ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 4 (Post No.9092)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9092

Date uploaded in London – –31 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 4

ச.நாகராஜன்

5. பாகிஸ்தான்:

கி.பி.712இல் அராபியர்கள் சிந்த் பிரதேசத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் வரையிலும், அதே போல ஆப்கன் முஸ்லீம்கள் பஞ்சாபின் மீது பின்னால் தாக்குதல் தொடுக்கும் வரையிலும், பாகிஸ்தான் ஒரு ஹிந்து தேசமே. அதற்குப் பின்னால் ஒரு சில காலம் தவிர இதர காலமெல்லாம் அதை ஆளும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் அங்கு வாழ்ந்த ஹிந்துக்கள் கொடுமைக்கும் வன்முறைக்கும்  ஆளாக்கப்பட்டு துன்புற்றார்கள்.

ஹிந்து பழக்கங்களும் ஹிந்து சாஸ்திரங்களும் ஒழிக்கப்பட்ட அதே சமயம் மத்திய ஆசியாவில் இரானிலிருந்து ஏராளமான சூபிக்கள் வந்து இஸ்லாமை போதித்து அதைப் பரப்பலாயினர். இதன் காரணமாக, மதம் மாற மறுத்த லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது வலுக்கட்டாயமாகவோ அல்லது முஸ்லீம் அல்லாத ஹிந்துக்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட ஜஸியா வரியிலிருந்து தப்பிக்கவோ அல்லது ஹிந்து ஜாதிமுறையிலிருந்து தப்பிக்கவோ அல்லது  பொருள் ஆதாயத்திற்காகவோ மதம் மாறினர்; அல்லது பலர் இந்தியாவின் இதர பகுதிகளுக்கு பறந்தோடினர்.     

 எடுத்துக்காட்டாக வட இந்தியாவில் உள்ள அரோரா சமூகத்தைக் கூறலாம். அரோர் என்பது சிந்தின் மேலை பாகத்தில் இருந்த அதன் தலை நகரைக் குறிக்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த பெரும்பான்மை முஸ்லீம்கள் இருந்த பிரதேசங்கள், ‘வெட்டி எடுக்கப்பட்டு’ பாகிஸ்தானாக உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த  ஒரு விஷயமே. அந்த தேசம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது – மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) மற்றும் கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று. பாகிஸ்தான் என்பதற்குப் பொருள் – சுத்தமானவர்களின் நாடு – இந்தியாவிலிருந்த மிக அதிகமாக உள்ள அசுத்தமானவர்களிடமிருந்து

சுத்தமான இஸ்லாமியர்களுக்கானது இது என்று அதை நிறுவிய ஸ்தாபகர்கள் கருத்துப்பட சொல்லப்பட்டது இது.

1946இல்  ஹிந்துக்கள் மாபெரும் படுகொலை செய்யப்படும் போது ஹிந்துக்கள் பாகிஸ்தானில்  11 சதவிகிதம் என்ற எண்ணிக்கையில் இருந்தனர். (இதில் 28 %சிந்துவிலும், 11% மேற்கு பஞ்சாபிலும், 7% N.W.E.P யிலும் 8 % பலுசிஸ்தானிலும் உள்ளனர்). ஹிந்துக்கள், முதலில், கூண்டோடு மேற்கு பஞ்சாபிலிருந்தும் N.W.E.P யிலிருந்தும்  பின்னர் சிந்திலிருந்தும்  வெளியேறி விட்டனர். இதன் காரணமாக இப்போது அங்குள்ளவர்கள் 1.3% தான். சிந்து பிரதேசத்தின் தூர தூர பகுதிகளிலும் தரிசு நிலப் பகுதியிலும்  இவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் 6 % மைனாரிடியாக உள்ளனர். அவர்கள் பாகிஸ்தானில் மைனாரிடியில் கூட அதிகமான எண்ணிக்கையில் இல்லை. கிறிஸ்தவர்களே மைனாரிடியில் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர் -1.5% இன்றும் கூட தினசரி கொடுமைக்குள்ளாவதால் ஹிந்து மைனாரிடியினர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து செல்வதும்,  அல்லது வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாறுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. பாகிஸ்தான் ஹிந்துக்கள் தனியே ஒரு வெப்-சைட் அமைத்துள்ளனர். இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

6. பங்களாதேஷ் :

முதலில் தீவிர முஸ்லீம் சூஃபிக்களாலும் சில்ஹெட் சுராவர்தி போன்றோராலும் அமைதியான முறையில் தான் இஸ்லாம் ஆங்காங்குள்ள பூர்வ குடியினரிடையே பரப்பப்பட்டது. என்றாலும் ஹிந்துக்களைக் கொடுமைப்படுத்துவதும் கோவில்களை அழிப்பதும் இல்லாமல் இல்லை. இஸ்லாம் வந்த போது பங்களாதேஷின் பெரும் பகுதிகளில் ஹிந்து மதம் நிலையாக நிறுவப்படவில்லை. அங்கு வாழ்ந்து வந்தோர் தாந்திரிக புத்த மதம், ஆவி உலகக் கோட்பாடு, ஹிந்து மதத்தின் ஆதிகால வழிபாட்டுமுறைகளைப் பின்பற்றி வந்தவர்கள்.

