பேய்களை விரட்ட வெண் கடுகு!!

Mustard-Seed

வெண் கடுகு (ஐயவி)ம், சாதாரணக் கடுகும்

Research Article No.1745; Date:- 24  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-25

(வெண்கடுகு =  ஐயவி = பஜ = சினாபிஸ் ஆல்பா அல்லது பிராஸ்ஸிகா ஆல்பா = ஒயிட் மஸ்டர்ட்)

“ஆ சேது ஹிமாசல பர்யந்தம்” – என்று சம்ஸ்கிருத மொழியில் ஒரு மரபுச் சொற்றொடர் உண்டு. இமயம் முதல் குமரி வரை – என்பது இதன் பொருளாம். சேது என்று குமரி முனைக்கும் ஒரு பெயர் முன்பொரு காலத்தில் இருந்தது. இதை அங்குள்ள பிராமணர்கள் தங்களுடைய பூஜை புனஸ்கார சங்கல்ப மந்திரங்களில் சொல்லி வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் நிலவியதை நாம் பல கட்டுரைகளில் கண்டோம். இப்பொழுது எனது ஆராய்ச்சியில் மேலும் ஒரு சான்று கிடைத்துளது. அது என்ன புதிய சான்று?

பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.

white mustard

வேதத்தில் காணப்படும் கற்புக்கரசி அருந்ததி, புனித இமய மலை, புனித கங்கை நதி, மான்கள் விளையாடும் இமய மலையில் வாழும் முனிவர்கள், ராஜசூய யக்ஞம், பருந்து வடிவ ஹோம குண்டம், ஏழு அடி நடந்து சென்று விருந்தினர்களை வழி அனுப்புதல், ஆறு வகைப் பருவங்கள், நால் வகைப் படைகள், அறம்-பொருள்-இன்பம் (தர்மார்த்த காம), எண்வகைத் திருமணங்கள், நான் மறைகள், கொடிகள், வெண் கொற்றக் குடை, இந்திரன் -வருணன் – சிவன் – விஷ்ணு- வாஹனங்கள், சகுனம், சோதிடம், வெள்ளி கிரகம்-மழை தொடர்பு- ஆகிய நூற்றுக்கணக்கான விஷயங்கள் அப்படியே புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை ஆதாரங்களுடன் கண்டோம்.

ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பேசியவர்களுக்கு இவை எல்லாம் அடி மேல் அடி கொடுத்து, அந்த வாதங்களைப் ‘புல்டோசர்’ கொண்டு, பொடிப் பொடியாக்கிவிட்டது. இனியும் இப்படி ஆரிய திராவிட இன பேதம் பேசுவோரின் சவப் பெட்டியில் மேலும் ஒரு ஆணி அறைய இதோ புறநானூற்றுச் சான்று:—

white-yellow-mustard-

கடுகுச் செடி

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-

1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்

2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்

3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்

4.யாழ் இசைக்க வேண்டும்

5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்

6.மணி அடிக்கவேண்டும்

7.காஞ்சி பாட வேண்டும்

8.அகில் புகை போட வேண்டும்

இதோ பாடல்கள்:—

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென

உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)

 

தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க

கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி

ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,

இசை மணி எறிந்து, காஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)

 

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)

 

பொருள்:

 

போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.

இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)

 

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி

புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்.370)

 

பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்……………..

நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்…………….

திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.

Neem-flower

வேப்ப மரம்

அதர்வண வேத மந்திரங்கள்

அதர்வண வேதத்தில் கருச் சிதைவு நிகழாமல் இருக்கவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க வும், கண்வ (2-25-3) எனப்படும் தீய சக்திகளை

விரட்டவும் வெண் கடுகு, ப்ரிஸ்னிபரணி மூலிகை கூறப்பட்டுள்ளது:–

கர்ப்பிணிகள் வெண் கடுகு தாயத்து உடலில் அணிய வேண்டும். தீய சக்திகள் உண்டாக்கும் கருச் சிதைவை இது அகற்றும் (அ.வே. 8-6-9)

தீய சக்திகள் இடுப்பு வலியை உண்டாக்கும் அல்லது கருவை விழுங்கிவிடும்.(8-6-23) குழந்தையை கருவிலோ பிறந்த பின்னரோ இறக்கச் செய்யும் தீய சக்திகள் (8-6-18);மலடித் தன்மை, குழந்தை இழப்பு ஆகியவற்றை வெண் கடுகு தடுக்கும் (8-6-26)

மேலும் ஆராய வேண்டும்!
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக வடவிமயம் முதல் தென்குமரி ஈறாக —16 லட்சம் சதுர மைல் பரப்பில் —- கர்ப்பிணிப் பெண்களும் காயமடைந்தோரும் வெண் கடுகைப் பயன்படுத்தியதால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞான முறையில் ஆராய்வது பலன்  தரும். இதில் பாக்டீரியா தடுப்பு, வைரஸ் தடுப்பு சக்திகள் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

வாழ்க அதர்வண வேதம்! வளர்க சங்க இலக்கியம்!!

