பயணம் பற்றி வேதத்தில் சுவையான செய்திகள்! (Post No. 4946)

பயணம் பற்றி வேதத்தில் சுவையான செய்திகள்! (Post No4946)

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan 

 

Date: 24 April 2018

 

Time uploaded in London –  21-04  (British Summer Time)

 

Post No. 4946

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

உலகிலேயே மிகவும் பழைய பயணச் செய்திகள் இந்து மத நூல்களில்தான் உள்ளன. எனது ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் முன்வைக்கிறேன்.

 

ராமன் கால் நடையாக உத்தர பிரதேசத்தில் இருந்து இலங்கை வரை சென்றதை நாம் அறிவோம்.

ராமனுக்குப் பிறகு, மஹாபாரதப் போரில் நடு நிலை வகித்த பலராமன் பாரத யாத்திரை (தீர்த்த யாத்திரை) என்றதை உலக மஹா இதிஹாசம் மஹாபாரதம் இயம்பும்.

 

தமிழில் சிலப்பதிகாரத்தில் தீர்த்த யாத்திரை பற்றி மிகத் தெளிவான விஷயங்கள் இருக்கின்றன.

 

ஆதிசங்கரர், போக்கு வரத்து வசதி இல்லாத காலத்தில் அடர்ந்த காடுகளையும் உயர்ந்த மலைகளையும் தாண்டி இமயம் வரை சென்று ஐந்து இடங்களில் மடங்கள் நிறுவியதையும் படித்திருப்பீர்கள்.

ராமனுஜர், குருநானக் போன்ற மஹான்கள் பாரதம் முழுதும் பயணம் செய்து புனிதத் தலங்களை தரிசித்தனர். புத்தர் வட இந்தியா முழுதும் பிரசாரம் செய்தார். மாமன்னன் அசோகனோ கப்பல் மூலம் தன் மகனையும் மகளையும் இலங்கை முதலிய இடங்களுக்கு அனுப்பி தர்மப் பிரசாரம் செய்தான்.

அவ்வையார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலியோர் கைலாஷ் வரை சென்றனர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆயினும் இவைகளுக்கு எல்லாம் முன்னர் தோன்றிய ஐதரேய பிராஹ்மணத்தில் உள்ள செய்தி மிகவும் சுவையானது.

ஹரிசந்திரன் கதையை எல்லோரும் அறிவர்; உண்மையே பேசி, மிகவும் இக்கட்டுள்ளாகி, இறுதியில் உலகப் புகழ்பெற்ற சூரியகுல மன்னன். இக்க்ஷ்வாகு சூரியகுல முதல் மன்னன். அவ்வரிசையில் 28ஆவது மன்னன் ஹரிச்சந்திரன். அவனுடைய மகன் ரோஹிதன்  காட்டுக்குள் ஆறு ஆண்டுகள் இருந்தான். அவன் ஒவ்வொரு முறை கிராமத்துக்குத் திரும்பி வந்த போதும் இந்திரன் பிராமணன் வடிவில் வந்து அவனைப் பயணம் செய்து கொண்டே இரு, அதனால் பல நன்மைகள் விளையும் என்கிறான்.

 

உலகின் மிகப்பழைய பிரயாணப் பொன்மொழிகள் இவைகள்தாம். இதோ அந்தப் பயணப் பொன்மொழிகள்:-

இந்து சந்யாசிகள் ஓரிடத்தில் ஓரிரவுக்கு மேல் தங்கக்கூடாது என்றும் விதி உள்ளது. ம ழைக்காலத்தில் மட்டும், ஒரே இடத்தில் தங்கி நான்கு மாத (சாதுர்மாஸ்ய வ்ரதம்) நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்

 

ரோஹித, காட்டிற்குச் சென்றான். ஓராண்டுக்குப் பின்னர் கிராமத்துக்குத் திரும்பி வந்தான்; அங்கு இந்திரன், பிராமணன் உருவத்தில் சென்றான். அவனிடம் சொன்னான்:” பயணம் செய்யாதவனுக்கு இன்பம் இல்லை, ரோஹித! இதை நாம் அறிவோம். நாம் மனித சமுதாயத்தில் வாழ்கையில், நல்லவனும் கூட கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. இதை மனிதர்களே இல்லாத இடங்களுக்குப் பயணம் செய்தால் தவிர்க்க முடியும்; பயணம் செய்வோரின் நண்பன் இந்திரன்; ஆகையால் அலைந்துகொண்டே இரு.

