பிளாட்டோவும் என்னைப் போலவே அறிஞர்! (Post No.5644)

 

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 November 2018

GMT Time uploaded in London –13-29
Post No. 5644

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பிரிட்டனில் பிரபுக்கள் சபை உறுப்பினருடன் ஒரு தத்துவ அறிஞரும் உணவு உண்ண அமர்ந்தார். அவர் ஒவ்வொரு தின்பண்டத்தையும் உற்று நோக்கி ருசித்து எடுத்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட ஒரு பிரபுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. வாயைத் திறந்தார்; சொற்களை உதிர்த்தார்:-

“என்ன இது விநோதமாக இருக்கிறதே! உங்களைப் போன்ற தத்துவ அறிஞர் கூட இப்படி விருப்பப்பட்ட உணவைத் தேடி எடுத்து உண்பீர்களா?

உடனே அந்த தத்துவ அறிஞர் சொன்னார்:

அட, ருசியான பண்டங்களை எல்லாம், கடவுள் முட்டாள்பய ல்களுக்கு மட்டும் படைத்தாரோ?

xxxx

 

கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா?

பிரிட்டிஷ் பிரதமர் தாமஸ் பெலாம் ஹோல்ஸ் (நியூகாஸ்ல் பிரபு DUKE OF NECASTLE) பிரதமராக இருந்த போது லாரன்ஸ் ஸ்டேர்ன் (LAWRENCE STERN) என்ற பிரபல கதாசிரியருடன் பேசிக் கொண்டிருந்தார்.

பிரதமர் சொன்னார்,

உங்களைப் போன்ற அறிஞர்கள் எல்லாம் வேலைக்கு லாயக்கு அற்றவர்கள். உங்களுக்கு எழுதத் தெரியுமே தவிர வேலை செய்யத் தெரியாது.

உடனே எழுத்தாளர் ஸ்டேர்ன் சொன்னார்,

ஐயா, பிரதமர் அவர்களே. குதிரையும் சேனத்தை சுமக்கும்.

கழுதை அதைவிட பெரிய பாரத்தை சுமக்கும்.

கழுதையும் குதிரையும் ஒன்றாமோ!!

xxxx


பிளாட்டோவும் நானும் ஒன்றே!

ரால்ப் வால்டோ எமர்சன் (R W EMERSON) என்பவர் அமெரிக்காவின் புகழ்மிகு கவிஞர், தத்துவ அறிஞர், கட்டுரையாளர்.

அவர் ஒரு முறை கிரேக்க அறிஞர் பிளாட்டோவின் நூல் ஒன்றை பக்கத்து வீட்டு கிராமத்தானுக்குப் படிக்கக் கொடுத்தார். அந்த கிராமத்து ஆசாமி கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

எமர்ஸன் கேட்டார்:

புஸ்தகத்தைப் படித்தீர்களா? எப்படி இருந்தது? உங்கள் அபிப்ராயம் என்ன?

அந்தப் பட்டிக்காட்டான் சொன்னான்,

படித்தேனே! பிளாட்டோ என்னைப் போலவே கொள்கை உடையவர். என்னுடைய அச்சுதான் அவர்!

xxxx

நல்ல மூக்கொடை

ஜான் மேனார்ட் (JOHN MAYNARD) என்பவர் பிரிட்டனின் பெரிய சட்ட நிபுணர்.

அவருக்கு மிகவும் வயதானபோது, ஒருவர் அவரை வசை பாடினார்.

ஓய், கிழவரே! உமக்கு வயதாகிவிட்டது. சட்டம் எல்லாம் மறந்து போச்சு.

அந்த வயதிலும் அறிவு மழுங்காத அந்த மேதை உடனே பதிலடி கொடுத்தார்:-

அன்பரே! உண்மைதான்! நீர் படிக்காத அளவை விட  அதிக அளவு சட்டம் மறந்து போச்சு!

(அவர் எந்த அளவுக்கு நூல் அறிவற்றவரோ அந்த அளவைவிட….. என்று சொன்னதன் மூலம் அவர் பெரிய முட்டாள் என்பதை இடித்துக் காட்டி மூக்கை உடைத்தார்).

Tags:– மூக்கொடை, பிளாட்டோ, எமர்சன்

XXXX SUBHAM XXX

உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! (Post No 2772)

cartoon-ladder-5

Compiled by london swaminathan

 

Date: 1 May 2016

 

Post No. 2772

 

Time uploaded in London :– 21-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

HitchYourWagonToAStar-jpg

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ  எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து ‘Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்

 

இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–

புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)

 

ஆங்கிலப் பழமொழிகள்

இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.

 

He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.

நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.

See mickle, and get something; seek little and get nothing (mickle = much)

இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!

 

நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).

வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:

2lotus bloom

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596

ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-

 

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது

(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

 

எனது முந்தைய கட்டுரைகள்:–

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள் …(31 Mar 2012) என்ற பதிவிலும், புறநானூற்றில் பகவத் கீதை- பகுதி 2-லும் (31-3-2012) இக்கருத்துகளை முன்னரே தொட்டுக்காட்டி இருக்கிறேன்

 

–சுபம்–