உலக இந்து சமய செய்தி மடல் 9-5-2021 (Post No.9585)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9585

Date uploaded in London – –9 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலக இந்து சமய செய்தி மடல் 9-5-2021

இன்று May   9 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

அனுமன் பிறப்பிடம் விவாதம் ; கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு

அனுமன் பிறப்பிடம் சேஷாத்திரி மலைதொடரில் உள்ள அஞ்சனாத்திரி என்ற திருப்பதி தேவஸ்தான விவாதத்தை எதிர்த்து, ஆறு பக்க கடிதம் எழுதி, கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலைக்கு அனுப்பி உள்ளது.


ராம பக்தனான அனுமன் பிறப்பிடம் குறித்து பல புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும், வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட பல புராணங்களில், அனுமன் பிறப்பிடம் திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்திரி என கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதுகுறித்து ஆய்வு செய்ய, பண்டிதர்கள் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அக்குழுவினர் இதுகுறித்த ஆதாரங்களை சேகரிக்க பல புராணங்கள், இதி காசங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில், அனுமன் பிறப்பிடம் சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்திரி என, முடிவு செய்யப்பட்டது. இதை ஸ்ரீராமநவமி அன்று, தேவஸ்தானம் திருமலையில் அதிகாரப்பூர்வமாக ஆதாரங்களுடன் வெளியிட்டது.இதை எதிர்த்து, கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஆறு பக்க கடிதம் அனுப்பி உள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாற்று ஆய்வாளர்கள் நடத்திய ஆராச்சிகளின் முடிவில், ஹம்பியில் உள்ள கிஷ்கிந்தையில் அனுமன் பிறந்தார் என உறுதியாகி உள்ளது.இந்நிலையில், திருமலை தேவஸ்தானம் எந்த வரலாற்று ஆய்வாளர்களை வைத்து ஆராய்ந்து இதுபோன்ற ஒரு முடிவிற்கு வந்து, திடீரென அஞ்சனாத்திரி மலை தொடரில் அனுமன் பிறந்தார் என்று அறிக்கை சமர்பித்துள்ளது? இதற்கு ஆய்வாளர்களின் கூற்றுப்படி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு பதில் அளிக்க, திருமலை தேவஸ்தானம் தயாராகி வருகிறது.

XXXXX

இந்து அமைப்பு சேவா இண்டெர்நேஷனல் பேருதவி

எல்லா மதத்தினருக்கும் எல்லா இனத்தினருக்கும் உதவும் இந்து அறக்கட்டளையான சேவா இண்டெர்நேஷனல் அமைப்பு இந்திய கோவிட் வைரஸ் நெருக்கடியைத் தீர்க்க 70 லட்சம் டாலர் நிதியை ஒரே வாரத்தில் எழுப்பி இருக்கிறது. அமெரிக்கர்களின் கருணை உணர்வை தாராள மனப்பான்மையை சேவா இண்டெர்நேஷனல் தலைவர் அருண் காங்கனி புகழ்ந்தார் .

இதனிடையே வாஷிங்டனிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது

இந்தியாவுக்கு உதவும் குழுவில் சுந்தர் பிச்சை


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ, 40க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இணைந்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகள், உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்காவில், 40க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இணைந்து, இந்தியாவுக்கு உதவ, சிறப்பு குழு அமைத்துள்ளனர்.வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உட்பட, பல மருத்துவ உபகரணங்களை, இந்தியாவுக்கு, இந்த சிறப்பு குழு அனுப்பி வைத்துள்ளது.


இந்த குழுவில், அமெரிக்க வாழ் இந்தியர்களான, கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிலோட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி புனித் ரஞ்சன், ‘அடோப் இங்க்’ நிறுவன தலைமைச் செயலர் அதிகாரி ஷாந்தனு நாராயண் ஆகியோர் இணைந்துள்ளனர்.

XXX

கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்காத தமிழக அமைச்சர்கள்

இன்று காலை கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். அவரை தொடர்ந்து மற்ற 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்ற இவர்கள் யாருமே கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்கவில்லை.

அருகாமை மாநிலமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., கூட்டணியில் வெற்றி பெற்ற ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்கள் அனைவருமே கடவுள் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் மட்டும் ஏனோ கடவுள் பெயரால் யாரும் உறுதிமொழி எடுக்காமல் பதவியேற்றனர். இதற்கு காரணம் திமுகவின் கொள்கையா? இல்லை வேறு எதுவும் காரணமா என கேள்வி எழுகிறது. இந்த நிகழ்வு, பதவியேற்வு விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியது.

சுமார் 40,000 இந்தக் கோவில்களை பராமரிக்கும் அறநிலைய அமைச்சர் சேகர் பாபுவும் கூட கடவுள் பெயரில் உறுதி மொழி எடுக்காதது இந்துக்களிடையே அதிருப்தி அ லைகளைபி பரவ விட்டுள்ளது

XXX

திருப்பதி கோவில் வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ.1 கோடி காணிக்கைதிருப்பதி திருமலையிலுள்ள பாலாஜி வெங்கடாசலபதி  கோவிலில் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் அறக்கட்டளைக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கி உள்ளது.


அந்தக் காணிக்கைக்கான வரைவோலையை திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் வைத்து தனியார் நிறுவன பிரநிதிதிகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலரும் பக்தி சேனல் நிர்வாக இயக்குனருமான ஏ.வி.தர்மாரெட்டியிடம் மே மாதம் மூன்றாம் தேதி வழங்கினர்.

திருப்பதி கோவிலில் இந்த மாதம் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

வருகிற 13-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம்,

14-ந்தேதி அட்சய திரிதியை, பரசுராமர் ஜெயந்தி.

16-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் தொடக்கம்,

17-ந்தேதி சங்கராச்சாரியார் ஜெயந்தி,

20-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை பத்மாவதி பரிநய உற்சவம், 22-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி,

25-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் சாத்துமுறை, நரசிம்மர் ஜெயந்தி, தாளப்பாக்கம் அன்னமாச்சார்யார் ஜெயந்தி, தறிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி. ஆகிய உற்சவங்கள் நடைபெறுகின்றன

XXXX

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பிறந்த தினம் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களை அணிந்துகொண்டு ஸ்ரீரெங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு

இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது பிறந்த நட்சத்திரமான ரேவதி நட்சத்திரம் வருகிறது. எனவே ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு அந்த பட்டு வஸ்திரங்களை கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.

