
WRITTEN BY London Swaminathan
Uploaded in London on – 31 December 2019
Post No.7402
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
கேரளத்தில் வடக்கு மலபாரில் உன்னியர்ச்சா என்ற பெயரை அறியாதோர் எவருமிலர். “வடக்கில் பாட்டுங்கள்” என்ற நாட்டுப்புறப் பாடல்களில்
போற்றப்படும் வீராங்கனை அவர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மலபார் பிரதேசத்தில் சோனகர் என்னும் முஸ்லிம்களின் அட்டூழியம் தலை விரித்தாடியது. இந்துப் பெண்களைக் கடத்தி செல்லுவதும், கற்பழிப்பதும் அவர்களின் அன்றாட வாடிக்கை .
இந்த சூழ்நிலையில் வாழ்ந்த பேரழகி உன்னியர்ச்சா. அவளை குன்னிராமன் என்பவருக்கு மணம் முடித்தனர் . அவர் சரியான தொடை நடுங்கி. ஆனால் இவளோ
வாள் சுழற்றும் வீராங்கனை. அவளுடைய சகோதரர் அரோமல் சேவகர் கத்திச் சண்டை வீரன்.
ஒரு நாள், உன்னியர்ச்சா , அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல விரும்பினாள் . பேரழகி என்பதால் வெறிபிடித்த முஸ்லீம் காமுகர்கள் இவளைத்
தூக்கிச் சென்று கற்பழிப்பர் என்பது அவளுடைய மாமியாருக்குத் தெரியும். அவள் மகனுக்குக் காப்பாற்றும் சக்தி இல்லை, அவன் ஒரு கோழை என்பதும் தெரியும். ஆகையால் அவள் கோவிலுக்குச செல்லக் கூடாதென்று தடை போட்டாள் .
ஆனால் மருமகளோ இன்றோடு முஸ்லிம் காமுகர்களின் தலைவிரி ஆட்டத்திற்கு முடிவு கட்டுவேன் என்று வீர சபதம் செய்து கணவனுடன் கோவிலுக்குப் புறப்பட்டாள். எதிர்பார்த்தது நடந்தது.
வெறிபிடித்த முஸ்லிம் தலைவன் அந்தப் பெண்ணைக் கடத்தி வாருங்கள் என்று, அலாவுதீன் கில்ஜி உத்தரவு போட்டது போல, கட்டளையிட்டான். அந்தத் தலைவனின் வெறிக்கும்பல் அவளை நெருங்கியது. எடுத்தாள் மறைத்து வைத்திருந்த வாளை . வாழைக் குலையை சீவுவது போல தலைகளை வெட்டிப்
பந்தாடினாள் .தப்பிப் பிழைத்தோர் குதிங்கால் பிடரியில் அடிக்க தலைவனிடம் ஓடினர் .மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடந்த விஷயத்தைச் சொன்னார்கள் . உடனே அந்த வெறியன் நானே அவளைக் கடத்தி வருகிறேன் என்று விரைந்து வந்தான்.
அவன் அவளைக் கண்டவுடன் திடுக்கிட்டுப் பின்வாங்கினான். ஏனெனில் தனக்கு வாட்சண்டை சொல்லித்தரும் ஆசிரியரின் சகோதரி அவள் என்பது தெரிந்தது. பெரிய கும்பிடு போட்டுவிட்டு மன்னிப்புக் கேட்டான் . ஆனால் அவள் விடவில்லை.
என் மானத்தைக் காக்க மட்டும் நான் வரவில்லை. உங்கள் வெறித்தனத்துக்குச் சாவுமணி அடித்து இந்துப் பெண்களைக் காப்பாற்றவே நான் வந்திருக்கிறேன்.
இன்று உங்களுக்கு முடிவு கட்டுவேன் என்று கர்ஜித்தாள் . எல்லோரும் ஓடிப் போய்
ஊர்த் தலைவனைக் கூட்டுப்பிட்டுக் கொண்டு வந்து சமாதானம் பேசினர் . அவர் முதலில் உடைவாளை கீழே போடு தாயே என்று மன்றாடினார். நான் போடுகிறேன். ஆனால் இன்று முதல் ஒரு முஸ்லீம் காம வெறியனும் இந்து மதப் பெண்களைத் தொட
மாட்டோம் என்று சத்தியம் செய்யுங்கள் என்றாள் . அவர்களும் உறுதி மொழி கொடுக்கவே
காட்சி இனிதே முடிந்தது. இந்த சம்பவத்துக்குப் பின்னர் அந்தப் பிரதேசம் முழுதும் இந்துப் பெண்கள் தலை நிமிர்ந்து கோவில் குளங்களுக்குச் சென்று வந்தனர்.
இந்த வீராங்கனை பற்றி திரைப்படங்களும் டெலிவிஷன் தொடர்களும் வந்துள்ளன.
ஆனால் வழக்கம் போல, அலாவுதீன் – பதமினி கதைகளைத் திரித்தது போல காமா சோமா என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கின்றனர் என்று கேள்வி.
இன்றுவரை மலையாளிகள் அந்த வீரப் பெண்ணின் வரலாற்றைப் பாடிப் பரவி வருகின்றனர் .
Tags உன்னியர்ச்சா, வீரப் பெண்மணி, மலையாளி
—subham–