ஜேம்ஸ் பாண்ட் (007) -ஐ தோற்கடித்த ஹிந்து! (Post No.10329)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,329

Date uploaded in London – –   12 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு இந்துக் கடவுள் உலகில் உள்ள  மிகப் பெரிய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ . கே.ஜி.பி. எம் ஐ 5, எம் ஐ 6, மொசாத்.இந்தியாவின் ‘ரா (RAW=Research and Analysis Wing)  ‘ உளவாளிகளையும் ஜேம்ஸ்பாண்ட், மிஸ் மார்பிள் , ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகியோரையும் விடப் பெரியவர்; திறமையானவர் என்று அதர்வண வேத மந்திரம் சொல்கிறது. ஏன் ?எப்படி?

இதோ கணக்கு

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 முறை கண் சிமிட்டுகிறான் (மன்னிக்கவும்; அழகான பெண்களைப்  பார்த்து கண் சிமிட்டுவதையும், அவள்  அழகில் மயங்கி, சொக்கிப் போய் , கண்களை சிமிட்டாமல் பார்த்துக்  கொண்டே இருந்ததையும் அதர்வ வேதம் சேர்க்கவில்லை!)

சரி, அப்படியானால் ஒரு மணிக்கு ஒரு மனிதன் சராசரியாகக் கண் சிமிட்டுவது 60X 10 =600 முறை

ஒரு நாளில் அவன் 16 மணி நேரம் விழித்து இருப்பான் . அப்போது அவன் கண் சிமிட்டுவது

600x 16 மணி = 9600 முறை

உலகின் ஜனத்தொகை , இதை நான் எழுதிய போது………..

7.9 பில்லியன் , அதாவது 7,906,132,700

இதை நான் எழுதும்போது லட்சக் கணக்கில் கூடிக்கொண்டே இருக்கும்.

உலக ஜனத் தொகை கடிகாரம் என்பதை கூகுள் மூலம் பார்த்தீர்களானால் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு கூடுகிறது என்பதைக் காணலாம்; வியக்கலாம் .

நம் கணக்கிற்கு 7,906,132,700 என்று வைத்துக் கொண்டால் கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை

9600 X 7,906,132,700 (ஒரு நாளில் மட்டும்!!!!!!!)

இதை வானத்திலிருந்து வருணன் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறானாம்; இப்படிச் சொல்கிறது அதர்வண வேதம் . தள்ளிப்போன வெள்ளைக்காரப் பயல்கள் கூட, அதர்வண வேதத்துக்கு கி.மு.1000 என்று தேதி குறிக்கிறான் அதாவது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்!

இந்த வருண பகவானை தொல்காப்பியம் தமிழர் கடவுள் என்று விஷ்ணு, இந்திரன், வேல் முருகன், துர்க்கை ஆகியோருடன் பட்டியலில் சேர்த்து இருக்கிறது .

பார்ப்பனர்கள் தினமும் மாலை நேரத்தில் சொல்லும் சந்தியாவந்தன மந்திரத்தில் இவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள் ; அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இன்று நீ பார்த்ததை நான் அறிவேன் ; ப்ளீஸ், ப்ளீஸ், மன்னிச்சுக்கோ.- என்று

துருக்கி- சிரியா  எல்லையில் உள்ள பொகஸ்கொய் Bogazkoy  களிமண் படிவ க்யூனிஃபார்ம் எழுத்துக் கல்வெட்டிலும் இந்திரன் மித்திரனுடன் வருணன் பெயர் உள்ளது. அதன் தேதி கி.மு 1340. அதாவது 3360 ஆண்டுகளுக்கு முந்தியது. இதெல்லாம் தள்ளிப்போன உதவாக்கரை அரைவேக்காடுகள் சொன்ன தேதி. அதாவது இந்து மதத்தை நக்கல் செய்யும், இந்து மதத்தைப் பின்பற்றாத, தன மதம் ஒன்று மட்டுமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்ட வெள்ளைத் தோல்கள் சொன்ன சேதி . நம்முடைய பஞ்சாங்கமும் தமிழ்க் கல்வெட்டும் வியாசர் என்பவர் வேதத்தை நான்காகப் பிரித்ததையும் அது கலியுகம் துவங்குவதற்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசர் செய்த வேலை என்றும் சொல்கிறது. அதாவது இற்றைக்கு சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர்!