இதற்காக பிரத்தியேக பட்டு வஸ்திரங்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு கூடையில் அவற்றை வைத்து கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்த பட்டு வஸ்திரங்களை இன்று  நடைபெறும் கருடசேவை நிகழ்ச்சியின்போது ெரங்கநாதர் அணிந்துெகாண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஆண்டாளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள திருப்பாவை பாடல்கள் அடங்கிய பட்டுப்புடவை ஒன்றை பக்தர் ஒருவர் நேற்று வழங்கினார். இந்த புடவையில் ஆண்டாளின் உருவம் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புடவையும் நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

XXXXX

பாகிஸ்தானில் சாதித்த ஹிந்து பெண்

பாகிஸ்தானில் கவுரவமிக்க, சி.எஸ்.எஸ்., எனப்படும், சென்ட்ரல் சுபீரியர் சர்வீஸ் தேர்வில், முதல் முறையாக, ஹிந்து பெண் ஒருவர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளார்.

பி.ஏ.எஸ்., எனப்படும், பாகிஸ்தான் ஆட்சிப்பணிக்கான அதிகாரிகள், சி.எஸ்.எஸ்., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். சி.எஸ்.எஸ்., – 2020 தேர்வை, 18 ஆயிரத்து, 553 பேர் எழுதினர். இதில், 221 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில், சிந்து மாகாணம், ஷிகார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான சனா ராமாசந்தும் ஒருவர். இதையடுத்து, இவர், பி.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இது பற்றி, சனா கூறுகையில், ”இந்த பெருமை முழுதும், என் பெற்றோரையே சாரும்,” என்றார். பாகிஸ்தானில், சி.எஸ்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற, முதல் ஹிந்து பெண் என்ற பெருமை, சனாவுக்கு கிடைத்துள்ளது.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- உலக இந்து சமய,  செய்தி மடல் 9-5-2021 , 

உலக இந்து சமய செய்தி மடல் 14-2-2021(Post No.9264-B)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9264-B

Date uploaded in London – –14 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று பிப்ரவரி -14 ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

Xxx

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை வசூல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.

இந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டு வருகிறது. இதுவரை மக்களிடம் பெறப்பட்டுள்ள நன்கொடை குறித்து ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, பிப்ரவரி 13 ஆம் தேதி,   குஜராத் மாநிலம் சூரத் நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “மக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். 492 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் மீண்டும் மிகப்பெரிய தர்மத்தைச் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,511 கோடி நன்கொடையாக அறக்கட்டளை திரட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

ராமர் கோவிலுக்கு முஸ்லிம்கள் நன்கொடை

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும், ஹிந்து கடவுள் ராமருக்கான கோவிலுக்கு, பைசாபாதைச் சேர்ந்த, முஸ்லிம்கள், 5,100 ரூபாய் நன்கொடை நன்கொடை அளித்து உள்ளனர்.


”ராமர் ஹிஸ்துஸ்தானுக்கு சொந்தம்; நாங்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். ஹிந்துக்கள் எங்களுடைய சகோதரர்கள். கோவில் கட்டுவதற்கு தொடர்ந்து நன்கொடை வழங்குவோம்,” என, அயோத்தி முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் உறுப்பினர் ஹாஜி சயீது அகமது கூறியுள்ளார்.
”நம் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவுவதை உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதி செய்துள்ளோம். ”ராமர் கோவிலுக்கு முஸ்லிம் சகோதரர்கள் நன்கொடை அளித்துள்ளதை வரவேற்கிறோம்,” என, பைசாபாதின் ராம் பவனின் தலைவர் சக்தி சிங் கூறியுள்ளார்.

Xxxx

தை அமாவாசை! தமிழகம் முழுவதும் புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..!!

தை மாத அமாவாசையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11ம் தேதி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. பவானி கூடுதுறையில் பக்தர்கள் நீராடினர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் நீராடி,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதேபோல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடினர். பலர் காவிரியில் தர்ப்பணம் கொடுத்து பிண்டங்களை கரைத்து வழிபட்டனர். திருச்செந்தூர் கடற்கரை, வேதாரண்யம், கோடியக்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி திதி கொடுத்தனர்.

தை முதல் ஆனி வரையிலான 6 மாதங்களும் ‘உத்தராயன புண்ணிய காலம்’ எனப்படும். அதே போல், ஆடி முதல் மாா்கழி வரையான 6 மாதங்களும் ‘தட்சணாயன புண்ணிய காலம்’ ஆகும். இரண்டு அயனங்களும் தொடங்கும் காலம் என்பதால்தான், ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், தை மாதத்தில் வரும் அமாவாசையும் முன்னோர் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.

xxxx

புனித நீராடிய பிரியங்கா

: ‛மவுனி அமாவாசையை’ முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள சங்கமில் congress, பொதுச்செயலாளர் பிரியங்கா புனித நீராடினார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பகுதியில் கும்பமேளா நடைபெறுவது வழக்கம். அந்த இடத்தில் பிப்ரவரி -11 ஆம் தேதி ‛மவுனி அமாவாசையை’ காங்., பொதுச்செயலர் பிரியங்கா, புனித நீராடினார். அப்போது அவருடன் உதவியாளர்கள், மகள் மிராயா மற்றும் காங்., எம்எல்ஏ ஆராதனா மிஸ்ரா ஆகியோர் உடன் இருந்தனர். புனித நீராடிவிட்டு, பிரார்த்தனை செய்தார்.
முன்னதாக, அவர் நேரு – காந்தி குடும்ப இல்லமான ஆனந்த் பவனை பார்வையிட்டார். பிறகு, அங்கிருந்து படகில் பயணம் மேற்கொண்டார்.

xxx

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, தீபாவளி ஆகிய 3 நாட்கள் மட்டும் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டு தை அமாவாசை தினமான நேற்று மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டது.

Xxx

ராமேஸ்வரம் தீர்த்தக் கிணறுகளில் புனித நீராட அனுமதி

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும்  பிப்ரவரி  1 -ஆம் தேதி முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன. பின்னர் செப்டம்பர் மாதம் படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில்  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தீர்த்தக் கிணறுகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 11 மாதங்களுக்கு பிறகு  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள  22 தீர்த்த கிணறுகளிலும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புனித நீராடி வருகின்றனர்.

Xxxx

கிருபானந்த வாரியார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் -முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் பிப்ரவரி -9 ஆம் தேதி அவர் வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார்.

