பிராமணங்களில் உள்ள சுவையான கதைகள் (Post No.4347)

Written by London Swaminathan

 

Date: 29 October 2017

 

Time uploaded in London- 6-51 am

 

 

Post No. 4347

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு. சம்ஹிதை எனப்படும் துதிகள், தோத்திரங்கள் அடங்கியது முதல் பகுதி. இரண்டாவது பிராமணங்கள்; மூன்றாவது ஆரண்யகங்கள்; நாலாவது உபநிஷதங்கள். பொதுவாக கர்ம காண்டம், ஞான காண்டம் என்றும் பிரித்துப் பேசுவர்.

 

இந்த இலக்கியம் தோன்றிய பின்னரே உலகில் கிரேக்கம், லத்தீன், தமிழ் மொழி இலக்கியங்கள் தோன்றின. எபிரேய (ஹீப்ரூ) மொழியில் பைபிளின் சில பகுதிகள், சீன மொழியில் சில துண்டு இலக்கியங்கள் மட்டுமே அப்போது இருந்தன. மற்ற பழைய மொழிகள் இன்று வழக்கில் இல்லை.

 

பிராமணங்களிலும், வேத சம்ஹிதைகளிலும் மறை பொருளில்– ரஹசிய பாஷையில் — கவி மழை பொழிவர்- அல்லது உரையாற்றுவர்- இது புரியாத வெள்ளைத்தோல் அரை வேக்காடுகள் இதை சிறு ‘பிள்ளைத் தனமான பேச்சு’, ‘அபத்தம்’ என்றெல்லாம் எழுதிவைத்தனர். ஏனெனில் மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் இந்து சமயத்தைக் குறைகூற இவைகளைக் கற்றனரேயன்றி புகழ்பாட அல்ல. மேலும் நாங்கள் வெளிநாட்டிலுருந்து இன்று வந்தோம்; ஆரியர்களும், திராவிடர்களும் வெளிநாட்டிலிருந்து அன்று வந்தனர் என்று சொல்லி, அவர்கள் ஆக்ரமிப்புக்கு நியாயம் கற்பித்தனர். ஆனால் இப்போதைய ஆராய்ச்சிகள் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் இருந்ததையும் அவர்கள் நாகரீகத்தின் உச்ச நிலையில் இருந்ததையும் காட்டுகின்றன.

 

பிராமணங்கள் என்ற சொல் மிகவும் குழப்பத்தை விளைவிக்கும் சொல். குறிப்பாக இதை ஆங்கிலத்தில் எழுதும் போது ‘பிரம்மா’ என்னும் கடவுளா, ‘பிரம்மன்’ எனப்படும் இறைவன் என்ற பொதுவான சொல்லா, பிராமணங்கள் எனப்படும் வேதப் பகுதியா அல்லது பிராமணர்கள் எனப்படும் ஜாதியா என்று 4 விதக் குழப்பம் வரும். நாம் இங்கே சொல்ல வருவது வேத கால இலக்கியமான பிராமணங்கள் எனப்படும் பகுதியே..