சிந்து சமவெளியில் அரசமரம்

tol van indus cx 2

வ்ருக்ஷ ராஜன்—by London swaminathan

சிந்து சமவெளியில் பல விநோதமான விஷயங்களைப் பார்க்க முடிகிறது. புலிப் பெண் முத்திரை, பேய் முத்திரை, ஆடு, நரபலி முத்திரை, சப்தமாதா முத்திரை, மிருகங்கள் சூழ்ந்து நிற்கும் (பசுபதி) ஒரு கடவுள் முத்திரை, யானை மீது இந்திரன் போல நிற்கும் ஒருவர்/ஒருத்தி முத்திரை , ஆட்டுமுக அசுரன் அல்லது தேவன் முத்திரை, மஹிஷாசுரமர்த்தனி போல எருமையை துவம்சம் செய்யும் ஆண்  முத்திரை எனப் பல முத்திரைகள்.

 

இவைகளில் பல முத்திரைகளுக்கு ஒரே நூலிலிருந்து விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால் பல சம்ஸ்கிருத நூல்களில் இருந்து விளக்கம் சொல்ல முடிகிறது. யாருக்கும் புரியாத மர்மமான ஒட்டக எலும்புக்கூடு, ஒட்டக முத்திரை ஆகியனவும் கிடைத்தன. இந்த ஒட்டக விஷயம் ஆரிய-திராவிட வாதத்துக்கு எதிராக இருப்பதால் அறிஞர்கள் ஒரே அமுக்காக அமுக்கிவிட்டனர். எந்த அறிஞரும் அது பற்றி பிரஸ்தாபிப்பதே இல்லை.

 

இதே போல எலும்புக்கூடு விஷயங்களையும் அமுக்கிவிட்டனர். ஏனெனில் இதில் ஆரிய திராவிட எலும்புக் கூடுகள் என்று இனம் காட்ட முடியவில்லை. அப்படியே காட்டப் போனால் எல்லாம் பஞ்சாபியர் எலும்புக் கூடுகள் போலவே தோற்றம் இருக்கின்றன!!!

 

சிந்துவெளி முத்திரையில் பலவிதமான மரங்கள் காணப்பட்டாலும் அரமரம் கொஞ்சம் தூக்கலாகத் தெரிகிறது. இதைப் பார்த்தவுடன் பலருக்கு ஒரே மகிழ்ச்சி. அப்பாடா, திராவிடப் பொன்னாட்டை தொடர்புபடுத்த ஒரு விஷயமாவது கிடைத்ததே என்று. உண்மையில் இதுவும் பிழை. தன்னை ஆரியன் என்று அழைத்துக் கொண்ட புத்த பிரான உட்கார்ந்து ஞானோதயம் பெற்றது அரச மரத்துக்கடியில் தான். அவர் ஏன் அரச மரத்துக்கு அடியில் உட்கார்ந்தார் என்றால் அந்த மரம் வேத காலத்தில் இருந்து புனிதமாக கருதப்பட்டது. பிராமணர்கள் அரச மரக் குச்சிகள் இல்லாமல் தங்கள் யாக யக்ஞங்களைச் செய்ய முடியாது.

 

மூலதோ ப்ரஹ்மரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே

அக்ரதச் சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:

 

பொருள்: அடியில் பிரம்மனும் நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவ பெருமானும், நிலைபெற்ற அரச மரமே உனக்கு நமஸ்காரம். இது ஒரு பழைய ஸ்லோகம். இந்துக்கள் வழிபடும் மரம்–அரச மரம்.

ficus_relief

அரச மரம் மட்டுமின்றி அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அத்தி, ஆலம் ஆகியனவும் இந்துக்கள் வழிபாட்டில் இடம் பெற்றன. தாவரவியல் கணக்குப்படி மூன்றும் ‘பைகஸ்’ என்னும் பிரிவைச் சேர்ந்தவை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. (இந்திய அதிசயம் ஆலமரம் என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் காண்க)

அரச மரத்தைக் குறிக்கும் பிப்பலாடன், அச்வத்தன் என்ற மனிதர்களுடைய பெயர்கள் இதிஹாச உபநிஷத்திலும் இருக்கின்றன.

 

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகவும் பழமையான ஒரு ஸ்லோகம். அது மஹா பரதத்தில் இருக்கிறது. அதில் பல வேதகாலப் பெயர்கள் இருக்கின்றன. அதில் மூன்று மரங்களின் பெயர்களும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதற்கு ஆதி சங்கரர் எழுதிய விளக்கங்களையும் கீழே காணலாம்.

