சரஸ்வதி நதி பற்றிய சுவையான விஷயங்கள்! (Post No.4211)

Written by London Swaminathan

 

Date: 14 September 2017

 

Time uploaded in London- 10-47

 

Post No. 4211

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே (கி.மு.3100) இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுதும் மனிதர்கள் நம்புவது என்னவென்றால் இந்த நதி அந்தர்வாஹினியாக த்ரிவேணி சங்கமத்தில் (அலஹாபாத், உத்திரப் பிரதேசம்) கலக்கிறது என்பதாகும்

 

சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலா ற்றையே மாற்றிவிட்டது. நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது, வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது!

 

ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது. அந்த வற்றாத ஜீவ நதிக்கு நம் நாவில் வெள்ளமெனப் பொழியும் சரஸ்வதி தேவியின் பெயரை வைத்தது என்ன பொருத்தம்!

 

நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் நின்ற வேத கால இந்துக்கள் நதிகளுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டினர். தாய்மார்களின் கருணையும் அளவற்றதன்றோ!

 

ரிக்வேதம் போற்றும் சரஸ்வதி!

 

நீயே சிறந்த தாய்

நீயே தலைசிறந்த நதி

நீயே கடவுள்

 

ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன. ஆரிய-திராவிட வாதம் பேசும் அறிவிலிகளுக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது! ஏனெனில் இந்திய நதிகளைக் கிழக்கிலிருந்து மேற்காக வருணிக்கின்றன இந்த நதி ஸ்துதி. ஆக வேத காலத்திலேயே கிழக்கில்- கங்கைச் சமவெளியில் – பெரிய நாகரீகம் நிலவியது. மேலும் ரிக் வேதத்தில் அதிகப் பாடல்களில் பாடப்படும் இந்திரனின் திசை கிழக்கு! ஆகவே இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள்! வந்தேறு குடியேறிகள் அல்ல!

இந்த துதிப்பாடல் சரஸ்வதி நதியை சட்லெஜ்-யமுனை நதிகளுக்கு இடையே வைக்கிறது

 

நதிகளில் எல்லாம் புனித மான சரஸ்வதி உயிர்த்துடிப்புள்ள நதி; மலையிலிருந்து கடல் நோக்கிச் செல்லும் இந்த நதி அபரிமிதமான வளத்த்தைச் சுரக்கிறது

 

இப்பேற்பட்ட சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது பற்றி மஹாபாரதமும் ஐதரேய, சதபத பிராமணங்களும் பேசுகின்றன.

 

1872ம் ஆண்டில் சி.எF ஓல்தமும் ( C F Oldham and R D Oldham) ஆர்.டி. ஓல்தமும் நடத்திய சர்வேயில் சரஸ்வதியும் அதன் உபநதிகளும் ஒரு காலத்தில் ஓடியதை உலகிற்கு அறிவித்தனர். சரஸ்வதி நதிக்கு யமுனையும் சட்லெஜ் நதியும் தண்ணீர் கொண்டுவந்தன என்றும் புவியியல் மாற்றங்களால் அவை விலகிச் செல்லவே சரஸ்வதியின் ஒளி மங்கியது என்றும் அவர்கள் எழுதிவைத்தனர்.

விஞ்ஞானிகள் என்ன கண்டார்கள்?

 

வி.எம்.கே.புரி, பி.சி.வர்மா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இந்த நதி அப்பர் ப்ளைச்டோசின் (UPPER PLEISTOCENE ) காலத்தில் இருந்தது,

கார்வால் இமயமலைப் பகுதியில் இருந்த பனிக்கட்டி ஆறுகள் உருகி இதற்கு தண்ணீர் அளித்தது. பின்னர் பனிக்கட்டி யுகத்தில் கதை மாறியது என்று சொன்னார்கள்.

