ஏழு லட்சம் புத்தகங்களை முஸ்லீம் வெறியன் எரித்தது ஏன்? (Post No.4686)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 17-03

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4686

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எகிப்திலுள்ள அலெக்ஸாண்ட் ரியா நகரில் (Alexandrian Library) இருந்த நூலகத்தை மத வெறிபிடித்த காலிபா உமர் எரித்து அழித்தது எப்படித் தெரியுமா?

 

“இங்கேயுள்ள 700,000 புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதையே, சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்போது குரான் ஒன்றே போதுமே! இந்த நூல்கள் எதற்காக?”

 

இங்கேயுள் ள   புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்; அப்படியானால் உடனே தீக்கிரையாக்க வேண்டும்.

இரண்டு விதத்தில் நோக்கினாலும் தீ வைத்துக் கொளுத்துங்கள்!

 

இந்தியாவில் பீஹாரில் இருந்த நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் அதன் நூலகத்துக்கும் முஸ்லீம்கள் தீ வைத்தபோதும் இதேதான் சொல்லியிருப்பார்கள்.

xxx

 

மதவெறியர்களுக்கு ஆப்ரஹாம் லிங்கன் பதிலடி

ஒரு முறை  ரெவரென்ட் திரு ஷ்ரிக்லி என்பவர் ராணுவத்தில் மருத்துவ மனைக்கான சமய குருவாக (Chaplain) நியமிக்கப்பட்டார். இது அமெரிக்க ஒய்.எம்.சி.ஏ. (Young Men’s Christian Association) நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. உடனே ஒரு கூட்டம் போட்டு, ஒரு கமிட்டியை அமைத்து, வாஷிங்டனுக்கு அனுப்பினர்.

 

ஆப்ரஹாம் லிங்கன் அறையில் நடந்த சம்பாஷனை:–

 

“ஐயா, நாங்கள் இந்த திருவாளர் ஷ்ரிக்லி நியமனம் விஷயமாகப் பார்க்க வந்திருக்கிறோம்.”

 

லிங்கன்: “ஓ, கவலையே படாதீர்கள். என்னுடைய தீவிர சிபாரிசுடன் நியமனத்தை செனட் சபைக்கு அனுப்பிவிட்டேன். வெகு விரைவில் அவர்கள் அதை உறுதிப்படுத்துவர்”.

“ஐயா, நாங்கள்……… நாங்கள்………. அந்த நியமனம் வேண்டாம், கூடாது என்று சொல்ல வந்திருக்கிறோம்”.

 

லிங்கன்:-

“அ ப்படியா சேதி! கதையே மாறுகிறதே. சரி, என்ன காரணத்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்.

“ஐயா, அவர், நம்முடைய பைபிள் கூற்றுக்கு எதிரான பிராசாரத்தை முன்வைக்கிறார்.

லிங்கன்:-

அட, அப்படி என்ன சொன்னார்?

“ஐயா நம் சுதந்திரப் போருக்கு எதிர் தரப்பில் இருந்த எதிரிகளையும் பரம பிதா மன்னிப்பார் என்கிறார். அது எப்படி சரியாகும்? இறைவன் எல்லையற்ற தண்டனை தருவார் என்பதை அவர் ஏற்கவில்லை.

இவரை ஆஸ்பத்திரி சமய குருவாக நியமித்தால் நம் மதத்துக்கே ஆபத்து”.

மற்றவர்களும் ‘’ஆமாம், ஆமாம்’’ என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

 

ஆப்ரஹாம் லிங்கன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். என்ன சொன்னீர்கள்? எதிரிகளையும் இறைவன் மன்னிப்பார் என்று அவர் கருதுகிறார் என்று சொன்னீர்களா? அப்படியானால் இவர்தான் இந்தப் பதவிக்கு மிகவும் தகுதியானவர்”

 

ஆப்ரஹாம் லிங்கனின் பதில் அந்தக் குழுவுக்கு நெத்தியடி, சுத்தியடி கொடுத்தது போல இருந்தது.

xxx

 

கிறிஸ்தவர் என்ன செய்தார்கள்?

அமெரிக்க வரலாற்றுப் பாடம் முடிந்தது.

வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்:-

மாணவர்களே! இவ்வளவு நேரம் பாடம் கேட்டீர்களே! ப்யூரிடன் (Puritan) கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள்?

ஒரு மாணவன் எழுந்தான்:-

“ஐயா, அவர்கள் தங்கள் வழியில் இறைவனைக் கும்பிட்டார்கள்; அதே வழியில் மற்றவர்களையும் கும்பிட வைத்தார்கள்.”

 

(கட்டாய மதமாற்றத்தை அந்தப் பையன் அழகாக சொல்லி முடித்தான். வாத்தியார் அதை ரசிக்கவில்லை!)

 

சுபம்–