புறச் சூழலைப் பாதுகாக்கும் நவீன கண்டுபிடிப்புகள்! (Post No. 2618)

london-double-electric-bus

Picture:- Electric Bus in London.

Written by S Nagarajan (written for AIR)

 

Date: 11 March 2016

 

Post No. 2618

 

Time uploaded in London :–  7-49 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

  1. சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கும் நவீன கண்டுபிடிப்புகள்!

 

       உலகெங்கும் சுற்றுப்புறச் சூழல் சம்பந்தமாக எழுந்துள்ள விழிப்புணர்ச்சியின் காரணமாக பொது மக்களின் பயன்பாட்டிற்காக நவீனக் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அறிவியல் வல்லுநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பொது மக்கள் இவற்றை அறிந்து கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தால் உலகின் சுற்றுப்புறச் சூழல் வெகுவாக மேம்படும்.

 

 

இந்த நவீன கண்டுபிடிப்புகளுள் ஒன்றான எலக்ட்ரிக் பஸ் மின் சக்தியால் இயக்கப்படும் ஒன்று.

 

      உலகின் பல நாடுகளிலும் இயக்கப்படும் இந்த மின்சார பஸ்களில் டீஸல் போன்ற எரிபொருள் இல்லை என்பதால் நச்சுப் புகை வெளியேறும் என்ற பயமே இல்லை. ஆரம்ப காலத்தில் பேட்டரிகளின் எண்ணிக்கையும் அவற்றின் அதிகரித்த எடையும் அடிக்கடி அவற்றை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இருந்ததால் அவற்றைப் பயன்படுத்துவதில் சற்று தயக்கம் இருந்தது. ஆனால் இன்றோ வயர்லெஸ் சார்ஜிங் என்ற முறை கண்டுபிடிக்கப்பட்டு இந்தக் குறைபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆகவே அமெரிக்கா தொடங்கி உருகுவே போன்ற நாடுகள் வரை மின்  பஸ்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக பள்ளிக்கூட பஸ்கள் மின்சக்தி பஸ்களாக மாறி வருகின்றன.

 

 riser-pipe-cut2

      அறிவியலின் இன்னொரு கண்டுபிடிப்பு கடலில் சிந்தும் எண்ணையை அகற்றும் ரொபாட் ஆகும். ரொபாட்டுகளின் குழு கடலை அலசி ஆராய்ந்து எங்கெல்லாம் எண்ணை சிந்தப்பட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் அவற்றை ஒரு பையில் சேகரிக்கும் அல்லது சிறிய அளவில் எண்ணை சிந்தி இருந்தால் அந்த சிந்தலை அதே இடத்தில் எரித்து விடும். குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் மூலமாக ரொபாட்டுகள் ஒன்றுக்கொன்று தகவல் தொடர்பு கொண்டு இணைந்து பணியாற்றும் என்பது இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பு அம்சமாகும்.

 

 

       புவியில் சுற்றுப்புறச் சூழல் கேடுகளைப் பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள் அந்தக் கேடுகளைத் தவிர்க்க புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவது வரவேற்க வேண்டிய ஒன்று தானே!

 

 

      நமது கடமை சுற்றுப்புறச் சூழலை நன்கு பாதுகாக்கும் நவீன சாதனங்களைப் பற்றி அறிந்து அவற்றைப் பயன்படுத்துவதேயாகும்.

 

********

 

 

 

 

ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!!!

Compiled by London swaminathan

Post No.2214

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 13-30

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி

நீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.

Xxxx

2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:

தரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:

வறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.

Xxx

3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்

திரிசங்கு போல அந்தரத்தில் நில்

Xxx

4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா?

  

தபால்தலைகளில் குயில்

Xxx

5).நக்ன  க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி

எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை?

Xxx

6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி

ஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி

உடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.

ஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது

ஒப்பிடுக:— “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு” (குறள் 786)

Xxx

7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி

வீண் உறுதி மொழி எடுக்காதே

Xxx

crane india Afghanistan-stamp790parrots

8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது

Xxx

9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:

வ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்

எங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;

யார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.

Xxx

10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்

மானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.

ஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

Xxx

11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:

–ரகுவம்சம்

யானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.

Xxx

12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.

மூலகாரணமின்றி எதுவும் பிரபலமாகாது.

ஒப்பிடுக: நெருப்பின்றிப் புகையாது.

–சுபம்–