இவ்வாறு அவர் பேசினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. முருகப் பெருமான் மீது அளவற்ற பற்றும், பக்தியும் கொண்டவராக அவர் விளங்கியதால் திருமுருக கிருபானந்த வாரியார் என்று அழைக்கப்பட்டார்.

கிருபானந்த வாரியார், 1993ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார். வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Xxxx

திருப்பதி கோவிலில் பிப்ரவரி -19 ஆம் தேதி ரத சப்தமி விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று அதிகாலையில் இருந்து இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

ரத சப்தமி விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 25 ஆயிரம் தரிசன டிககெட் ஆன்லைனில் வெளிடப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

xxx

பாகிஸ்தானில் ஹிந்து கோவில்கள் நிலை; படு மோசம்

 பாகிஸ்தானில், பாரம்பரிய கலாசார சின்னங்களாக விளங்கும் பெரும்பாலான ஹிந்து கோவில்கள், பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு இறுதியில், பாகிஸ்தானின், கைபர் பக்துன்கவா மாகாணம், தெரி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில், ‘ஜமாத் உலேமா இ இஸ்லாம்’ என்ற அமைப்பினரால் இடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், சோஹப் சுடல் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது.இக்குழு, சக்வாலில் உள்ள கடாஸ் ராஜ் மந்திர், முல்தானில் உள்ள பிரகலாத் மந்திர் உட்பட பல வழிபாட்டு இடங்களுக்குச் சென்று, ஆய்வு செய்து, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வழங்கியது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஹிந்துக்கள் வழிபட்டு வந்த பாரம்பரிய கோவில்கள், சீக்கியர்களின் குருத்துவாராக்கள், தற்போது படு மோசமான நிலையில் உள்ளன. மிகவும் பிரசித்தி பெற்ற நான்கு இடங்களில், இரண்டு மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன. உடனடியாக, தெரி மந்திர், கடாஸ் ராஜ் கோவில்கள், பிரஹலாத் மந்திர், ஹிங்லஜ் மந்திர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.ஹிந்து, சீக்கியர் ஆகியோரின் நுாற்றுக்கணக்கான சொத்துக்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை, இந்த அமைப்பு ஆக்கிரமித்துள்ளது.மோசமான நிலையில் உள்ள, சிறுபான்மையினரின் புராதன வழிபாட்டு தலங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

xxx

இறுதியில் ஒரு சுவையான செய்தி

எமதர்மராஜா வேடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீஸ் அதிகாரி

மத்திய பிரதேசத்தில் எமதர்மராஜா வேடமணிந்து போலீஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்து மதத்தில் மரண தேவதையான எமதர்மராஜா வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும் என்ற செய்தியை பரப்பவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்

Xxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

 tags- உலக இந்து சமய ,செய்தி மடல், 14-2-2021,

உலக இந்து சமய செய்தி மடல் 31-1-2021(Post No.9210-B)

SABARIMALAI TEMPLE

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9210-B

Date uploaded in London – –31 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஜனவரி 31 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

Xxx

குடியரசு தின அணிவகுப்பில் சரணம் அய்யப்பா கோஷம்

AYYAPPA TEMPLE IN SABARI MALAI

டில்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டோர் மாநிலங்களின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகளை செத்தபி படுத்தினர். ராமர் கோவில் அலங்கற உறுதி, கேதார் நாத் அலங்கற உறுதி ஆகியன குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றன. விவசாயிகளின் வன்முறையில் இஅவைகள் சேதப்படுத்தப்பட்டன. இதை இந்துக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இது ஒரு புறமிருக்க அரசு தரப்பிலிருந்து வந்த நல்ல செய்தியும் உண்டு. ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வீர முழ க்கம் உண்டு. அதன்படி  பிரம்மோஸ் அணிவகுப்பின் கோஷம் சுவாமியே சரணம் அய்யப்பா என்பதாகும். ஏற்கனவே ஜனவரி 15ம் தேதி நடந்த ராணுவ தின அணிவகுப்பில் அதி பயங்கர ஏவுகணை தாங்கியான பிரம்மாஸ்திரம் சென்றபோது டில்லி விதிகளில் சுவாமியே சரணம் அய்யப்பா  என்ற கோஷம் விண்ணதிர முழக்கப்பட்டது குடியரசு தின அணிவகுப்பிலும் இதே பிரம்மோஸ் அணி சரண கோஷத்தை எழுப்பி மக்களை மகிழ்வித்தது பாரத் மாதா  கி ஜே , ஜெய  துர்கா மாதா என்பன வேறு சில ராணுவ வெற்றி வெற்றி முழக்கங்கள் ஆகும்

XXXX

விவசாயிகள் பேரணியில் வன்முறை –ஆர்எஸ்எஸ் கண்டனம்

டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது குறித்து ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி தெரிவித்துள்ளார்.

டில்லியில் ஜன.,26 விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கு, தங்களது அமைப்பு கொடியை ஏற்றினர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டமானது, வருத்தத்திற்குரியது. வன்முறைகளும், அதைத் தொடர்ந்து செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டதும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை.

டில்லி செங்கோட்டையில் நடந்த சம்பவங்கள் நமது தேசத்தின் ஒற்றுமைக்காக உயிர்தியாகம் செய்த தேசத்தலைவர்கள், சுதந்திரப்போராட்டத் தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். தேசத்தின் மக்கள் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அமைதிக்காக ஒன்றுதிரள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Xxxx

சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி

குடியரசு தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

ஆண்டுதோறும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். குடியரசு தினத்தையொட்டி , நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின், கீழ வீதி ராஜகோபுரத்தில், தீட்சிதர்கள் ஜனவரி 26ம் தேதி காலை 8:00 மணிக்கு தேசியக் கொடியேற்றினர்

xxxx

தாண்டவ்வலைத் தொடர் சர்ச்சை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  •  

தாண்டவ்  TANDAV வலைத் தொடர் சர்ச்சை தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு தடையில்லை’ என, உச்ச நீதிமன்றம் SUPREME COURT உத்தரவிட்டது.