 

(இந்தியாவின் முதல் அணுகுண்டு 1974லும் இரண்டாவது அணுகுண்டு 1998லும் வெடிக்கப்பட்டன)

1998 மே 11ல் பொக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்துச் சோதித்து உலகையே வியப்பில் ஆழ்த்திய போது, அந்த அணுகுண்டு வெடிப்பினால் நிலத்தடி நீருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்வதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது. அபோது அது குடி நீருக்குப் பயன்படுத்தக்கூடியது என்பதும் கீழேயுள்ள தண்ணீர் 8000 முதல் 14000 ஆண்டுப் பழமையானது என்றும் தெரியவந்தது.

 

இது தவிர மத்திய நிலத்தடி நீர் கமிஷன் 24 கிணறுகளை வெவ்வேறு இடத்தில் தோண்டி ஆராய்ந்ததில் 23 கிணறுகளின் நீர் தூய குடிநீர் என்றும் கண்டது.

 

இதிலிருந்து வரலாற்று நிபுணர்கள் கண்ட முடிவு:

கி.மு.6500 முதல் கி.மு3100க்கு இடைப்பட்ட காலத்தில் ஹரப்பா நாகரீகத்துக்கு முந்தைய சரஸ்வதி நதிதீர நாகரீகம் இருந்தது . அப்போதுதான் ரிக்வேதப் பாடல்கள் எழுந்தன. பின்னர் கி.மு3100 முதல் கி.மு 1900 வரை சிந்துவெளி/ஹரப்பன் நாகரீகம் இருந்தது.

கிமு 1900 முதல் கிமு 1000 வரை சரஸ்வதி-சிந்து நாகரீகம் படிப்படியாக அழிவு நிலை க்கு வந்து சரஸ்வதி நதி அடியோடு மறைந்தது. இதனால் மக்கள் அங்கேயிருந்து கங்கைச் சமவெளிக்குக் குடியேறினார்கள்.

 

இந்த தேதிகள், வரலாற்று ரீதியில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். ஆயினும் விரிவான ஆய்வுகள் மூலம் புதிர்களை விடுவிக்கலாம்.

 

1995 ஆம் ஆண்டு ஆய்வுகள்

 

ராஜஸ்தானிலுள்ள ஜைசால்மர் மாவட்ட விண்கல புகைப்படங்களை ஆராய்ந்தபோது சரஸ்வதி நதியின் மறைந்த தடயங்களில் சில பகுதிகள் தென்பட்டன. இது பற்றி பாபா அணுசக்தி விஞ்ஞானிகள் CURRENT SCIENCE கரண்ட் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதினர். 1995ல் டாக்டர் எஸ்.எம் ராவ், டாக்டர் கே.எம்.குல்கர்னி ஆகியோர் ஐசடோப் பிரிவைச் (ISOTOPE DIVISION) சேர்ந்தவர்கள் . அவர்கள் நிலத்தடி  நீரின் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்  ஐசடோப்புகளை ஆராய்ந்தனர். ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என்று அவர்கள் ஆய்வு முடிவுகள் காட்டின. இப்போது கங்கா நகர் மாவட்டத்திலுள்ள கக்கர் நதியின் வறண்ட நிலப்படுகைகள், பாகிஸ்தானிலுள்ள ஹக்ரா, நரா நதிகள் ஆகியன சரஸ்வதியின் ஒரு சில பகுதிகள். இன்னும் நிலத்தடியில் சரஸ்வதியின் நீர் உள்ளது கோடைகாலத்திலும் இந்த நீர், பயிர்கள் வளர உதவுகின்றன. ஜைசாலமர் பகுதியில் மிகக்குறைந்த அளவு மழை பெய்தாலும் நிலத்துக்கு 50-60 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இவை எல்லாம் சரஸ்வதி நதியின் மிச்ச சொச்சங்களே என்றும் கண்டனர்.

 

நிலத்தடி நீர் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை ரேடியோ கார்பன் தேதிகள் நிர்ணயிக்கின்றன.

