தள்ளாடும் தமிழகம்! (Post No.10,008)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,008

Date uploaded in London –  23 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தள்ளாடும் தமிழகம்!

ச.நாகராஜன்

1  

தமிழகமே தள்ளாடுகிறது! ஆம், ஏராளமான ‘குடி மகன்களால்’ அது தள்ளாட்டம் போடுகிறது. சிந்திக்கும் திறனின்றி குடி நிறையப் பேரை ஆட்டிப் படைப்பதனால் அது தள்ளாடுவதில் வியப்பே இல்லை. தந்தையை விஞ்சிய விதத்தில் செயல்படும் மகனைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் “சாதனைகளில்” எதை முதல் சாதனையாக் முன் நிறுத்துவது என்பதில் அறிஞர் பெருமக்களுக்குள் ஒரே குழப்பம் என்பது உண்மை தான்! அத்துணை “சாதனைகள்!”

தாய்க்குலத்தோர் தவிக்க சம்பாதித்த அனைத்தையும் இழந்து தடுமாறும் எண்ணற்ற “குடி மகன்களுக்க்காக” இறைவனை பிரார்த்திப்போமாக!

போதையிலிருந்து விடுபட்டால் பாதை தடுமாறிய இவர்கள் வேதனை நீங்கி நல்வழிக்கு வரட்டும்!

2

அடுத்த சாதனை ஒவ்வொரு தமிழனையும் “கடன்காரனாக்கிய” சாதனை இன்னும் பெரிதோ?! தந்தை இலவச டிவியை வழங்கி அதன் மூலம் அதைப் பார்ப்பதற்கான விண்வழி இணைப்புகளுக்கு காசு வாங்கித் தன் குடும்பத்தைச் செழிக்க வைத்த உத்தி “சிறப்பானது” தான்!

இன்று ஒவ்வொருவனும் கடன்காரனாகித் தவிக்கும் நிலையை டபிள் வாட்ச் காரர் வெள்ளையறிக்கை மூலம் சுட்டிக் காட்டி சாதனை படைக்க உடனே ஒரு நல்ல தமிழர், ‘அய்யா நகைக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, விவசாயக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதால் வரும் தொகை இவ்வளவு, பஸ் இலவசப் பயணத்தால் வரும் தொகை இவ்வளவு’ என்று ஒரு நீண்ட கணக்கை விரைவாகப் போட்டு வெள்ளை போர்டில் அனைத்தையும் கூட்டி “அடடே! இது கடன் தொகையை விட அதிகமாகி விட்டதே! எங்களுக்கு இவ்வளவும் வேண்டாம், நீங்களே வைத்துக் கொண்டு கடன் தீர்ந்து விட்டது என்று பத்திரம் தந்து விடுங்கள் என்று பத்திரமாகச் சொல்லி விட்டார்.

இப்படிப்பட்ட புத்திசாலிகள் வேண்டாம் என்று தானே முதலில் சொன்னது போல குடிகாரக் கடைகளைத் திறந்து வைத்தோம், இவன் ஏன் அங்கு போகவில்லை என்று அவர்(கள்) கோபப்பட்டால் அதில் நியாயமே இல்லை!

3

அடுத்து ஒன்றியக் குழப்பத்தை திமுக முன் வைக்க, மத்திய வார்த்தையில் நிலையாக இருக்கும் நண்பர் “Take your seat” என்றால் நாற்காலியைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது அர்த்தம் இல்லை, நண்பரே. உட்காருவது தான் என்று சொல்ல, ஆங்கிலம் தெரியாத நிலையைக் கொண்ட அனைவரையும் மக்கள் இனம் காண முடிந்தது.

4

இரு வாரங்களுக்கு ஒரு குழப்பம் வைத்தால் தங்களின் மொத்த (505) வாக்குறுதியையும் மறந்து ஐந்து ஐம்பத்திரண்டு வாரங்களையும் கடந்து விடலாம் என்ற நிலையில் அடுத்ததாக கடவுள் மேலேயே கையை வைக்கும் விதமாக அர்ச்சனைக் குழப்பம்!

இதில் அறிஞர்களும் நல்லோரும் ஆவேசமாய்ப் பல கேள்விகளை வைத்துள்ளனர்.

இறைவனோ அல்லது பக்தர்களோ இதைக் கேட்டார்களா?

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற ஈவெராவின் சிலை முன்னே அர்ச்சகர் ஆணை கிடைத்தவர்கள் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டதிலிருந்தே இவர்கள் நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்களே தவிர நாவார தேவாரம் பாடும் கோஷ்டி இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து விட்டனர்.

