‘கேக்’கில் சின்ன ‘s’ ஸும், பெரிய ‘S’ ஸும்! கஸ்டமர் கலாட்டா! (Post No.2739)

s cake

Compiled by London swaminathan

Date: 19 April 2016

 

Post No. 2739

 

Time uploaded in London :– 14-40

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Eccentricity Anecdotes

 

கிறுக்குத்தனம், பைத்தியக்காரத்தனம் பற்றிய நிகழ்ச்சிகள்

 

தீ! தீ! — ஆங்கிலப் புலவர் வீட்டில் கூச்சல்

gray

தாமஸ் கிரே என்பவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவர். அவருக்கு தீ என்றால் பயம்—அதாவது பைரோ போபியா! யாராவது அந்த தீ, நெருப்பு என்ற வார்த்தைகளைச் சொன்னால் அந்த சொல்லே அவரைச் சுட்டது போல எண்ணுவார். இந்த புது வகை பயத்தினால் அந்த “முன் ஜாக்கிரதை முத்தண்ணா” தனது வீட்டில் தக்க ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்.

 

அவரது வீட்டு ஜன்னலில் இருந்து ஒரு ஏணி தொங்கும். அது  கயிற்றினாலான ஏணி. அதன் ஒரு முனை ஜன்னலில் துவங்கி மறு முனை ஒரு தண்ணீர்த் தொட்டியில் முடியும். ஒரு வேளை தனது துணிகளும் தீப்பற்றி, ஏணியும் தீப்பற்றினாலும் தண்ணீர்த் தொட்டிக்குள்தானே விழுவார்! அவ்வளவு கன கச்சிதமான ஏற்பாடு.

 

சில குறும்புக்கார இளைஞர்களுக்கு கிரே அவர்களின் பயம் குறித்து தெரியும். ஒரு நாள் இரவில் அவர் வீட்டு வாசலில் நின்று தீ! தீ! என்று கூச்சலிடவே, கவிஞர் கிரே, படுக்கையிலிருந்து தாவிக்குதித்து, கயிற்றேணியைப் பிடித்து, தர தரவென்று கீழே இறங்கி தண்ணீர்த் தொட்டியில் தொப்பென்று விழுந்தார்.

 

வீட்டுக் காவற்காரனும் கூச்சல் கேட்டெழுந்து யாரோ தண்ணீர்த் தொட்டியில் விழுந்த சப்தம் கேட்டதே என்று ஓடோடி வந்தார். நமது புலவர் பெருமகனார் கிரே, தொட்டிக்குள் மிதந்தவாறே, குளிரில் நடுநடுங்க தீ, தீ என்று கதறினார்.

 

காவற்காரருக்கு நிலைமை புரிந்தது. அவரை சமாதானப் படுத்தி, தீ விபத்து எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி, பத்திரமாக மாடிக்கு அழைத்துச் சென்று படுக்கை அறையில் கொண்டுவிட்டார்.

xxx

s

‘கேக்’கில் சின்ன ‘எஸ்’ஸும், பெரிய ‘எஸ்’ஸும்! கஸ்டமர் அலப்பறை!

 

பிறந்த நாள் ‘கேக்’ செய்துதரும் கடைக்குள் ஒருநாள், ஒரு வாடிக்கையாளர் நுழைந்தார். டிப், டாப்பாக உடைகள் அணிந்திருந்தார்.

 

“ஐயா ஒரு கேக் செய்ய வேண்டும் அதில் சின்னதாக ‘எஸ்’ என்று ஆங்கிலத்தில் பொறிக்க வேண்டும். இன்னின்ன அலங்கார பூ வேலைப்பாடுகள் செய்யவேண்டும்; நாளை மறுதினம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

கடை முதலாளி, “ஓ.கே. நாளை மறுதினம் வாருங்கள். எல்லாம் பிரமாதமாக செய்து வைத்திருக்கிறேன்” என்றார்.

