கணித மேதை, அழகி, உயிரிழந்த சோகக் கதை

HypatiaQuote

Compiled by London swaminathan

Article No.1916; Dated 7 June 2015.

Uploaded at London time: காலை 6-32

பழங்கால உலகில் இந்தியாவில் மட்டுமே பெண்கள் கல்வி கற்றனர். உயர் நிலையில் இருந்தனர்.சுமேரிய, எகிப்திய,கிரேக்க நாட்டு வரலாற்றைப் படித்த்வர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை இது. எதை எழுதினாலும் அதற்கு சான்று தருவது அறிவுடைமை; மேலும் அது நம் கடமை.

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களின் பாடல்கள் உள. அதற்கு 1700 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்கள் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தோன்றுவதற்கு முன்னர் பீஹாரிலுள்ள பாட்னா நகரில் (பாடலிபுத்ரம்) இருந்து அசோகனின் மகள் சங்க மித்திரை கப்பலில் இலங்கைக்குச் சென்று புத்தமதப் பிரசாரம் செய்தாள். அவள் ஒரு அறிவாளி. புத்த மதத்தில் மேலும் பல தலைவிகளும் இருந்தனர். இதற்கெல்லாம் மிக முன்னதாக, அதாவது கி.மு 850-ல், இற்றைக்கு 2850 ஆண்டுகளுக்கு முன், ஜனக மாமன்னன் கூட்டிய அகில இந்திய தத்துவ மஹாநாட்டில் பல மாநில த்தினர் கலந்து கொண்டனர். அந்த அறிஞர்களின் பெயர்ப் பட்டியல் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தில்  உள்ளது. அதில் கலந்துகொண்ட மகளிர் அணியில் கார்கி வாசக்னவி என்ற பேரறிவாளி, கூட்டத்தில் எழுந்து பேசினாள். அப்போதைய பேரறிஞர் யாக்ஞவல்கியர் மீது கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

ஆதிசங்கரருக்கும் மண்டன மிஸ்ரருக்கும் நடந்த வாதத்தில் மண்டன மிஸ்ரரின் மனைவி சரஸவாணிதான் ஜட்ஜ்/ நடுவர். அவ்வளவு பெரிய அறிவாளி அவள். ஆயினும் தன் கணவர் பங்கு பெறுவதால் அவள் ஒரு தந்திரம் செய்தாள். அவள் அறிவாளி மட்டும் அல்ல; ஒரு விஞ்ஞானி! ஒரு விஞ்ஞானி மட்டும் அல்ல; பெரிய சைகாலஜிஸ்ட் – அதாவது உளவியல் மாமேதை. அவளுக்குத் தெரியும் யார் உணர்ச்சி வசப்பட்டு வாதாடுகிறார்களோ அவர்கள் உடம்பில் சூடு ஏறும்; குறைகுடம் கூத்தாடும், ஆனால் நிறைகுடம் தழும்பாது என்று. ஆகையால் இருவர் கழுத்திலும் மலர் மாலையைப் போட்டுக் கொள்ளவைத்து, முதலில் யார் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று அறிவித்துவிட்டாள். அவர் கணவரின் மாலை முதலில் வாடவே, அவரே தோற்றவர் என்று அறிவித்துவிட்டு, தன்னுடன் வாதத்துக்கு வரும்படி அழைத்து, பிரம்மச்சாரி சங்கரரிடம் ‘செக்ஸ்’ பற்றிய கேள்விகளைக்கேட்டு அவரைத் திணறடித்தாள். இறுதியில் அவளும் தோற்றுப்போனாள். அப்பேற்பட்ட மாமேதையான பெண்மணிகளை உடையது நம் நாடு.

மேலை உலகத்திலோ பெண்களை மட்டம் தட்டி வைத்திருந்தனர். ஷீபா மஹாராணி, கிளியோபாட்ரா ஆகியோர் பெயர்கள் அடிபட்டாலும் அவர்களின் ‘அழகே’ அதிகம் பாராட்டப்பட்டுள்ளது. அவர்களின் ‘அறிவு’க்குச் சான்று பகரும் கவிகள் ஏதுமில! நமக்கோ இலக்கியச் சான்றுகள் உள!!

