

Post No. 8888
Date uploaded in London – –4 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கரிகால் சோழன் பற்றிய அதிசய விஷயங்களை சுமார் 20 ஆங்கில, தமிழ் கட்டுரைகளில் எழுதிவிட்டேன். பத்து ஆண்டுக்காலத்தில் எழுதிய கட்டுரைகளின் இணைப்புகளை அடியில் காண்க.
புதிய விஷயம் என்ன?
2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் அதை செப்பிச் சென்றார் என்பதே.
இந்து திருமணங்களில் ‘சப்தபதி’ என்னும் 7 அடி நடக்கும் சடங்கு உலகம் முழுதும் அறிந்ததே. அது நடந்தால்தான் கல்யாணம் சட்டபூர்வமானது ஆகும் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஊடக வசதிகள் அதிகரித்த, வீடியோ கிராபர்கள் பெருகிய இவ்வுலகத்தில் ‘சப்தபதி’ படங்களுக்கு குறைவில்லை.
சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் எண் 7 ம், எண் 3 ம் தான் அதிகம் இருப்பதும் அது வேத கால இந்து நாகரிகம் என்பதை மெய்ப்பிக்கிறது.
கரிகாலன் பற்றிய அதிசய விஷயங்கள் என்ன?
1.கரிகால் சோழன், பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து யாகம் செய்தது,
2.கரிகால் சோழன் நண்பர்களுக்கு ‘குட் பை’ GOOD BYE சொல்லும்போது ஏழு அடி நடப்பது,
3.கரிகால் சோழன் பருவக் காற்று மூலம்,( பாய் மரக் கப்பல் மூலம்) இந்து மஹா சமுத்திரத்தில் கொடி கட்டிப் பறந்தது
4.கரிகால் சோழன் கல்லணை (Grand Anicut) கட்டியது
5.கரிகால் சோழன் உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது
6.கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி காவிரி ஆற்றோடு ஒடி கணவனை மீட்டது .
இதில் பெரும்பாலான விஷயங்கள் புறநாநூற்றிலும் , பொருநர் ஆற்றுப்படையிலும் உள்ளது (கீழே இணைப்புகளில் மேல் விவரம் உளது)

கரிகாலனுக்கு முன்னர் ராவணனும் பருவக் காற்றைப் பயன்படுத்தி பாட்னா (Patna= Pataliputra in Bihar, India) சென்று அங்கிருந்து இமய மலை வரை எளிதில் சென்று கைலாயத்திலும் காஷ்மீரிலும் அட்டூழியம் செய்தான். அதே எதிர்திசைப் பருவக்காற்றை — (Returning Monsoon) திரும்பிவரும் பருவக்காற்று) பயன்படுத்தி காஷ்மீர் மன்னன் இலங்கை மீது படை எடுத்ததையும் மஹாவாம்சம், ராஜதரங்கிணி மூலம் அறிவோம். கரிகாலன் 2100 ஆண்டுகளுக்கு முந்தையவன்
இதோ பாணினீயம்
பாணினீயம் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய நூல் !
சூத்திரம் 5-2-22
“ஸாப்த பதீனம் ஸக்யம் “
இதற்கு வியாக்கியானம் —
நட்பு என்பதைக் குறிக்கும்போது ஸாப்த பதீனம் ஒரு நிபாதனம் ஆகும்.
ஸாப்த பதீன- ஏழு அடி சேர்ந்து நடப்பதால் அடைவது அல்லது ஏழு வார்த்தைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதால் அடைவது
-பக்கம் 177, பகுதி 2, பாணினியின் அஷ்டாத்யாயி , தமிழாக்கம் -கு.மீனாட்சி , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 600 113, ஆண்டு 1998
ரிக் வேதம் சொன்னதை, பாணினி சொன்னதை, செய்து காட்டிய செயல் வீரன் கரிகாலன் என்பதை பொருநர் ஆற்றுப்படை மூலம் அறிகிறோம்
Xxx

இணைப்புகளில் சங்க இலக்கிய செய்யுள்களைக் கொடுத்துள்ளேன்:–
References
Purananuru verse 224 – Eagles Shaped Yaga Kunda
Porunar Atruppadai – lines 165-167 Walking Seven Steps during Farewell Ceremony
Purananuru verse 66 – Using Wind for sailing ; knowledge of Sailors and Monsoon.
Seven Steps | Tamil and Vedas
tamilandvedas.com › tag › seven-steps
20 Jul 2016 — Posts about Seven Steps written by Tamil and Vedas. … The seven steps are the seven grades of life. Compare this with the seven ages of life …
walking 7 steps | Tamil and Vedas
tamilandvedas.com › tag › walking-7-steps
8 Nov 2016 — Posts about walking 7 steps written by Tamil and Vedas. … The next ceremony is called saptapadi or seven steps. This is the most important …
கரிகால் சோழன் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கரிக…
18 Jan 2012 — கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் …

கரிகாலன் வரலாறு கூறும் …
tamilandvedas.com › 2015/01/23
23 Jan 2015 — காண்க: கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம், ஜனவரி 18, 2012. 2.கரிகாலன், ரிக் வேத மந்திரத்தில் சொன்னபடி, ஏழு அடி …
கரிகாலன் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கரிக…
29 May 2018 — பாடலின் பொருள் : சோழ மண்டலத்தை ஆண்ட மன்னர்களுள் திறமை வாய்ந்த மன்னனான கரிகால் சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக …
கரிகாலன் மகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கரிக…
8 Mar 2017 — ஆதி மந்தி என்பவள் கரிகால் சோழனின் அருந்தவப் புதல்வி; அவள் ஒரு … சோழன் மகள் ஆதி மந்தியும், சேர நாட்டரசனும், ஆதியின் …
நீண்ட காலம் ஆண்ட மன்னன் …
tamilandvedas.com › 2015/01/21
21 Jan 2015 — இவர்களில் யார் காவிரியில் அணை கட்டிய கரிகாலன் என்பது … ஏனெனில் சோழர்களின் தலை நகராக தஞ்சாவூர் உருவாநது மிகவும் …
கரிகாலச் சோழன் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கரிக…
30 Apr 2018 — கரிகாலன் என்ற சோழனின் மகளுக்கு பெரிய வலிப்பு நோய் வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் தம்மால் இயன்ற வைத்தியம் செய்து …
சோழர்கள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › சோழ…
15 Jul 2013 — சேரர்களுக்கு முன்பாக பாண்டியர் பெயரும் சோழர் பெயரும் … கரிகால் சோழன் பருந்து (கழுகு) வடிவ யாக குண்டம் அமைத்து …
தாம்ரலிப்தி | Tamil and Vedas
tamilandvedas.com › tag › தாம்…
22 Sep 2014 — இந்தியர்களுக்குப் பருவக் காற்றின் ரகசியம் தெரியும். … உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான …
tags- கரிகால் சோழன், ஏழு அடி, சப்த பதி , பாணினி

—–subham—-