உலக மஹா கீதம்; வேதத்தில் மேலும் ஒரு தேசீய கீதம்! (Post No.10,326)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,326

Date uploaded in London – –   11 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வியாசர் என்பவரை இந்துக்களின் எல்லா பிரிவினரும் ‘குரு’ என்று ஏற்கின்றனர் ; அது மட்டுமல்ல; வியாசரை விஷ்ணுவின் அ வதாரமாகவும் கொள்கின்றனர். அவரது நினைவாக வியாச பெளர்ணமி தினம் முதல், 4 மாதங்களுக்கு சாதூர் மாஸ்ய விரதமும் அனுஷ்டிக்கின்றனர்.;ஏன் தெரியுமா?

அவர் இறந்தவுடன் கலியுகம் துவங்கப் போவது பஞ்சாங்கக் கணக்குப்படி தெரிந்தது; உடனே அவசரம் அவசரமாக புராண இதிஹாச வேதங்களைத் தொகுத்தார். அவர் பெயரில் உள்ள விஷயங்களைக்  கணக்கிட்டால் பத்து கின்னஸ் புஸ்தகத்தில் எழுதலாம் ; தனக்குப் பின்னர் பிறக்கப்போகும் கலியுகத்தில் மக்களுக்கு வேதங்களைப் பின்பற்ற நேரமும் இருக்காது; நாட்டமும் இருக்காது என்று கருதி 1400 வரிகளில் இந்து மதத்தை  ‘ஜுஸ்’  பிழிந்து பகவத் கீதை என்னும் பெயரில் மஹாபாரதத்தில் சேர்த்தார். மகாபாரதத்தின் மொத்தவரிகள் இரண்டு லட்சம் வரிகள். அதில் ஒரு மில்லியன்- பத்து லட்சம் சொற்கள் உள்ளன !

அதே போல 18 புராணங்களையும் தொகுத்தார். இதை எல்லாம் விட ஒரு அற்புதமான வேலையை அவர் செய்தார். அதில்தான் அவர் உலக மஹா ஜீனியஸ் / மஹா மேதாவி என்பது தெரிகிறது. எழுதக்கூடாது; வாய் மொழி மூலமே பரப்ப வேண்டும்; அதிலும் ஒலி பிசக்கக்கூடாது ; அதிலும் மனம், மொழி, மெய் மூன்றிலும் உண்மை உடையவர்கள் மட்டுமே கற்கவேண்டும் என்று விதி மேல் விதிகளைக் கொண்ட வேதங்களை பலரும் பின்பற்றமுடியாமல், அதாவது நினைவிற் வைத்துக்கொள்ள முடியாமல், தவிப்பதைக் கண்டார். உடனே அத்தனையையும் திரட்டி 4 பிரிவுகளாகப் பிரித்தார். அதை விட முக்கியம் அதைப் பரப்ப 4 சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் ; ‘இதோ பாருங்கள்; இனி உங்கள் பொறுப்பு இதைப் பரப்புங்கள் என்றார்

. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்கத் தமிழ் நூல்களும் நான் மறை அந்தணர் பற்றீச் சொல்லி, ‘எழுதாக் கற்பு’ என்று வேதங்களைப் புகழ்கின்றன. அது மட்டுமல்ல. தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் certificate  கொடுத்து இது நல்ல புஸ்தகம்தான் என்று சொல்லியவரும் அப்படிப்பட்ட நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சார்யார் ஆவார் .

xxxx

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் .

தமிழ் மன்னர்கள் உள்பட இந்தியா முழுதும் மன்னர்கள் வேதப் பிராமணர்களுக்கு ஏன் தங்கக் காசு கொடுத்தனர் (ஹிரண்ய தானம்), ஏன் நில புலனகளைக் கொடுத்தனர் (பிரமதேயம்) என்ற கேள்வி என் மனதில் வரும்; அது மட்டுமா? உலக மஹா தமிழ்க் கவிஞன் சுப்பிரமணிய பாரதி வேதம் என்று வாலாக என்று கொட்டு முரசே என்று ஏன் செப்பினான் என்றும் எண்ணுவேன்.

இதற்கெல்லாம் பதில் ரிக் வேதத்தின் கடைசி பாடலில் இருக்கிறது (10-11) அதுதான் 1028 ஆவது துதி. பத்தாயிரத்து 552 ஆவது மந்திரத்துக்கு மூன்று, நான்கு மந்திரத்துக்கு முந்திய 2, 3 மந்திரங்கள்.

அங்கே வேதத்தின் சாரத்தை செப்பிவிடுகிறார்.

xxxx

ஒற்றுமை! ஒற்றுமை! ஒற்றுமை!