அமெரிக்காவைச் சேர்ந்த, ‘அமேசான் பிரைம்’ தளம், திரைப்படங்கள் மற்றும், ‘வெப் சீரிஸ்’ எனப்படும் வலைத் தொடர்களை, வாங்கியும், சொந்தமாக தயாரித்தும், வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில், தாண்டவ் என்ற, ஹிந்தி வலைத் தொடரை, சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது. ‘பாலிவுட்’ நடிகர், சயீப் அலி கான், நடிகை டிம்பள் கபாடியா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இதில், பல காட்சிகள் மற்றும் வசனங்களில், ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு மாநிலங்களிலும், ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வலைத் தொடர் தயாரிப்பு தரப்பில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்களை கைது செய்வதில் இருந்து, ஏழு நாட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கோரப்பட்டது.இந்த மனு, SUPREME COUERT  நீதிபதிகள், அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க, நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ‘கைது நடவடிக்கையில் இருந்து, விலக்கு அளிக்க முடியாது’ என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக, உயர் நீதிமன்றங்களை நாடுமாறு உத்தரவிட்டனர்.

XXXX

குகையில் வாழும் சாமியார் அயோத்தி ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.. சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் இந்தக் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்படுவதை அறிந்த அவர், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 கோடி நிதியை கோயில் கட்ட நன்கொடையாக வழங்க தீர்மானித்தார். 

அவரது கணக்கில் போதிய நிதி இருப்பதை உறுதி செய்த வங்கி அதிகாரிகள், இதற்கான நிதி திரட்டும் உள்ளூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அவர்களிடம் சுவாமி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

XXXXXXX

திருமலையில் இலவச தரிசன டிக்கெட் 20 ஆயிரமாக உயர்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட், 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அக்.,26ம் தேதி முதல் தினசரி 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இப்போது இலவச தரிசன டிக்கெட், 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

XXXX

சபரிமலை வருமானம் ரூ. 248 கோடி சரிவு பக்தர்களிடம் உதவி கோர திட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு, 269 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்தாண்டு, 92 சதவீதம் சரிந்து, 21 கோடி ரூபாயாக குறைந்தது. இதையடுத்து, ‘இழப்பை சரிக்கட்ட வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும், வங்கிகளில் கடன் வாங்கவும் பரிசீலித்து வருகிறோம்’ என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையின் வருமானம் 269.17 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தாண்டு, கொரோனாவால், பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டனர். எனவே வருவாய் கடுமையாக சரிந்தது. வெறும், 21.17 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. சபரிமலை தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள, 1248 கோவில்கள், சபரிமலை வருவாயை வைத்து தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. மாத சம்பளம் மற்றும் இதர கோவில்கள் பராமரிப்பிற்காக மட்டும், 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

Xxxx

பழனி முருகன் கோவில் தைப்பூசம்

 தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.

* மலர்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து பக்தர்கள் அசத்தினர். அலகு குத்தி சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

* குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலை சுமந்து வந்தனர்.


* விழாவின் சிகர நிகழ்ச்சியான  தைப்பூச தேரோட்டத்தையொட்டி பழனி ரதவீதிகளில் பெண் பக்தர்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி வலம் வந்தனர்.

Xxxxx

தெலுங்கானா  மாநிலத்திலிருந்து வந்த ஒரு சுவையான செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது .

தெலுங்கானா  மாநிலத்தில் வேமுலவாடாவில் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இது ஒரு சிவன் கோவில். அங்கு இறைவனுக்கு காளை மாட்டு ஒன்றை கட்டும்சடங்குக்கு கொடை மொக்குலு என்று பெயர். இந்தக் கோவிலின் இன்னொரு புதுமை கோவில் வட்டத்துக்குள் ஒரு முஸ்லீம் தர்காவும் இருக்கிறது இதன் காரணமாக இந்துக்கள் அங்கு செல்வதும் முஸ்லிம்கள் இந்தக் கோவிலுக்கு வந்த்து வழிபடுவதும் வழக்கம். மந்தாணி என்னும் ஊரைச் சேர்ந்த அபிசார என்னும் முஸ்லீம் பெண்மணி இந்த மாட்டுக் கோட்டை செய்ய விரும்பினார். கோவில் நிர்வாகத்தினரும் அவரை கோவிலுக்குள் அனுமதித்து கொட மொக்குழு சடங்கை நிறைவேற்ற அனுமத்தித்தனர். இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்துடன் வெளியிட்டுள்ளது .

XXX

மலேஷியாவில் தைப்பூசம்

மலேஷியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச ரத யாத்திரை பெரிய ஊர்வலம் இன்றி நடந்தது. குறிப்பிட்ட நேரத்தில் முருகன் சிலை தங்கிய புனித ரதம் பத்து குகை, என்றும் பாது குகைகள் (BATU CAVES) என்றும் அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றது.பல்லாயிரக் கணக்கான மக்கள் ஈடுபடும் ரத ஊர்வல பத்து பேர் மட்டுமே ரத்தத்துடன் வரலாம் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. வைரஸ் தாக்குதலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் அறிவிக்கப்பட்டது.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன…………………………..

செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

—SUBHAM—

TAGS- உலக இந்து சமய,  செய்தி மடல் 31-1-2021

உலக இந்து சமய செய்தி மடல் 30-11-2020 (Post No.8987-C)

Compiled  BY LONDON SWAMINATHAN (News Editor, Gnanamayam)

Post No. 8987-C

Date uploaded in London – –1 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவம்பர் 30-ம்  தேதி  —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXX

இன்று தேவ தீபாவளிப் பண்டிகை நாளாகும்

நேற்று தமிழ் நாடு உள்பட தென் இந்தியாவில் கார்த்திகைத் தீ த் திரு நாள் கொண்டாடப்பட்டது. இன் று  வட இந்தியாவில் கார் த்திக் பூர்ணிமா கொண்டாடப்படுகிறது இந்து சந்திர கிரஹண நாள். ஆனால்  பகல் நேரத்தில் நடப்பதால் அது இந்தியாவில் தெரியாது .

கார்த்திகை பவுர்ணமி நாளான இன்று  1700 மைல் தூரம் ஓடும் கங்கை நதியின் துறைகள் தோறும் பல லட்சம் மக்கள் புனித நீராடுவர். ஹரித்துவாரில் மட்டுமே பல லட்சம் மக்கள் நீராடுவது வழக்கம். ஆனால் புனித  நீராட்டத்துக்கு ஹரித்துவார் மாஜிஸ்திரேட் தடை விதித்துள்ளார்.