 

 

1910 ஆம் ஆண்டில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட ஜி.இ. பில்க்ரிம் ( G E PILGRIM) என்பவரும் மிகப் பழங்கால வண்டல் மண் படுகைகள் காணப்படுவதாகவும் இமயத்தின் அடிவாரத்திலிருந்து சிந்து வளைகுடா வரை காணப்படும் இப்படுகைகள் சிவாலிக் என்ற நதியாக இருக்கலாம் என்றும் எழுதினார்.

ரிக்வேத சரஸ்வதி பற்றி அவருக்குத் தெரியாது.

ரிக்வேதம் இந்த நதியை நதிகளுக்கு எல்லாம் தலையாயது என்று பாராட்டியதை அவர் அறியார்.

அம்பிதமே நதிதமே தேவிதமே சரஸ்வதி (ரிக்.2-41-16) புகழ்கிறது

 

(சிறந்த தாய், சிறந்த நதி,  சிறந்த தேவி சரஸ்வதி)

 

மஹோ ஆர்ணா சரஸ்வதி ப்ரசேதயதி கேதுன தியோ விஸ்வ  விரஜதி 1-3-12

 

சரஸ்வதி கடல் போன்றது; அவள் ஒளிவீசுகிறாள்; எல்லோருக்கும் ஊற்றுணர்ச்சி ஊட்டுபவள் அவளே

 

நி த்வததே வர அப்ருதிவ்ய இளைஸ்பதே சுதிநத்வே அஹ்னம்; த்ருஷத்வயம் மானுஷே அபயயாம் சரஸ்த்வயாம் ரெவத் அக்னே திதி (3-23-4)

 

ஓ அக்னியே நாங்கள் உன்னை பூமியின் புனிதமான இடத்தில் — இலா பூமியில்-  ஒளிமிகு நாட்களில் ஏற் றியுள்ளோம். த்ருஷத்வதி, அபயா, சரஸ்வதி ஆறுகளின் கரை மீது மானுடர்களுக்காகப் பிரகாசிப்பாயாக.

சித்ர இத் ராக ராஜக இத் அன்யகே சரஸ்வதீம் அனு: பர்ஜன்ய இவ ததநதி வர்ஷ்த்ய சஹஸ்ரம் அயுத ததாத் 8-21-18

 

சரஸ்வதி தீரத்தில் வசிக்கும்  புகழ்மிகு அரசன், மற்ற எல்லாரும் இளவரசர்கள். மழைக்கடவுள் மழையைப் பொழிந்து தள்ளுவது போல, அவன் பத்தாயிரம் பசுமாடுகளை ஆயிரம் தடவை தருகிறான்

அயஸி புரஹ; விஸ்வ ஆபோ மஹின: சிந்துர் அன்ய: சுசிர் யதி கிர்ப்ப்ய அ ஆ சம்த்ராத் 7-95-1/2

 

சரஸ்வதி ஒரு வெண்கல நகரம்; எல்லா நதித் தீரங்களைளையும் , நீர் நிலலைகளையும் விஞ்சி நிற்கிறது. மலையிலிருந்து சமுத்ரம் வரை தூய நீராக ஓடுகிறாள்

 

இப்படி எல்லா மண்டலங்களிலும் சரஸ்வதி புகழ்ப்படுவதால் ரிக் வேதம் என்பது கி.மு.3000க்கும் முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரைகளில் ஒலித்திருக்க வேண்டும்!

 

இந்தியாவிலிருந்து பாரசீக நாட்டுக்கு (ஈரான்) குடியேறிய ஜொராஸ்டரும் சரஸ்வதியைப் போற்றுகிறார்.