-ஐதரேய பிராஹ்மணம் 7-3-15

மீண்டும் ஓராண்டுக்குப் பின்னர் ரோஹித, கிராமத்து குத் திரும்பி வந்தான்; மீண்டும் இந்திரன் அவனிடம் சென்று சொன்னான்: “அலைந்து திரியும் ஒருவனுடைய கால்கள், மலருக்குச் சமமானவை. அவனுடைய ஆன்மா வளர்ந்து பழங்களை அனுபவிக்கும். மேலும் ஒருவன் பிரயாணம் செய்யும்போது ஏற்படும் துன்பங்களால் அவனது பாவங்கள் நஸித்துப் போகும்; ஆகையால் அலைந்து கொண்டே இரு.

 

ஒரு பிராமணன் இப்படிச் சொல்வதைக் கேட்டு அவனும் காட்டுக்குள் அலைந்தான்.

மீண்டும் ரோஹித, கிராமத்துக்கு வந்த போது, மாறு வேடத்தில் சென்ற இந்திரன் சொன்னான்:

யார் ஒருவன் உடகார்ந்து இருக்கிறானோ அவனது அதிர்ஷ்டமும் உட்கார்ந்து விடும்

அவன் எழுந்திருந்தால் அதிர்ஷ்டமும் எழுந்து நிற்கும்;

அவன் தூங்கினால் அதிர்ஷ்டமும் தூங்கிவிடும்;

அவன் நகர்ந்தால், அதுவும் நகரும்; ஆகவே அலைந்து திரி.

 

இதைத் தமிழில் உள்ள பழமொழிகளுடன் ஒப்பிடலாம்:

குந்தித் தின்றால் குன்றும் (அதிக அளவுள்ள செல்வமும்) கரையும்;

திரை கடலோடி திரவியம் தேடு.

 

உழைப்பவனுக்கு செல்வம் கிடைக்கும், தங்கும் என்பதே இதன் பொருள்

இப்படிச் சொன்னவுடன் ரோஹித காட்டுக்குச் சென்று விட்டு ஓராண்டுக்குப் பின்னர் திரும்பி வந்தான்.

 

கலி (யுகம்) கீழே இருக்கிறது; த்வாபர யுகம் மேலே சுற்றிக் கொண்டிருக்கிறது; த்ரேதா (யுகம்) எழுந்து நிற்கிறது, கிருத யுகம் நடந்து செல்கிறது; ஆகவே, ரோஹித நீயும் நட.

 

இதை இப்படியும் சொல்லலாம்: தூங்கும் மனிதன் கலியுகம் போன்றவன்;

விழித்துக் கொள்பவன் த்வாபர யுகம் போன்றவன்;

எழுந்து நிற்பவன் த்ரேதா யுகம் போன்றவன்;

பயணம் செய்பவன் கிருதயுகம் போன்றவன்.

 

இதைக் கேட்டு ரோஹிதன் மேலும் ஓராண்டு காட்டுக்குச் சென்றான்.

 

சூதாட்டத்திலும் காயுருட்டும் போது நான்கு என்பது கிருத யுகத்தைக் குறிக்கும்; இதுதான் மிகவும் அதிக மதிப்பு உடையது.

அவன் திரும்பி கிராமத்துக்கு வந்தபோது, மாறுவேடம் தரித்த இந்திரன் சொன்னான்.

யார் ஒருவன் பயணம் செய்கிறானோ அவனுக்கு தேனும், அத்திப் பழமும் கிடை க்கும். சூரியனின் அழகைப் பார். தினமும் அலைந்து திரிந்தும் அவன் பொலிவுதான் குறைந்ததா? ஆகையால் தொடர்ந்து நட.

 

மேலும் சில மேற்கோள்கள்

வெளிநாடு செல்லாமல், ஒருவனுக்குப் புகழ் கிட்டாது; அறிவோ சாதனைகளோ வராது – கதா கோசம்

 

நமக்கும் தாய், தந்தை,  சஹோதரன்,நண்பன் ஆகியோருக்கும் உள்ள தொடர்பு, பந்தம் எல்லாம் அன்ன சத்திரத்தில் சந்திக்கும் பயணிகளின் உறவைப் போன்றது தாந் மஹா பாரதம், சாந்தி பர்வம்.

 

 

பயணத்தின் முக்கியத்துவத்தை உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் துணை நூலான ஐதரேய பிராஹ்மணம் வலியுறுத்துவது போல வேறு எங்கும் காண முடியாது!

 

பிராமணர்களுக்கும் பெண்களுக்கும் தடை

 

பிராமணர்கள் கடல் கடந்து வெளி நாடு செல்லக்கூடாது என்று மநுஸ்ம்ருதி தடை போடுகிறது.