இந்தியாவில் தடை இல்லாத ஊர்களில் மக்கள் இன்று காலை முழுவதும் நீராடத்  துவங்கிவிட்டனர் . தேவர்கள் தீபாவளி எனப்படும் இன்று காசி மா நக ரத்துக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும்உத்தர பிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்ய நாத்தும்  வந்துள்ளனர். இன்று புனித காசியில் 14 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன . ஆண்டுதோறும் கங்கை நதித் துறையில் விளக்கு ஏற்றுவது வழக்கம். இவ்வாண்டு மணல் திட்டுகளிலும் புற நகர்ப் பகுதிகளிலும் தீபமங்கள ஜோதி ஒளியைக் காணலாம்.

காசியில் நடக்கும் மஹா ஆரத்தியைக் காண்பதற்கு இன்று இறைவனும் தேவர்களும் கங்கை நதிக்கு வருவதாக ஐதீகம். இதன் காரணமாக இது தேவ தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. சிவ புராணத்திலும் இது பற்றிய குறிப்பு இருப்பதாக ஆன்றோர் பகர்வர்.  திரிபுராசுரனை இறைவன் கொன்ற நாளும் இதுவே .

XXX

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  NETRU மாலை 6 மணிக்கு நகரின் மையப் பகுதியில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை மாகாதீபம் ஏற்றப்பட்டது.

கொரோனா காரணமாக முதல் முறையாக பக்தர்கள் இன்றி தி. மலையில் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 1,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

XXXXXXX

பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்..


முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், இருள் நீங்கி, ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை’ தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

XXXXX

லவ் ஜிகாத்‘: 10 ஆண்டு சிறை விதிக்கும் அவசர சட்டத்திற்கு உ.பி., கவர்னர் ஒப்புதல்

லக்னோ: நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், ‛லவ் ஜிகாத்’ ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

உ.பி.,யில் திருமணத்துக்காக நேர்மையற்ற முறையில் மதம் மாறுவதையும், ஹிந்துப் பெண்களைக் காக்கவும், ‛லவ் ஜிகாத்’துக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.


இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


‛திருமணத்தை அடிப்படையாக வைத்து 100க்கும் மேற்பட்ட கட்டாய மதமாற்றங்கள் நடந்துள்ளன. இந்த நேர்மையற்ற மதமாற்றத்தைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மைனர் சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களை கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இது ஜாமினில் வெளிவரமுடியாத குற்றமாகவும் கருதப்படும்,’ எனக் கூறினார்.

XXXX

சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள தலைமை செயலர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கொரோனா காரணமாக சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வார நாட்களில் ஆயிரம், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் வருமானம் குறைந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தவிக்கிறது. இதனால் தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று தேவசம்போர்டு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக முடிவு எடுக்க கேரள அரசின் தலைமை செயலாளர் விஸ்வாஸ்மேத்தா தலைமையில் உயர்மட்ட கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

XXXX

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடக்கின்றன. இதில் கார்த்திகை மாதம் நடைபெறும் புஷ்பயாகம் சிறப்பு வாய்ந்தது. இதனையொட்டி கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அப்போது உற்சவர்களுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புஷ்பயாகத்தையொட்டி மல்லிகை, ரோஜா, கனகாம்பரம், லில்லி, இக்சோரா உள்பட 14 வகையான 7 டன் பூக்கள் கூடை கூடையாக தேவஸ்தான பூங்காவிலிருந்து விழா நடக்கும் மண்டபத்திற்கு ஊழியர்களால் எடுத்து வரப்பட்டது அந்த பகுதியே மலர்களின் நறுமணத்தால் பக்தி பரவசமாக இருந்தது.

XXXX

திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு

President Kovind in Balaji Temple

திருமலை: திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி, திருமலை அன்னமய பவனில், நேற்று மாலை அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில், குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில், பல முக்கிய விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கூட்ட நிறைவுக்கு பின், சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலை தேவஸ்தான வரலாற்றில் முதன் முறையாக, வைகுண்ட ஏகாதசியின் போது, 10 நாட்கள் சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்காக மடாதிபதிகள், பீடாதிபதிகளுடன் கூடிய கமிட்டி ஏற்படுத்தப்பட்டு, அதில் முடிவு செய்யப்பட்டு, அறங்காவலர்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரும், 25 முதல், தொடர்ந்து, 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்து வைக்கப்பட உள்ளது.

திருமலை தேவஸ்தானத்திடம் உள்ள அசையாத சொத்துக்கள் தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தேவஸ்தானத்தின் சொத்துக்கள் விற்கப்படுவதை தடுக்க, தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை தேவஸ்தானத்திடம், 1,128 சொத்துகள் உள்ளன; 8088.89 ஏக்கர் நிலம் உள்ளது.

XXXX

நியூசிலாந்து எம்.பி. சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர், நாடாளுமன்றத்தில் பதவியேற்பின் போது சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி ஏற்றார்.

இந்தியாவில் ஹிமாச்சால பிரதேசம், ஹமீா்பூரை பூா்விகமாக கொண்டவர் டாக்டர் கெளரவ்  சர்மா . மருத்துவரான இவர் அங்கிருக்கும் தொழிலாளர் கட்சி சார்பில், நியூசிலாந்தின் ஹாமில்டன் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த புதன் கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பதவியேற்பின் போது, டாக்டர் கெளரவ்  சர்மா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், முதலில் நியூசிலாந்தின் மயோரி

 மொழியிலும் பின்னா் சம்ஸ்கிருத மொழியிலும் உறுதிமொழி ஏற்றார்.

பதவி ஏற்பின் போது, ஏன் ஹிந்தி மொழியில் உறுதி மொழி எடுக்கவில்லை என்று சர்மாவிடம் கேட்ட போது, அவர்

ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்துவது என்பது கடினமான விஷயம். அதன் காரணமாகத்தான் சம்ஸ்கிருதத்தை தெரிவு செய்தேன். சம்ஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியது என்று கூறியுள்ளார்.