சொல்லிலே, செயலிலே சிந்தனையில் ஒற்றுமை !

முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் ஏற்பட்ட LEAGUE OF NATIONS லீக் ஆப் நேஷன்ஸ் என்ற சர்வ தேச சபையும் இதையே சொன்னது;  ஹிட்லரும் முசோலினியும் கேட்கவில்லை இரண்டாவது உலக மகா யுத்தம் வெடித்தது ;  அது  முடிந்த பின்னர் ஐ.நா. சபை தோன்றியது. அதன் சாசனத்திலும் அமைதி, ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது

நமது காலத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம் ; கெ ட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்று பாரதி தாசன் பாடினார் ; காஞ் சி பரமாசார்ய சுவாமிகள் ஐ நா சபையில் பாடுவதற்காக எம் எஸ் சுப்புலெட்சுமிக்கு எழுதிக்கொடுத்தித்த ‘மைத்ரீம் பஜத  பாடலிலும் இதையே சொன்னார். ஆனால் உலக மகா மேதாவி வேத வியாசர் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தின் கடைசி பாடலில் முத்தாய்ப்பாக வைத்தார். அதாவது 4 வேதங்களின் 20,000 மந்திரங்களின் மொத்தக் கருத்தே இதுதான் என்பது அவரது துணிபு..

அதைப் பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு சுவையான செய்தியைச் சொல்கிறேன். “சரி, ஆறு மாதத்தில் ரிக் வேதத்தின் 10,552 மந்தி ரங்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்து முடித்துவிட்டோம்; கடைசி வேதமான அதர்வண வேதத்தையும் படிப்போமே” என்று எடுத்தால், அதில் ரிக் வேதத்தை விட  அருமையான ஒற்றுமை மந்திரம் இருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கினேன்.

xxx

இதோ இரண்டு மந்திரங்களையும் நீங்களும் படியுங்கள்

ரிக் வேதம் 10-191

“எல்லோரும் ஒன்று சேருங்கள்

எல்லோரும் ஒன்றாகப்  பேசுங்கள்

முன் காலத்தில் தேவர்களும் ஒற்றுமையுடன் இருந்து

வேள்வியில் தங்களுக்குரிய பங்கினை ஏற்றார்கள் .

உங்களுடைய மந்திரங்கள் ஒன்றுபோல ஒலிக்கட்டும்

உங்களுடைய அசெம்பிளியில் ஒன்றுபட்ட குரல் கேட்கட்டும்

எல்லோரும் ஒன்று போல சிந்திக்கட்டும்

எல்லோரும் ஒன்றையே  நாடட்டும்

உங்களுடைய அசெம்பிளி தீர்மானமும் ஒன்றாக இருக்கட்டும்

உங்களுடைய இருதயம்/ உள்ளக்கிடக்கை ஒன்றுபோல ஆகட்டும்

உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்றையே சிந்திக்கட்டும்” .

இதிலுள்ள ‘அசெம்பிளி’ என்ற ஆங்கிலச் சொல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை மொழி பெயர்த்த கிரிப்பித் Ralph T H Griffith தின் சொல். இன்று நாடு முழுதும் பயன்படுத்தும் சபை/ அவை என்ற சொல் சம்ஸ்க்ருத மந்திரத்தில் உள்ளது

XXX

இதோ அதர்வண வேத ஒற்றுமை மந்திரம்

மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம்

“நான் உங்களுக்கு ஒரே இருதயத்தை, ஒரே மனத்தைக் கொண்டு வருகிறேன்.

வெறுப்பிலிருந்து விடுதலை பெறுக; பிறந்த கன்றுக்குட்டியிடம் தாய்ப்பசுவுக்கு உள்ள பாசம் போல பாசம் பெருகட்டும்

‘தந்தை தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை மகன் உணரட்டும் ; கணவனிடம் மனைவி அன்பு மழை பொழியட்டும்; தேன்மிகு இனிமையான சொற்களை பேசட்டும்

சகோதரன் மற்ற சகோதரனை வெறுக்கக் கூடாது; சகோதரி, மற்ற சகோதரியை வெறுக்கவேண்டாம் ; ஒற்றுமை நிலவுக; ஒரே நோக்கம் நிலவுக; மங்கள மொழியை உதிருங்கள்

கடவுளர்/ தேவர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை ; பிரிந்து செல்வதில்லை; அந்த குணத்தை உங்கள் வீட்டில் நிலை நாட்டுகிறோம் ; உங்கள் வீட்டிலுள்ள புருஷர்கள் அதையே பின்பற்றுவார்களாகுக 