“ஐயா, எனக்கு இதெல்லாம் புரியாது; மேலும் சம்ஸ்கிருதமும் தெரியாது; அது மட்டுமல்ல; சம்ஸ்கிருதத்தில் உள்ள பழங்கால இலக்கியம், உலகத்திலுள்ள எல்லா பழைய இலக்கியங்களையும் சேர்த்து வைத்தாலும் அதை விடப் பெரியது; ஆகையால் நீங்கள் சொல்லுவது உண்மை என்று நான் எப்படி அறிவது? என்று கேட்பீர்களானால், நான் ஒன்று மட்டும் சொல்லுவேன். இதிலுள்ள விசயங்களின் அட்டவணையை மட்டும் பாருங்கள்; உலகிலேயே மிகப் பெரிய எண்கள், மொழி ஆராய்ச்சி, 27 நட்சத்திரங்களின் பட்டியல், வானத்தில் கிருத்திகா ரோஹிணி முதலிய நட்சத்திரங்களின் நிலைகள், பருவ காலங்கள், மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகள்—- என்று பெரிய பட்டியல் வரும் இதிலுள்ள மலைகள், காடுகள், ஆறுகள், நிலப்பரப்புகள், மன்னர்களின், ரிஷிகளின் பெயர்கள் முதலியவற் றை எடுத்தால் இன்னும் புரியும்; மன்னரின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் வேண்டும் என்று பேசும்; இவை எல்லாம் சிறுபிள்ளத் தனமானவையா? அல்ல, அல்லவே அல்ல. அக்னிக்கு 7, பிரஜாபதிக்கு 17, இந்திரனுக்கு 100 என்று மர்மமான எண்களையும் கொடுக்கும். ரிக் வேதத்தின் கவிஞர்களின் பெயர்களே 450 பேர்! உலகில் இது போல எங்கும் காண முடியாது. தமிழில் சங்க காலத்தில் 450 புலவர் பட்டியலைப் பார்க்க, நாம் வேதங்கள் தோன்றியதற்குப் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆக வேத கால நாகரீகம் உயர்ந்த நிலயில் இருந்தது என்பதும், அவர்கள் உலகம் முழுதும் ஆரியத்தை (பண்பாட்டினை) பரப்பினர் என்பதும் வெள்ளிடை மலையென விளங்கும்.

 

ரிக் வேதத்தில் நான்கு ஜாதிகளும் தொழில் அடிப்படையிலான சொற்கள் என்றும் (10-90) அவர்கள் இறைவனின் அங்கங்கள் என்றும் துதி உள்ளது ஆனால் வெள்ளைக்கார பாதிரிகளும், திராவிட அசிங்கங்களும் சூத்திரர் என்பவர் திராவிடர் என்று பொய்யுரை உரைத்தனர். அசுரர்களும் தேவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று பிராமண நூல்கள் பகர்கின்றன. ஆனால் வெள்ளைத் தோல்களும் மார்கஸீய வாந்திகளும் நேர்மாறாக பொய்யுரை பகன்றனர். நிற்க. ஓரிரு கதைகளைப் பார்ப்போம்.

பிராமண நூல்களில் பெரியது சதபத பிராமணம்; அதில் வரும் செய்தி:

“மனம் என்பது ஒரு பெரிய சமுத்திரம்;  அந்தப் பெருங்கடலில் இருந்து தேவர்கள், வாக்கு (சொல்) என்னும் மண்வெட்டியைக் கொண்டு, மூன்று வேதங்களைத் தோண்டி எடுத்தனர். ஆகையால்தான் இந்தத் துதியை இங்கே சொல்கிறோம் (7-5-2-52)

 

இது சிறுபிள்ளைகளுக்கும் புரியும் உவமை; சொல்லினால் ஆனது வேதம்; அதுவும் தேவர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் மனதை ஒருமுகப்படுத்திய போது வானில் மிதந்த உண்மைகளைக் கேட்டனர். அதை நமக்கும் மொழிந்தனர்.

 

நல்லோரிடையே ஒற்றுமை வேண்டும் என்ற ஒரு கதை சதபத பிராமணத்திலும்,  ஐதரேய பிராமணத்திலும் உளது.

தேவர்களும் அசுரகளும் போட்டி போட்டனர்; தேவர்களுக்குள் போட்டி, பொறாமை மிகுந்திருந்தது. யார் பெரியவர்? நீயா நானா? என்று நினைத்ததால் தனித்தனி கூட்டணி அமைத்தனர்; அதுவும் ஐந்து கூட்டணிகள்! அக்னி தேவன் வசுக்களுடன் சென்றான்; சோம தேவன் ருத்ரர்களுடன் சென்றான்; இந்திரன் மருத்துகளுடன் போனான்; வருணன் ஆதித்யர்களுடன் சேர்ந்தான்; பிருஹஸ்பதியோ, விஸ்வே தேவர்களுடன் கூட்டணி போட்டான். பின்னர் அவர்கள் மனதில் ஒரு சிந்தனை மலர்ந்தது. அசுரர்கள் நம்மை வீழ்த்திவிடுவர்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு– என்று கருதி நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக (ஓருடல்) இணைவோம் என்றனர். மாபெரும் கூட்டணி!!

