உரத்தொழிற்சாலைக் கழிவுகள்! (Post No. 2552)

ammonia urea

Written by S Nagarajan

 

Date: 18  February 2016

 

Post No. 2552

 

Time uploaded in London :–  7-43 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

      ஒரு நாட்டின் வளத்திற்குத் தொழிற்சாலைகளின் பங்கு இன்றியமையாததாகும். தொழிற்சாலைகளின் வளத்திற்கும் உற்பத்திப்  பெருக்கத்திற்கும் அவற்றில் பணிபுரிவோரின் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று.தொழிலாளர்களின் ஆரோக்கியமான மனமும் ஆரோக்கியமான உடலும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே நலம் பயக்கும் என்பதில் ஐயமில்லை.

 

 

   இந்தியாவில் உரத் தொழிற்சாலைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் நாள் ஒன்றுக்கு ஒரு உரத் தொழிற்சாலை  300 டன்கள் அம்மோனியாவையும் 300 டன்கள் யூரியாவையும் 1100 டன்கள் காம்ப்ளெக்ஸ் பெர்டிலைஸர்களையும் (Complex Fertilisers) 130 டன்கள் மெதனாலையும் (Methanol) உற்பத்தி செய்கிறது. இந்த உற்பத்தியால் நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் கனமீட்டர் அளவிற்கு திரவக் கழிவுகளை வெளியேற்ற வேண்டியுள்ளது. ஆக இவற்றில் இருக்கும் மாசுள்ள மற்றும் மாசற்ற பொருள்களின் எடை மட்டும் 50000 டன்கள் என்ற மாபெரும் அளவைக் கொண்டுள்ளது.

 

 

    இந்தக் கழிவுகளை உரிய முறையில் அகற்றவில்லை எனில் தொழிற்சாலைகளின் பணிபுரிவோருக்கும் தொழிற்சாலைகளின் அருகில் வசிப்போருக்கும் பல்வேறு விதமான ஆரோக்கியக் கேடுகளை அக்கழிவுகள் உருவாக்கும்.

 

 

 

    கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படுகின்றனவா என்பதைத் தொழிலாளர் குழுக்களும் சமூக அக்கறையுள்ள பொதுமக்களும் அவ்வப்பொழுது கண்காணித்து வருதல்  இன்றியமையாத ஒன்று. 

 

 

    இதற்கெணன சமூக ஆர்வலர்கள் பொது மக்களிடம் இதற்கான விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருதல் வேண்டும். அத்தோடு பொதுமக்களும் தங்கள் அண்டை அயலாரிடம் இது பற்றிய சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும். இது நமது தேசத்தை நோயற்ற நாடாக ஆக்கி உலக நலனுக்கும் வழி வகுக்கும்! 

 

 

********