அலெக்ஸாண்டர் படை எடுத்தபோது உலகில் பல நகரங்களை ஏற்படுத்தினார். அதில் ஒன்று எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையில் அமைந்த அலெக்ஸாண்டிரியா. அதில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பத்து லட்சம் மக்கள் வாழத் துவங்கினர். இந்திய அறிஞர்களும், வணிகர்களும் அங்கு வசித்த வரலாற்றுச் சான்றுகளும் உண்டு. அந்த நகரில் மியூசியம், பல்கலைக் கழகம் எல்லாம் ஒன்றாக இணைந்திருந்த இடத்தில் கிரேக்க அறிஞர் தேயன் (தேவன்) பாடம் சொல்லிக் கொடுத்தார். அவரது மகளின் பெயர் ஹைபேசியா. அவள் நன்கு படித்து கணித மேதை ஆனாள். அவள் பேரழகி. தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்கள் தன் அழகில் மயங்கி புத்தி பேதலித்து விடக்கூடாது என்று எண்ணி, திரைக்குப் பின்னால் நின்றுதான் பாடம் சொல்லிக் கொடுப்பாள். அவள் பிறந்தது கி.பி 350க்கும் 370 க்கும் இடையில் என்பது ஆராய்ச்சியாளரின் கணிப்பு.அப்போது ரோமானிய ஆட்சி எகிப்து வரை பரவி இருந்தது.

hypatia 2

ஹைபேசியா மற்றும் அவரது தந்தை ஆகியோர் கிறிஸ்தவ மதத்தை ஏற்கவில்லை. ஆகையால் கிறிஸ்தவ மதத்தினருக்கு அவளைப் பிடிக்கவில்லை. இந்து மத தத்துவத்துக்கு இணையான (மறுபிறப்பு) கொள்கைகளைப் பரப்பிய சாக்ரடீஸ்-பிளாட்டோ ஆகியோரின் கொள்கைகளை ஹைபேசியா குடும்பம் பின்பற்றியது.

இதற்கிடையில் அலெக்சாண்டிரியாவில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டு யூதர்களூம் கிறிஸ்தவர்களும் வன்முறையில் இறங்கினர். இருதரப்பிலும் மதத்தலைவர்கள் படுகொலையுண்டனர்.

கான்ஸ்டாண்டி நோபிள் நகரிலிருந்து வந்த வெறிபிடித்த பாதிரியார் சிரில் என்பவருக்கும், ஹைபசியாவின் மாணவரும் ரோமானிய கவர்னருமான ஆரிஸ்டஸ் என்பவருக்கும் மோதல் அதிகரித்தது. கி.பி 415ல் பெரிய ரோமானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹைபேசியா, கணிதம் மற்றும் தத்துவ பாடத்தைப் போதித்ததோடு பலரை வாதுக்கு அழைத்து வெற்றியும் பெற்றுவந்தாள். இந்தியாவில் காசி மநகரத்தில் தெரு மூலைகளில் அறிஞர்கள் நின்று கொண்டு எல்லோரையும் வாதுக்கு அழைப்பர். பெரிய பட்டிமன்றங்கள் நடக்கும். இதுபோல ஹைபேசியாவும் செய்து வந்ததால் ரோமானிய எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்த அன்று அவருடைய வீட்டில் ஒரு கிறிஸ்தவ கும்பல் புகுந்து அவரை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்து வந்தனர். பின்னர் அவளை உயிருடன் எரித்துக் கொன்றனர். இதுபற்றி சாக்ரடீஸ் ஸ்காலஸ்டிகஸ் என்ற வரலாற்று அறிஞர் அந்தக் காலத்திலேயே எழுதி வைத்தது இப்பொழுது விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் உள்ளது.

இந்தப் படுகொலைக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் விஞ்ஞானம் என்பது இருளில் மூழ்கியது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலிலியோ, கோபர்நிகஸ் ஆகியோரையும் கொடுமைப் படுத்தினர். இதற்குப் பெரிய எதிர்ப்பு கிளம்பியவுடன் கி.பி.1500 வாக்கில் மறுமலர்ச்சி உதயமானது.

ஹைபேசியா பல நூல்களை எழுதினார். நீரை அளக்கும் பல கருவிகளைக் கண்டுபிடித்தார், ஆனால் ஒன்றுகூட இன்று மிஞ்சவில்லை. இதற்குக் காரணம், முஸ்லீம்கள் நாலந்தா பலகலைக்கழக நூல்நிலையத்தை எரித்து நம்முடைய நூல்களை எப்படி சாம்பலாக்கினரோ அப்படியே கி.பி 640ல் ஒரு அராபிய முஸ்லீம் கும்பல் அலெக்ஸாண்டிரியா நூலகத்தையும் எரித்துச் சாம்பலாக்கியது. இதன் விவரங்களும் கலைக் களஞ்சியங்களில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களின் பெயர்களை மட்டுமே நாம் அறிவோம். அவை அனைத்தும் இன்றும் சாம்பல் ரூபத்தில் பீஹாரில் நாலந்தா பலகலைக் கழகத்தின் அடியில் உள்ளன. இதே கதை அலெக்ஸாண்டிரியாவிலும் நடந்தது.