ஒரே எண்ணத்துடன் , ஒரே முயற்சியுடன், இணைந்து வாருங்கள்; பிரிந்து செல்லாதீர்கள் ;ஒருவருக்கொருவர் இனிமையான மொழியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை ஒரே நோக்கம், ஒரே எண்ணம் உடையவனாக ஆக்குவேன் (மேலும் வலுப்படுத்துவேன்)

நீங்கள் ஒரே பானத்தை பருகுங்கள்; ஒரே உணவை சம கூறிட்டு உண்ணுங்கள்; நானும் உங்களை அன்பால் பிணைக்கிறேன் ; ஓர் சக்கரத்திலுள்ள ஆரங்கள் போல ஒன்று பட்டு அக்கினி தேவனை வழிபடுங்கள் .

 நான் உங்களை ஒன்றாகக் கட்டும் மந்திரத்தின் மூலம் பிணைக்கிறேன் ஒரே எண்ணத்துடன் ஒரே தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு செய்கிறேன்

தேவர்களைப் போல அமிர்தத்தை போற்றுங்கள்; காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் அன்பு அலை வீசட்டும் “.

–மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம் (சூக்தம் 101)

xxx

என் கருத்து

இதற்கு நான் உரையோ விளக்கமோ சொல்லத் தேவை இல்லை; முதலில்  தனி மனிதனிடம் நேசமும் பாசமும் இருக்க வேண்டும்; பின்னர் குடும்பத்தில் அது இருக்க வேண்டும். பின்னர் அது புறச் சூழலில் எதிரொலிக்க வேண்டும். அதன் மூலம் எங்கும் அமைதி ஓ ற்றுமை ஓங்கி வளரும்

இந்த இரண்டு கீதங்களையும், துதிகளையும் எல்லோரும் படித்தா லோ அல்லது வேத பிராமணர்கள் ஒலிக்கும் பொழுது கேட்டாலோ சர்வ மங்களம் உண்டாகும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ!

XXX

RIG VEDA 10-191 (Last Hymn in the RV)

संस॒मिद्यु॑वसे वृष॒न्नग्ने॒ विश्वा॑न्य॒र्य आ ।

इ॒ळस्प॒दे समि॑ध्यसे॒ स नो॒ वसू॒न्या भ॑र ॥ १०.१९१.०१

सं ग॑च्छध्वं॒ सं व॑दध्वं॒ सं वो॒ मनां॑सि जानताम्

दे॒वा भा॒गं यथा॒ पूर्वे॑ संजाना॒ना उ॒पास॑ते १०.१९१.०२

स॒मा॒नो मन्त्रः॒ समि॑तिः समा॒नी स॑मा॒नं मनः॑ स॒ह चि॒त्तमे॑षाम्

स॒मा॒नं मन्त्र॑म॒भि म॑न्त्रये वः समा॒नेन॑ वो ह॒विषा॑ जुहोमि १०.१९१.०३

स॒मा॒नी व॒ आकू॑तिः समा॒ना हृद॑यानि वः ।

स॒मा॒नम॑स्तु वो॒ मनो॒ यथा॑ वः॒ सुस॒हास॑ति ॥ १०.१९१.०४

–subham—

Tags- ரிக் வேதம், அதர்வ வேதம், ஒற்றுமை, தேசீய கீதம், உலக கீதம் , மந்திரம்

மநுவும் ஹமுராபியும்- யார் முதல்வர்? (Post No.5831)

Hamurabi and Sun God Shamash

Research Article written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 December 2018
GMT Time uploaded in London – 16-00
Post No. 5831


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பழங்கால இந்தியாவில் நிறைய தர்ம சாஸ்திரங்கள் (சட்ட நூல்கள்) இருந்தன. அவைகளில் சிறந்தது மநுதர்ம சாஸ்திரம் என்பதால் எல்லோரும் தங்களை மநுநீதி மன்னன் என்று புகழ்ந்து கொண்டனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனுநீதிச் சோழனும் அவர்களில் ஒருவன். பாண்டியர் செப்பேடுகளும் மநு நீதி வழுவாது ஆண்ட மன்னர்கள் என்று பாண்டியர்களைப்  புகழ்கின்றன. மநு என்பவர் ரிக் வேத காலத்தில் வாழ்ந்தவர். 4000 முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமையுடைத்து என்று அறிஞர்களால் போற்றப்படும் ரிக்வேதத்தில் மநுவின் பெயர் உளது. கிருஷ்ணனும் பகவத் கீதையின் நாலாவது அத்தியாயத்தின் முதல் ஸ்லோகத்தில் தான் முன்னொரு காலத்தில் விவஸ்வானுக்கு உபதேசித்ததை அவருடைய மகனான வைவஸ்வத மநுவுக்கு உபதேசித்ததாகவும் அவர் சூரிய குல முதல் மன்னனான இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்ததாகவும் அர்ஜுனனிடம்

சொல்கிறார். ஆக மஹாபாரதத்துக்கும் முந்தையவர் மநு. அதாவது கி.மு 3102க்கும் முன்னர்!