 

பெண்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்று தொல்காப்பியம் தடை போடுகிறது. (இவை இரண்டும் பற்றி முன்னரே விரிவான கட்டுரை த, ந்துள்ளேன்)

 

–சுபம்

தங்கக் கம்பளம், வெள்ளி ரதம்! சுனஸ்சேபன் கதை சொன்னால்! (Post No.4258)

Written by London Swaminathan

 

Date: 30 September 2017

 

Time uploaded in London- 8-06 am

 

 

Post No. 4258

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

தங்கக் கம்பளம், வெள்ளி ரதம்! சுனஸ்சேபன் கதை சொன்னால்! (Post No.4258)

சுனஸ்சேபன் கதையைக் கேட்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும்; அதைச் சொன்னவர்களுக்கு மட்டக்குதிரை பூட்டிய வெள்ளி ரதத்தை பரிசாகக் கொடுக்க வேண்டும்; அதைச் சொல்லும் பிராமணர்களுக்கு உட்கார தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட கம்பளம் தரவேண்டும் — இப்படியெல்லாம் சொல்கிறது 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமண நூல்கள்.

இது மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்கள் தலையில் போட்ட வெடிகுண்டு ஆகும்; ஏனெனில் இப்படி எழுதப்பட்ட பிராமண நூல்களை, “சுத்தக் குப்பை, பரிகசிக்கத்தக்கது, சிறு பிள்ளைத் தனமானது, ஒரே உளறல்”– என்று எழுதி வைத்தனர்.  இதைப் பாடிய ஆரியர்கள் எங்கள் ஜெர்மானியருக்கும் மூதாதையர்; அவர்கள் எங்கள் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவில் குடியேறினர்; நாடோடிகள்; மாடு மேய்க்கும் பயல்கள்; சொல்லப்போனால் வேதத்தில் முக்கால் வாசி சிறுபிள்ளைத் தனமான துதிகள்தான் — என்றெல்லாம் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கூலி வாங்கிய மாக்ஸ்முல்லர் உளறிக்கொட்டிக் கிளறி மூடினார்.

 

 

அவர்கள் கைகளில் பிராமண நூல்கள் சிக்கியவுடன் ஒரே ஆனந்தம்; ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு வெள்ளைக்காரப்          ரப் பயல்கள் மொழிபெயர்க்கத் துவங்கினார்கள். ஒரே சிரிப்பு; அட இந்த உளறல்களை வைத்துக் கொண்டு, இந்துமத்துக்கு சமாதி கட்டிவிடுவோம் என்று எழுத்தில் எழுதினார்கள்; பகிரங்கமாகக் கொக்கரித்தார்கள்; தேசத் துரோஹ, இந்து விரோத மார்கசீய  வாந்திகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எல்லாப் புத்தகங்களிலும் அதை எழுதி மனம் மகிழ்ந்தார்கள்; உளம் குளிர்ந்தார்கள். ஆனால் இன்று  துர்கா பூஜைக்கும் கணேஷ் சதுர்த்திக்கும் வரும் கூட்டத்தைப் பார்த்து தலையில் துண்டு போட்டு உட்கார்ந்து விட்டார்கள்.

 

வேதங்கள் நான்கு. அவைகளில் சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று நான்கு பகுதிகள் உண்டு.

 

உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக்வேதம்; அது கவிதைத் தொகுப்பு. அதனுடன் எழுந்த உரைநடை நூல் ஐதரேய பிராமணம்; இது யஜுர்வேத பிராமணமாகிய சதபத பிராமணத்துக்கும் முந்தையது என்பது வெளிநாட்டர் கணிப்பு; அதாவது கிமு 1000 ஆண்டில் எழுந்தவை.

பிராமண நூல்களில் அடிக்கடி வரும் ஒரு மரபுச் சொற்றொடர் “கடவுளருக்கு மறைமொழிகளே பிடிக்கும்”; அதாவது எதையும் ரகசிய மொழியில் சங்கேத மொழியில் சொல்லுவோம் என்று ஆடிப்பாடிக் கூத்தாடினர் வேதகால ரிஷிக்கள்; இது தெரிந்தும் வெள்ளைக்காரப் பயல்கள் நேரடியாக இலக்கிய அர்த்தம் கற்பித்து சிரி சிரி என்று சிரித்தனர்.