இப்போது அதர்வண வேத கவிதையைப் படியுங்கள்; அதற்குப் பின்னர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்:–

அதர்வண வேதம் – காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 வருணன் என்றும் சொல்லுவர் )

1.அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்

2. ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும்.எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!

3.இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.

நாலாவது மந்திரம்

4.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடி வி  CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )

ஐந்தாவது மந்திரம்

வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!!!

ஆறாவது மந்திரம்

6.ஏ வருணா ! பொய் சொல்ற பயல்களை 3X 7= 21 பாஸக்  கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே

ஏழாவது மந்திரம் 7.

ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய்  சொல்ற பயல்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்

எட்டாவது மந்திரம்

8.நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய்  நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்

ஒன்பதா வது மந்திரம்

9.இன்னாரே ! நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்.

XXXX

ஒன்றுக்கும் உதவாத உதிய மரத்தின் VON ROTH கருத்து !

7 வெள்ளைத் தோல்கள் இந்தப் பாடலை ஐரோப்பிய மொழிகளில்  மொழிபெயர்த்தன .

Max Muller, Griffith, Ludwig, Grill, Von Roth, Muir, Kaegi

அதில் தள்ளிப்போன பயல் ஜெர்மனியைச் சேர்ந்த VON ROTH வான் ராத். அவன் 7 வால்யூம்களில் சம்ஸ்க்ருத அகராதியை (St Petersburg Dictionary) உருவாக்கியவன். அதில் தத்துப் பித்து என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கிறான். அதை கோல்ட்ஸ்டக்கர் THEODORE GOLDSTUCKER என்ற பேரறிஞர் விளாசு விளாசு என்று விளாசி இருக்கிறார் . அவரும் வில்ஸன் , மாக்ஸ்முல்லர், வான் ராத் காலத்தில் வாழ்ந்தவர்; ஆனால் பெரிய வித்தியாசம்; அவர் ஒரு யூதர். மற்ற 30+++++ மொழிபெயர்ப்பாளர்களும் கிறிஸ்தவர்கள். அவர்கள் பிரபஞ்சமே 6000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்தது என்பதை நம்பியவர்கள் . பாணினியின் காலம் என்பது பற்றி கோல்ட்ஸ்டக்கர் எழுதிய நூலில் மாக்ஸ் முல்லரையும் விடவில்லை. முன்னுக்குப் பின் முரணாக எழுதியுளாயே முட்டாள் என்று மாக்ஸ்முல்லர் தவறுகளை சுட்டிக்காட்டி ஏசுகிறார்.

நிற்க.

சப்ஜெக்டு subject க்கு வருகிறேன்.

அப்பேற்ப்பட்ட தள்ளிப்போன , ஒன்றுக்கும் உதவாத உதிய மரமான , தள்ளிப்போன ஜெர்மானியன் வான் ராத் VON ROTH வியக்கிறான்  : வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை நன் கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை.

xxx

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்

இது ஒரு அற்புதமான கவிதை; வருணனைப் பற்றிய வருணணைகள் அனைத்தும் ரிக் வேதத்தில் இதே தொனியில் அமைந்திருப்பது உண்மையே. ஆனால் இங்கே புலவர் வருணிக்கும் மூன்று விஷயங்கள் வேறு எங்கும் இல்லை

1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது  NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போ ட்டுக் கொண்டே இருக்கிறான்.  இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .

2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

3. வருணன் இன்விஸிபிள் மேன்  ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்;  டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று

இறைவனின் மஹிமையை இதைவிட எவனாவது வருணிக்க முடியுமா ?

பாரதியார் சொன்னார் சுவை புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாதா மா கவிதை என்று ; அந்த வரிகள் இந்தக் கவிதைக்கு நன்கு பொருந்தும்.

மாணிக்க வாசகர் இறைவனை வருணிக்கையில் முன்னைப் பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை என்றார் ; அற்புதமான வாசகம்; அதுவும் இந்த துதியில் தொனிக்கிறது

நோய்கள் வருவது ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவத்தால் என்பது இந்துக்களின் கருத்து. இதை ஏற்காத வான் ராத் அதை ஒரு குறையாக கருதுகிறார். ஏனெனில் பாவம் செய்தொரின் மகா உதர (மஹோதர = பெரு வயிறு) நோய் பற்றி வருகிறது.

