பிராணிகள் கண்டுபிடித்த மூலிகைகள் ; வேதம் சொல்லும் அதிசயச் செய்தி (Post No.10,456)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,456
Date uploaded in London – – 17 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேத கால முனிவர்கள் எப்படி மூலிகைகள் பற்றி அறிந்தனர்? சில விஷயங்களை உள்ளுணர்வினால், மந்திர சக்தியால் அறிந்திருக்கலாம்; இன்னும் சில வகைகளின் சக்தியை சோதனை முறையில் அறிந்திருக்கலாம். மேலும் சில மூலிகைகைகளை பிராணிகளின் செயல்பாட்டைப் பார்த்து அறிந்தனர். இந்த அதிசய விஷயத்தை அதர்வண வேத மந்திரத்தில் காண முடிகிறது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு .
‘ஆயிரம் பேரைக் கண்டவனே வைத்தியன்’; அதாவது அனுபவம் மூலம் அறிவது. இதை ஆங்கிலத்தில் TRIAL AND ERROR METHOD என்பர். இன்றும் கூட உலகப் புகழ் பெற்ற மருந்துக் கம்பெனிகள் முதலில் எலி களுக்கும் பின்னர் குரங்குகளுக்கும் புதிய மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துவிட்டுபி பின்னர் மனிதர்களுக்கு, அவர்கள் அனுமதியுடன் சோ தனை முறையில் கொடுத்துப் பரீட்சித்துப் பார்கின்றனர். வெற்றி பெற்றால்தான் பின்னர் மருந்துக்கு கடைகளில் விற்கிறார்கள். இதற்கு அனுமதி தருவதற்கு பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன .
அந்தக் காலத்தில் இப்படி வசதிகள் இல்லாவிடினும் நம் முனிவர்களும் சித்தர்களும் பறவைகளையும் மிருகங்களையும் பார்த்தனர். மயில், கருடன், கீரி ஆகியன விஷப் பாம்பைக் கடித்துக் குதறிய பின்னரும் எப்படி உயிர் வாழ்கின்றன என்று கண்டனர்; அவை விசேஷ மூலிகைகளை உண்ணுவதைக் கண்டுபிடித்தனர். அதை நமக்கும் எழுதிவிட்டுப் பாடிவிட்டுச் சென்றனர். ரிக் வேத சூக்தம் ஒன்று 107 மூலிகைகள் என்று ஒரு எண்ணைக் குறிப்பிடுகிறது. துரதிருஷ்டவசமாக அந்த மூலிகைகளின் பட்டியலைக் கொடுக்கவில்லை. ஆனால் அதர்வண வேதத்தில் நிறைய மூலிகைகளின் பெயர்கள் வருகின்றன. அவற்றைத் தொகுத்துப் பிற்கால சரகர், சுஸ்ருதர் போன்றோரின் நூல்களுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தல் அவசியம் .
பாம்பு- கீரி சண்டையில் , கீரி வெற்றி பெற அருகம்புல் எப்படி உதவுகிறது என்று ஏற்கனவே எழுதியுள்ளேன் (கீழேயுள்ள இணைப்புகளைக் காண்க)

அதர்வண வேத சூக்தம் ஒன்று பாம்பு, கீரி , காட்டுப் பன்றி ஆகியன எப்படி மூலிகைகளை கண்டு பிடிக்கின்றன என்று பாடியுள்ளார். இயற்கையை நன்கு கவனித்த அவர்கள் பல மூலிகைகளுக்கு கருட கிழங்கு போன்ற பெயர்களையும் சூட்டியுள்ளனர்.
xxx


அதர்வண எட்டாம் காண்டம் சூக்தம் 440 ல் உள்ள அதிசய விஷ்யங்களைக் காண்போம்

இந்த சூக்தத்தின் தலைப்பே ஒளஷதங்கள் !
இந்த துதியில் 28 மந்திரங்கள் உள்ளன.
28 மந்திர துதியில் ,23ஆவது மந்திரம்

“வராஹம் (பன்றி) செடியை அறியும் ; கீரி சிகிச்சைச் செடியை அறியும் ; கந்தர்வர்களும், சர்ப்பங்களும் அறியும் மூலிகைகளை நான், இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்”

