அழகிக்கு நான்கு நெற்றி, ஐந்து காதணி, ஆறு …….. ஒரு புதிர் பாடல்! (Post No.7545)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7545

Date uploaded in London – – 7 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அழகிக்கு நான்கு நெற்றி, ஐந்து காதணி, ஆறு மார்பகங்கள், ஏழு கண்கள் – ஒரு புதிர் பாடல்!

ச.நாகராஜன்

மதுரகவிராயரின் பல பாடல்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் பார்த்து விட்டோம்.

இன்னும் ஒரு பாடல் இது.

புதுமையான புதிர் பாடல் இது.

துரைரங்கன் என்னும் ஒரு பிரபுவின் மீது அவர் பாடிய இந்தப் பாடலில் அவரை, பாடலில் உள்ள புதுமையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிறார் கவிராயர் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

பாடல் இதோ:

துங்கவரை மார்பா துரைரங்க பூபதியே

இங்கோர் புதுமை யியம்பக் கேள் – பங்கயக்கை

ஆயிழைக்கு நான்குநு தலைந்துகுழை யாறுமுலை

மாயவிழி யேழா மதி

பாடலின் பொருள் :

துங்கம் – பரிசுத்தமாகிய

வரை – மலை போன்ற

மார்பா – மார்பினை உடையவனே

துரைரங்க பூபதியே – துரைரங்கன் என்னும் பூபதியே

இங்கு  – இவ்விடத்தில்

ஓர் புதுமை இயம்பக் கேள் – ஒரு புதிய செய்தி உண்டு; அதைச் சொல்கிறேன்; கேட்பாயாக (அது என்னவெனில்)

பங்கயக் கை – தாமரை மலர் போன்ற கைகளை உடைய

ஆயிழைக்கு – அழகிய பெண்ணுக்கு

நான்கு நுதல் – நான்கு நெற்றிகள்

ஐந்து குழை – காதணி ஐந்து tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆறு முலை – மார்பங்கள் ஆறு

மாய விழி ஏழாம் – வஞ்சமுள்ள (மயக்கும்) கண்கள் ஏழு

மதி – தேர்ந்து நீயே ஆலோசித்து இதை அறிவாயாக!

பாடலின் பொருளை துரைரங்க பூபதி அறிந்து கொண்டு மதுரகவி ராயருக்குப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டினார்.

பாடலில் மறைந்திருக்கும் பொருள் தான் என்ன?

ஆயிழை என்றால் கன்னி (ராசி)

மேஷம், ரிஷபம், மிதுனம்,கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியவை பன்னிரெண்டு ராசிகள் tamilandvedas.com, swamiindology.blogspot.com

இவற்றில் கன்னி ராசிக்கு நான்காவது ராசி  தனுர் ராசி.

தனுர் என்றால் வில் என்று பொருள்

கன்னி ராசிக்கு ஐந்தாவது ராசி மகரம்.

மகரம் என்றால் மீன் என்று பொருள்.

கன்னி ராசிக்கு ஆறாவது ராசி கும்பம். அதாவது குடம்.

கன்னி ராசிக்கு ஏழாவது ராசி மீனம். அதாவது கெண்டை மீன்.

பாடலில் புலவர் கூறிய கருத்து;

அழகிக்கு வில்லை நிகர்த்த நெற்றியும்

மகர மீனுருவை ஒத்த காதணியாகிய மகர குண்டலமும்

குடம் போன்ற மார்பகங்களும்

கெண்டை மீன் போன்ற கண்களும் உள்ளன.

இதை ஆராய்ந்து அறிக.

 ஜோதிடத்தில் அழகியைச் சேர்த்துப் பாடிய சமத்காரப் பாடல் இது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்னொரு சமயம் மதுரகவிராயர் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தார்.

அபார அழகு. அசந்து போனார். பாடினார் ஒரு பாடல் இப்படி :-

மூவென்ப தென்பதிலோர் நாளில்லை மொய்வனத்தில்

தாவுந் தனிமிருகந் தானில்லை -நேரே

வளையா நடையில்லை வாரிறுக விம்மும்

முலையாளை யான் முயங்குதற்கு

பாடலின் பொருள் :

வார் இறுக – கச்சு இறுகும்படி

விம்மும் முலையாளை – பருத்த மார்பகங்களை உடையவளை

யான் முயங்குவதற்கு – நான் கட்டித் தழுவுவதற்கு

மூவொன்பது என்பதில் – மூன்று ஒன்பது அதாவது இருபத்தேழு நட்சத்திரங்களில்

ஓர் நாள் இல்லை – ஒரு நட்சத்திரம் இல்லை – உத்தர நட்சத்திரம் இல்லை – அதாவது உத்தரம் இல்லை (பதில் இல்லை – அவளிடமிருந்து)

மொய் வனத்தில் – நெருங்கிய காட்டில்

தாவும் – தாண்டித் திரியும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

தனி மிருகம் இல்லை – ஒப்பற்ற மிருகம் இல்லை (அதாவது வேங்கை இல்லை. வேங்கை என்ற சொல்லுக்குப் பொன் என்ற பொருளும் உண்டு)

நேரா வளையா நடை இல்லை – நேராக வளையா நடையுமில்லை.

நேரா வளையா நடை என்பது அன்னம் அல்லது சோறைக் குறிக்கிறது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

 பேரழகியைக் கட்டித் தழுவுவதற்கு ஆசை. ஆனால் அவளிடமிருந்து பதிலும் இல்லை; என்னிடம் அவளுக்குத் தரப் பொன்னும் இல்லை;  சோறும் இல்லை, எப்படித் தழுவுவேன்?

நல்ல கேள்வி இது? யார் தான் பதில் சொல்ல முடியும்?

***