மனைவிக்கு ‘பெர்Fயூம்’ (செண்ட்) வாங்குவது எப்படி? (Post No 2624)

dog

Written by london swaminathan

 

Date: 12 March 2016

 

Post No. 2624

 

Time uploaded in London :–  13-36

 

( Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

dog in wedding

இது அமெரிக்காவில் உண்மையில் நடந்தது. ஒருவனுடைய காதலிக்குப் பரிசாக வாசனைத் திரவியம் (Perfume பெர்Fயூம்) வாங்குவது என்று காதலன் முடிவு செய்தார். ஆனால் அவள் வாங்கும் ‘பெர்Fயூம்’ எது என்று தெரியாது. அவள் வசிப்பதோ அவளுடைய அம்மா வீட்டில். அவளிடம் கேட்டால் ‘சர்ப்ரைஸ் (surprise)’ போய்விடும். ஆகவே கேட்கவும் தயக்கம். அவள் எப்போது வந்தாலும் அவளுடைய செல்லமான (pet dog) நாய்க்குட்டியைத் துணைக்கு அழைத்துவருவாள். அவளை மறுமுறை சந்தித்தபோது, உன்னுடைய நாயை ஒரு ‘வாக்கிங் (walking)’ கூட்டிக்கொண்டு போய்விட்டு மாலையில் உன் வீட்டில் கொண்டுவந்து விடுகிறேன் என்றான். அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

 

காதலன் நாயைக் கூட்டிக்கொண்டு நேரடியாக கடைக்குப் போனான். பெர்Fயூம் விற்கும் பிரிவிலுள்ள பெண்களிடம் பல வகையான பெண்கள் வசனைத் திரையங்களின் மாதிரி (Sample சாம்பிள்) கேட்டான். பொதுவாக அவைகளைக் சின்னக் கார்டில் “ஸ்ப்ரே” (spray) செய்து (தெளித்து) முகர்ந்து பார்க்கக் கொடுப்பார்கள்.

 

நமது காதலனோ அந்த அட்டைகளை நாயின் மூக்கிற்கு நேரே காட்டச் செய்தான். அந்தப் பிரிவிலுள்ள பெண்களுக்கு ஒரே வியப்பு; புரியவுமில்லை. ஒரு குறிப்பிட்ட பெர்Fயூமை, நாயிடம் காட்டியபோது அது ஆநந்தமாக எம்பிக் குதித்தது. அதுதான் மனைவி, பயன்படுத்தும் பெர்Fயூம் என்பது தெளிவாகியது. அதை மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றான். அவளுக்கும் மகிழ்ச்சி. தனது கணவனுக்குத் தான் பயன்படுத்தும் பெர்Fயூம் முதற்கொண்டு எல்லாம் தெரிந்திருக்கிறதே! என்று அன்பும் அதிகரித்தது. (ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்—லண்டன் சுவாமிநாதன்)

 

Xxx

 

poison

நீ என் மனைவியாக இருந்தால்……………….

பெண்களுக்கு ஓட்டுரிமை கோரி இங்கிலாந்தில் பெரிய போராட்டம் (suffragette)  நடந்தது. அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாதென்று லாய்ட் ஜார்ஜ் (Lloyd George) என்பவர் சொற்பொழி வாற்றினார். அந்தக் கூட்டத்து வந்த ஒரு பெண்மணிக்கு அதிபயங்கர கோபம். கண்களில் கனல் தெரிக்க எழுந்தார். எல்லோர் முன்னிலையிலும், “அன்பரே, நீவிர் மட்டும் எனது கணவராக இருந்திருந்தால் உமக்கு விஷம் கொடுத்துக் கொன்றிருப்பேன்” என்றார். அவர் உடனே “நீர் மட்டும் எனது மனைவியாக இருந்திருந்தால், கட்டாயம் அதை வாங்கிக் குடித்திருப்பேன்!” என்றார்.

 

xxx

 

நான் என்ன முட்டாளா? அவ்வளவு ஆரஞ்சுப் பழத்தையும் ஒரு நிமிடத்தில் விற்க!

 

Happy-Orange-Vendor-

 

மெக்ஸிகோ நாட்டில் ஒரு பிரமுகர், பழம் விற்கும் ஒரு கூடைக்காரியிடம் தினமும் இரண்டு ஆரஞ்சுப் பழம் வழங்குவார். ஒரு நாள் அவர் வீட்டில் ஒரு பெரிய பார்ட்டி/விருந்து ஏற்பாடாகியிருந்தது. அவர் நினைத்தால், மொத்த விற்பனைக் கடைக்குச் சென்று சகாயமான விலையில் ஒரு கூடை, 2 கூடை ஆரஞ்சுப் பழம் வாங்கியிருக்கலாம். ஆனால் கூடைக்கார கிழவியிடம் வாங்கினால், அவள் சந்தோஷப்படுவாள் என்று எண்ணி, அவளிடம் போய் நின்றார்.

 

வழக்கமான வாடிக்கையாளர் என்பதால், அவர் வாய் திறக்கும் முன்னரே, அந்தப் பெண்மணி, “இந்தாருங்கள் உங்களுடைய இரண்டு ஆரஞ்சுகள்” என்று சொல்லி கையில் திணித்தாள்.

அவர் சொன்னார், “ அம்மா! இன்று உன் கூடையிலுள்ள எல்லா ஆரஞ்சுப் பழங்களும் எனக்கு விலைக்கு வேண்டும். என் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர்” –என்றார்.

அவளுக்கு வந்ததே பார்க்க வேண்டும் – கோபம்! “என்ன நினைத்தீர்கள் என்னை? உங்களுக்கு முழுக்கூடையையும் ஒரு நிமிடத்தில் விற்றுவிட்டால், நாள் முழுவதும் நான் என்ன செய்வது?” – என்று ஒரு முறை,முறைத்தாள்.

அந்தப் பிரமுகருக்கு, சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

(ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்—லண்டன் சுவாமிநாதன்)

Xxx