Srardha during Amavasya in Ganges, Kolkata
WRITTEN by London swaminathan
Date: 18 JULY 2018
Time uploaded in London – 15-23 (British Summer Time)
Post No. 5233
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
மநு நீதி நூல்- Part 22
WRITTEN by London swaminathan
Date: 18 JULY 2018
Time uploaded in London – 14-39 (British Summer Time)
Post No. 5233
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
மநு ஸ்ம்ருதியின் மூன்றாம் அத்யாயத்தைத் தொடர்ந்து காண்போம்.
இதிலுள்ள சுவையான விஷயங்கள்:
யார் யாரை அமாவாஸை சிரார்த்தத்துக்குச் சாப்பிடக் கூப்பிடக் கூடாது என்ற நீண்ட பட்டியலில் டாக்டர்கள், ஜோதிடர்கள், நடிகர்கள், சோமலதை (ஆட்டாங்கொடி) விற்போர் உள்ளனர்
மநு காலத்தில் சோம லதை கொடி விற்போர் பற்றி அடிக்கடி வருவதால் இவரை வேத காலத்தை ஒட்டியவர் என்றே கருத வேண்டியுள்ளது.
பணக்காரனாக இருந்தாலும் ஐந்து பேருக்கு மேல் சிரார்த்தச் சாப்பாடு போடக் கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.
நண்பர்களை, சலுகைகளை உத்தேசித்து சாப்பிட அழைப்பது பாவம் என்றும் மநு சொல்கிறார்.
மநு ஏழு தலைமுறை பற்றிப் பேசுகிறார் (இது பற்றி நேற்று தனிக் கட்டுரை எழுதிவிட்டேன்)
மநு பயன்படுத்தும் உவமைகள் மிகவும் சுவையானவை
1.ரத்தத்தை ரத்தத்தால் கழுவ முடியாது
இது சேக்ஸ்பியரின் மாக்பெத் (MACBETH) நாடக வசனத்தை நினைவுபடுத்து; “கொலைகாரி மாக்பெத்தின் கைகளில் படிந்த ரத்தக் கறையை அரேபியாவில் உள்ள அத்தனை சென்ட்டும் கூட போக்க முடியாது” என்று மாக்பெத் வசனத்தில் வருகிறது.
2.இன்னொரு உவமை- குருட்டு மாடு
3.தண்ணீரில் போட்ட சுடப்படாத களிமண் கலம் (இது குறளிலும் கையாளப்படும் உவமை)
4.காய்ந்த புல் எரிவது போல
5.ஆறிய சாம்பலில் அவிஸைப் போடுவது போல
7.கொழுந்துவிட்டு எரியும் இரும்பு குண்டுகளை விழுங்குவது போல
8.களர் நிலத்தில் விதைப்பது போல
XXXXX
வேதம் படித்த ஒருவனுக்கு சாப்பாடு போடுவது ஒரு லட்சம் பேருக்குப் போடுவதை விட சிறந்தது என்கிறார் மநு.
பெண்களும் மாலைநேரத்தில் மந்திரம் இல்லாமல் வைஸ்வதேவ யக்ஞம் செய்ய வேண்டும் என்பார்.
அண்ணன் இருக்கும் போது தம்பி கல்யாணம் முடிப்பது தகாது என்கிறார்
குண்டன், கோளகன் என்னும் இருவகை பு த ல்வர்கள் பற்றியும் பேசுகிறார்
நான்கு வகை பிராஹ்மணர்கள் (3-144) பற்றியும் விளக்குகிறரர்.
விதியை மீறுவோருக்கு என்ன என்ன நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.
இதோ ஸ்லோகம் வாரியான மொழி பெயர்ப்பு:-
3-121 பகலில் தானும் மாலையில் மனைவி மந்திரம் இல்லாமலும் வைஸ்வதேவம் எனும் உஅணவு படைக்கும் சடங்கை இயற்றல் வேண்டும்
3-122 மாதம் தோறும் அமாவாசையன்று பிண்டம் மூலம் முன்னோர்களுக்கு பலி கொடுத்த பின்னர் சிரார்த்தம் செய்ய வேண்டும்
3-123 இதற்கு அன்வஹார்யம் என்று பெயர்; இதற்கான விசேஷ உண்வுடன் படைக்க வேண்டும்
3-124 என்ன உணவு, எத்தனை பேரை அழைப்பது, யாரை அழைக்கக்கூடாது என்று விள்ம்புவேன்.
3-125 விஸ்வேதேவர்க்கு இரண்டு பிராஹ்மணர்க ள்:, பிதுர்களுக்கு (இறந்து போன முன்னோர்) மூன்று பிராஹ்மணர்கள் வீதம் சாப்பாடு போட வேண்டும். இயலாவிட்டால் ஒவ்வொருவர் வீதம் போதும்; பணக்காரன் ஆனாலும் ஐந்து பேருக்கு மேல் கூடாது.
3-126 ஏன் தெரியுமா? 5 காரணங்கள் உள: நல்ல உபசாரம், தகுந்த நேரம், தகுந்த இடம் தேவை, சுத்தம் இருக்க வேண்டும், சாப்பிட வருவோர் இடையே நல்லிணக்கம் நிலவுதல் அவசியம்
3-127 இது மிகவும் பிரபலமானது. இதனால் பிதுரர்களுக்கு மறுமையில் பலனும் நமக்கு இம்மையில் சந்ததியும் செல்வமும் கிடைக்கும்.