மனு தர்ம சாஸ்திரமும் இந்த நதியைப் புகழ்கிறது

சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடைப்பட்ட பூமியே கடவுளால் உண்டாக்கப்பட்டது. இதுவே பிராமணர்கள் வாழுமிடம் (மனு 2-17-8)

 

ஆனால் வேத காலம் முடிவதற்கு முன்னரே சரஸ்வதி மறையத் துவங்கியதை பஞ்சவம்ச பிராமணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது

 

 

ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஓடிய சரஸ்வதி பூகர்ப்ப மாற்றங்களால் நான்கு முறை திசை மாறி ஓடியது.

 

டெக்கான் காலேஜ் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிக் கழகம் சரஸ்வதி நதியின் பாதை எப்படி எல்லாம் மாறியது என்று ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. கிமு4000 ஆம் வாக்கில் இமயமலையில் தோன்றிய சரஸ்வதி, மதுரா, கட்சிலுள்ள பஞ்சபத்ரா வழியாக ஓடியது. நாலாவது முறை திசை மாறியபோது அது சிந்து நதியில் இணைந்து தனது பெயரையும் புகழையும் இழந்தது. யமுனையும் சட்லெஜ்ஜும் தண்ணிரைக் கொணந்து கொட்டிவிட்டு யமுனை நதி திசை மாறிக் கங்கையில் கலந்தவுடன் சரஸ்வதியின் வளம் குறைந்தது

 

ஹரப்பன் நாகரீக நகரங்களான லோதல் காலிபங்கன் ஆகியன சரஸ்வதி நதிப் ப டுகையிலேயே அமைந்துள்ளன.

 

5000 ஆண்டுகளுக்கு முன் இமயமலையின் சிவாலிக்  குன்றுகளில் உதயமாகி ஹிமாசல் பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் வழியாக ஓடி அரபிக் கடலில் கலந்த சரஸ்வதியின் கதை இது!

 

பேராசிரியர் வைத்யா போன்றவர்கள் சரஸ்வதி நதியின் கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தமிழிலும் சரஸ்வதியின் கதை வெளியாகியுள்ளது. நான் கொடுத்தது எல்லாம் பத்திரிக்கை செய்திகளின் தொகுப்பகும்.

 

இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்பட்டதே சரஸ்வதின் மறைவுக்குக் காரணம்.

 

சரஸ்வதி நதி பற்றிய வேத, இதிஹாச, பிராமன நூல்கள் தகவல்களை வரிசைப் படுத்தினால் வேத காலம், சிந்துவெளி, சரஸ்வதி நாகரீக காலங்களை உறுதிப்படுத்திவிடலாம்.

 

Geo Morphologist Dr Amal Kar ஜியோ மார்ப்பாலஜிஸ்ட டாக்டர் அமல் கர் சில சுவையான விஷயங்களைச் சொல்லுகிறார்:

 

பத்து லட்சம் ஆண்டுகளுக்கும் 40,000 ஆண்டுகளுக்கும் இடையே சரஸ்வதி நதி தார்ப் பாலைவனம் வழியே ஓடியது

லோக்பட் என்னும் துறைமுக நகரம் கல்விக்கும் வணிகத்துக்கும் பெயர்பெற்ற இடம்.  இந்த நதிக்கரையில் இருந்தது.

மஹாபாரதம் குறிப்பிடும் நாராயண சரோவர் இதன் கரையில் இருந்தது

 

ஹரப்பன் நாகரீகத்துக்கும் முந்தைய அலிபங்கன், கலிபங்கன் நாகரீகம் இதன் கரையில் செழித்தோங்கியது.

சதத்ரு (சட்லெஜ்) என வேதம் குறிப்பிடும் நதி இதன் உபநதியாகும்.

 

மஹாபாரதம் சப்த சரஸ்வதி என்னும் நதி பினாசன் (விநாசன்) என்னும் இடத்தில் மறைவதைக் குறிப்பிடுகிறது.

 

TAGS: சரஸ்வதி, கக்கர், வேத நதி, நதி துதி

 

–SUBHAM–