பொய் சொல்வோரை கட்டி அடித்து நொறுக்கு; உண்மை சொல்வோரைக் காப்பாற்று என்பது அற்புதமான கருத்து. கந்த சட்டி கவசத்தில் வரம் வரிகளை நினைவு படுத்துகிறார் புலவர் (கட்டி உருட்டி கால் முறியக்கட்டு, குத்துக் குத்துக் கூர் வடிவேலால்)

மந்திரம் ஆறில் மூவேழ் 3x 7=21 என்ற எண் வருகிறது புற நானூற்றின் 166 ஆவது பாடலிலும் இது வருகிறது..

கடவுள் என்பவன் வானத்தில் ஒரு மாளிகையில் உட்காரவில்லை எங்கும் நிறைந்தவன் என்பதை வருணனே  நீ இறைவன் நீ மனிதன் என்ற மந்திரம் காட்டுகிறது.

எல்லாம் வல்ல,எங்கும் நிறைந்த, எல்லாம் (OMNI POTENT, OMNI PRESENT, OMNI SCIENT )அறிந்த வருணனை, மாலை வேளையில் துதிக்கும் பிராமணனைக் கண்டால் ஒரு கும்பிடு போடுங்கள் . ஏனெனில் அந்த வருணனின் மஹிமையை, தொல் காப்பியன் சொன்னதை, இன்றும் நமக்கு சொல்லி வருகிறார்கள்!

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

– தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5

–SUBHAM–

tags- வருணன் , உளவாளி, கண் சிமிட்டுதல், ஜேம்ஸ் பாண்ட் , அதர்வண வேதம்

பிரபல நடிகரா? உளவாளியா? அவர் யார்? (Post No.10,108)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,108

Date uploaded in London – 19 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரபல நடிகரா? உளவாளியா? அவர் யார்?

ச.நாகராஜன்

1960-களின் முற்பகுதி : ஒரு பாகிஸ்தானிய உளவாளியை கல்கத்தா போலீஸ் கைது செய்தது. போலீஸ் அவனிடமிருந்த ஒரு டயரியைக் கைப்பற்றியது. அதில் மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகரின் தொடர்பு விவரங்கள் இருந்தன. கல்கத்தா போலீஸ் அந்த நடிகரை விசாரணை செய்ய விரும்பியது. ஆனால் நேரு அரசு மேல் நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து நிறுத்தியது.

   உளவாளி பற்றிய கேஸில் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணை பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பு கொள்ள வைக்கும் ஹை-ஃப்ரீக்வென்ஸி டிரான்ஸ்மிட்டர் ஒன்றைச் சுட்டிக் காட்டியது. அது மும்பையில் இருப்பதும் தெரிய வந்தது. அந்த டிரான்ஸ்மிட்டர் இருந்த வீடும் அந்த பிரபல நடிகருடைய வீடு தான். அவரோ, தான் நிரபராதி என்று கூறியதோடு, “எனக்கு சூஃபி இசை என்றால் மிகவும் பிடிக்கும். அவற்றை ஒலிபரப்பும் பாகிஸ்தானிய சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆகவே தான் அந்த ரேடியோவை நான் வைத்திருக்கிறேன்.” என்றார்.

யாருமே அவரைக் கேட்காதது : “அது சரி? ரேடியோவை வைத்திருக்க வேண்டியது தானே? அதற்கு எதற்கு டிரான்ஸ்மிட்டர்?!”

நேரு மீண்டும்  அனைவரும் விரும்பும் அந்த மாபெரும் நடிகரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தினார்.

 ஐம்பது ஆண்டுகள் ஓடின. 2015இன் இறுதிக் கட்டம். மோடி கவர்ன்மெண்ட் அரசுப் பொறுப்பிற்கு வந்தது.  அப்போது முன்னாளைய பாகிஸ்தானின் மந்திரி குர்ஷிட் முகம்மது கசூரி என்பவர் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறினார் :” அந்த மாபெரும் நடிகர் இந்தியாவின்  ரகசிய உளவாளி. அவர் ரகசியப் பணிகளுக்காக இரு முறை பாகிஸ்தானிற்கு வந்தார். ஒரு முறை ஜெனரல் ஜியா ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது வந்தார். அடுத்த முறையாக சமீபத்தில் வந்தார்.”