இவர்களுக்கு ஆகம சிலபஸை யார் தந்தது? யார் தேர்வு வைத்தது? எவர் திருத்தினர்? எப்படி சர்டிபிகேட் வழங்கப்பட்டது? கேள்விகள் கணைகளாக வருகின்றன!

பிராமண – பிராமணர் அல்லாதவருக்கு இடையே ஒரு சண்டையையும் பிளவையும் ஏற்படுத்தும் முயற்சியும் கேள்விகளால் துவண்டு விட்டது.

40000 கோவில்களில் ஐந்து சதவிகிதமோ அல்லது அதிக பட்சமாக பத்து சதவிகிதமோ தான் பிராமண அர்ச்சகர்கள்! ஆகவே இதர கோவில்களில் ஆங்காங்கு உள்ள சம்பிரதாயப்படி பிராமணர் அல்லாதாரே முறைப்படி வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க மசூதிகளில் தமிழில் வழிபாடு நடத்தக் கோராத தமிழக அரசு, சர்ச்சுகளில் (AMEN) ஆமெனைக் கூட தமிழில் சொல்ல வேண்டுமென்று சொல்ல முன் வராத தமிழக அரசு ஹிந்துக் கோவில்களை மட்டும் குறி பார்த்து வழிபாடுகளை பக்தர்களின் இஷ்டப்படி நடத்த விடாமல் செய்ய ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்வது ஹிந்து மதத்திற்கே ஆபத்தானது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் கடவுள் நம்பிக்கை இல்லாத அர்ச்சகர்கள் கோவிலில் நுழைவது ஏன், இதற்குப் பின்னர் உள்ள சதித்திட்டம் என்ன என்று கேட்கின்றனர்.

40000 ஏக்கர் கோவில் நிலம் பறி போயிருக்கிறது. அங்கு பல்வேறு கட்டிடங்கள் எழுந்துள்ளன.

சில ஏக்கர் நிலங்களை மீட்டு விட்டோம் என்று கூறும் தமிழக அரசு அது யார்  வசம் இது வரை இருந்தது, ஏன், எப்படி இருந்தது என்று தெரிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோருகின்றனர். இதுவரை நஷ்டத்தை ஏற்படுத்திய அவர்களிடமிருந்து கோவிலுக்குச் சேர வேண்டிய தொகை வசூலிக்கப்பட்டதா என்றும் கேட்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பானதும் முதலாவதுமான ஒரு விஷயம் இருக்கிறது.

இப்படிப்பட்ட அரசு ஆணை சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கு எதிரானது என்பது தான்!

இது contempt of the court ஆகுமா? அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று சுப்ரம்ண்யம் சுவாமி போன்ற மூத்த அறிவாளிகள் கூறுகின்றனர்.

ஆக நீதிக்குப் புறம்பானது, தர்மத்திற்குப் புறம்பானது, பழக்க வழக்க சம்பிரதாயங்களுக்குப் புறம்பானது, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தக் கூடியது, கோவில் சொத்துக்களுக்கும் நிலங்களுக்கும் நகை, சிலைகள் உள்ளனவற்றிற்கும் ஆபத்தை விளைவிப்பது, தாங்கள் அளித்த வாக்குறுதிகளைப் பற்றி மக்கள் தங்களைப் பல கேள்விகள் கேட்காமல் திசி திருப்புவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தச் சட்டம் தவறானதாகும்! இது தனது அதர்மச் சுமையால் சுமை அழுத்தம் தாங்காது தானே விழுந்து விடும்!

It will fall on its own deadweight!

இறுதியாக திருமூலரின் எச்சரிக்கை ஒன்றையும் கூறி இந்தக் கட்டுரையை  முடிக்கலாம்:-

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னவர்க்குத் தீங்குள வாரி வளம் குன்றும்

கன்னங் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுதுரைத் தானே (திருமந்திரம் இரண்டாம் தந்திரம் – திருக்கோயிலிழிவு அதிகாரத்தில் -பாடல் எண் 518)

***

INDEX

திமுக ஆட்சி, குடித்தல் அதிகரிப்பு, கடன் சுமையும் இலவசங்களும் அதிகரிப்பு, ஒன்றியம் உள்ளிட்ட வார்த்தைக் குழப்பம், வழிபாடு மாறுதல்கள், அறிஞர்களின் ஆதங்கமும், கேள்விகளும்,

