“ஏழை படும்பாடு” நாவல் புகழ் பிரெஞ்சு ஆசிரியர் விக்டர் ஹ்யூகோ (Post.9828)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9828

Date uploaded in London –8 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டு புகழ்பெற்ற கதைகள் மூலம் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவல் ஆசிரியர் விக்டர் ஹ்யூகோ (VICTOR HUGO) ஆவார். அவருடைய கதை “லே மிஸராபிள் (Les Miserables) ஏழை படும்பாடு)” இன்றும் லண்டனில் நாடக அரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது 1985-ல் முதலில் மேடை ஏறியது  இவருடைய மற்றோரு நாவல் ஹஞ்ச்பேக் ஆப் நாத்ர்தாம்  (Hunchback of Notre Dame) .

மிஸராபிள் MISERABLE – பரிதாபத்துக்குரியவர்கள் (ஏழை படும்பாடு)

ஹன்ச் பேக் HUNCHBACK- கூனி, கூன்முதுகு , கூனன்

நாத்ர்தாம் NOTRE DAME CATHEDRAL, PARIS- புகழ்பெற்ற சர்ச் ; பாரிஸ் நகரில் உள்ளது.

இந்த இரண்டு நாவல்களுமே சமுதாயத்தில் வறுமை, இன  வேற்றுமை, அறியாமை , தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் படும் கஷ்டங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. பல டெலிவிஷன் தொடர்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்களாக இவை உருவானதால் மேலை உலகில் விக்டர் ஹ்யுகோவை அறியாதார் எவருமிலர்.

பிரான்சில் பேசன்சோன் என்ற ஊரில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை நெப்போலியனின் ராணுவத்தில் ஒரு அதிகாரி .அவருக்கு இவர் மூன்றா வது பிள்ளை.அவருடைய தாய் கல்வி கற்ற பெண்மணி. அவரே ஹ்யூகோவுக்கு கல்வி கற்பித்தார். இதனால் 14 வயதிலேயே விக்டர் ஹ் யூகோ பாடல் இயற்றினார். பிரான்ஸ்வா ரெனே சோட்டர்பிரான் (Francois Rene  Chateaubriand) என்ற பிரபல ராஜ தந்திரியும், எழுத்தாளரும் ஆனவர் இவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.அவருடைய ஊற்றுணர்ச்சியால் நாடகங்கள், கவிதைகள், நாவல்களை எழுதி அச்சிட்டார்.

இவர் அடில் போச்சர் என்பவரை மணந்தார் ஐந்து குழந்தைகளுக்குத் தந்தை ஆனார்.

29 வயதில் அவர் எழுதி வெளியிட்ட THE HUNCHBACK OF THE NOTREDAME நாத்ர்தாம் கூன்முதுகன் நாவல் இவரை பிரெஞ்சு மக்களுக்கு வெளிச்சம் போ ட்டுக் காட்டியது.

விக்டர் ஹ்யூகோவின் வாழ்வு துயரம் மிக்கது. அவருடைய திருமண நாளன்று, சகோதரனுக்கு பைத்தியம் பிடித்தது. அது தீராத பைத்தியம். இதற்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்வு அவரை வாழ்நாள் முழுதும் வாட்டிவதைத்தது .அதற்குப்பின்னர் அவர் அன்பைப் பொழிந்த மகள் , ஒரு விபத்தில் இறந்தாள் . இதனால் பத்து ஆண்டுகளுக்கு எழுதாமல் மௌனம் சாதித்தார் விக்டர் ஹ்யூகோ.

தனது பிற்கால வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு குடியரசு ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இரண்டாவது பிரெஞ்சு குடியரசு ஆட்சியை மூன்றாவது நெப்போலியன் 1851-ம் ஆண்டில் தூக்கி எறிந்தார். இதப்பினால் விக்டர் சானல் தீவுகளில் நாடுகடந்த வாழ்க்கை நடத்தினார். அப்போதுதான் புகழ்மிகு படைப்புகளை எழுதினார். தி லெஜண்ட் ஆப் தி செஞ்சசுரீஸ் THE LEGEND OF THE CENTURIES நூலை 57 வயதில் வெளியிட்டார். பின்னர் லே மிச்ராபிள் LES MISERABLES அச்சானது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் நிலவிய சமூக அநீதிகளை இதில் சித்தரித்தார்.

இவரது இரண்டு கீர்த்திமிக்க நாடகங்களும் இசை வடிவில் பாடல்களுடன் (Musicals) மேடை ஏறி இன்றும் உலகம் முழுதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வால் டிஸ்னி படைப்பும் இதில் அடக்கம்.

1870-ம் ஆண்டில் மூன்றாவது நெப்போலியன் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதற்கு பின்னர் விக்டர், பிரான்சுக்குத் திரும்பிவந்தார் . அவர் இறந்த நாளன்று 20 லட்சம் பேர் பாரிஸ் நகரில் நடந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பிறந்த தேதி – பிப்ரவரி 26, 1802

இறந்த தேதி – மே 22, 1885

வாழ்ந்த ஆண்டுகள் – 83

படைத்த இலக்கியங்கள் –

1826 – ODES AND BALLADS

1829- LES ORIENTALES

1830- HERNANI

1831 – THE HUNCHBACK OF NOTRE DAME

1859- THE LEGEND OF THE CENTURIES

1862 – LES MISERABLES

1869- BY ORDER OF THE KING

1872 – THE TERRIBLE YEAR

1874 – NINETY THREE

விக்டர் ஹ்யுகோ , ஆவி உலகத்தில் நம்பிக்கைகொண்டவர். இறந்தவர்களுடனும் பிற கிரகவாசிகளுடனும் பேசியதாகச் சொல்லிக்கொண்டவர் .

இவர் ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு ஓவியம் வரைவதில் ஈடுபட்டார். இவர் தேர்தலில் நின்று மக்கள் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் பத்திரிகை ஒன்றைத் துவக்கி அதில் தனது கவிதைகளையும் பிறரது படைப்புகளையும் வெளியிட்டார். இவரது எல்லா எழுத்துக்களிலும் மனித நேயமும், சமத்துவமும் தென்படும். இவரது பிரபல நாவல் ஆன “லே மிஸரபிள்” கதையை தமிழில் சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்தார். “ஏழைபடும் பாடு” என்னும் நூலாக அது வெளிவந்தது.

ஆயினும் விக்டர் ஹ்யூகோவின் பிரெஞ்சு மொழி ஒரிஜினலில் அது ஒரு பிராம்மாண்டமான நாவல். ஆறரை லட்சம் சொற்களுக்கு மேல் அதில் உள்ளன. சுமார் 2500 பக்கங்கள். நாற்பதுக்கும் மேலான நாடுகளில் இசை நாடகமாக (Musicals) இது நடைபெறுகிறது. அதை பார்த்து ரசித்தோரின் தொகை 2012ம் ஆண்டிலேயே ஆறு கோடி பேரைத் தாண்டிவிட்டது. இவருடைய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலமானவை. இவர் பிரான்ஸ் நாட்டின் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர் . இதனால் இவரது புஸ்தகங்களுக்கு போப் Pope தலைமையிலான கிறிஸ்தவர்கள் தடைவிதித்தனர். இவர் கிறிஸ்தவ மத ஊழல்களை எதிர்த்தார். தன்னை சுதந்திர சிந்தனையாளர் என்று சொல்லிக்கொண்டார்.

–SUBHAM-

tags- ஏழை படும்பாடு”,  பிரெஞ்சு ஆசிரியர்,  விக்டர் ஹ்யூகோ, நெப்போலியன், Victor Hugo