XXXXXX

நியூ ஜெர்சியில் சாத் பூஜை

சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

இந்தியாவின் வடமாநிலங்களில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும். நான்கு நாட்களுக்கு இந்த பூஜை நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்., அமெரிக்காவில் வாழும் வட இந்தியர்கள் பலரும் சாத் விரத பூஜையில் பங்கேற்றனர். அமெரிக்காவின், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மனலபன் ஆற்றுக்கரையில் திரண்ட 600க்கும் அதிகமான வடஇந்திய பெண்கள் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான சாத் விரத பூஜை நடத்தினர்.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி,

வணக்கம்

tags — உலக இந்து சமய,  செய்தி மடல் 30-11-2020 ,

23-11-2020 உலக இந்து சமய செய்தி மடல் (Post .8964-b)

Compiled and Edited BY LONDON SWAMINATHAN (News Editor, Gnanamayam)

Post No. 8964-b

Date uploaded in London – –24 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவம்பர் 23-ம்  தேதி  —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

அனைவர்க்கும் ஞான மயக்  குழுவினரின்   திருக்  கார்த்திகை தீ பத் திருநாள் வாழ்த்துக்கள்

நவம்பர் 29-ம் தேதி திருக்  கார்த்திகை தீபத் திருநாள்  தினம் கொண்டாடப்படுகிறது. 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

முதலில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்ட செய்திகளை சுருக்கமாகச் செப்பிவிட்டு தமிழ் நாட்டுச் செய்திகளை விரிவாக வழங்குகிறேன்.

இன்று நவம்பர் 23-ம் தேதி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்த நாளை உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் கொண்டாடுகின்றனர். லண்டன் உள்பட உலகின் பெரிய நகரங்களில் அகண்ட நாம பஜனை நடைபெறுகிறது

Xxx

முதலில் கேரள செய்திகள்

கேரளத்தில் சபரி மலை சாஸ்தா கோவில் வருமானம் மிகவும் குறைந்து விட்டது. கடந்த சில நாட்களில் கிடைத்த வருவாய் சுமார் பத்து லட்சம் ரூபாய்கள்தான் .சென்ற ஆண்டு இதே காலத்தில் மூன் ற ரரைக் கோடி ரூபாய் வருமானம் கிட்டியது . இதற்குக் காரணம் குறைவான பக்கதர்களை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பதாகும் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக 50,000 பக்தர்களுக்குப்  பதிலாக 1000 முதல் 2000 பக்தர்களே ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர்  தேவஸ்வம் போர்டு கேரள அரசிடம் நிதி உதவி கோருகிறது. அத்தோடு பக்தர் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதியும் கோரியுள்ளது.

XXX

கேரளத்திலிருந்து யானைக் குழப்பம் பற்றிய சுவையான செய்தியும் கிடைத்துள்ளது.

கேரளத்தில் கோவில் விழா காலத்தில் அலங்கார யானைகள் அணிவகுப்பு நடைபெறும்  ஆனால் இப்போது ஒரே ஒரு யானையை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கொச்சி நகரிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மாவட்ட யானைகள் பராமரிப்புக் கண்காணிப்புக்கு குழுவின் தலைவர் ஐசக்  இவ்வாறு ஒரே யானை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்

ஆனால் மூன்று யானைகளை த்ரிபுனித்துறை கோவில் விழாவில் பயன்படுத்த கலெக்டர் அனுமதித்துள்ளார் யானைக் குழப்பம் யானை அளவுக்கு நீடிக்கிறது.

XXXX

வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் நடைபெறும் சாத் பூஜை கள் இனிதே நிறைவேறின. இந்துப் பெண்கள் விரத மிருந்து நதிகளில் நீராடி சூரிய தேவனுக்கு அர்க்யம் கொடுப்பது முக்கிய சடங்கு ஆகும். இந்த ஆண்டு பாட்னா நகரில் கங்கை நதிக்குச் செல்லாமல் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரும். துணை முதலமைச்சர் ரேணு தேவியும் வீட்டில் இருந்தவாறே சூரிய பகவானை வழிபட்டனர்.

XXXX

குருப் பெயர்ச்சிக் கொண்டாட்ட செய்திகள் இதோ

சென்ற 20-ம் தேதி முதல் குரு ப் பெயர்ச்சி பூஜைகள் தமிழ் நாட்டின் கோவில்களில் நடந்து வருகின்றன. குரு என்றும் வியாழன், பிருஹஸ்பதி என்றும் அழைக்கப்படும் ஜூப்பிட்டர் என்னும் கி ரஹம் சூரியனை சுற்றி வர 12 ஆண்டுகள் ஆகும் .ஒவ்வொரு ஆண்டும் இது வேறு ஒரு ராசிக்குச் செல்லுகையில் அரசியல், அலுவலகம், குடும்பங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் மக்கள் இதை கவனமாக பார்ப்பார்கள்.

 மேலும் உலகிலேயே மிகப் பெரிய விழாவான கும்பமேளாவும் குருவின் இயக்கத்தைப் பொறுத்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இதற்கு இடையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மினி அதாவது குட்டி கும்பமேளாக்கள் நடைபெறும். அப்படிப்பட்ட குட்டி மேளா  புஷ்கரம் என்று அழைக்கப்படும் ஆந்திர மாநிலத்தில் உள்ள கர் நூல் நகரில் தூங்க பத்ரா நதியில் புஷ்கரம் துவங்கி விட்டது.

இந்த நதி செல்லும் மாநிலங்களில் இவ்விழா நடைபெறுகிறது.ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வேத கோஷ முழக்கத்திடையே பாரம்பர்ய முறையில் விழவைத் தவக்கிவைத்து பூஜை செய்தார். நதி மாதாவுக்கு புடவையும் அர்ப்பணித்தார். அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தினர் என்பதால் வரவில்லை. இந்துக்களின் பெரிய யாக யக்ஞங்களை மனைவியுடன் தான் செய்ய முடியும். ஆனால் நதிக்கரையில் நடந்த யாகத்தில் ஜெகன்,  மனைவி இல்லாமல் பங்கு கொண்டார்..

இதற்கிடையில்  கர்நூல் மாவட்ட நிர்வாகம் 23 நதித் துறைகளை ஏற்படுத்தி “பிண்ட பிரத நம்” கிரியைகளுக்கு வகை செய்துள்ளது . பல லட்சம் மக்கள் பங்கு கொள்ளும் இந்த 12 நாள் விழாவில் மக்கள், துங்க பத்ரா நதிக்குள் இறங்கி புனித ஸ்னாநம் செய்யக்கூடாது என்று தடை விதித்த நிர்வாகம்,  நதி நீரை ஷவர் SHOWER வழியாக மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது .

பக்தர்கள் அருவி நீரில் குளி ப்பது போல நின்று குளித்து  விட்டு அருகிலுள்ள கூடாரங்களில் உடை மாற்றிக் கொள்ளவும் இலவச உணவு பெறவும் ஏற்பாடுகள் உள்ளன. ஆயினும் வைரஸ் நோய் தடுப்பு விதி முறைகளைக் கடைப்பிடித்த பின்னரே பங்கு கொள்ள இயலும்.

