விஞ்ஞானிகள், கணித மேதைகள் ஜோக்குகள்! (Post No.3915)

Written by S NAGARAJAN

 

Date: 17 May 2017

 

Time uploaded in London:-  6-27 am

 

 

Post No.3915

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

நகைச்சுவை விருந்து

 

விஞ்ஞானிகள், கணித மேதைகள் பற்றிய ஜோக்குகள்!

 

ச.நாகராஜன்

 

 

ஆஹா! அக்கவுண்டண்ட்!

 

,டாக்டர்கள், விஞஞானிகள், அபாரமான கணித மேதைகள் ஆகியோரைப் பற்றி வெளி வந்துள்ள ஜோக்குகள் ஏராளம்.

அவற்றில் சில:

 

ஒரு டாக்டர், ஒரு எஞ்னியர் மற்றும் ஒரு அக்கவுண்டண்ட் ஆகியோர் உலகின் முஜிதல் தொழில் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

டாக்டர் ஆவேசத்துடன் கூறினார்: “ ஏவாள் ஆதாமின் விலா எலும்பிலிருந்தே படைக்கபட்டாள், தெரியுமா? அது ஒரு சர்ஜிகல் ஆபரேஷன் தானே! டாக்டர் தொழில் தான் முதல் தொழில்!

எஞ்சினியர் கோபத்துடன் அதை மறுத்துக் கூறினார்: “ஆதாமையும் ஏவாளையும் கடவுள் படைப்பதற்கு முன்னர் அவர் ஒழுங்கற்ற குழப்பமான நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு ஒழுங்கை நிலை நாட்டினார். குழப்பத்தை முடிவு கட்டி ஒழுங்கை நிலை நாட்டுவது ஒரு எஞ்சினியர் செய்யும் வேலை. ஆகவே எஞ்சினியரிங் தான் முதல் தொழில்”

மிக மெதுவாக அக்கவுண்டண்ட் கேட்டார்” “அது சரி, குழப்பத்தை உருவாக்கியது யார்? அது தானே எங்கள் வேலை!”

 

நாஸா விஞ்ஞானியின் குழந்தை

 

நாஸா விஞ்ஞானி ஒருவர் தன் குழந்தைக்கு விண்வெளி பற்றி அன்றாடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் குழந்தையிடம், “ நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டார்.

நான் விண்வெளியில் பறக்கும் வீரனாக ஆக விரும்புகிறேன் என்றது குழந்தை.

விஞ்ஞானிக்கு ஒரே சந்தோஷம். “சரி, விண்வெளியில் எங்கு போகப் போகிறாய்?” என்று கேட்டார் அவர்.

“சந்திரனுக்கு மட்டும் போக மாட்டேன். ஏனெனில் அங்கு ஏற்கனவே சிலர் சென்று சாதனை படைத்து விட்டனர்” என்று தீர்க்கமாகக் கூறிய குழந்தை, “நான் சூரியனுக்குப் போகப் போகிறேன்” என்றது.

“ஐயோ! சூரியனுக்கு நீ போக முடியாதே! அது பயங்கர வெப்பத்துடன் இருக்குமே” என்றார் விஞ்ஞானி.

“அது பற்றி கவலைப்பட வேண்டாம். நான் ராத்திரியில் தான் போவதாக உத்தேசம்” என்று பதில் சொன்னது குழந்தை!

 

இயற்பியல் விஞ்ஞானியும் கணித மேதையும்

 

ஒரு இயற்பியல் விஞ்ஞானியும் ஒரு கணித மேதையும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

கணித மேதை எதையும் துல்லியமாக கணிதரீதியாக மட்டுமே அணுகுவார்.

விஞ்ஞானி மேதையிடம் சொன்னார்: “நண்பரே! காரின் சிக்னல் வேலை செய்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அது சரியாக வேலை செய்கிறதா பாருங்கள்” என்றார்.

விஞ்ஞானி சிக்னல் ஸ்விட்சைப் போட்டார்.

மேதை கூறினார்: “ ஆஹா! இப்போது அணைந்து விட்டது. இப்போது எரிகிறது. இப்போது அணைந்து விட்டது. மறுபடியும் எரிகிறது…”

விஞ்ஞானி தலையில் கையை வைத்துக் கொண்டார்!

***