அவர் அந்த மாபெரும் நடிகரைப் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளரைச் சந்தித்து இப்படிப் பேசினார்.  கசூரி மேலும் கூறினார் : “ அந்த நடிகர் பாகிஸ்தான் பிரதம மந்திரி நவாஸ் ஷெரிஃபை போனில் கூப்பிட்டுப் பேசி கார்கில் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். அவரை அந்த ஆக்கிரமிப்பை கைவிட பேச்சு வார்த்தை மூலம் ஒருவாறாக சமாளித்து நம்ப வைத்தார்.

அந்த உளவாளி இந்தியாவை நேசித்த ஒருவரா? அல்லது அவர் பாகிஸ்தானை நேசித்த ஒரு ரகசிய உளவாளியா? நேருவுக்குத் தான் இது தெரியும். அவருக்கும் தெரியும், பாகிஸ்தானுக்கும் தெரியும், ஆனால் இந்தியாவிற்குத் தான் தெரியாது. திரை இறங்கிய போது அது சுட்டிக் காட்டியது திலிப் குமாரைத் தான்! அவர் எத்தனையோ நடிகர்களுக்கும் நூற்றுக்கணக்கான திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், லக்ஷக்கணக்கான திரைப்பட ரசிகர்களுக்கும்  உத்வேகம் ஊட்டியிருக்கிறார். அல் விடா முகம்மது யூசூப் சர்வார் கான்!

(ஆதாரம், நன்றி : Strange, intriguing and shocking – Truth Vol 89 Issue 19 Dated 20th August 2021)

*

இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம் :


The Spy Who Loved?

       Early 1960s : A Pakistani spy was arrested by Calcutta Police. The pocket diary confiscated from him had contact details of a famous Bollywood actor from Mumbai. Calcutta Police wanted to interrogate the actor. But Nehru Government stopped further action.

       Further investigation into the spy case lead to a high frequency Radio transmitter with direct connection to Pakistan. It was located in Bombay. The house belonged to the same actor. He pleaded innocence and declared, “ I love Sufi music. Since Pakistani channels are banned in India, I kept the Radio.”   Again, noboday asked him, “Why transmitter and not just a Radio?”

Nehru again stalled all proceedings against the legendary thespian.

Five decades later in 2015, after Modi Government took over, Khurshid Mohammed Kasuri, a former Minister of Pakistan told a press meet,  “The legendary Indian actor was an Indian Secret Agent. He visited Pakistan twice on secret missions. Once during General Zia’s days and the second visit was more recent.” He was talking to press as a book on the legendary actor was being launched. Kasuri also claimed , “ The actor ended the Kargil war by talking over the phone to Pakistan PM Nawaz Shariff and convincing him to call off the aggression.”

Was he a Spy, who loved India? Or was he a Spy, who loved Pakistan? Nehru knows, he knows and Pakistan knows, India doesn’t. The curtain finally came down on Dilip Kumar, who inspired scores of actors, hundreds of film makers, and millions of fans. Al vida Mohammed Yusuf Sarwar Khan!

   (Strange , intriguing and shocking – Editor Truth)

***

tags –  உளவாளி, நடிகரா

சாமியார் வேடத்தில் உளவாளிகள்!

The Spy Who Loved Me

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.:—1209; தேதி ஆகஸ்ட் 2, 2014.

இந்தியாவில் சாமியார் வேடத்தில் உளவாளிகள் இருப்பதை எல்லோரும் அறிவர். வெளி நாட்டுக்காரர்களில் உண்மையான பக்தர்களும் உண்டு. ஆனால் பலர் சமயத்தைப் பயன்படுத்தி எளிதாக உளவு வேலைகளில் ஈடுபடுவது வள்ளுவர் காலத்தில் இருந்து நடக்கிறது. வடமொழி நூல்களில் உலகப் பிரசித்தி பெற்ற அர்த்த சாஸ்திரமும் ஒன்று. அதை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன், உளவுக் கலை பற்றி விரிவாக எழுதி இருப்பதை அறிஞர் உலகம் அறியும். ஆனால் மனு, வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோரும் பல சுவையான தகவல்களைத் தருவதை சிலரே அறிவர்.