3-128 வேதம் மனப்பாடமாகத் தெரிந்தவர்க்கே சாப்பாடு போடுக; இது நல்ல பலன் தரும்
3-129 வேதம் ஓதாத ஆளுக்கு அளிப்பதை விட வேதம் தெரிந்த ஒவ்வொருவருக்கு — இரு சடங்குகளிலும் — சாப்பாடு போட்டால் போதும்
3-130 இதற்காக முன்கூட்டியே பிராஹ்மணர்களைத் தேடி வைத்துக் கொள்; சொந்த கிராமத்தான் ஆனாலும் அவன் விருந்தினனே.
3-131 ஆயிரம் ஆயிரம் பேர சாப்பிட்டாலும் ரிக் வேதம் தெரிந்த ஒருவன் சாப்பிடுவதும் திருப்தி அடைவதும் நல்ல புண்ணியம் தரும்
3-132 அதிக ஞானம் உடையவனுக்கே முன்னோர்களுக்கான, தெய்வங்களுக்கான உணவை அளிக்க வேண்டும் ரத்தக் கறை படிந்தவன் கைகளை ரத்தம் கொண்டு கழுவ முடியாதல்லவா!
ஞானமில்லாதவனுக்குக் கொடுப்பது பலனற்றது; பாவகரமானது
3-133 வேதம் ஓதாதவன் எவ்வளவு கவளம் உண்கிறானோ அவ்வளவுக்கு இறந்து போன முன்னோர்கள் கொதிக்கும் இரும்புக் குண்டுகளையும், முள் நிறைந்த கம்பிகளையும் ஈட்டிகளையும் உண்ண நேரிடும்
3-134 சிலருக்கு ஞானம் அதிகம்; சிலருக்கு தவ வலிமை அதிகம்; இன்னும் சிலருக்கு வேத அறிவும் தபோ பலமும் சேர்ந்து இருக்கும்; நாலாவது வகையினர் சடங்களைச் செய்விப்பதில் வல்லவராக இருப்பர்.
3-135 முன்னோர்களுக்காக கொடுப்பதை ஞானத்தில் மிகுந்தவனுக்குக் கொடு; தெய்வ த்துக்காக கொடுப்பதை நால்வரில் எவருக்கேனும் அளி
3-136 ஒரு புதல்வனின் தந்தை வேத வித்து- ஆனால் புதல்வனுகுக்கு வேதம் தெரியாது; மற்றொரு தந்தைக்கு வேதம் தெரியாது ஆனால் புதல்வன் வேதம் ஓதியவன் என்று வைத்துக் கொள் (யாரைக் கவனிப்பாய்?)
3-137 இவ்விருவரில் வேதம் அறிந்தவனுடைய பிள்ளையே சிறந்தவன்; மற்றொரு புதல்வன், வேதம் படித்தமைக்காக தக்க மரியாதை கொடு.
3-138 சிரார்த்தத்தில் நண்பர்களை சாப்பிட அழைக்காதே; அவர்களை நீ எப்படியும் வெல்லலாம்; நண்பனும் அல்ல, எதிரியும் அல்ல என்பவரையே அழை
3-139 நண்பர்களைத் திருப்தி செய்யும் சிரார்த்தம் பலன் தரா.
3-140 அறியாமையால் இப்படிச் செய்பவன் தேவலோகம் சென்றாலும் கீழே விழுந்து விடுவான்
3-141 மூன்று வருணத்தாரும் இப்படி நண்பர்களைத் திருப்தி செய்ய முயன்றால் அது இருளில் திரியும் குருட்டு மாடு போன்றதாகும் பலன் தராது
3-142 களர் நிலத்தில் விதைப்பவனுக்கு அறுவடை இல்லை; ரிக் வேதம் தெரியாதவனுக்குக் கொடுப்பவனுக்கும் பலன் இல்லை.
3-143 வேதம் அறிந்த பார்ப்பானுக்குக் கொடுப்பது இருவர்க்கும் இம்மையிலும் மறுமையிலும் பலன் தரும்.
3-144 வேதம் அறிந்த பார்ப்பான் கிடைக்காவிடில் நண்பனையும் அழைக்கலாம்; எதிரி ஞானவானாக இருந்தாலும் அவனுக்கு உணவு போடுவது பலனற்றதே
3-145 ரிக், யஜுர், சாம வேதம் ஓதியவர்களை அழை
3-146 இவர்களில் ஒருவருக்கு கொடுக்கும் உணவும் இறந்து போன ஏழு தலைமுறையினரை கடைத்தேற்றும்
3-147 இதுதான் முக்கிய விதி; சில துணை விதிகளும் உள
3-148 தாய்ப்பாட்டன், அம்மான், மருமான், மாமனார், ஆச்சார்யன், பெண்ணின் வயிற்றில் பிறந்தோன், மாப்பிள்ளை, சித்தி, பெரியம்மா, இவர்களின் பிள்ளைகள், சிஷ்யன், ரிக் வேதம் அறிந்தோன் ஆகிய வகையினரும் புசிக்க அருகதை ஆனவர்களே.
3-149 தேவ காரியங்களில் சாப்பிட வரும் அந்தணர் பற்றி அதிகம் கேட்கத் தேவை இல்லை; பிதுர் காரியங்களில் சாப்பிட வரும் பார்ப்பனர்களின் ஞானம், மூதாதையர் பற்றி சோதித்து அழை.
தொடரும்………..
You must be logged in to post a comment.