கி.பி. 1947இல் கிழக்கு பாகிஸ்தான் உருவான போது அங்கு ஹிந்துக்களின் எண்ணிக்கை 34 % ஆக இருந்தது. ஆனால் தொடர்ந்து நடந்த கொடுமை, வன்முறையாலும் அரசினால் தூண்டப்பட்ட வகுப்புக் கலவரங்களினாலும்  ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உடனே, லட்சக்கணக்கான ஹிந்துக்கள்  இந்தியாவிற்கு குடியேறினர் அல்லது வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டனர். 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ்வாசிகள் மேற்கு பாகிஸ்தனியரோடு ஒரு சுதந்திரப் போரைத் துவங்கினர். பாகிஸ்தானின் மேற்கு பாகிஸ்தானியர் அதிகம் உள்ள ராணுவமானது அதை மிருகத்தனமாக எதிர்த்தது. குறிப்பாக ஹிந்துக்கள் குறியாக வைக்கப்பட்டனர். முப்பது லட்சம் பங்களாதேஷ்வாசிகள் (24 லட்சம் ஹிந்துக்கள் இதில் அடக்கம்) கொல்லப்பட்டனர்.  100 லட்சம் பங்களாதேஷிகள் (இதில் 80 லட்சம் பேர் ஹிந்துக்கள்). இந்தியாவிற்கு வந்தனர். பங்களாதேஷ் நிறுவப்பட்ட பின்னர் அங்குள்ள ஹிந்துக்கள் (இப்போது 34 % சதவிகிதத்திலிருந்து ஹிந்துக்கள் 16 % ஆகியிருந்தனர்) அப்பாடா என்று நம்பிக்கைப் பெருமூச்சு விட்டனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை சீக்கிரமாகவே தகர்ந்தது – பங்களாதேஷ் ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கப்பட்டவுடன்!

ஹிந்துக்களைப் பாதிக்கும்படியான தொடர் சட்டங்கள் பங்களாதேஷ் அரசால் நிறைவேற்றப்பட்டன. அண்டையிலுள்ள இஸ்லாமிய நாடுகளால் ஹிந்துக்கள் தினசரி அடக்குமுறைக்கு உள்ளாயினர்.

நாவல் போன்ற உண்மைகள் நிறைந்த ‘ஷேம்’ என்ற நாவலை எழுதிய பங்களாதேச பெண்மணியான தஸ்லிமா நஸ் ரீன், அதில், வங்காள ஹிந்துக்களின் அவல நிலையைச் சித்தரித்துள்ளார். இதன் விளைவாக  முஸ்லீம் மதகுருமார்களால் மரணதண்டனைக்கான பட்வா அவர் மீது விதிக்கப்பட்டது. தஸ்லிமா இப்போது ஸ்வீடனில் அடைக்கலம் புகுந்துள்ளார். இந்தியாவில் 1992 டிசம்பர் மாதம் பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பின்னர் பங்களாதேஷில் உள்ள வெறிபிடித்த முஸ்லீம்கள் கலகத்தை அங்கு ஆரம்பித்து 200 ஹிந்துக்களைக் கொன்றனர். பல்லாயிரக்கணக்கில்  ஹிந்துப் பெண்மணிகளைக் கற்பழித்தனர். அங்கு 1997 அக்டோபர் மாதம் துர்கா பூஜை கொண்டாட்டத்தில்  வெறி பிடித்த முஸ்லீம் இளைஞர்களால் நாடெங்கும் சுமார் 100 இடங்களில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமிய நாட்டில் தடைசெய்யப்பட்ட பழக்கத்தைக் கடைப்பிடித்ததற்காக ஜஸியா வரியைச் செலுத்துமாறு ஹிந்துக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.  தொடர்ந்த அடக்குமுறை காரணமாக அங்கு ஹிந்துக்களில் எண்ணிக்கை 11%-லிருந்து குறைந்து இப்போது 8 % மட்டுமே உள்ளது.

                       ***                தொடரும்

ஆதாரம், நன்றி  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020

tags — ஹிந்து, எண்ணிக்கை4