கச்சேரியில் ‘டிங்கிள், டிங்கிள் லிட்டில் ஸ்டார்!’ ஆங்கிலேயர் வேதனை (Post No.6954)

Compiled by London  Swaminathan

swami_48@yahoo.com

 Date: 30 AUGUST 2019


British Summer Time uploaded in London – 15-49

Post No. 6954

 Pictures are taken FROM VARIOUS SOURCES. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய பாடம்- வட இந்திய ஹோட்டல்களில் மசாலா தோசை, இட்லி, வடை கேட்காதே; தென்னிந்திய ஹோட்டல்களில் பராட்டா, குருமா முதலியன கேட்காதே; இரண்டு இடங்களிலும் சைனீஸ் நூடில்ஸ் Chinese Noodles ஆர்டர் செய்யாதே.

செய்தால் நீண்ட நேரம் சென்று அந்தப் ‘பொருள்கள்’ வரும்;அது அதுவாக இராது.

இதே போல ஹிந்துஸ்தானிக்காரர்

தெலுங்கு, கன்னடக்காரர்கள், கர்நாடக சங்கீத- குறிப்பாக- தமிழ்ப் பாட்களைப் பாடும்போது உச்சரிப்புப் பிழைகள் வருவதை நான் லண்டலிலேயே கேட்டிருக்கிறேன்—“கெட்டும் இருக்கிறேன்”.

தமிழ்ப் பாடகர்களின் இந்தி, மராட்டி உச்சரிப்பும் இப்படித்தான்.

லண்டனில் ஆடல், பாடல் கற்றுக்கொண்ட  ஒரு பெண், — ஆசிரியர் சொன்னதை ஆங்கிலத்தில் எழுதும் போது,  பாரோ (baaro) கிருஷ்ணையா என்பதை கடன்வாங்கு (BORROW பார்ரோ) கிருஷ்ணையா என்று எழுதி படித்துக் கொண்டிருந்ததை என் நண்பர் பார்த்துவிட்டார். பாவம் அந்தப் பெண் நாட்டியம் ஆடினால் “கடன் வாங்கு கிருஷ்ணையா” என்றல்லவோ அபிநயம் பிடிப்பாள்! ஆகப் பொருள் தெரியவிட்டால்,அர்த்தம், அனர்த்தம் ஆகிவிடும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் மதுரையில் R S S விழா ஒன்றில் ‘அப்னி தரத்தி, அப்னா அம்பர் அப்னா ஹிந்துஸ்தான், அப்னா ஹிந்துஸ்தான்’  என்ற இந்தி மொழி   தேசபக்தப் பாடலைப் பாடி முடித்தேன். விழா முடிந்தவுடன் “பாட்டுப் பாடி கொன்னுட்டீங்களே” என்றார் ஒருவர். அது பாராட்டு இல்லை, பாட்டை நான் கொலை செய்ததை அவர் அப்படிச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளக்கூட எனக்கு சிறிது நேரம் பிடித்தது (சரியான ட்யூப்ப் லைட்டு நான்!)

xxx

75 ஆண்டுக்கு முந்திய அருமையான தமிழிசை மாநாட்டு மலர் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. அதில் சிலர் ‘கைபர் கணவாய்’ போன்ற சுடுமொழிகளையும் இன்னும் சிலர் தமிழ் இலக்கியம் 15,000 ஆண்டுப் பழமையுடையது என்ற உளறல் மொழிகளையும் உதிர்த்து இருந்த போதிலும் பல அருமையான கட்டுரைகளும்,நூற்றுக் கணக்கான அரிய பாடகர் படங்களும் அதிலிருந்து கிடைத்தன.

அதில் 1943-ம் ஆண்டில் ராவ் பகதூர் சம்பந்த முதலியார் பேசிய பேச்சு பொருள் பொதிந்தது .அவர் பல சுவையான சம்பங்களைச் சொல்லி, அதன் கருத்துக்களை விளக்குகிறார்.

கச்சேரிக்கு வந்த ஆங்கிலேயரை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு பாடகி, TWINKLE, TWINKLE LITTLE STAR ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை ‘கன்னா பின்னா’ என்று பாடி ஆங்கிலேயரை வேதனைப் படுத்தியதையும் இன்னும் சிலர் தேவாரம், தெலுங்கு கிருதிகளைத் தாறுமாறாகப் பாடி அவைகளைக் ‘கொலை செய்ததையும்’  சுவைபட எழுதி இருக்கிறார்.

சில சுவையான சம்பவங்கள் இதோ:–

—subham–