
Post No. 9917
Date uploaded in London – 1 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தேசிய விநாயகம் பிள்ளையின் வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கவியால் தமிழர்களின் மனம் கவர்ந்த பாரசீகப் புலவர் உமர் கய்யாம் (OMAR KHAYYAM) ஆவார்.
உலகின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்புகளில் இவருடைய ரூபாயத் (RUBAIYAT) கவிதை படைப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தற்காலத்தில் ஈரான் என்று அழைக்கப்படும், பாரசீக நாட்டில் நிஷாபூர் ன்னும் ஊரில் பிறந்தார். அப்போது முஸ்லீம்கள் ஆட்சி நடந்த காலம். அந்தக்கால ஐரோப்பாவைவிட ஈரான் மிக முன்னேறிய நாடகத் திகழ்ந்தது. இதற்குக் காரணம் இந்தியாவிலிருந்து வேதகாலத்தின் முடிவில் அங்கு குடியேறிய இந்துக்களே.
இளம் வயதிலேயே உமர் கய்யாம் , பல சாத்திரங்களைக் கற்றார். கணிதம், வானியல், தத்துவம், மருத்துவம் ஆகியவற்றில் புலமை பெற்றார். அவருடைய நண்பர் ஒருவருக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவி கிடைத்தபோது அவர் அரசவையிலேயே அமர்ந்து கற்கும் வாய்ப்பு கிட்டியது.
கிரக நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு புதிய இஸ்லாமிய காலண்டரைப்/ பஞ்சாங்கத்தை உருவாக்கினார். இது பொது ஆண்டு 1074(CE) முதல் 1079 (CE) க்குள் நடந்தது
நான்கு வரிகள் கொண்ட சுமார் 200 வெண்பாப் பாடல்களை இவர் இயற்றினார். இவைதான் அவருக்கு இலக்கிய உலகில் அழியாப்புகழ் வாங்கித் தந்தது. இதன் காரணமாகவே முஸ்லீம் அல்லாத மக்களிடையேயும் இவர் புகழ் பரவியது. அவர் இறந்து 700 ஆண்டுகளுக்குப் பின்னர் எட்வர்ட் பிட்ஜெரால்ட் என்பவர் உமருடைய பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மக்கள் இதை விரும்பிப் படித்தனர். பழங்கால மக்களின் ஞானமும், மகிழ்ச்சியான வாழ்வும் இவர் கவிதைகள் மூலம் எல்லோருக்கும் தெரிந்தது . அழகான தோட்டங்கள், பர்தா அணிந்த முஸ்லீம் பெண்மணிகள் ஆகியவை மனக்கண்கள் முன் நிழலாடின . இதைத் தொடர்ந்து உலகின் முக்கிய மொழிகள் அனைத்திலும் ரூபாயத் கவிதைத் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டது.
ஆங்கிலப் பதிப்பு வெளியான ஆண்டு – 1859
உமர் பிறந்த தேதி – மே 18, 1048
இறந்த தேதி – டிசம்பர் 4, 1131
வாழ்ந்த ஆண்டுகள் – 83

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
கள்வனின் காதலி திரைப்படத்திலும் இந்தப் பாடல் இடம்பெற்றது.
உமர் கய்யாம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › உ…
- 11 Nov 2019 — ஹோமர், உமர் கய்யாம், ஷேக்ஸ்பியர் (Post No.7202). Blind Poet Homer of Greece. Compiled by London swaminathaan.
–சுபம்-
tags – பாரசீகக் கவிஞர், உமர் கய்யாம்,
