எண் 18 மஹிமை – பகுதி 2 (Post No.8604)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8604

Date uploaded in London – 31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்  கீதையில் 18 அத்தியாயங்கள்

1.அர்ஜுன விஷாத யோகம்

2.சாங்க்ய யோகம்

3.கர்ம யோகம்

4.ஞான கர்ம ஸந்யாஸ யோகம்

5.ஸந்யாஸ யோகம்

6.த்யான யோகம்

7.ஞான விஞ்ஞான யோகம்

8.அக்ஷ்ரப்ரஹ்ம யோகம்

9.ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்

10.விபூதி யோகம்

11.விச்வரூப தர்சன யோகம்

12.பக்தி யோகம்

13.க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்

14.குணத்ரய விபாக யோகம்

15.புருஷோத்தம யோகம்

16.தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்

17.ச்ரத்தாத்ரய விபாக யோகம்

18.மோக்ஷ ஸந்யாஸ யோகம்

****

பதினெண் மேல் கணக்கு நூல்கள்

இந்த 18 நூல்களை சங்க இலக்கியம் என்றும் செப்புவோம்.

இதில் பத்துப்பாட்டு , எட்டுத்தொகை என்ற 18 நூல்கள் அடக்கம் .

பாடல்கள் மூலம் இதை நினைவிற் வைத்தல் எளிது –

முருகு பொருநாறு  பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

கோலநெடுநல் வாடை கோல் குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தோடும் பத்து

திரு முருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை

மலைபாடுகடாம்

***

எட்டுத்தொகை நூலுக்கும் ஒரு பாடல் உளது—

நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ

றொத்த  பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்

கற்றறிந்தார் சொல்லும் கலியோ டகம்புறமென்

றி த்திறத்த வெட்டுத் தொகை

எட்டு நூல்களின் பெயர்கள் —

நற்றிணை

குறுந்தொகை

ஐங்குறுநூறு

பதிற்றுப்பத்து

பரிபாடல்

கலித்தொகை

அகநானூறு 

புறநானூறு

*****

18 புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்

18 உபபுராணங்கள்

சிறிய, முக்கியமற்ற புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.

Following is written by S Nagarajan

18 புராணங்களின் பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.

மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசதுஷ்டயம் I
அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :-

இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’, மூன்று ‘ப்ர’, நான்கு ‘வ’ மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.

இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணத்தைக் குறிக்கும்.
இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும்.
மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும்.
நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும்.
‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும்.
நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும்.
‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும்.
‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும்.
‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும்.
‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும்.
‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.

*****

18 சட்டப் புஸ்தகங்கள்

மநு ஸ்மிருதி

அத்ரி ஸ்மிருதி

ஹரீதர ஸ்மிருதி

அங்கீரஸ ஸ்மிருதி

காத்யாயன ஸ்மிருதி

பராசர ஸ்மிருதி

தக்ஷ ஸ்மிருதி

வசிஷ்ட ஸ்மிருதி

ப்ருகு ஸ்மிருதி

யாக்ஞ வல்க்ய ஸ்மிருதி

விஷ்ணு ஸ்மிருதி

உஷனஸ் ஸ்மிருதி

யம ஸ்மிருதி

ப்ருஹஸ்பதி ஸ்மிருதி

வியாச ஸ்மிருதி

கௌதம ஸ்மிருதி

 நாரத ஸ்மிருதி

சங்கஸ் ஸ்மிருதி

பிங்கல நிகண்டுவில் 18 ,

மநு , அத்திரி, விண்டு , வாசிட்டம், யமம் , ஆபஸ்தம்பம், யாக்ஞ வல்க்யம் ,பராசரம் , ஆங்கிரஸம்,வசனம், காத்யாயனம்,சமவர்த்தம், வியாசம், பிரகஸ்பதி, சங்களிதம், சாதான்மம் , கௌதமம் , தக்கம்

-சுபம் —

tags — எண் 18 , மஹிமை – பகுதி 2