எவனால் உலகம் ஜெயிக்கபடுகிறது? (Post No.10,128)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,128

Date uploaded in London – 24 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எவனால் உலகம் ஜெயிக்கபடுகிறது?

ச.நாகராஜன்

சில நல்ல சுபாஷிதங்கள் இதோ:-

கம் ப்ருச்சாம: சுரா: ஸ்வர்கே  நிவஸாமோ வயம் ப்ருவி |

கிம் வா காவ்யரஸ: ஸ்வாது: கிம் வா ஸ்வாதீயஸீ சுதா ||

யாரை நாம் கேட்பது? சுவர்க்கத்தில் இருக்கும் தேவர்களையா அல்லது பூமியில் வாழ்கின்றவர்களையா? கவிதையின் ரஸம் அதிகமா அல்லது சுவர்க்கத்தில் உள்ள அமிர்தத்தின் சுவை அதிகமா – யாரைக் கேட்பது?

Whom shall we ask? The gods in the heaven, or us living on the earth: (whether) the taste of (good) poems is greater or whether nectar has a better taste (Translation by A.A.R)

*

க: கால: காநி மித்ராணி கோ தேஷ: கௌ வ்யயாகமௌ |

கஷ்சாஹம் கா ச மே சக்திர் திதி சிந்தயம் முஹுர்முஹு: ||

ஒரு மனிதனானவன் எப்போதும் கீழ்க்கண்டவற்றைப் பற்றித் திருப்பித் திருப்பி சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் : “இப்போது காலம் எப்படி?” :எப்படிப்பட்ட நண்பர்களை நான் கொண்டிருக்கிறேன்?” “இந்த இடம் என்ன?” “எனது வருமானம் எவ்வளவு, எனது செலவு எவ்வளவு?” “நான் யார்?”” எனது சக்தி என்ன?”

A man must ponder again and again on these : “What is the time?” “What friends (have I)?” “What is the place?” “What are my income and expenditure?” “Who am I. and what is my power?” (Translation by F.Edgerton)

*

க: பூஜ்ய: சத்வ்ருத்த: கமதமமாசக்ஷதே சலிதவ்ருத்தம் |

கேன ஜிதம் ஜகதேதத் சத்யதிதிக்ஷாவதா பும்சா ||

யார் ஒருவன் மதிக்கபடுவான்? நல்லொழுக்கம் உடைய ஒருவனே மதிக்கப்படுவான். எவன் ஒருவன் தாழ்ந்தவன் என்று கூறப்படுவான்? எவன் ஒருவன் நல்லொழுக்கத்திலிருந்து நழுவி விட்டானோ அவனே! யாரால் இந்த உலகம் ஜெயிக்கப்படுகிறது? எந்த ஒருவனிடம் சத்தியமும் பொறுமையும் இருக்கிறதோ அவனாலேயே! 

Who is honoured? The man of good conduct. Who is called a low person? He who swerved from good conduct. By whom is this world conquered? By him who is endowed with truth and patience.

(Translation by A.A.R)

*

கச்சித் சஹஸ்ரான் மூர்காணாம்  ஏகமிச்சஸி பண்டிதம் |

பண்டிதோ ஹ்ரார்தக்ருச்சேஷு குர்யான் நி:ஸ்ரேயஸம் மஹத் ||

உங்களுக்கு ஒரு பண்டிதன் வேண்டுமா அல்லது ஆயிரம் மூடர்கள் வேண்டுமா? ஒரு புத்திசாலி பண்டிதன் மிகவும் கஷ்டமான காலத்தில் உங்களுக்கு (அதைப் போக்கி) மிகுந்த சந்தோஷத்தைத் தருவான்.

Do you prefer one wise man or a thousand fools? For the wise man may confer great happiness when there are grave difficulties? (Translation by A.A.R)

***

கடினம் வா மதுரம் வா ப்ரஸ்துத வசனம் மனோஹாரி }

வாமே கர்தபனாதஷ் சித்தப்ரோத்யை ப்ரயாணேஷு ||

ஒரு பயணத்திற்காகப் புறப்படும் போது (வாழ்த்திப் புகழ்ந்து வழி அனுப்பப்படும் போது) புகழ் மொழிகளானவை இனிமையான குரலாக இருந்தாலும் சரி கடூரமாக குரலானாலும் சரி மனதிற்கு இனிமையாக இருக்கிறது. பயணத்தின் போது இடது பக்கமாக கழுதை  கத்தினாலோ அதுவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

When setting out on a journey, words of praise, whether in a harsh voice, or sweet tone, are pleasing to the mind : the braying of an ass on the left side when going on a journey is also pleasing to the mind. (Translation by A.A.R)

*** subham ****

tags– சுபாஷிதங்கள், உலகம்