இந்தியாவின் வளர்ச்சி: கவலை அடையும் உலக நாடுகள்! (10,171)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,171

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவின் வளர்ச்சி: கவலை அடையும் உலக நாடுகள்!

ச.நாகராஜன்

இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக அழகுற இருப்பதைக் கண்டு உலக நாடுகள் கவலைப் படுகின்றன. தங்களின் ஆதிக்கம் உலகில் குறைந்து விடுமோ என்ற பயம் பல வளர்ச்சியுற்ற நாடுகளுக்கு இருக்கின்றன.

இந்த நிலையில் வரலாற்றைக் கவனித்தால் ஒரு உண்மை நன்கு நமக்குப் புரியும் – “எப்பொழுதெல்லாம் தர்ம வழியில் இந்தியா செழித்து ஓங்குகிறதோ அப்போதெல்லாம் அது தலை நிமிர்ந்து உலகிற்கு வழி காட்டி இருக்கிறது”

.

இந்தியாவை எல்லை ரீதியாக ஆக்கிரமித்துக் குழப்பம் விளைவிக்க சீனா துடிக்கிறது.

காஷ்மீரில் பிரச்சினை உருவாக்கி ஆதாயம் தேட நினைக்கிறது பாகிஸ்தான்.

தீவிரவாதத்தின் மூலம் ஆப்கானிஸ்தானை அக்கிரமாக ஆக்கிரமித்திருக்கும் தாலிபான்கள் தங்கள் பங்கிற்கு தீவிரவாத சக்திகளை இந்தியாவில் ஊக்குவிக்கின்றனர்.

கோவிட் வைரஸ் மூலமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இந்தியா சங்கடத்தில் ஆழ்ந்து விடாதா என்ற அரை மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் பல உலக நாடுகள் உள்ளன.

இந்து மதத்தை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டுமென்று மதமாற்ற வெறியர்களான கிறிஸ்தவ பாதிரிகள் இந்தியாவில் செய்யும் அக்கிரமத்திற்கு ஒரு எல்லையே இல்லை.

எல்லை ஓரமாக இருக்கும் மாநிலங்களில் இவர்களின் ஜரூர் வேலைக்கும் , கடற்கரை ஓரமாக உள்ள மீனவர் குடியிருப்புகளில் கன்னிக் குமரியிலிருந்து கடல் எல்லை நெடுகிலும் இவர்கள் செய்கின்ற ஜரூர் வேலைக்கும் கோடி கோடியாக பல நாடுகள் பணத்தை அள்ளிக் கொட்டுகின்றன.

மதமாற்றத்திற்கு பெண் ஆசை, மண் ஆசை, அதிகாரம், பதவி ஆசை, பண ஆசை என பல விதங்களிலும், ‘தீண்டாமை எங்களிடம் கிடையாது’ என்ற பொய் வார்த்தை மூலமும் கிறிஸ்தவ மத மாற்றப் பிரசாரம் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

பிரபல நடிகர்களுக்கு ஏராளமாகப் பணம் கொடுத்து இந்து மதத்தை இழிவு படுத்தும் காட்சிகள் ஒரு புறம்;

டைரக்டர்களுக்குப் பணம் கொடுத்து கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக காட்சி அமைக்கச் சொல்வது ஒரு புறம்;

விளம்பரக் கம்பெனிகளுக்குப் படம் கொடுத்து இந்து மத சின்னங்களை இழிவு படுத்தி விளம்பரத்தில் காட்டுவது ஒரு புறம்;

அழகிகளான நடிகைகளை கண்டபடி ட்வீட் செய்ய வைத்து இந்திய இறை ஆண்மை ஆட்சியை அசைக்க நினைப்பது ஒரு புறம்.

ஓய்வு பெற்ற அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள் செல்லாக் காசான நிலையில் அவர்களுக்குப் பணம் கொடுத்து யூடியூப் மூலம் கண்டபடி பேசச் சொல்வது ஒரு புறம்:

இப்படி ஏராளமான வழிகளை மிஷனரிகள் கடைப்பிடிக்கின்றன.

தீவிரவாதிகளோ தமிழகத்தில் நன்கு காலூன்றி பிரிவினை வாதத்தை விதைக்க நினைக்கின்றன.