நம்மில் யாராவது ஒருவர் மற்றொருவரை எதிர்த்தால் அவர், இந்த அமைப்பிலிருந்து வெளியே தள்ளப்படுவார். நாம் இன்று ஒரு சத்தியப் பிரமாணத்தால் (உறுதிமொழி) கட்டப்பட்டுள்ளோம்; யாராவது இதை மீறினால்– இந்த ஒரே உடலைக் காயப்படுத்தினால், அவருக்கு அழிவு வரும்! எந்த மனிதன் இந்த ஓருடல் உடன்படிக்கையில் சேருகிறானோ அவன் வெற்றி பெறுவான்; எதிரிகளை ஒழிப்பான்.”

 

இந்த உடன்படிக்கைக்கு “தானனப்த்ரம்” என்று பிராமணங்கள் பெயர் கொடுத்துள்ளன; இதன் பொருள் “ஓர் உடல் (இணைந்த உடல்)”.

இன்றைய அரசியல் கட்சி ஒப்பந்தங்கள், ‘நாட்டோ’ போன்ற ராணுவக் கூட்டு ஒப்பந்தங்களிலும் இதே வாசகங்களைக் காணலாம். வெள்ளைக்காரர்கள் — கொள்ளைக்காரர்கள் — கணக்குப்படியே இந்த பிராமணங்கள் கி.மு 1000ல் தோன்றின. நமது கணக்குப் படியோ அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. எது எப்படியாகிலும் இதை ‘சிறுபிள்ளைத் தனமான’ இலக்கியம் என்று சொல்லும் கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் மெகாலேக்களையும் ‘அடு மடையர்கள்’, ‘மடத் தடியர்கள்’ என்று சொல்லுவது பொருத்தம்தானே?

மன்னர்களின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று சதபத பிராமணத்தில் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. மன்னன் பிரஜாபதி (பிரம்மா); பிரஜாபதிக்கும் எண் 17; ஆகையால் 17 வகை நீர், மன்னனை அபிஷேகம் செய்யத் தேவை; அப்படிச் செய்தால் 17 வகை சக்தி அவன் உடலில் ஏறும் என்றும் பிராமணம் (for more details, please see my English version of this article) சொல்லும்.

 

இந்துக்கள் மத்திய ஆசியாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் வந்து குடி ஏறியதாகப் பிதற்றும் பேதைகளுக்கு அறிவிலிகளுக்குச் சரியான பாடம் கற்பிப்பது வேத கால இலக்கியம்; இறப்பு முதல் பிறப்பு வரை சமயச் சடங்குகளில் தண்ணீரைப் பயன்படுத்துவது இந்துக்கள் மட்டுமே; ரிக் வேதத்தில் தண்ணீரைப் போற்றி  வரும் மந்திரங்களைப் பிராமணர்கள் இன்றும் தினசரி சந்தியாவந்தனத்தில் சொல்லுகின்றனர். தண்ணீரைக் கொது சந்தியா வந்தனம் செய்கின்றனர். ஆகையால் இவை எல்லாம் கால்டுவெல்கள், மாக்ஸ்முல்லர்கள் தலையில் விழும் இடிகள் என்று சொன்னால் அதை மறுப்பாரிலை!!!

TAGS:–பிராமணங்கள், கதைகள், சதபத, ஐதரேய, ஒற்றுமை, கூட்டணி

— சுபம், சுபம் —