் அம்பல வாணர் எச்ச ரிக்கிறார் ; அவரே சிவபக்தர் என்பதால் இது நன்கு தெரிந்து இருக்கிறது. எல்லா கோவில்களிலும் பிரசாதம் வாங்கிச் சாப்பிடலாம். அதை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது. நிர்மாலியம் என்பது கோவிலில் மிஞ்சிப் போன பழைய பொருள்கள் ஆகும். இங்கே சிவன் கோவிலில் மிஞ்சிப்  போன பிரசாதத்தை– சமைத்த உணவைக் குறிக்கிறது. பொதுவாகவே ‘சிவன் சொத்து குல நாசம்’ எனபது பழமொழி . அதாவது கோவிலில் உள்ள எதையும் வீட்டு உபயோகத்துக்கு, சுய நலத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.

சாப்பிட்டக்கூடாத– அதாவது ஆன்மீக நாட்டம் உடையோர்– சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் பட்டியல்:–

ஆட்டுப் பால் , கடையில் விலைக்கு வாங்கும் பால், காராம் பசுவிலிருந்து கறக்கப்பட்ட பால், சுரைக்காய் , முருங்கைக் காய் ,காளான் , நீர் முலாம்பழம்,பழைய சோறு , பயனில்லாத கீரை வகைகள், பீர்க்கங்காய் , அத்திக் காய் ,தென்னை வெல்லம் , வெள்ளைப் பூண்டு, வெங்காயம்,பெருங்காயம் , வெள்ளை உப்பு, வெள்ளைக் கத்தரிக்காய் , சிவன் கோவிலில் மிஞ்சிய உணவுப் பிரசாதம் , இருளில் உள்ள உணவு ஆகியன ஆசாரம் உடைய மக்களுக்கு ஆகாது என்று பழைய நூல்கள் சொல்கின்றன என்று கவிராயர் செப்புகிறார் . இறுதியில் ஐம்புலன்களை வென்ற சிவ பெருமானை வாழ்த்தி வணங்குகிறார் கவிராயர்; இதில் ஆசாரம் உடையார்க்கு என்பது அடிக்கோடு இடவேண்டிய சொற்கள்.

நாங்கள் இத்தாலிக்கு இருமுறை சென்றபோது தினமும் சாப்பிட்ட ‘வெஜிட்டேரியன்’ உணவில் மஷ்ரூம், வெங்கயம், பூண்டு இருந்தன. வேறு எதுவும் கிடைக்கவில்லை.ஆகையால் உணவு விதிகளும் கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்ததே. மனு நீதி நூலும் பகவத் கீதையும் சொல்லும் உணவுக் கட்டுப்பாடுகளை முன்னரே எழுதிவிட்டேன்.

ஆபத்துக் காலத்திலும், நோய்களைத் தீர்ப்பதற்காகவும் எதையும் சாப்பிடலாம்.

இந்தக் காலத்தில் வெங்காயம், உள்ளிப் பூண்டு சாப்பிடா தோரைப் பார்ப்பது அரிது.அனால் இவை இரண்டும் இல்லாமலேயே சுவையான உணவு ஆக்க முடியும் என்பதற்கு பிராமணர் வீட்டு உணவு வகைகளும்  மலையாள சமையலும் சான்று பகரும் .

இன்றும்கூட, ஹரே கிருஷ்ண இயக்கத்தினரும், சுவாமி நாராயண சம்பிரதாய குஜராத்திகளும் மேற்கண்ட விலக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதே  இல்லை.

tags- ஆட்டுப் பால் , மஷ்ரும் , பூண்டு , வெங்காயம், சாப்பிடாதே

XXX subham xxxx

நாலு பேர் கொடுக்கும் உணவை சாப்பிடாதே!-மருத்துவத்தில் எண்-4 -part 2 (Post No.6382)

Written by London  Swaminathan
swami_48@yahoo.com


Date: 13 May 2019


British Summer Time uploaded in London – 13-
51

Post No. 6382

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

to be continued…………………………………..