Article Written by London swaminathan
Date: 8 July 2016
Post No. 2951
Time uploaded in London :– 8-42 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நான்கு வகையான கோபக்காரர்கள் இருக்கிறார்கள். இதை ஒரு சம்ஸ்கிருதப் பாடல் அழகாக வருணிக்கிறது. உலகில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை.
பழங்கால மொழிகளில் சம்ஸ்கிருதத்துக்கு இணையான மொழி எதுவுமே இல்லை. கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரூ), சீனம், லத்தின், தமிழ் ஆகிய எல்லா மொழி வரலாறுகளையும் படித்த என் போன்றோருக்கு இது உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெரியும். செக்ஸ், மருத்துவம், நாட்டியம், இசை, இலக்கணம், சட்டம், நாடகம், காப்பியம்,சமய இலக்கியம், தத்துவம், மொழி இயல், அகராதி இயல், இதிஹாச, புராணம் ஆகிய எல்லாவற்றிலும் உலக மொழிகளில் முதலிடம் வகிப்பது சம்ஸ்கிருதம். இதற்குக் கொஞ்சம் பக்கத்தில் வருவது கிரேக்க மொழி மட்டுமே. ஆனல் அதில் கி.மு 800-க்கு முன் எதுவுமே கிடையாது. அதற்குப்பின்னர் ஓரளவு எல்லா விஷயங்களும் உள்ள மொழி. அதிலும் கூட பாணிணீய இலக்கணம், காமசூத்திரம், மனுதர்ம சாத்திரம், பரதம் போன்ற நூல்கள் இல்லை.
தமிழ் மொழியில் கி.மு. 300க்கு முன் எதுவும் இல்லை. அப்படிக்கிடைத்த விஷயங்களிலும் சம்ஸ்கிருதம் கலந்து இருக்கிறது.தமிழ்க் கல்வெட்டுகளும் இந்தக்காலத்துக்குப் பிந்தியவையே. ஆனால் சம்ஸ்கிருதச் சொற்களுடன் உள்ள கல்வெட்டுகள் கி.மு. 1400 லிருந்து நிறைய கிடைக்கின்றன.
கோபக்கரரர்கள் நான்கு வகை
உத்தமே ச க்ஷணம் கோப: மத்யமே கடிகாத்வயம்
அதமே ஸ்யாத் அஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தக:
கடிகா என்றால் 24 நிமிடங்கள்
க்ஷணம் என்றால் ஒரு நொடி/வினாடி
முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். இதை வள்ளுவனும்
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது – குறள் 29
நொடி= க்ஷணம்= கணம்
குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.
இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.
கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும் — 24 மணி நேரம் — நீடிக்கும். இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.
ஆனால் பாபிகளுக்கோ வாழ்நாள் முழுவதும் கோபம் நீடிக்கும். அதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் மனதில் கரு வைத்திருப்பவன் மஹா பாவி.
இந்த நான்கு வகைகளில் நாம் முதல் வகையைச் சேர்ந்திருப்பது நல்லது.
முனிவு என்றாலும் கோபம். அந்த முனிவை வென்றவரே முனிவர் என்றும் ஒரு விளக்கம் உளது.
ரிஷி, முனிவர்களின் கோபம் பற்றி காளிதாசன் ரகுவம்சத்தில் (5-54) மிக அழகாகச் சொல்லுகிறான்:
” நான் அவர் (மதங்க முனிவர்) பாதத்தில் வணங்கி அவருடைய கோபத்தை நீக்கினேன். அவர் சாந்த சுபாவத்தை அடைந்தார். நீரின் இயற்கைக் குணம் குளிர்ச்சியாகும். நெருப்பு, வெய்யில் இவைகளால்தான் அது சூடாகிறது. அது போல மஹரிஷிகளின் இயற்கைக் குணம் குளிர்ச்சிதான் (சாந்தம்). ஏதேனும் ஒரு தக்க காரணதால்தான் அது கோபம் அடையும்” (ரகு வம்சம் 5-54).
இதைத்தான் வள்ளுவனும் சொன்னான். வள்ளுவன் பயன்படுத்தும் கணம், குணம் முதலியன சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
மனு சொல்லுகிறார்; கோபத்தால் எட்டு தீய குணங்கள் வரும் என்று (7-48)
கோபத்தால் வருபவை எட்டு
பைசுனம் சாஹசம் த்ரோஹ ஈர்ஷ்யா அசூயா அர்த்ததூஷணம்
வாக்தண்டஜம் ச பாருஷ்யம் க்ரோத ஜனோபி கணோஷ்டக:
மனு 7-48
கோபத்திலிருந்து பிறக்கும் எட்டு தீய குணங்கள்:– அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல்.
வள்ளுவன் வெகுளாமை என்னும் அதிகாரத்தில் கோபம் பற்றி பத்து குறள்கள் பாடியிருப்பதை இவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்
கோபம் பற்றிய முந்தைய கட்டுரைகள்:–
தன்னையே அழிக்கும் கோபம் , சம்ஸ்கிருத செல்வம் , கட்டுரை 20, (எழுதியவர் நாகராஜன்), தேதி 28-1-2014
கோபக்காரர்களை வெல்வது எப்படி? (Article: Written by London swaminathan
Date: 14th September 2015)
சாது மிரண்டால் காடு கொள்ளாது! சீனக் கதை!! (Post No. 2405)
Date: 19 December 2015
Win Anger by serenity, wickedness by Virtue (Post No. 2568)
Compiled by London Swaminathan, Date: 23 February 2016
When angry, count a hundred! (Post No 2565), Date: 22 February 2016
Conquer Evil Doers by Saintliness, Anger by peacefulness (Post No. 2839)
Date: 25 May 2016
Sringeri Acharya’s Advice on Anger Management! Compiled by London Swaminathan, Date: 22 September 2015
–Subham–
You must be logged in to post a comment.