XXX

பஞ்ச பூதத்  தல ங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் கார்த்திகைத் தீ ப த் திருநாள் துவங்கி விட்டது . சுமார் 20 லட்சம்  பேரைக் கவர்ந்திழுக்கும் இவ்விழா இந்த ஆண்டு வைரஸ் நோய் ஆபத்து காரணமாக சில ஆயிரம் பேராகச் சுருங்கிவிட்டது. மலை மீது நவம்பர்  29–  ம் தேதி பெரிய தீபம் ஏற்றப்படும். ஆனால் கார்த்திகை நாளன்று கோவிலுக்குள்ளும் மலை மீதும் பக்தர்கள் செல்ல முடியாது.

இது ஒருபுறமிருக்க வீ டு தோறும் , வீதி தோறும் மக்கள் விளக்கேற்றி வழிபட ஆயத்தமாகி வருகின்றனர் சங்கத் தமிழ் நூல்களும் போற்றும் கார்த்திகை நாளன்று  தமிழ் நாடு முழுதும் தீப ஜோதி விளக்குகளில் பிரகாசிப்பது கண் கொள்ளா க் காட்சி ஆகும் . இதை ஒட்டி மூன்று நாட்களுக்கு விளக்கு ஏற்றுவது. சொக்கப்பனை கொளுத்துவது தமிழ ர்களின் வழக்கம்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில்  15 ம் தேதி  குரு பகவானுக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், விபூதி போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் பதஞ்சலி முனிவர் பூஜித்து வழிபட்டு வந்த சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர்கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

XXXX

தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-  ம் தேதி மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோவிலும் சாமி தரிசனம் செய்தார்.

அத்துடன் 17-  ம் தேதி அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை  தரிசனம் செய்தார்.

XXXXX

பாகிஸ்தானிலிருந்து ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது  1300 ஆண்டுப் பழமையான இந்து க் கோவிலை இத்தாலிய பாகிஸ்தானிய தொல் பொருட் துறை அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது சாஹி வம்சத்தாரால் விஸ்ணு பகவானுக்கு அமைக்கப்பட்ட கோவில். முன் காலத்தில் மஹாபாரத காந்தாரியைப் பெற் றெ டுத்த காந்தாரம் மற்றும் வட மேற்கு இந்தியாவை இந்து மத சாஹி மன்னர்கள் 200 ஆண்டுகளுக்கு ஆண்டனர். இப்போது அந்தப் பகுதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் நாடுகளில் உள்ளன.

வடமேற்கு பாகிஸ்தானில் Swat ஸ்வாட் மாவட்டத்தில் Barikot Ghundai பாரிகோட்   குண்டாய் என்னும் ஊரில் இந்த விஷ்ணு ஆலயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

XXXX

ஜைனத் துறவியின் 151-வது ஜெயந்தி

ஜைனத்துறவி ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜின், 151-வது ஜெயந்தியை முன்னிட்டு 16-ம் தேதி அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜைனத் துறவியான ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்( 1870-1954), எளிய வாழ்க்கையை வாழ்ந்து, பகவான் மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி கல்வியைப் பரப்புவதற்காகவும், சமூக தீமைகளை எதிர்க்கும் வகையிலும் பல்வேறு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பக்தி பாடல்களை படைத்தவர்., விடுதலைப் போராட்டத்திற்கும் தீவிர ஆதரவளித்தார்.

அவருடைய ஊக்குவிப்பால் கல்லூரிகள், பள்ளிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகின்றன

XXXX

லண்டனில் மீட்ட கோவில் சிலைகள் தமிழக போலீசிடம் ஒப்படைப்பு

லண்டனில் இருந்து 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகளை மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்   17-ம் தேதி தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து 1978ம் ஆண்டில் ராமர் சீதை லட்சுமணன் சிலைகள் திருடு போயின. இந்த சிலைகள் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடத்தப்பட்டது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.

திருடுபோன ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளும் செப்டம்பரில் மீட்கப்பட்டன. அதன்பின் பிரிட்டன் அரசு சிலைகளை மத்திய அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது.

பின் மத்திய அமைச்சர் பிகலாத் சிங் படேல் கூறுகையில் ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்களை மீட்டுள்ளது” என்றார்.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

அனைவர்க்கும் ஞான மயக்  குழுவினரின்   கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

 TAGS- 23-11-2020,  உலக இந்து சமய ,செய்தி மடல்

9-11-2020 உலக இந்து சமய செய்தி மடல் (Post No.8912-b)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 8912-b

Date uploaded in London – –10 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவம்பர் ஒன்பதாம்  தேதி  —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

அனைவர்க்கும் ஞான மயக்  குழுவினரின்   தீபாவளி  வாழ்த்துக்கள்

நவம்பர் 14ம் தேதி தீபாவளியும் இந்தியாவில் குழந்தைகள் தினமும் கொண்டாடப்படுகிறது.  உங்கள் குழந்தைகள் அனைவர்க்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களும் உரித்தாகுக

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

ayodhya

முதலில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்ட செய்திகளை சுருக்கமாகச் செப்பிவிட்டு தமிழ் நாட்டுச் செய்திகளை விரிவாக வழங்குகிறேன்.

பிரிட்டிஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக தீபாவளி கொண்டாடப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டு 4 லட்சம் தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற அயோத்தி , இம்முறை 5 லட்சம் தீபங்களை ஏற்ற திட்டமிட்டுள்ளது.

லவ் ஜிஹாத் எனப்படும் கட்டாய மத மாற்ற காதல் வலையை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள்  சட்டங்களை இயற்றத் தீர்மானித்துள்ளன. கர்நாடகமும் இதை பரிசீலித்து வருகிறது. திருமணத்துக்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது என்று முன்னதாக உயர்நிதி மன்றமும் தீர்ப்பு வழங்கி இருந்தது.

மதம் மாற்றம் செய்யும் நோக்கத்தோடு இந்து சமயப் பெண்களையும் ஆண்களையும், ஏனைய மதத்தினர்  காதல் வலையில் சிக்க வைப்பது லவ் ஜிஹாத் என அழைக்கப்படுகிறது .