ஆனால் ஒரு நாள் முன்னதாகவே, அந்த கஸ்டமர், மீண்டும் கேக் கடைக்குச் சென்று, நாளை வந்துவிடுகிறேன்; மறக்கமாட்டீர்களே? என்றார். உடனே கடைக்கார பையன், ஸார், உங்களுடைய ‘கேக்’கில் முக்கால் வாசி வேலை முடிந்துவிட்டது; இதோ பாருங்கள்” என்று கேக்கை எடுத்துக் காட்டினான்.

அந்த ஆள் கேக்கைப் பார்த்ததுதான் தாமதம்; உடனே கோபத்தில் சீறிப் பாய்ந்தார். ஆங்கிலத்தில் பெரிய ‘எஸ்’ பொறித்து விட்டீர்கள். நான் சின்ன ‘எஸ்’ அல்லவா பொறிக்கச் சொன்னேன்; காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே! ஐயகோ!” என்று அலறினார். கடை முதலாளி ஓடிவந்தார்.

 

 

“ஐயா! மன்னித்துக்கொள்ளுங்கள். சின்னப் பிழை நடந்துவிட்டது. உங்களுக்கு டெலிவரி நாளைதானே வேண்டும்; கவலையே படாதீர்கள்; எல்லாம் கச்சிதமாக நீங்கள் சொன்னபடியே செய்துவைக்கிறேன்; நாளைக்கு வாருங்கள்” என்றார். அவ்வளவு ‘கஸ்டமர்’களுக்கும் முன்னால், இப்படிக் கத்திவிட்டுப் போனதால். முதலாளியே பக்கத்திலிருந்து ‘கேக்’கை அழகாக செய்து முடித்து அதன் மீது சின்ன ‘எஸ்’ பொறித்தார்.

 

 

மறு நாள், சொன்ன நேரத்தில் கஸ்டமர் (வாடிக்கையாளர்) வந்தார்; ‘கேக்’கைப் பார்த்தார். பிரமாதம் என்று சொல்லிவிட்டு பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

முதலாளி கேட்டார்: இதை எங்கே டெலிவரி செய்ய வேண்டும்; முகவரியைக் கொடுங்கள் உடனே டெலிவரி செய்கிறேன்; அல்லது நீங்களே எடுத்துச் செல்வதானால், நல்ல பெட்டியில் வைத்து ‘பேக்’ செய்து தருகிறேன்” என்றார்.

அதற்கு அந்த கஸ்டமர் சொன்னார்;

“நோ! நோ! நான் இங்கேயே சாப்பிடத்தான், இந்த ஆர்டரைக் கொடுத்தேன்” என்று சொல்லிவிட்டு அங்குள்ள காப்பி டேபிளில் அமர்ந்து, கேக்கைச் சாப்பிடத் துவங்கினார்.

 

அடப் பாவிமகனே! இப்படி சாப்பிடுவதற்குத்தான் நேற்று சின்ன எஸ், பெரிய எஸ் என்று அலப்பறை செய்தாயா? என்று முதலாளியும் கடைப்பையன்களும் நினைத்தார்கள்; ஆனால் வெளியே சொல்லமுடியுமா?

Customer is always right — ‘கஸ்டமர் இஸ் ஆல்வேய்ஸ் ரைட்’ = வாடிக்கையாளரின் வாதம் எப்பொழுதும் பொருளுடைத்தே – என்பது மேல்நாட்டுக் கருத்து!

–சுபம்–

 

பதி – வதி – மதி : சிந்து சமவெளியில் உண்டா?

bull-seal-4

Look at the “U” shaped letters

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1358; தேதி அக்டோபர் 20, 2014.

மிகவும் அதிசயமான ஒரு விஷயம்!! இந்துக்கள் பெயரிடும் முறையாகும்!! எனது நாற்பது ஆண்டு ஆராய்ச்சியில் கண்ட சில விஷயங்களைச் சுருக்கமாகத் தருகிறேன். ஆதிகாலம் முதல் இன்றுவரை இந்துக்கள் தனது பெயர்களில் பின்னொட்டு (விகுதி) களாக ‘’பதி – வதி – மதி’’ —களைப் பயன்படுத்துகின்றனர். இந்தோநேஷியாவின் முஸ்லீம் ஜனாதி’’பதி’’யாக இருந்த பெண் பெயர் கூட மேக’’வதி’’ சுகர்ண புத்ரீ!! தூய சம்ஸ்கிருதம்.