ஆக மநுவின் காலம் மிகப்பழமையா னது. ஆனல் இப்போதுள்ள மநு நீதி நூல் சூத்திரர்களுக்கு எதிராக 40, 50 ஸ்லோகங்கள் சேர்க்கப்பட்ட UPDATED EDITION அப்டேடட் எடிஸன். அதாவது புதிய பதிப்பு.

மநுவும் ரிக் வேதமும் ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிக் கதைப்பதில்லை. மநுவும் ரிக்வேதமும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஸரஸ்வதி நதி பற்றிப் பேசுகின்றன. ஆகவே மநு என்பவர்—அதாவது ஒரிஜினல் மானவ தர்ம சாஸ்திரத்தை எழுதிய வைவஸ்வத மநு — மிகப்பழையவர். ஆயினும் பாலைவனத்தில் கெட்டுப் போகாமல் இருக்கும் ஹமுராபியின் களிமண் பலகைகளைக் கண்டு மகிழ்ந்த மேலை நாட்டினர் ஹமுராபியின் சட்ட புஸ்தகததை விதந்து ஓதுவர். இது மநு பற்றி அறியாததால் வந்த தோஷம்!

ஹமுராபி யார்?

ஹமுராபி என்னும் மன்னன் பாபிலோனிய அரசன். அவன் கி.மு.1792-ல் அரசாட்சி செய்யத் துவங்கினான். அவனுக்கு முன்னரே பாபிலோனியா, சுமேரியா முதலிய அரசுகளின் கீழ் சட்டங்கள் இருந்தபோதும் ஹமுராபி அதை ஒரு முறைப்படுத்தி கல்வெட்டிலும், களிமண் பலகைகளிலும் எழுதிவைத்தான். அதில் சூசா (SUSA IN IRAN) என்னும்  இடத்தில் அவன் எழுப்பிய பெரிய கல்தூணில் செதுக்கி வைத்தது முக்கியமானதாகும். ஏனெனில் அது நிறுவப்பட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்டு வேறிடத்தில் இருந்ததை பிரெஞ்சு அதிகாரிகள் பாரீஸிலுள்ள லூவர் மியூஸியத்தில் கொண்டு வைத்தனர்.இதனால் ஹமுராபியின் புகழ்  பரவியது.

‘பல்லுக்குப் பல்,கண்ணுக்குக் கண்’ என்று

தண்டனை கொடுப்பது அவன் வழக்கம்..

முதலில் மநுவின் சட்ட நூலுக்கும் ஹமுராபி சட்டத்துக்கும் உள்ள மேம்போக்கான ஒற்றுமைகளைக் காண்போம்:

மநு என்பவன் விவஸ்வானின் மகன்; விவஸ்வான் என்பவன் சூரிய பகவான். விவஸ்வானின் புதல்வன் எ ன்பதால்தான் வைவஸ்வத மநு என்று பெயர் பெறுகிறான். அவனுக்கு முன்னரும் பல மநுக்கள் இருந்தனர். மநுவிடமிருந்து சூரியகுல முதல் மன்னனான இக்ஷ்வாகுவுக்கு, தான்

யோக விஷயங்களைச் சொல்லிக் கொடுத்ததாக கிருஷ்ணன் கூறுகிறார் (கீதை 4-1). இங்கு சூரியன் – மநு – சட்டம் பற்றிய தொடர்பு தெரிகிறது.

.

முதல் ஒற்றுமை

இது போலவே பாபிலோனியாவிலும் ஹமுராபி நிறுவிய கல்தூணில் ஷாமாஷ் என்னும் சூரியதேவனே ஹமுராபிக்கு உபதேசிக்கிறார்

ஹமுராபி என்பதை சமர+ரவி (போர் சூரியன்) என்பதன் திரிபு என்றே நான் கருதுகிறேன்.

இரண்டாம் ஒற்றுமை

மநுவின் புஸ்தகத்தைப் பார்த்து, ஹமுராபியும் தனது புஸ்தகத்தை 12 பிரிவாகப் பிரித்தார். மநு தர்ம நூலிலும் 12 அத்தியாயங்கள்தான்.