திருமூலர் திருமந்திரத்தில் எச்சரிக்கை

LIQUOR SHOP Q

TAGS- திருமூலர் ,எச்சரிக்கை, திமுக ஆட்சி ,தள்ளாடும் ,தமிழகம்,

அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை (Post No.9741)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9741

Date uploaded in London – –16 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை

ராம பிரானுக்கு முடி சூட்ட தசரதன் ஏற்பாடு செய்கிறார். ஊர்ப் பெரியோர்கள் மற்றும் மந்திரிசபைகுல குரு  ஆகிய மக்களை ஜன நாயக முறையில் கருத்துக் கேட்டு அப்படி முடிவு  செய்கிறார். எல்லோரும் Yes, Yes யெஸ் யெஸ்‘  என்று தலையை அசைத்துவிட்டனர். அப்போது தசரத மா மன்னன் குல குரு  வசிஷ்டருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். ராம பிரானைச் சந்தித்துக் கொஞ்சம்  அரசியல் விஷயங்களைக் கதைத்து விட்டு வாருங்கள். எதுஎது தர்மம் என்று கற்பியுங்கள் , ‘ப்ளீஸ்‘ Please என்கிறான்.

வசிட்டனும் ராமனைச் சந்திக்கிறார். அவருக்குச் சொல்கிறார்.

அன்பரே அந்தணர் /பார்ப்பான் விஷயத்தில் ஜாக்கிரதையாக இரும்.

அவர்கள்  நினைத்தால் அது அப்படியே நடக்கும்

ஆவதும் ஐயராலே அழிவதும்  ஐயராலே ! கபர்தார்உஷார்ஜாக்கிரதை!’ என்கிறார்.

இதோ கம்பன் வாய் மொழி மூலம் அறிவோம்.

ஆவதற்கும் அழிவதற்கும்  அவர்

ஏவ ,நிற்கும் விதியுமென்றால்இனி

ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்

தேவரைப் பாரா வுந்துணை  சீர்த்ததே

மந்தரை சூழ்ச்சிப் படலம்அயோத்யா காண்டம்கம்ப ராமாயணம்

பொருள்

ஒருவரை உயர்த்துவதற்கும் தாழ்த்துவதற்கும் விதி கூட அந்தணப்  பெருமக்களின்

கட்டளைக்குக் காத்திருக்கும் என்றால் இப்பிறப்பிலும் மறு  பிறப்பிலும்  பூலோக

தேவர்களாக விளங்கும் பார்ப்பனர்களை போற்றுவது சிறப்புடையது ஆகும்  .

 இதனைவிட மேலான பொருள் வேறு எதுவும் இல்லை “.

(இங்கு அந்தணர் என்பதற்கு ஒழுக்கம் உடைய அறிஞர்கள் என்பது பொருள். ‘வெளுத்தது எல்லாம் பால் அல்ல’. ‘மின்னுவதெல்லாம் பொன் அல்ல’பூணுல் போட்ட எல்லோரும் பார்ப்பனர் அல்ல. மனம்மொழிமெய் என்ற மூன்றிலும் சுத்தம் உடைய- திரி கரண சுத்தி உடைய — பெரியோர் அந்தணர். அந்தக்காலத்தில் அப்படி இருந்தனர் நூற்றுக்கு 99 சதம் பிராமணர்கள்!)

இதில் அந்தணர் என்ற சொல்லே இல்லையே என்று சிலர் நினைக்கலாம்.

அதற்காக முன்னிரு பாடல்களையும்  தருகிறேன் .

அந்தணாளர் முனியவும் ஆங்கவர்

சிந்தையால் அருள் செய்யவும் தேவரில்

நொந்துளாரையும் நொய்து உயர்ந்தா ரையும் ,

மைந்த! எண்ண வரம்பும் உண்டு ஆங்கொலோ

பொருள்

டேய் சின்னப்பையா (ராமா ) கேள் !

ஐயர்கள் நினைத்த மாத்திரத்தில் சிலர் பதவி இழந்து அதல பாதாளத்தில் விழுந்தனர் ஐயர்கள் நினைத்த அளவில் சிலர் ‘பிரமோஷன்’ Promotion பெற்று பெரிய பதவியை அடைந்தார்கள் . இந்த விஷயத்தைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேவலோகத்திலேயே கணக்கற்றவர்கள் இருக்கிறார்கள்!