 

ஆனால் பிராமண நூல்களில் சொல்லப்படாத விஷயமே இல்லை. மேலே சொன்ன தங்க கம்பளம், வெள்ளி ரதம் மந்திரமே நமக்குக் காட்டுகிறது அது ஒரு பணக்கார சமுதாயம். மேலும் பொருளாதர ‘சூப்பர் பவர்’ என்று. இவர்களைப் பார்த்துதான் மாடு மேய்க்கும் நாடோடிகள் என்று பரிகசித்தனர் ஆங்கிலம் தெரிந்த அறிஞர்களும் அசிங்கங்களும்!

 

ஐதரேய பிராமணத்தில் மிகப்பெரிய கதை சுனஸ்சேபன் கதை; இது மனிதனை யாகத் தீயில் காவு கொடுக்கும் கதை. இந்துக்களைக் காட்டுமிராண்டிகள் என்று காட்ட இது ஒன்றே போதுமே என்று கருதிய மாக்ஸ்முல்லர்கள் மண்டையில் அடிவிழுந்தது போல அதையே பிராமணர்கள் புனித காவியமாக்கி எல்லோரும் இதைப் படிக்க வேண்டும் என்று விதித்தனர். கால்டுவெல்களின் ‘பாச்சா’ பலிக்காமல் போனது. ஏனெனில் மனிதனைக் காவு கொடுக்கும் யாக யக்ஞங்கள் எதுவுமே நடக்க வில்லை. அப்படி நடக்கவிருந்த சுனஸ்சேபனும் உயிர் பிழைத்தான். மேலும் அவனுக்கு முந்தி 100 அரசர்கள் இருந்தனர். அவர்கள் காலத்திலோ மனித பலி கொடுக்கும் புருஷமேத யக்ஞம் நடைபெற்றதாக சான்று இல்லை. அது மட்டுமா? புரட்சி வீரன், வேதகால புரட்சித் தலைவர் விசுவாமித்திரர் அந்த சுனஸ்சேபனைக் காப்பாற்றிய கதை பிரசித்தமாகி புனிதம் பெற்றது.

புருஷமேதம் எனப்படும் யாகத்தில் 179 ஆட்களைத் தீயில் பலிகொடுக்க வேண்டும்; முதல் பலி பிராமணன்! அந்தப் பட்டியலை வெளியிட்டால் வேத கால மக்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள், உழைப்பாளிகள், தொழிலாளிகள், நாகரீக முதிர்ச்சி பெற்ற சமுதாயம் என்பதும் தெரிந்து விடும்; ஏனெனில் அதில் நட்சத்திர தர்ஷக் எனப்படும் வானவியல் அறிஞர், கொல்லன், பொற்கொல்லன், தேர் செய்யும் தச்சன், போர் வீரன், வணிகன் என்று பெரிய பட்டியல் உள்ளது இப்படி 179 வகைத் தொழிலாளிகள் உள்ள சமுதாயத்தை நாடோடிகள், மாடு மேய்க்கும் இடையர்கள் என்று சொன்ன ஆங்கில எழுத்தர்கள் முகத்தில் கரிபூசியது போலப் போனது. நிற்க.

 

 

யார் அந்த சுனஸ்சேபன்? அவன் கதை என்ன?

இது ராமாயண, மஹாபரத புராணங்களில் சிறிது மாறுபட்டு எழுதப்பட்டாலும் ஒரிஜினல் (Original) என்று கருதப்படும் ஐதரேய பிராமணக் கதையைச் சுருக்கமாகக் காண்போம்.

 

ஹரிச்சந்திர மஹா ராஜாவை எல்லோருக்கும் தெரியும்; உண்மை விளம்பி; சத்திய சீலன்; அவருக்கு பிள்ளையே இல்லை. ‘கடவுளே! எனக்கு மட்டும் குழந்தை பிறக்கட்டும்; முதல் குழந்தையை வருண பகவானே! உனக்கே கொடுத்து விடுகிறேன்’ – என்று சத்தியம் செய்தார்.

 

இப்படி தலைப் பிள்ளையை கடவுளுக்குப் பலி கொடுக்கும் வழக்கம் எல்லாக் கலாசாரங்களிலும் இருந்ததை எல்லா மத நூல்களும் செப்பும்; மேலும் பஹ்ரைன் போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் சமாதி இருப்பது ஆராய்ச்சியாளருக்கு புதிராகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. (இது பற்றிய விஷயங்களை பஹ்ரைன் அதிசயங்கள் என்ற எனது கட்டுரையில் காண்க)

 

 