XXX

மதுரா  நகரிலுள்ள கிருஷ்ண பரமாத்மாவின் கோவிலில் ஒரு முஸ்லிம்  தொழுகை செய்ததைக்  கண்டித்து பாக் பட் நகரில் பாரதீய ஜனதா  எ ம் எல் ஏ . ஹனுமான் சாலீஸா   துதியைப்  படித்தார். இருவர் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

XXX

லவ் ஜிஹாத்துக்கு எதிராக 3 மாநிலங்கள் சட்டம் இயற்றும்

உத்தரப்பிரதேசத்தில் மதுரா நகர கிருஷ்ணன் கோவிலுக்குள் ஒருவர் நமாஸ் தொழுகை நடத்தியதை அடுத்து இந்து எம் எல் ஏ ஒருவர் மசூதியில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்தார் . இதில் தொடர்புடைய முஸ்லிமும் ஹிந்துக்களும் கைது செய்யப்பட்டனர்

XXXX

காமாக்யா கோவிலில் தங்க கலசம்

அஸ்ஸாம் மாநிலத்தில் கெள ஹாத்தி நகரிலுள்ள அன்னை காமாக்யா தேவி கோவில் மிகவும் புகழ்பெற்றது. அது நாட்டிலுள்ள சக்திக் கேந்திரங்களில் ஒன்று.

அந்தக் கோவில் கோபுரத்தில் மூன்று பெரிய  தங்கக்  கலசங்களைப்   

 பொருத்துவதற்காக  ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி 20 கிலோ தங்கத்தை கொடுத்துள்ளார்.

XXX

கோவில்களின் நிதியை இந்து சமயம் தொடர்பில்லாத பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாதென்று சென்னை உயர்நீ தி மன்றம் கூறியுள்ளது..

XXX

கேரளத்தில்  தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அர்ச்சகர் பதவி

கேரளத்திலுள்ள திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, புகழ் பெற்ற சபரிமலை ஆலயம் உள்பட 1200 க்கும் மேலான கோவில்களை நிர்வகித்து வருகிறது .கேரளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பிராமணர் அல்லாத 133 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது பகுதி நேர அடிப்படையில் ஷெட்யூல்ட்டு வகுப்பினர், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மேலும் 19 பேரை பகுதிநேர அர்ச்சகராக நியமிக்க போர்டு தீர்மானித்துள்ளது

XXX

தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தற்போது கொரோனா பரவல் காரணமாக 2-வது முறையாக முழு LOCK DOWN அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘உலக தீபாவளி திருவிழா 2020’ கொண்டாட்டங்கள் காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் தீபாவளியில் இருள் மீது ஒளி வெற்றி பெறுவது போல் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-

 இருள் மீது ஒளி வெற்றி பெறுகிறது; தீமை அழிகிறது; அறியாமை அகலுகிறது; என்பதை தீபாவளி நமக்கு கற்பிப்பதை போலவே நாம் ஒன்றாக சேர்ந்து இந்த வைரசை வெல்வோம்.

XXXX

திருச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 150 இலங்கை தமிழ் பெண்கள் விரதமிருந்து 21 நாட்களும் கேதார கவுரி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.

ஐப்பசி மாதத்தில் வரும் விரதங்களில் ஒன்றாக கேதார கவுரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விரதமானது தீபாவளி அமாவாசையன்று முடிவுறும் 21 ஒரு நாள் விரதம் ஆகும். சிவனைக்குறித்து அன்னை பார்வதி மேற்கொண்ட விரதங்களில் முக்கியமானது இந்த கேதார கவுரி விரதம்.

அன்னை பராசக்தியான கவுரி இறைவனின் ஒரு பாகத்தை அடைய மேற்கொண்ட இந்த விரதம் 21 திதிகள் அடங்கிய 21 தினங்களில் கடைபிடிப்பது. இந்த விரதம் பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் நவமி அல்லது அஷ்டமி திதியில் தொடங்கும். திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் கேதாரேஸ்வரர் மற்றும் கேதார கவுரி அம்மன் சன்னதி உள்ளது.


இந்த ஆண்டு இலங்கை தமிழ் பெண்கள் சுமார் 300 பேர் விரதம் இருந்து வருகிறார்கள். இந்த விரதத்தின் இறுதி நாளான தீபாவளி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இந்த விரதமானது முடித்து வைக்கப்படுகிறது.

XXXX

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் வெற்றி பெற்றதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டு வாசல்களில் ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் காமராஜ் அங்குள்ள கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறுகையில், “இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் இப்போது அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றில் அமர்கிறார். இது ஒரு பெருமையான தருணம்” என்றார்.

கமலா ஹாரிஸ்  சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

XXXXX

தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் தொன்மை வாய்ந்தது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் 20 லட்சம் பக்தர்கள் வரை அன்று கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. வருகிற 20–ந்தேதி திருவிழா தொடங்குகிறது.29–ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா பல்லாண்டுகளாக தடையின்றி நடந்து வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவது தெய்வ குற்றம் ஆகும். எனவே தீபத்திருவிழா தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா வுக்கு தடை விதிக்கக் கூடாது. தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் தேவையான கட்டுப்பாடுகளை விதித்து வழக்கம்போல் தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

XXXX

அடுத்த சில நாட்களில் வரும் முக்கிய விழாக்கள்

நவ 09, திங்கள் : நவமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுரகவி சுவாமிகள் குருபூஜை.

நவ 10, செவ்வாய் : தசமி. ஐப்பசி பூரம். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மாள் இரவு தங்க சப்பரத்தில் தபசுக்காட்சி.

நவ 11, புதன் : ஏகாதசி. விஷ்ணு தலங்களில் சிறப்பு அலங்கார தீபாராதனை. தென்காசி, கடையம், பத்தமடை, தூத்துக்குடி, சங்கரநயினார் கோவில் ஆகிய திருத்தலங்களில் ஸ்ரீஅம்பாள் திருக்கல்யாணம்.

நவ 12, வியாழன் : துவாதசி. பிரதோஷம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

நவ 13, வெள்ளி : திரயோதசி. மாத சிவராத்திரி. தன்வந்திரிபகவான் ஜெயந்தி. வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்ஸவாரம்பம். வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா. திரு இந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கநாதர் திருக்கல்யாண வைபவம்.

XXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

அனைவர்க்கும் ஞான மயக்  குழுவினரின்   தீபாவளி  வாழ்த்துக்கள

 9-11-2020, உலக இந்து சமய,  செய்தி மடல்