WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,488
Date uploaded in London – – 26 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை -3
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே- அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்த்து
சிறந்ததும் இந்நாடே–இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ?- இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? — பாரதி
என்று சொற்தேரின் சாரதியாம் பாரதி பாடினான். அதற்குக் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அதர்வ வேதப் புலவன் பாடினான் கொஞ்சம் மாறுதலுடன். அப்போது தேவாசுரப் போர் நடந்ததால் போர் பற்றிய குறிப்புடன் வேதப் புலவன் பாடினான் பூமி சூக்தத்தில் .
இதோ பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை -3
நாலாவது மந்திரம் பொருள்-
நான்கு திசைகளை உடையவள் ; எவளிடத்தில் உணவும் தானிய நிலங்களும்,
எவளிடத்தில் உயிர்விடும் (சுவாசிக்கும்), நகரும் ஜீவன்கள் உள்ளனவோ
அவள் எங்களுக்கு விளைச்சளையும் கால்நடைகளையும் தருபவளாக ஆகட்டும்”
யஸ்யாஸ் சதஸ்ரஹ ப்ரதிஸஹ ப்ருதிவ்யா யஸ்யாமன்னம் க்ருஷ்டயஹ ஸம்ப பூவுஹு
யா பிபர்திம் பஹுதா ப்ராண தேஜத் ஸா நோ பூமிர் கோஷ் வப் யன்னே ததாது
மூன்றாவது மந்திரத்தில் வந்த சில சொற்கள் இதிலும் அப்படியே வந்துள்ளன.
Xxxx
ஐந்தாவது மந்திரம் பொருள்
யஸ்யாம் பூர்வே பூர்வஜனா விசக்ரிரே யஸ்யாம் தேவா அஸுரானப்ய வர்தயன்
கவாமஸ்வானாம் வயஸஸ்ச விஷ்டா பகம் வர்ச்சஹ ப்ருதிவீ நோ தகாது
பொருள்
எந்த பூமியில் எங்கள் மூதாதையர் வாழ்ந்து பணி செய்து வீழ்ந்தனரோ , எங்கு அசுரர்களை தேவர்கள் வெற்றி கண்டனரோ , எந்த பூமி, கால்நடைகளுக்கும் குதிரைகளுக்கும் , பறவைகளுக்கும் உறைவிடமோ அந்த பூமாதேவி எங்களுக்கு செல்வத்தையும் பிரகாசமான அறிவையும் அளிப்பாளாகுக
Xxx
எனது வியாக்கியானம்
பாரதியார் பாடியது போலவே “எங்கள் முந்தையர் வாழ்ந்து பணி செய்து முடிந்தது”— என்ற கருத்தைக் காணலாம்; பாரதியாரே இந்த பூமி சூக்தத்தை மனதிற்கொண்டுதான் ‘எந்தையும் தாயும்’ பாடலைப் பாடினாரோ என்றும் தோன்றுகிறது . பின்னால் வரப்போகின்ற விஷயங்கள் அதை உறுதி செய்கின்றன.
பாடலின் பொருளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைக் காண்கிறோம் ; வேத கால இந்துக்களை ‘நாடோடி’ என்று சொன்னவர்களுக்கு மிதியடி கொடுக்கும் வரிகள் இவை. ஆண்டு முழுதும் விவசாயம் செய்வோர் ஓரிடத்தில் நிலையாக வாழத்தான் வேண்டும். அதுமட்டுமல்லாமல் உலகின் பழைய நூலான ரிக் வேதத்திலேயே “அரசர், சபை, தலைவரைத் தேர்ந்தெடுத்தல் , கிராமணி/ கிராமத் தலைவர் , நகரம்” எல்லாம் வந்துவிடுகின்றன. அவர்களை நாடோடிகள் என்று சொன்ன கும்பலை எண்ணி எண்ணி நாம் நகைக்கலாம்
‘நான்கு திசைகள்’ என்ற சொற்களில் புதிய வானம், புதிய பூமி முழுவதையும் கண்டார்கள் வேத கால மக்கள்.
இதைவிட முக்கியமானது ஐந்தாவது மந்திரத்தில் உள்ள ‘பகம்’ , ‘வர்ச்சஸ்’ என்ற இரண்டு சொற்கள். பகவான் என்றால் இறைவன் என்பது பொருள். ‘ஆறு பகம் /செல்வம் நிறைந்தவன் பகவான்’
அவையாவன –
பகவானின் ஆறு லட்சணங்கள் –
1.ஞானம், 2.வைராக்யம், 3.கீர்த்தி, 4.ஐஸ்வர்யம், 5.ஸ்ரீ / திரு/செல்வம், 6.பலம்
‘வர்ச்சஸ்’ என்பது சாதாரண ஒளி அல்ல.; பிராமணச் சிறுவர்கள் பூணூல் போட்டவுடன் தினமும் அக்கினி வளர்த்து அதில் நெய்யுடன் அரசங் குச்சிகளைப் போட்டுவிட்டு, அந்த சாம்பலை எடுத்து உடலின் பல பகுதிகளில் இட்டுக்கொள்ளும்போது ‘தேஜஸ், ஓஜஸ், வர்சஸ் , மேதாவி’ என்ற சொற்களை சொல்லுவார்கள் காயத்ரீ மந்திரத்தில் வேண்டுவதும் – ‘பர்கோ’ – ‘அறிவு எனும் ஒளி’தான். ஆயினும் வர்ச்சஸ் என்பது ஆன்மீக ஒளி – பிரகாசம் – ஆகும். அறிவு என்பது மெத்தப் படித்தல் – விவேகம் என்பது நல்லது கெட்டதை அறிந்து – நல்லதை மட்டும் பின்பற்றல் . ‘களவும் கற்று மற’ என்பது ஆன்றோர் வாக்கு. அறிவதில் தவறில்லை; அறிவது ஏமாறாமல் வாழ்வதற்கு அவசியமும் கூட. ஆக ‘வர்ச்ஸ்’ கேட்பது ஆன்மீக ஒளி பெருகவே
தேவ அஸுர போர் என்பது ரிக் வேத காலம் முதல் உண்டு. எதிர்க்கட்சி மிகவும் அவசியம். மனிதன் தோன்றிய காலம் முதல் எதிர்க்கட்சிகள் — அஸுர குணங்கள் உண்டு– இந்தப் போர்– தேவ அஸுரப் போர் — தினமும் நம் மனதில், வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கிறது. இறுதியில் நல்லதே வெல்லும். அதையும் ஐந்தாவது மந்திரம் பூமாதேவியின் சிறப்பில் ஒன்றாகக் கூறுவது சிறப்புடையது.
63 மந்திரங்களைக் கொண்டது பூமி துதி; முதல் ஐந்து துதிகளில் நான்கு திசை மற்றும் இறந்த, நிகழ், வருங்காலம் மற்றும் நகரக்கூடிய உயிர் இனங்கள், நகராத கடல், மலைகள் ஆகிய அனைத்தையும் புலவர் நம் கண் முன்னால் காட்டிவிட்டார். இந்த பர ந்த நோக்கு ரிக் வேதத்திலேயே உளது; 1-113-11 ஆவது மந்திரத்தில் உஷா என்னும் அதிகாலை அழகி , கடந்த கால, நிகழ் கால, வருங்கால மக்களைக் கண்டவள் என்று புலவர் பாடுகிறார் . அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாம முதல் ஸ்லோகத்தில் வருவதை முன்னரே கண்டோம் .
தொடரும்
tags — பூமி சூக்தம் -3, எந்தையும் தாயும்,