நாம் இவர்களை மன்னித்துவிடலாம். ஆனால் வரலாறு இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது.

இந்துக்கள் கணித மேதைகள்!

Relative_satellite_sizes

“சஹஸ்ரகோடி யுகதாரிணே நம:”–

உலகிற்கு கணிதத்தைக் கற்பித்தவர்கள் இந்துக்கள். எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதினால், நான் எழுதுவதையே படிப்பதை நிறுத்தி விடுவார்கள். ஆகையால் நான் ஆதாரத்துடன் தான் எழுதுவேன். கின்னஸ் சாதனைப் புத்தகத்தை எடுத்தால் பழங்காலத்தில் எழுதப்பட்ட பெரிய எண் ஒரு சமண நூலில் இருப்பதைக் காட்டுவார்கள்.

“சஹஸ்ரகோடி யுகதாரிணே நம:”–என்று விஷ்ணு சஹஸ்ரநாம தோத்திர பலஸ்ருதியில் ஒரு வரி வருகிறது. இதன் பொருள் ‘ஆயிரம் கோடி யுகங்களை இயக்குபவர்’. அதே துதியில் ஏராளமான இடங்களில் ‘சஹஸ்ரம்’ (ஆயிரம்) வருகிறது. வள்ளுவர் ஒரு குறளில் அடுக்கிய கோடி வரும் என்று சொல்வதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம். இன்னொரு குறளில் 70 கோடி (குறள் 639) என்று சொல்கிறார்.
ஆயிரம் என்ற சொல், ‘சஹஸ்ரம்’ என்பதிலிருந்து வந்தது என்பதை மொழிநூல் வல்லுநர்கள் அறிவர். கோடி என்பதும் சம்ஸ்கிருத் சொல்லே.

ஒரு யுகம் என்பது கிருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களில் ஒன்றை மட்டும் குறிக்காமல் சதுர்யுகம் (4 யுகம்) என்ற பொருளிலேயே கையாளப்பட்டிருக்கவேண்டும்.
சதுர் யுகக் கணக்கு:

360 மனித ஆண்டுகள்= ஒரு தேவ ஆண்டு
12,000 தேவ ஆண்டுகள்= ஒரு சதுர் யுகம்=
4,32,000 ஆண்டுகள்

இதுபோல ஆயிரம் கோடி யுகங்கள்!! வெள்ளைக்காரர் கணக்கில் 10,000 மில்லியன் யுகங்கள்! (ஒரு கோடி என்பது பத்து மில்லியன்=நூறு லட்சம்).
அதாவது 4,32,000X 1000 கோடி.
அதாவது….
432000 X100000000000=43200000000000000 ஆண்டுகள்.

(இன்னும் ஒரு சுவையான விஷயம்:- 2000 சதுர்யுகம்= பிரம்மாவின் ஒரு நாள். இதுபோன்ற ஆண்டுகளில் பிரம்மாவின் ஆயுள் 100 வருஷம்; என்ன ஐயா! ஒரே கப்சாவாக இருக்கிறது என்று யாராவது சொன்னால் முதல் முதல் “சைன்ஸ் Fபிக்சன்” SCIENCE FICTION கதைகள் எழுதிய பெருமையையாவது இந்துக்களுக்குக் கொடுக்கவேண்டும். மற்ற மதத்தினர் உலகம் கி.மு.4100 வில் துவங்கியது என்று தெரு மூலைகளில் நின்று பிரசாரம் செய்த காலத்தில் இந்துக்கள் மட்டும் இன்றைய வான நூல் நிபுணர்கள் கூறுவதை அன்றே எழுதிவிட்டனர். காலம், கணிதம்— இவை இரண்டிலும் இந்துக்களுக்கிருந்த அறிவு வியப்பூட்டுகிறது. பகவத் கீதையின் விஸ்வரூபதரிசனப் பகுதியைப் படித்துவிட்டு கருந்துளைகள்=பிளாக் ஹோல் BLACK HOLES பற்றிப் படித்தால் நான் சொல்வது விளங்கும்).