மூன்றாம் ஒற்றுமை

சங்கராச்சார்யார் முதலிய மதிக்கத்தக்க பெரியோர்களிடம் பக்தர்கள் பேசுகையில் தம்முடைய எச்சில் அவர்கள் மீது தெறிக்காமல் இருக்க பயபக்தியாக வாய் புதைத்து– வாயில் கை வைத்துக் கொண்டு பேசுவர்- இது போல ஷாமாஷ் என்னும் சூரிய/ நீதி தேவதையிடம் சட்டங்களைப்பெறும் ஹமுராபி பவ்யமாக நிற்பது சிலைகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

நாலாம் ஒற்றுமை

பிற்காலத்தில் அசோக சக்ரவர்த்தியும் ஹமுராபி போல பொது இடங்களில் தர்ம விதிக்ளை மக்கள் பேசும் பாலி மொழியில் எழுதி வைத்தார். ஹமுராபியும் களிமண் பலகை தவிர பெரிய கல்வெட்டுகளில், மக்கள் பேசும் அன்றாட அக்கடியன் மொழியில் எழுதி வைத்தார்.

அசோகன் இப்படி செய்தது ஹமுராபியைப்  பார்த்து என்று சொல்லுவதைவிட இப்படி ஒரு வழக்கம் இந்தியாவிலும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அசோகன் நிறுவிய பல்லாயிரம் கல்வெட்டுகளில் இன்று 30+ மட்டுமே உள்ளன. இது போல, பழங்கால இந்திய கல்வெட்டுகள் பருவக் கோளாற்றினாலும் வெளிநாட்டுக் காட்டுமிராண்டிப் படை எடுப்புகளினாலும் அழிந்தன என்று கருதலாம்.

ஐந்தாம் ஒற்றுமை

ஹமுராபி கல்வெட்டில் 282 சட்டங்கள் மட்டுமே உள. இவை எல்லாம் மநுவும் பிரஸ்தாபித்த விஷயங்களே.ஆனால் மநுவோ பாரதப்  பண்புகளைக் காட்டி ஒவ்வொன்றையும் விவரிக்கிறான். ஹமுராபி அப்படி எதுவும் சொல்லாமல் சட்டங்களை மட்டும் சொல்கிறான்.

ஆறாம் ஒற்றுமை

ஷமாஷ் என்னும் நீதி தேவதை,சூரிய தேவன்; ‘உடு’ என்றும் சுமேரியாவில் அழைக்கப்பட்டான். ‘உடு’ என்பது நட்சத்திரம், விண்மீன் என்றும் தமிழ் .ஸம்ஸ்க்ருத்தில் புழக்கத்தில் உள்ளது

ஏழாம் ஒற்றுமை

ஹமுராபி அம்மோரைட் என்னும் இனத்தை சேர்ந்தவன்.அமர என்பது மலை நாடு, பர்வதப் பிரதேசம் என்று புராணங்கள் சொல்லும்

வேற்றுமை

ஹமுராபி ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’லென்னும் பழிவாங்கும் சட்டத்தைச் சொல்கிறான். மநுவோ ஆளுக்குத் தக,நேரத்துக்குத் தக, சூழ்நிலைக்குத் தக தண்டனை கொடு என்று ஏழாம் அத்தியாயத்தில்  சொல்கிறான். பசுவின் கன்று இறந்ததால் அதுபட்ட துயரத்தைக் கண்டு தன் மகனையே பலி கொடுத்த மநு நீதிச் சோழன் கதை ஹமுராபி சட்டம் போலக் காணப்பட்டாலும் அனைவரும் தடுத்தும் மன்னன் செய்த செயல் அது. இறுதியில் அனைவரும் உயிர் பெற்று எழுந்த அற்புதமும் நிகழ்ந்தது.

TAGS–  ஹமுராபி, மநு, சட்டப்புத்தகம், ஒற்றுமை, சூரிய தேவன்

–subham–

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

 

Written by London Swaminathan


Date: 21 July 2017


Time uploaded in London- 13-45


Post No. 4101


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு  பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்-

கங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.

இதோ அப்பர் வாக்கு:-

கங்கை யாடிலென் காவிடி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமுறை

 

 

 

நமது தந்தையர்  காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.

 

கம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.


கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

 

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

கங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்?

 

இந்த நாடு ஒன்றே!

இந்தப் பண்பாடு ஒன்றே!!

 

என்பதை எடுத்துரைக்கத்தான்  காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.

சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது  ஏன்?

கண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்?

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.

 

திருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்?

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்

சாருந்திலை வனத் தன் மாமலயத்து

ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)

 

 

(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)

கல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது! ஆக நமது நாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.

 

வெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

நமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.

இது நமது தலையாய கடமை!

–SUBHAM–

TAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்