WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,572
Date uploaded in London – – 17 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முக்கியமான ஆசனங்களில் இருபதுக்கும் மேலான ஆசனங்களுக்கு பிராணிகள், பறவைகள், பாம்பு, தேள் முதலிய பெயர்கள் இருப்பதைக் காணலாம். மேலும் பல ஆசனங்களுக்கு மலர்களின் பெயர்கள் இருப்பதையும் காணலாம். அவர்களிடமிருந்து இந்த ஆசன ரஹஸ்யங்களைக் கற்றுக் கொண்டதற்காக மக்கள் நன்றியுடன் பெயரிட்டான் என்றும் சொல்லலாம்.
பிராணிகளைக் கவனித்து அவைகளிடமிருந்துதான் மனிதன் ஆசனங்களை அறிந்தான் என்று நான்கு வேதங்களை மொழிபெயர்த்த எம்.ஆர். ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் கூறுகிறார். அவர் சொல்லுவது சரியே என்பதற்கு நானும் சில காரணங்களை சொல்கிறேன்.
நான் கூறும் சில காரணங்கள்:
உலகிலேயே அதிக காலம் வாழும் பிராணி ஆமை (TORTOISE) தான் . சுமார் 300 ஆண்டுகளுக்கு ஆமை உயிர் வாழ்வதை மனிதன் பதிவு செய்து வைத்துள்ளான். இன்று ஆமைதான் அதிக காலம் வாழும் பிராணி என்று சாதனை நூல்கள் (RECORD BOOKS) சொன்னாலும் அதைக் கண்டு பிடித்தவன் இந்துதான் !
புலன் அடக்கம் பற்றிச் சொல்ல வந்த கிருஷ்ண பரமாத்மா, முதல் முதலில் இதைச் சொன்னார். அவரைத் தொடர்ந்து மனு தனது மனு ஸ்ம்ருதியில் ஆமை பற்றி பேசுகிறார். அதை அப்படியே அவருக்குப் பின் வந்த திருவள்ளுவரும் சொன்னார். காலத்தால் பிற்பட்ட திரு மூலரும் ஆமை ரஹஸ்யத்தைக் குறிப்பிடத் தவறவில்லை.
பகவத் கீதை 2-58
மனு ஸ்ம்ருதி 7-105
திருக்குறள் 126
திருமந்திரம் 2360
XXX
தவளை அதிசயம்
கரடி, பாம்பு, தவளை போன்ற சில பிராணிகள் குளிர்காலத்தில் பேருறக்க (HIBERNATION) நிலைக்குச் சென்றுவிடுகின்றன. அவை தூங்கும்போது வளர்சிதை மாற்றத்தின் வேகமும் உடலில் குறைந்துவிடுகிறது. அவை உணவு இல்லாமலேயே 4 முதல் 6 மாதம் வரை நீண்ட உறக்கத்தில் — கும்ப கர்ணன் — நிலையை அடைந்து வசந்த காலம் வந்தவுடன் உயிர்த் துடிப்புடன் எழுந்து விடுகின்றன. ரிக் வேதத்தில் வரும் (7-103) நல்ல பிரசித்தமான பாடல் தவளைப்பாட்டு ஆகும். வேதம் ஓதும் பிராமணர்களையும், வசந்த காலம் வந்தவுடன் சப்தம் செய்யும் தவளைகளையு ம் ஒப்பிடும் நக்கல்- நையாண்டிப் பாட்டு இது. இதில் ஒரு விஞ்ஞான உண்மையும் இருக்கிறது. வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டுக்கு கும்பலுக்கு அறிவியல் தெரியாது. அதுகள் இதை கிண்டல் என்று எழுதிவைத்துவிட்டன.. உண்மையில் மழைக்கால நான்கு மாதங்கள் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ எனப்படும். அப்போது சன்யாசம் எடுத்த சந்யாசிகள் ஒரே இடத்தில் தங்குவர். அது முடியும் காலத்தில் பிராமணர்கள் புதுப் பூணுல் அணிந்து மீண்டும் வேதம் கற்பத்தைத் துவங்குவர். அதாவது 4 மாத பேருறக்க நிலைக்குப் பின்னர் தவளைகளும் ஒலி எழுப்புவது போல.
இதைக் கவனித்த ரிஷி முனிவர்கள் நாமும் அப்படி இருக்கலாமே என்று மூச்சு அடக்கப் பயிற்சியைத் துவக்கினர் அப்படித் தவம் இருந்த வாலமீகி போன்ற முனிவர்கள் மீது புற்றுக்கள் கூட வளர்ந்துவிட்டன . ஆக இந்த ஹைபர் நேஷன் HIBERNATION எனப்படும் பேருறக்க நிலைஐயை மனிதர்களும் பயன்படுத்த முடியும் என்று பிராணிகளிடம் கற்றுக் கொண்டனர்..
திரு ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் சொல்லும் காரண் ங்கள் வேறு :
ஒரு களைப்படைந்த குதிரை படுத்துக் கொண்டு ஓய்வு பெற, புத்துணர்ச்சி பெற என்னவெல்லாம் செய்கிறது எனப்தைக் காட்டுகிறார். பூனை, நாய் முதலிய பிராணிகள் எப்படி உடம்பை முன்னோக்கியும் பின்னோக்கியும் இழுத்து பயிற்சி செய்கின்றன என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் என்கிறார்.. குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுகையில் எந்த பயமும் இன்றி உடலை எப்படி லாவகமாக பயன்படுத்துகிறது என்றும் ஜம்பு நாதன் காட்டுகிறார்.
அவர் எழுதிய புஸ்தகத்தில் வெளியிடப்பட் ட சுமார் 50 ஆசனப் படங்கள், செய்முறைகள், பலன்களை ஆங்கிலக் கட்டுரைகளில் வெளியிட்டேன். அவற்றை இரண்டு நாட்களுக்கு வாசித்து பின்னர் அவற்றை யோகாசன ஆசிரியர் மூலம் கற்றுப் பயன்படுத்தலாம்.
–SUBHAM–
tags- யோகாசனம், பிராணிகள் , உறக்க நிலை, புலன் அடக்கம்