ஐயர் குடுமி அவிழ்ந்தது ஏன்? (Post No.6770)

Written by  London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 13 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  7-57 am

Post No. 6770

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாணக்கியன் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. பழங்கால பாரதத்தில் மூன்று ஹீரோக்கள் (Three Heroes) இருந்தனர். அவர்கள் – 1.விக்ரமாதித்தன், 2.உதயணன், 3.சாணக்கியன் ஆவர். இவர்கள் மூவரும் சரித்திர புருஷர்கள். கட்டுக்கதை, கற்பனை கதாபத்திரங்கள் அல்ல. இவர்களில், 2000 ஆண்டுக்கு முன் எழுந்த ஸம்ஸ்க்ருத நாடகங்களில் சாணக்கியன் பற்றி பல கதைகள் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் அவை காணப்படும். ஆயினும் அவை அனைத்திலும் இழையோடும் கருத்து ஒன்றுதான்.

நவ நந்தர்கள் என்று அழைக்கப்பட்ட 9 மன்னர்கள், இப்போது தமிழ்நாட்டிலுள்ள திராவிடர்களைப் போல ஒரு பக்கம் பூஜையும் மறு பக்கம் பிராமண எதிர்ப்பும் காட்டி வந்தனர். அவர்கள் க்ஷத்திரியர்கள் அல்ல. சாணக்கியனோ கறுப்பு நிற பார்ப்பான்; காக்கையுடன் அழகிலும் வண்ணத்திலும் போட்டி போடுவார்!!

அவர் ஒரு முறை பிராஹ்மண போஜனத்தில் பந்தியில் அமர்ந்தார். அவரை நந்தர்கள் கேலியும் கிண்டலும் செய்து பந்தியிலிருந்து தர தர என்று வெளியே இழுத்து அவமானப் படுத்தினர்.

திரவுபதி கூந்தலை அவிழ்த்த்து கௌரவர்களை அழிக்க சபதம் செய்தது போல அவரும் குடுமியை அவிழ்த்தார். இந்த நந்த வம்சத்தைப் பூண்டோடு அழிக்கும் வரை ஓய மாட்டேன் என்று சபதம் செய்து, முரா என்ற மயில் வளர்க்கும் கீழ் ஜாதியைச் சேர்ந்த மௌர்ய சந்திர குப்தனுக்குப் படைப் பயிற்சி அளித்தார். அவன் தலைமையில் மகத்தான மௌர்ய சாம்ராஜ்யம் உருவானது. நந்தர்களும் பிராமண எதிர்ப்பும் அடியோடு ஒழிந்தது. மௌர்ய சந்திர குப்தனின் மஹத்தான படைபலத்தை அறிந்த அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குள் நுழையாமல், காஷ்மீர் எல்லையுடன் திரும்பிப் போனார்.

கௌடில்யம் எனும் அர்த்த சாஸ்திரத்தை — உலகின் முதல் பொருளாதார புஸ்தகத்தை — எழுதி புகழும் பெற்றார். அவர் பெயரில் பல நீதி சாஸ்திர நூல்களும் உண்டு.

அத்தனையும் சொல்லும் message

மெஸ்ஸேஜ் ஒன்றுதான்  – முள்ளை முள்ளால் எடுக்கலாம்; வைரத்தை வைரத்தால் அறுக்கலாம். ஒரு தலித் ஜாதி ஆளைக் கொண்டே அதர்மத்தை அழிக்கலாம்.

வாழ்க ‘தலித்’ சந்திர குப்தன்  ! வளர்க பார்ப்பான் சாணக்கியன் புகழ்!!

இத்துடன் இணைத்துள்ள பகுதியில் ஐயர் குடுமியை அவிழ்த்த சுவையான சம்பவம் உளது. படித்து மகிழ்க.

–subham–