உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876)

amazing 1

Translated by London swaminathan

 

Date: 7 June 2016

 

Post No. 2876

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், வியாச பகவான், கண்ண பிரான், திருவள்ளுவர், உலக மஹா கவிஞன் காளிதாசன், மற்றொரு சம்ஸ்கிருதப் புலவன் ஆகிய பலர் உலக அதிசயம் எது? அத்புதம் எது? ஆச்சரியம் எது? என்ற கேள்விக்கு வெவ்வேறு விதமான, சுவையான பதில்களைத் தந்துள்ளனர்!

 narayana

1.நாராயணன் என்ற சப்தம் இருக்கிறது. வாயில் சொல் இருக்கிறது. எளிமையாக வசப்படுத்தலாம். அப்படியும் கோரமான நரகத்தில் மனிதர்கள் விழுகிறார்களே!! இதுவே அத்புதம்!!!

நாராயணேதி சப்தோஸ்தி வாக் அஸ்தி வசவர்தினீ

ததாபி நரகே கோரே பதந்தீதி ஏதத் அத்புதம்

–ஒரு சம்ஸ்கிருதக் கவிஞன்

 

மூன்றாண்டுகளுக்கு முன் நான் எழுதி, இங்கே வெளியிட்ட கட்டுரை இதோ:–

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? ( 10 நவம்பர் 2013)

 

2.கிருஷ்ணா உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

“ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம் ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய:
ஆச்சர்யவச்சைன-மன்ய: ச்ருணோதி ச் ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித்
(பகவத் கீதை 2-29)

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித்- யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கச்சின் -மாம் வேத்தி தத்வத:
(பகவத் கீதை 7-3)

பொருள்: எவனோ ஒருவன் இதை ஆச்சரியம் போல் காண்கிறான். அவ்வாறே மேலும் ஒருவன் ஆச்சரியம் போல் பேசுகிறான். மற்றும் ஒருவன் ஆச்சரியம் போல் கேட்கிறான். எவனும் கேட்டும் இதை அறியவே இல்லை (2-29). மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன் சித்தி பெற முயற்சிக்கிறான். அப்படி முயற்சி செய்யும் சித்தர்களில் யாரோ ஒருவன் என்னை உண்மையில் உணர்கிறான் (7-3)

3.வள்ளுவரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

4.காளிதாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

5.வியாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னத்தில் பேய் கேட்ட கடைசி நான்கு கேள்விகளுள் ஒன்று: உலகிலேயே அதிசயமான விஷயம் எது?

தர்மர் சொன்ன பதில் (வியாசரின் சொற்களில்):

எவ்வளவோ உயிர்கள் தினமும் இறக்கின்றன. இதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவனும் என்றும் வாழப் போகிறோம் என்று நினைத்து செயல்படுவதுதான் உலகிலேயே மிக ஆச்சரியமான விஷயம்.

 wow

6.காஞ்சி பரமாச்சார்யார் சொன்ன அதிசயம்
15-10-1932 சென்னை உபந்யாசம்:

ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார். நாம் எல்லாம் மரணம் அடைவது ஆச்சரியம் அல்ல. இந்த உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லி இருக்கிறார்:

நவத்வாரே ஸரீரே அஸ்மினாயு:வசதி சந்ததம்
ஜீவதியத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

 

–சுபம்–