ஹரிசந்திரனுக்குக் குழந்தையும் பிறந்தது; ரோஹிதன் என்று நாமகரணம் செய்தார்; பிள்ளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. ‘மகனே உன்னை நான் ‘பிராமிஸ்’ (promise) செய்தபடி புருஷமேத யக்ஞம் வளர்த்து ஆகுதி தரவேண்டும்; ஆகையால் தயாராக இரு என்றார். பையன் அதைகேட்டு காட்டிற்கு ஓடிப்போய் ஆறு ஆண்டுகள் மறைந்திருந்தான். அப்போது அந்தப் பக்கம் ஒரு ஏழைப் பிராமணர் வந்தார். அவர் பெயர் அஜீகர்த்தா; அவருக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர்தான் சுனஸ்சேபன் (அவன் பெயர் நாய் வால்= சுனஸ்சேபன்)

 

இதோ பார் ஒரு ‘டீல்’ (Deal) போடுவோம்; ரோஹிதா, நீ போய்விடு சுனஸ்சேபனை யாக கம்பத்தில் கட்டுகிறேன்; நூறு பசுக்கள் கொடு; யாகத்துக்கு நானே அழைத்துப் போகிறேன்; அப்போது இன்னும் 100 பசு கொடு; நானே தீயில் ஆகுதியும் தருகிறேன்; இன்னும் 100 பசு கொடு; சரிதானே? என்றார். ரோஹிதனுக்கும் சந்தோஷம்; அப்படியே ஆகட்டும் என்றான்.

இவர்களின் கெட்ட காலமோ, சுனஸ்சேபனின் நல்ல காலமோ அந்தப் பக்கம் ரிஷிகளின் புரட்சித் தலைவர் விசுவாமித்திரர் வந்தார். திரிசங்கு மஹாராஜனை உடம்போடு சொர்கத்துக்கு அனுப்புவேன் என்று சொல்லி தோற்றுப் போனார். ஹரிசந்திரனை பொய் சொல்ல வைப்பேன் என்று சொல்லி தோற்றுப் போனார்; மண், பெண், அஹங்காரம் என்பதில் மூன்று முறை சிக்கி தவ வலிமை எல்லாம் இழந்து பிராமணன் ஆக முடியாமல் தவித்தார். இறுதியில் எல்லாவற்றையும் கடந்து வசிட்டர் வாயினால் பிராமணன் (பிரம்ம ரிஷி) என்று பட்டம் வாங்கினார் புரட்சித் தலவர்– மஹாராஜன் —விசுவாமித்திரர்.

 

அவர் சுனஸ்சேபன், ஒரு கம்பத்தில் கட்டி இருப்பதைக் கண்டார். அட ஹரிச்சந்திரனை மடக்க, கிடுக்கிப் பிடி போட நல்ல சந்தர்ப்பம் என்று கருதி ‘’டேய் பையா! நீ இன்று முதல் என் மகனடா; உன் பெயர் நாய் வால் அல்ல. உன் பெயர் தேவ ராதன் நீ வேதக் கவிகளைப் பாடலாம்; கண்டுபிடிக்கலாம் (சுனஸ்சேபன் பெயரில் பல துதிகள் ரிக் வேதத்தில் உளது) என்றார் .கடைசியில் அந்த யாகம்  நடக்கவில்லை.

 

ஆக உப்புச் சப்பு இல்லாமல் கதை முடிந்தது.

 

வேத கால ரிஷிகள் 100, 1000, 100,000 என்று டெஸிமல் சிஸ்டத்தில்தான் பேசுவர். மிகப்பெரிய கணிதப் புலிகள்; குதிரை பசுமாடு ஆகியவற்றை கண்டு பிடித்து உலகை நாகரீக மயமாக்கினர். எகிப்து மீது படை எடுத்து குதிரை– யானைப் படை பற்றிச் சொல்லிக் கொடுத்தனர். கி.மு 1380-ல் துருக்கியில் குதிரைப் பயிற்சி பள்ளிக்கூடம் நடத்தி சம்ஸ்கிருத மொழிமூலம் அவர்களுக்குப் பாடம் நடத்திய புத்தகம் கிடைத்து இருக்கிறது. இப்பேற்பட்ட நாகரீகவாதிகளைப் பார்த்து தங்கதில் புழங்கிய பணக்காரர்களைப் பார்த்து சிலதுகள் ‘நாடோடிகள்’, ‘மாடு மேய்க்கும் அநாகரீகக் கும்பல்’ என்றெல்லாம் ‘சிலதுகள்’ பிதற்றியது— இன்று நாம் அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கலாம்.

 

TAGS:–சுனஸ்சேபன், ஐதரேய பிராமணம், புருஷமேதம், மனித பலி

–SUBHAM–