(இந்த இடத்தில் உரைகாரர்கள் மூன்று எடுத்துக்காட்டுகளை இயம்புகின்றனர்: தேவர்களை விட அந்தணர்கள் உயர்ந்தோர் ஆவர். அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் அது அப்படியே நடந்து விடும். அவர்கள் ஆற்றல் மிக்க நிறைமொழி (மந்திரம்) மாந்தர்கள். இந்திர பதவியில் இருந்த நகுஷன் அகத்தியன் சாபத்தினால் பூமியில் மலைப் பாம்பாக விழுந்தான். துருவாசருக்கு ஒரு தேவ லோகப் பெண் ஒரு மாலை அளித்தாள் . அதை அந்தப் பக்கம் ஐராவத யானை மேல் பவனி வந்த இந்திரன் மீது துர்வாசர் எறிந்தார். அவன் அதை வாங்கி யானையின் தலை மீது வைத்தான். அது மலரிலுள்ள மது வாசனையால் அதைத் தூக்கி கீழே எறிந்தது கோபத்தின் சின்னமான துருவாசர் இந்திரா! பிடி சாபம்! இந்த மாலை கீழே விழுந்தது போல நீயும் உன் பதவியிலிருந்து விழ க்கடவாய் ! என்றார் . இந்திரன் பதவியும் போச்சு. இன்னொரு எடுத்துக்காட்டு பிருகு- விஷ்ணு மோதல் ஆகும். பிருகு முனிவர் மும்மூர்த்திகளையும் சோதிக்க ஓவ் வொருவரையாக இன்டர்வியூ interview செய்யக் கிளம்பினார் . ஒவ்வொருவரும் அவரைக் கவனிக்காததால் ஒவ்வொரு சாபம் பெற்றனர். விஷ்ணு எப்போதும் அறிதுயிலில் இருப்பவர். தன்னைக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து அவருக்கு சாபம் இட்டார். நீவிர் பூமியில் அவ்வப்போது மனிதனாக அவதாரம் எடுத்து யான் பெற்ற துன்பம் பெறுக என்று சபித்தார்)

அந்தணர் என்போர் துறவியரா அல்லது பார்ப்பனரா என்ற கேள்வி சிலருக்கு எழும். ‘நான் மறை அந்தணர்’ என்று சங்க இலக்கியமே பல இடங்களில் பேசுவதால் மறை  ஓதும் அந்தணர் பார்ப்பனர் என்பதில் சந்தேகமில்லை. ‘நான்மறை அந்தணர்’ என்ற சிலப்பதிகார மணிமேகலை வரிகளாலும், ‘நான்மறை முதல்வர்’ என்ற புறநானுற்றுச் சொற்களின் உரைகளாலும் வேதம் ஓதும் அந்தணர்களேதான் அவர்கள் என்பதில் ஐயம் வராது

இதோ கடைசி பாடல்

அனையர் ஆதலின் ஐய! இவ்வெய்ய தீ

வினையின் நீங்கிய மேலவர் தாளிணை

புனையும் சென்னியை ஆய்ப்புகழ்ந்து ஏத்துதி ;

இனிய கூறி நின்று ஏயின செய்தியால்

அந்தணர்கள் சொன்னபடி நடந்தே தீரும் என்பதால் கொடிய பாபத்தினின்று

நீங்கிய அந்த அந்தணர்களின் திருவடிகளைப்ப போற்றிப் புகழ் ந்து துதிப்பாயாக . மேலும் அவர்கள் ஏவிய பணிகளையும் மனமுவந்து செய்வாயாக.

ஆக அந்தணரைப் பணிவதோடு இல்லாமல் அவர்கள் சொன்னதையும் செய்க என்பது வசிட்டன் வாய் மூலம் கம்பன் தரும் கட்டளை.

இதை சிலப்பதிகாரத்தில் காணலாம். வெற்றிக் களிப்பில் மிதந்த செங்குட்டுவனைத் தட்டி எழுப்புகிறான் மாடல மறையோன் என்னும் பார்ப்பனன். “ஏய் ! போதும் உன் போர்கள். இனி போகும் வழிக்குப் புண்ணியம் சேர். யாக யக்ஞங்களைச் செய் ! என்று சொன்னவுடன் அப்படியே செய்கிறான் சேரன் செங்குட்டுவன். அது மட்டுமின்றி அந்தப் பார்ப்பனனுக்கு எடைக்கு எடை தங்கமும் பரிசாகத் தருகிறான் (காண்க- சிலப்பதிகாரம்)

–subham–

tags — அந்தணர் , கம்பர்,  எச்சரிக்கை,