–லண்டன் சுவாமிநாதன்—
POST No. 716 dated 21 Novemeber 2013
“உன்னையே நீ அறிவாய்”, “உள்ளம் பெருங்கோயில்” என்ற கருத்துக்கள் இந்துக்களுக்குக் கரதலைப் பாடமாகத் தெரிந்தவை. ‘மனக் கோயில், மனமே கோயிலாகக் கொண்டவன்’ என்று இறைவனைப் பாராட்டும் வரிகள் தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருமந்திரம், திருவாசகத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றன.
எகிப்து நாட்டில் தீப்ஸ் என்னுமிடத்தில் உள்ள லக்ஸார் கோவிலில் இந்த இந்து மதக் கருத்துக்கள் எழுத்தில் இருக்கின்றன. இந்தக் கோவில்கள் 3500 ஆண்டுகள் பழமையானவை. அப்போதே இந்துமதக் கருத்துக்கள் அங்கே பரவி இருந்தன. உபநிஷத் சொன்ன கருத்துக்களை பிற்காலத்தில் சாக்ரடீஸ் மேலை உலத்தில் பரப்பினார். அதற்குப் பின்னர் திருமூலர் அவைகளைத் தமிழில்—எளிய தமிழில்—எல்லோருக்கும் புரியும்படியாகப் பாடி வைத்தார்.
சாக்ரடீஸின் சீடர் பிளட்டோ இந்தக் கருத்துக்களை அவரது சீடர் அரிஸ்டாடிலுக்குச் சொன்னார். அவர் தனது சீடரான அலெக்ஸாண்டருக்குச் சொன்னார். இதைக் கேட்டுப் பிரமித்துப் போன மஹா அலெக்ஸாண்டர் எப்படியாவது இந்து மத சந்யாசிகளைக் கிரேக்க நாட்டுக்கு அழைத்து வந்துவிடவேண்டும் என்று அரும்பாடுபட்டார். இதை “ஒரு யோகியின் சுயசரிதை” நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா போன்றோர் (நடிகர் ரஜினிகாந்தின் குருவின் வழிவந்தவர் பரமஹம்ச யோகாந்தா) கூறியுள்ளனர். எல்லா விவரங்களையும் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்” என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்.
கீழ்கண்ட பகுதியை விக்கிபீடியாவில் இருந்து எடுத்து மொழிபெயர்த்து இருக்கிறேன்:
“பழங்கால லக்ஸார் கோவிலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.முன் பகுதியில் ஆரம்ப உபதேசம் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். உள்ளே இருக்கும் பகுதிக்குத் தகுதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உயரிய ஞானமும் அந்தர்முகமாகப் பார்க்கவல்லவர் மட்டுமே அங்கே பிரவேசிக்கலாம். வெளிப்புறக் கோவிலில் இருக்கும் பொன்மொழிகளில் ஒன்று “ உடலே இறைவனின் திருக்கோயில்”. இதனால்தான் உன்னையே நீ அறிவாய் என்று மனிதர்களுக்குச் சொல்லப்படுகிறது. உள்ளே உள்ள பொன்மொழிகளில் ,”மனிதனே , உன்னையே நீ அறிவாய். பின்னர் நீ கடவுளை அறிவாய்” என்று எழுதப்பட்டுள்ளது.
Ancient Egyptian
“There are two parts of the ancient Luxor temple: the outer temple where the beginning initiates are allowed to come, and the inner temple where one can enter only after proven worthy and ready to acquire the higher knowledge and insights. One of the proverbs in the Outer Temple is “The body is the house of God.” That is why it is said, “Man know thyself.”[20] In the Inner Temple, one of the many proverbs is “Man, know thyself … and thou shalt know the gods.”[21]”
ஏற்கனவே நான் எழுதிய எகிப்து தொடர்பான மூன்று, நான்கு கட்டுரைகளில் அதர்வண வேத மந்திரக் கருத்துக்கள் அங்கே இருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். காஞ்சி மஹா பெரியவர் சென்னையில் 1930களில் நடத்திய சொற்பொழிவுகளில் உலகம் முழுதும் இந்துமதக் கருத்துக்கள் இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பின்னர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்: “இப்படி நான் சொன்னதால் இந்துக்கள் அங்கெல்லாம் போய் தங்கள் மதத்தைப் பரப்பினார்கள் என்று நினைக்காதீர்கள். ஆதியில் ஒரே மதம்தான் உலகம் முழுதும் இருந்தது. அதுதான் சநாதன தர்மம்” (இந்து மதத்தின் பழைய பெயர்) என்று சொல்லி இருக்கிறார்.
இதோ திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்:
1.”தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்”
2.”தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”(பாடல் 280)
3. “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”
கீதையில் கண்ண பிரானும் இதை வலியுறுத்துகிறான்:
எவன் தானே தன்னை வெல்கிறானோ அவனே அவனுக்கு உறவினன் (பந்து).தன்னை வெல்லாதவனுக்கு தானே பகைவன் (6-6)
‘திருமூலருடன் 60 வினாடி பேட்டி’ என்ற எனது முந்தைய கற்பனைப் பேட்டியில் மேல் விவரம் காண்க.
Tutankhamun in Luxor
You must be logged in to post a comment.