822.ந்யக்ரோதாய

823.உதும்பராய

824.அஸ்வத்தாய

822.கீழேயுள்ள பிரபஞ்சத்துக்கெல்லாம் மேலாயிருப்பவர் அல்லது தமது மாயையினால் எல்லாப் பிராணிகளையும் கீழே வைத்து மறைப்பவர்

823.ஆகாயத்திற்கு மேற்பட்டவர்

824.அரசமரம் போலிருப்பவர்.

 

indus goddess

கீதையில் அரசமரம்

புத்தருக்கெல்லாம் மிகவும் முந்தியவர் கிருஷ்ண பரமாத்மா. அவர் சொன்ன பகவத் கீதையில் மரங்களில் தான் அரச மரம் என்றே கூறுகிறார்.

‘’எல்லா மரங்களுள்ளும் நான் அரச மரமாயிருக்கிறேன்’’ (கீதை 10-26)

ஊர்த்வ மூலமத: ஸாகமஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம் (கீதை 15.1) என்ற இடத்திலும் அரச, ஆல மரங்களின் பெருமை பேசப்படுகிறது.

 

பிராமணர்கள் தினசரி சமிதாதானத்திலும் ஹோமத்திலும் பயன்படுத்துவது அரச மரக்குச்சிகளே. அர மரக் குச்சிகள் (ஸமித்து) இல்லாமல் அவர்கள் அடிப்படை ஹோமங்களைக் கூட செய்ய முடியாது. அவ்வளவு முக்கியம். புத்தர் அரச (போதி) மரத்துக்கடியில் உட்கார்ந்ததற்கும் இதுவே காரணம்.

 

இவ்வளவு புகழ் பெற்ற அரசமரத்துக்கும் திராவிட முத்திரை குத்தி சில அரை வேக்காடுகள் மகிழ்கின்றன.மகிழட்டுமே, நமக்கென்ன நஷ்டம்!

 

அரச மரமும் பிள்ளைப்பேறும்

பிள்ளை பெற தயாராக இருப்பவர்களும் மகப்பேறு கிடைக்காதவர்களும் அரசமரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. இதனால்தான் பிள்ளையார் சிலைகளை அரச மரத்துக்கு அடியில் வைத்தனர்.

‘’அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றில் கை வைத்தாளாம்’’– என்ற பழமொழியும் இதனால்தான் வந்தது. உடனே பிள்ளை பிறந்துவிடும் என்ற நம்பிக்கை!

indus 21

வேதத்தில் அரசமரம்

அரச மரம், ஆலமரம் ஆகியவை பற்றிய குறிப்புகள் வேதத்திலும் சங்க இலக்கியத்திலும் வருகின்றன. உலகிலேயே பழமையான சமய நூல் ரிக் வேதம். அதில் பத்தாவது மண்டலத்தில் பலன் தரும் மூலிகைகள் என்ற பாடலில் (10-97) அரச மரம் பற்றி வருகிறது : ‘’உனது வீடு புனிதமான அரச மரத்தில் உள்ளது. இலைகளுடைய பர்னா (பலாச) மரத்தில் உன் வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த மனிதனைக் காப்பாற்றினால் உனக்கு ஒரு பசு கிடைக்கும்’’.

யாகத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், கரண்டிகள் ஆகியன இந்த 2 மரங்களினால் செய்யப்படுகின்றன.

 

ஐயவி புகைத்தல்

பேயை விரட்ட ஐயவி என்னும் வெண் கடுகின் புகையை சாம்பிராணி புகை போல போடுவது சங்க கால வழக்கம். இதுவும் வடக்கிலும் இருப்பதை ஒரு சம்ஸ்கிருத நூல் கூறுகிறது. அமோகவஜ்ரர் என்பவர் எழுதிய வடமொழி நூலில் இது துர்தேவதைகளை விரட்டப் பயன்படும் என்று எழுதப்படிருக்கிறது. ஐயவி பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது (எனத் ‘’தமிழில் பேய், பூத, பிசாசு’’ என்ற கட்டுரையில் விவரங்கள் கிடைக்கும்.

Sinapis_seeds,wikipedia

Please read my earlier articles:

1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals 7. Bull Fighting: From Indus Valley to Spain via Tamil Nadu 8.The Great Scorpion Mystery in History 9.  (In Tamil) சிந்து சமவெளியில் புலிப்பெண் 10. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 11. Ramayana Wonders part 5: Indus Valley Cities in Ramayana 12.Tiger Goddess in Indus seals 13.Aryan Chapatti and Dravidian Dosa 14.Sex Worship in Indus Valley 15.சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு 16.Indian Wonder: The Banyan Tree + 600 articles on Tamil Sanskrit Literature and Indian Culture.

ficus religiosa

To get the above articles, type any of the article titles and add ‘from tamilandvedas.wordpress.com or from swamiindology.blogspot.com

For further list contact swami_48@yahoo.com