காரைக்கால் அம்மையாரின் பெயர் புனித’’வதி’’. அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலக’’வதி’’. இவர்கள் இருவரும் பிராமணர்கள் அல்ல. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைஸ்ய குல பெண்ணான காரைக்கால் அம்மையார் வீட்டிலும் அதற்கு முன் பிறந்த வையஸ்குல கோபாலன் (சிலப்பதிகார கோவலன்) பெயர்களும் சம்ஸ்கிருதமே. சங்க இலக்கியப் புலவர்களில் கபில, தாமோதர, பரண, கேசவ, கௌசிக, விஷ்ணுதாச (விண்ணந்தாயன்), கண்ணதாச (தாயங்கண்ணன்), பிரம்மதத்த, வால்மீகி என்று ஏராளமான சம்ஸ்கிருதப் பெயர்களைக் காண்கிறோம்.

ஆண்கள் பெயர்கள் எல்லாம் ‘’பதி’’ யில் முடியும்.பெண்கள் பெயர் எல்லாம் ‘’மதி’’ அல்லது ‘’வதி’’ யில் முடியும். எடுத்துக்காட்டு:–

பசு — பதி
பார்– வதி
இந்து — மதி (வளர் மதி)

முதலில் ஆண்கள் பெயர்களை எடுத்துக் கொள்வோம். இந்தப் பெயர்கள் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே இருக்கின்றன. இந்துக்களை கடித்துக் குதறுவதைப் பொழுது போக்காகக் கொண்ட “”அறிஞர்களும்”” இப்பொழுது ரிக் வேதத்தின் காலத்தை கி.மு. 1700 என்று ஒப்புக் கொண்டுவிட்டனர். அப்படியானால் சிந்து சமவெளியிலும் இந்தப் பெயர்கள் இருக்கதானே வேண்டும்? அப்படி இருக்குமானால் அந்த எழுத்தின் வடிவம் எப்படி இருக்கும்? என்று ஆராய்வோம்.

ப்ருஹஸ் –பதி, வாசஸ் – பதி, த்ரிதஸ பதி, பசு பதி, வனஸ் பதி முதலிய பல பதி–க்கள் வேதங்களில் வருகின்றன. நம்முடைய நண்பர்கள் பெயர்களில் இப்படி நூற்றுக் கணக்கான ‘’பதி’’–க்கள் கட்டாயம் இருப்பர். சில எடுத்துக் காட்டுகள்:

லெட்சுமி பதி (தினமலர் ஆசிரியர்)
உமா பதி
பூ பதி (டென்னிஸ் வீரர்)
கண பதி
தன பதி செட்டியார்
அபாம் பதி (வருணன்)
ஜனாதி – பதி
அதி — பதி

Indus_seal_impression

பெண்கள் பெயர்களைப் பார்த்தால் அவை ‘’வதி’’ அல்லது ‘’மதி’’ யில் முடியும் — சில எடுத்துக் காட்டுகள்:

மது மதி, இந்து மதி, வசு மதி, வளர் மதி, சாரு மதி — இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

மஹாபரதத்தில் வரும் மீனவப் பெண்ணின் பெயர் கூட சத்ய – வதி! ((ஆரிய—திராவிட வாதம் பொய் என்பதற்கு இப்படிப் போகிற போக்கில் நான் ஆயிரம் உதாரணங்களைக் கொடுக்க முடியும். அசுரர்கள், ராக்ஷசர்கள் என்பதெலாம் சம்ஸ்கிருதம், அவர்கள் பெயர்களும் சம்ஸ்கிருதம்))
அகத்தியர் மணந்த நாக கன்னிகை பெயர் (வியட்நாம் பெண்) யசோவதி. பார் —வதியை எல்லோருக்கும் தெரியும். பிரபல கணித மேதை லீலா —வதியையும் தெரிந்திருக்கும் (பாஸ்கராச்சார்யார் மகள்).