சிலப்பதிகாரம் தரும் சுவையான தகவல்கள்

1.நான் வட இமயம் வரை என்று கண்ணகிக்கு சிலை செய்ய கல் எடுத்து வரப் போவதை கடிதம் வாயிலாக அறிவியுங்கள். அந்தக் கடிதத்தின் மீது வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர் முத்திரைகளைப் பொறியுங்கள் என்று வீர உரை ஆற்றுகிறான் செங்குட்டுவன். உடனே அழும்பில் வேல் எழுந்து மன்னர் மன்னா ! அதற்குத் தேவையே இல்லை. இந்த ஜம்பூத்வீப நாட்டின் எல்லா பகுதி உளவாளிகளும் நம் தலை நகர் வஞ்சியில் இருக்கின்றனர். நகர் எங்கும் முரசு அறைந்தால் போதும். நாடு முழுதும் செய்தி பறந்து விடும் என்கிறான்.

நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா;
வம்பணி யானை வேந்தர் ஒற்றே
தஞ்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப
–(காட்சிக் காதை சிலப்பதிகாரம்)

இதிலிருந்து தெரிவதென்ன? அக்கலத்தில் உளவுத் துறை மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தது. இன்றும் கூட டில்லியில் உலக நாடுகளைச் சேர்ந்த உளவாளிகள் எல்லோரும் இருப்பதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் திடுக்கிடும் செய்திகள் தெரிவிக்கின்றன.
THE-SPY-WHO-LOVED-ME-POSTER

2.இரண்டாவது விஷயம் கீரந்தை என்னும் பிராமணன் கதையில் வருகிறது. அந்தப் பிராமணன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக பாண்டிய மன்னன் கையையே இழந்தான். பொற்கைப் பாண்டியன் கதை எல்லோரும் அறிந்ததே. மன்னரே மாறுவேடத்தில் நாட்டை உளவு பார்த்தது இக்கதையில் தெரிய வருகிறது–(கட்டுரை காதை, சிலப்பதிகாரம்)

ராமாயணம் தரும் சுவையான தகவல்கள்
3.வால்மீகி ராமாயணத்திலும் கம்ப ராமாயணத்திலும் ராவணன் அனுப்பிய சுகன், சாரன் என்ற இரண்டு உளவாளிகள் பற்றி விரிவான பகுதி உள்ளது. யுத்த காண்டத்தில் கம்பன் இதற்கு ஒரு பெரிய படலத்தையே ஒதுக்கி உளவுக் கலை பற்றி அலசுகிறான். அந்த இரண்டு உளவாளிகளும் குரங்கு வேடம் போட்டு நடித்த போதும் விபீசணன் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து ராமனிடம் ஒப்படைக்கிறான். ராமனோ அவர்களை மன்னித்து, படை பலம் பற்றிய முழு தகவல்களையும் அளித்து ராவணனிடம் போய்ச் சொல்லுங்கள் என்கிறான். இறுதி வெற்றி ராமனுக்கே என்பது அவனுக்குத் தெரியும்!
asceticdog

புறநானூறு தரும் சுவையான தகவல்கள்

4.சங்க இலக்கிய நூலான புற நானூற்றில் (பாடல் 47) சுவையான சம்பவம் வருகிறது. இளந்தத்தன் என்ற புலவன் நெடுங்கிள்ளியிடம் வந்தான். அவன் அதற்கு முன் நலங்கிள்ளியிடம் பாடிப் பரிசில் பெற்றவன். நலங்கிள்ளியோ அவனுடைய எதிரி. ஆகையால் இந்தப் புலவன் உளவு பார்க்க வந்தான் என்று சொல்லி நெடுங்கிள்ளி, மரண தண்டனை விதித்து விடுகிறான். உடனே புத்திசாலிப் புலவர் கோவூர் கிழார் வந்து உண்மையை எடுத்துரைத்துப் புலவன் உயிரைக் காப்பாற்றுகிறார். “பழுமரம் நாடி ஓடும் பறவைகளைப் போல உன் போன்றவரை நாடி வரும் அப்பாவிப் புலவன் இவன். மறு நாளைக்குக் கூடச் சேர்த்து வைக்காமல் உறவினர்களுக்குக் கொடுத்து மகிழும் ஜாதி புலவர் ஜாதி. இவன் உனக்குத் தீங்கு செய்வானா? இல்லவே இல்லை. இவனை விடுவி” என்கிறார் கோவூர்க் கிழார்.
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ? இன்றே.