திராவிடம் என்று பேசும் நாத்திகர்களும், கொள்ளைக் கும்பலும் கோவில்களை அழித்து ஒழித்து அதன் சொத்துக்களை சூறையாட நினைக்கின்றன.

மொழி வெறியைத் தூண்டி விட்டு மொத்த இந்துப் பண்பாட்டை அழிக்க நினைப்பதும் இவர்களின் பல வழிகளில் ஒன்று.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும் காட்டலாம் இங்கு:-

ஒரு பேராசிரியர் – ரிடயர்டு ஆசாமி – விவேகானந்தரைப் பற்றிக் கூறுகிறார் மிக சீரியஸாக –

“விவேகானந்தர் கீதையைப் படிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

கால் பந்து விளையாடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.” இதை மாற்றி மாற்றி வெவ்வேறு விதமாக அவர் சொல்வதைப் பார்த்தால் போப்பை விட விவேகானந்தர் தான் கீதையின் முதல் விரோதி என்று தோன்றும். அவர் சொல்கின்ற தொனியில் திராவிட நாத்திகர்களின் தலைவர் விவேகானந்தர் தான் என்பதை இளம் பிஞ்சு உள்ளங்கள் நம்பி விடும்!

கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடுங்கள்; உடலில் உரம் ஏற்றுங்கள்; அப்போது தான் கீதை நன்கு புரியும் ; எதிரிகளை ஒழிக்கலாம் -க்லைப்யம் மாஸ்ம கம: உத்திஷ்டோத்திஷ்ட பரந்தப – பேடித்தனத்தை அடையாதே; எழு. புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடு – இதுவே விவேகானந்தரின் மெஸேஜ். இதை மாற்றி கீதையைப் படிக்காதே கால் பந்து விளையாடுங்கள் என்று கால்பந்து வெறியராக அவரை மாற்ற முனைவது எவ்வளவு அயோக்கியத் தனம்.

புத்தர் கூறினார் -“நூறு ஆண்டுகள் சோம்பேறியாக, சுணங்கி அறிவற்றவனாக வாழ்வதை விட ஒரு நாள் வீரனாக அறிவு பெற்றவனாக வாழ்வது மேல்”

இதை இந்த முட்டாள் எப்படிச் சொல்வான்? புத்தர் அனைவரையும் ஒரு நாள் வாழ்ந்தால் போதும் ; நூறு ஆண்டுகள் வாழவே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்றல்லவா திரித்துப் புளுகுவான். அதாவது ஒரு நாள் வாழ்ந்து அடுத்த நாள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இந்த முட்டாள் பேராசிரியரிடம் புத்தர் இதுவரை மாட்டிக் கொள்ளவில்லை!!!

இந்த பேராசிரிய முட்டாளின் உரையைக் கேட்டு நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். ஒரு பேராசிரியர் விவேகானந்தரைப் பற்றி இப்படிப் பேசுவாரா என்று. பிறகு தான் பல யூ டியூப் பதிவுகளைப் பார்த்து வரும் போது இவர் ஒரு கிறிஸ்தவ வெறியர் என்று தெரிந்து கொண்டேன். அங்கு இவர் ‘மாட்டிக் கொண்டார்’- அவருக்கு வரவேண்டிய பணம் வரவே அதற்காகப் பேசுகிறார்!

இதே போல, ஊடகங்களில் இன்னின்னாருக்கு இவ்வளவு பணம் என நிர்ணயிக்கப்பட்டு கட்டிங் கரெக்டாக போகப் போக அவர்கள் பதிவிடும் பதிவுகள் காணொளியில் காண்பதற்குச் சகிக்க முடியவில்லை.

கருத்து சுதந்திரமென்ற பெயரில் எதை வேண்டுமானாலும் வெளியிடலாமா?

இதற்கு ஒரு கட்டுப்பாடு கிடையாதா? தவறு செய்பவர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு அமைப்பு சட்ட ரீதியாக கிடையாதா? இருக்கிறது என்றால் அவர்கள் செயல்பட வேண்டும்.

இல்லையென்றால் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

செகுலரிஸம் என்பது ஹிந்து விரோதம் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.

இதுவே ஒட்டு மொத்த ஹிந்துக்களின் இன்றைய கோரிக்கை!

***

tags- இந்தியா, வளர்ச்சி, கவலை ,உலக நாடுகள்!