நகரங்களுக்கும் நதிகளுக்கும் , நல்ல குணங்களுக்கும் இந்துக்கள் பெண்கள் பெயர்களையே சூட்டுவார்கள் (பெண்கள் வாழ்க முதலிய பல கட்டுரைகளில் இது பற்றி எழுதி விட்டேன்)

சபர் மதி, ஷரா வதி, வேக வதி என்பன சில ஆறுகளின் பெயர்கள்.
இந்திரனின் தலை நகர் அமரா வதி
நாகர்களின் தலை நகர் போக வதி

இப்படி நிறைய நதிகள், நகரங்கள் இந்தியாவில் இன்றும் உண்டு. ஆந்திரத்தில் உள்ள புத்தமதச் சிற்பம் உடைய அமரா வதி, குஜராத்தின் பழைய தலை நகர் கர்னா வதி (இப்பொழுதைய பெயர் ஆமதாபாத்).

உண்மையில் மொழியியல் அறிஞர்களுக்குத் தெரியும் ப = ம = வ ஆகிய எழுத்துக்கள் இடம் மாறும் என்பது.

தமிழில் வங்கம் (படகு, கப்பல்) என்றால் வங்காளத்தில் வசிப்போர் பங்கம் என்பர்.
வேதத்தில் ‘’வ்ருக’’ என்றால் பிற்கால சம்ஸ்கிருதத்தில் அது ‘’ம்ருக’’ ஆகும். இது போல நூற்றுக் கணகான சொற்கள் இருக்கின்றன. முற்காலத்தில் இதை மாறி மாறி பயன்படுத்தி இருப்பர். பிற்காலத்தில் இலக்கணம் வகுத்து முறைப்படுத்தி இருப்பர்.

indus seal2

வேதகாலம் முதல் இந்துக்கள் பயன்படுத்தும் இந்த வதி – பதி – மதி சிந்து சமவெளியில் இருந்தால்…………. இருந்திருந்தால்…………. எப்படி இருக்கும்? சிந்து சமவெளி முத்திரைகளில் “U” பல வகைகளில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதைப் பாதம் என்று கொண்டால் பத, பதி என்ற ஒலியை உருவாக்கும். அதற்குள்ளும் வெளியேயும் வெவ்வேறு குறியீடுகளைப் பொறிக்கையில் அதற்குத்தக புதிய ஒலிகளும் வரும் என்று ஊகிக்கலாம். இது ஒரு ஊகமே.

“U” இந்த வடிவத்தைச் சிலர், அளக்கும் படி (லிட்டர்) என்றும் இன்னும் சிலர் இது மரியாதைக்குரிய விகுதி/ பின்னொட்டுச் சொல் (கள், ஆர்) என்றும் கூறி இருக்கிறார்கள். (ஆங்கில எழுத்தான யு போன்றது).
ARV_INDUS_12484f

சிந்து சமவெளி எழுத்துக்களை யாரேனும் முழுக்க முழுக்க புதிய கோணத்தில் ஆராய்ந்தால்தான் அதன் உண்மைப் பொருள் விளங்கும். மற்ற எழுத்துக்களுக்குக் கிடைத்தது போன்ற இரு மொழிக் கல்வெட்டுகள் கிடைக்காததால் கம்யூட்டரில் போட்ட பின்னரும் இதன் பொருள் தெரியவில்லை!! சிலர் ‘’எண்’’ என்பர், மற்றும் சிலர் ‘’எழுத்து’’ என்பர். இன்னும் சில அமெரிக்கர் இது எழுத்தும் அல்ல, எண்ணும் அல்ல, சுத்தக் ‘’கிறுக்கல்கள்/படங்கள்’’ என்றும் திருவாய் மலர்ந்தருளுவர்!! இதற்கெல்லாம் மூல காரணம் —- ஆரம்ப காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்தோர், ஆரிய—திராவிட விஷத்தை இதிலும் தூவிவிட்டனர். அதனால் இன்று வரை அறிவு என்னும் மரமோ, பழமோ அங்கே விளையவில்லை!!

i_tiger_seal

contact swami_48@yahoo.com