6228-000541
வள்ளுவர் தரும் சுவையான தகவல்கள்

5.ஒற்றாடல் என்னும் 59 ஆம் அதிகாரத்தில் பத்தே குறள்களில் இருபதே வரிகளில் உளவுக்கலை விஷயங்களைச் சாறு பிழிந்து கொடுக்கிறான் வள்ளுவன். “புல்லட் பாயிண்ட்” வள்ளுவன் கூறுவது:–
1.துறவி வேடத்தில் நாட்டு எல்லைகளைக் கடந்து உளவு பார் –(குறள் 586)
துறந்தார் படிவத்தராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று
2.மூன்று ஒற்றர்களை நியமி; ஒருவருக்கு மற்றவர் பற்றித் தெரியக் கூடாது. மூவரும் ஒரே மாதிரி சொன்னால் அதை நம்பு —(குறள் 589)
3.எல்லோருக்கும் முன்னால் ஒற்றர்களைப் பாராட்டாதே. உன் குட்டு வெளிப்பட்டு விடும். ‘’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்ற கதை ஆகிவிடும்!! —(குறள் 590)
4.நன்றாக வேஷம் போட வேண்டும். யாராவது சந்தேகமாகப் பார்த்தாலும் சமாளிக்க வேண்டும். ரகசியம் வெளியாகக் கூடாது. அவன் தான் நல்ல ஒற்றன் —(குறள் 585)
5.அரசு அதிகாரிகள், அரசனின் சொந்தக்காரர்கள், வேற்று நாட்டுப் பகைவர் அத்தனை பேரையும் வேவு பார்க்க வேண்டும் –(குறள் 584)
இப்படி முத்து முத்தாக உதிர்க்கிறான் வள்ளுவன்.

220px-Noor_Inayat_Khan
Noor Inayat Khan was Moscow born Indian Muslim, worked as a British agent and executed by Hitler

மனு தரும் சுவையான தகவல்கள்

மனு ஸ்மிருதியில் ஏழாவது ஒன்பதாவது அத்தியாயங்களில் ஒற்றாடல் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மனு சொல்லும் விஷயங்கள்:
1.ஒவ்வொரு ஊரிலும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஒற்றர் மூலம் தகவல் திரட்ட வேண்டும்
2.அந்தப்புரத்திலும், ரகசிய ஒற்றர் விஷயத்திலும் நடப்பனவற்றை நாள்தோறும் ஆராய வேண்டும்.
3.சந்தியாகால பிரார்த்தனைக்குப் பின்னர் ஒற்றர்களை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று ‘’ரிப்போர்ட்’’ வாங்க வேண்டும்.
4.அரசனுக்கு இரண்டு கண்கள் ஒற்ற்ர்கள்தான். தெரிந்த திருடர்கள், தெரியாத திருடர்கள் ஆகியவர்களைப் பிடிக்கும் கண்கள் இவை.
5.குற்றவாளிகளை குற்றம் செய்யுமாறு உளவாளிகள் மூலம் தூண்ட வேண்டும். அப்போது அவர்களை வகையாகப் பிடித்து விடலாம்.
6 தன் வலி, மாற்றான் வலி – இரண்டையும் அறிய ஒற்றர்களப் பயன்படுத்த வேண்டும்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நம்மவர் எழுதியது இன்றும் சாலப் பொருந்தும். தூதர் விஷயத்திலும், உளவுக் கலை விஷயத்திலும் நாம்தான் உலகிற்கே முன்னோடி. சம்ஸ்கிருத இலக்கியத்திலும், சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்திலும் உள்ளதைப் போல உலகில் வேறு எங்கேயும் இல்லை. அவர் நூல் எழுதி 2300 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
mata hari executed in 1917
Most famous woman spy executed in 1917 during First World War.

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர் போர்வைகளிலும் அறிஞர்கள் போர்வையிலும் உளவாளிகள் ஒளிந்திருப்பர். —-பத்திரிக்கையாளர்களில் பலர் உளவாளிகள்! —மடங்களில் நிறையவே உளவாளிகள் உண்டு. எளிதில் மற்றவர்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் அறியும் இடம் மத அமைப்புகள்தான்.— அரசியல் அலுவலகங்களில் உண்மையை உளறுபவர்கள் அதிகம் என்பதால் உளவாளிகளின் சொர்க்க பூமி அது.

பகலில் பக்கம் பார்த்துப் பேசு!! ராத்திரியில் அதுவும் பேசாதே !! என்று சும்மாவா சொன்னான் தமிழன்!!
–சுபம்–