big, bigger, biggest

இந்துக் குழந்தைகள் பிள்ளையாரை வணங்கும் சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் கூட ‘சூர்ய கோடி சமப்ரபா’ என்று கணபதியைப் புகழ்வர். இதில் இரண்டு விஷயங்கள் இருப்பதை முன்னரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டேன். கோடி கோடி கோடி சூரியன்கள் இருப்பது இப்போதுதான் விஞ்ஞானிகளுக்கே தெரியும். ஆனால் அந்தக் காலத்திலேயே இது ஸ்லோக வடிவில் குழந்தைகளுக்குக் கூட சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஒருவருக்கு கற்பனையில் இதுபோல ஒரு சொற்றொடர் வரக் கூட விஞ்ஞான அறிவு இருக்கவேண்டும். இரண்டாவது விஷயம் தசமஸ் ஸ்தானம். இந்த ‘டெசிமல் சிஸ்டத்தை’ DECIMAL SYSTEM எல்லா சம்ஸ்கிருத தமிழ் நூல்களிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் காணலாம்.
ஆதி சங்கரர் விவேக சூடாமணியில்:

அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி
அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்
முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!—என்கிறார். எவ்வளவு பெரிய எண்களைச் சொன்னாலும் அவைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பொது மக்களிடையே கணித அறிவு இருந்ததை இது காட்டுகிறது. தமிழ் கல்வெட்டுகளில் நூறாயிரம் (லக்ஷம்) என்ற அழகிய சொல்லைக் காண்கிறோம்.

1583 ,inscription in Rome
Year 1583 in an inscription Rome

ரிக்வேதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எங்கெங்கெல்லாம் எண்கள் வருகிறதோ அங்கெங்லாம் ஒரு ‘ஹைலைட்டர் HIghlighter ‘பேனாவால் கலர் இட்டால் 100, 1000, 100000 என்பனவற்றை நிறைய இடங்களில் காணலாம். இதற்கு 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் திருக்குறள் எழுதிய வள்ளுவனும் கோடி, ஆயிரம் என்ற சம்ஸ்கிருத சொற்களையும் பல இடங்களில் பயன் படுத்தி இருப்பதைக் காணலாம். விக்ரமாதித்தன் கதைகளிலும் உன் தலை சுக்கு “நூறாக” வெடித்துவிடும் என்று சாபம் கூட டெசிமல் Decimal எண்ணில்தான் வரும்!
1606
Year 1606 in Roman letters

மேலை நாட்டில் இந்த தசமஸ் ஸ்தான முறையையும் இந்து எண்களையும் பயன்படுத்துவது கடந்த பல நூற்றாண்டுகளாகத்தான். அதற்கு முன் அவர்கள் எண்களை எழுதுவதற்கு ஆங்கில (ரோமன் Roman) எழுத்துக்களையே பயனபடுத்தினர். இது அதி பயங்கர குழப்பத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தது. இன்றும் கூட லண்டனில் பல கட்டிடங்களில் இப்படிப் பழங்கால முறையில் எழுதப்பட்ட ஆண்டுகளைக் காணலாம். இப்போது வெள்ளைக்கார குழந்தைகளுக்குக் கூட அது என்ன என்று படிக்கத் தெரியாது. அராபியர் மூலம் இந்துக்கள உலகிற்குக் கொடுத்த இந்து (1,2,3,4,5………..) எண்களே உலகம் முழுதும் பயன்படுத்தப்படுகிறது.

tall taller tallest

ஏனைய மத நூல்களில் வரும் எண்கள் மிகவும் சிறியவை. காலத்தைப் பற்றியும் கணிதத்தைப் பற்றியும் இந்து சாத்திரங்களில் இருக்கும் விஷயங்கள் மிகவும் அபூர்வமான கருத்துக்கள். ஐன்ஸ்டைன் போன்ற அறிஞர்கள் அறிந்ததைவிட நம்மவர்களுக்கு கூடுதல் ஞானம் இருப்பதை “எதிர்காலக் கண்டுபிடிப்புகள் பற்றி இந்துக்களின் ஆரூடம்” Hindus’ Future Predictions Part 1, Part 2 என்ற இரண்டு பகுதிக் கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன்.

எனது முந்தைய 625 கட்டுரைகள் பற்றி அறிய தொடர்பு கொள்ளவும்:

Contact London Swaminathan:– swami_48@yahoo.com
Please read my earlier articles on Numbers:
1)Hindu’s Magic Numbers 18, 108, 1008 (Posted on 26 November 2011)
2)MOST HATED NUMBERS 666 and 13 (Posted on 29 July 2012)
3)Amazing TAMIL Mathematics (Posted on 8 August 2012)
4)தமிழர்கள் கணித மேதைகள் (Posted on 8 August 2012)