24 ஆவது மந்திரம் “கருடன் அறியும் ஆங்கிரஸ ஒளஷதிகளையும் , சுபர்ணன் அறியும் தேவ சிகிச்சைகளையும் பறவைகள், ஹம்ஸங்கள் (அன்னம்), வன விலங்குகள் அறியும் அனைத்தையும் இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்” .
25 ஆவது மந்திரம் ,
“ஆடு மாடுகள் புசிக்கும் மூலிகைகளை துணைக்கு அழைக்கிறேன்” —
என்று சொல்வதிலிருந்து ரிஷி முனிவர் எந்த அளவுக்கு பறவைகள், மிருக்கங்களைக் கவனித்து இருக்கிறார்கள் என்பது புலப்படும்.
இது நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் காப்பதற்காக பாடப்பட்டது போலத் தோன்றினாலும் மூலிகைகைகளின் பெருமையையே அதிகமாகப் பேசுகிறது!
xxx


முதல் மந்திரத்தில் ரிஷி, பல வண்ண மூலிகைகளைச் செப்புகிறார்- பழுப்பு, சிவப்பு, பிங்களம் , அழகான , பிரகாசமான மூலிகைகள் – நல்ல பாசிட்டிவ் சொற்கள் Positive Words!
இரண்டாவது மந்திரம், வானத்தை மூலிகையின் தந்தை யாகவும் பூமியைத் தாயாகவும் கடலை (Samudra= Ocean) வேர் ROOT ஆகவும் பாடுகிறது

கடல் என்று வரும் இடம் எல்லாம் அதே நீல நிறம் கொண்ட ஆகாயம் என்று விமர்சகர்கள் சொல்லுகிறார்கள் ; ஆனால் உண்மையான கடல் ஆகவும் இருக்கலாம். ஆராய்வது அவசியம் .
சமுத்ரோ மூலம் = கடல் வேர்
மூன்றாவது மந்திரம், நீரே மருந்து (Water is Medicine) என்று புகழ்கிறது. தினமும் தண்ணீரைப் புகழ்ந்து மூன்று வேளைகளிலும் பிராமணர்கள சந்தியா வந்தனம் செய்கின்றனர். இன்று வரை நீரை அமிர்தம் என்று சொல்லி குடித்து காலை, மதியம் மலையில் கிரியை செய்கிறார்கள். சாப்பட்டைச் சுற்றி மந்திரம் சொல்லி இது அமிர்தமாகட்டும் என்று சாப்பிடுகிறார்கள். திருவள்ளுவரும் இதை அப்படியே அமிர்தம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லைச் சொல்லிப் போற்றுகிறார் .
நாலாவது மந்திரம், மூலிகைகளின் தோற்றம் குணத்தைச் சொல்லி புகழ்கிறது
ஐந்தாவது மந்திரம், உங்கள் சக்தியால் நான் இவனைக் குணப்படுத்தப் போகிறேன் என்று அறிவிக்கிறது ; இன்றும் கூட டாக்டர்கள் கொடுக்கும் மருந்தைவிட அவர் சொல்லும் வாசகங்களையே நாம் நம்புகிறோம்; அவை நமக்கு நம்பிக்கை அளிக்கிறது அது போல இங்கும் டாக்டர் பாடுகிறார்.
ஆறாவது மந்திரம், தேன் மிகுந்த மலர்களை உடைய ‘அருந்ததி’ என்ற மூலிகையைக் குறிப்பிடுகிறது; இதன் அடிக்குறிப்பு இதை சிலாசி SILACHI என்ற பெயர் கொண்டபடரும் கொ டி வகைத் தாவரம் என்று சொல்லுகிறது. முந்திய துதிகளிலும் இது ப ற்றி வந் துள்ளது
முதல் முதலில் நாலாவது காண்டத்தில் ‘அருந்ததி’ பற்றி வருகிறது; இது உடைந்த எலும்பைக் குணப்படுத்த உதவக்கூடியது. இது கொடி வகைத் தாவரம் .ஆனால் என்ன தாவரம் என்று தெரியவில்லை என்று எழுதியுள்ளனர்

மந்திரம் 9-ல், அவகா AVAKAA என்ற தாவரம் பற்றிய குறிப்பு வருகிறது . இது சதுப்பு நிலத்தில் வளரும் புல் வகை. தாவரவியல் பெயர் ப்ளிக்ஸ்சா ஆக்டன்ட்ரா BLYXA OCTANDRA.
மந்திரம் 12, ஒரு தாவரத்தின் எல்லாப் பகுதிகளும் தேன் மயமானது என்று வருணிக்கிறது ;

மந்திரம் 13ல் ஆயிரம் இலைகளுள்ள தாவரம் என்னைக் காக்கட்டும் என்று சொல்லுவது பலவகை மூலிகைகள் பயன்பாட்டில் இருந்ததைக் காட்டுகிறது .
TIGER AMULET
மந்திரம் 14, புலி தாயத்து பற்றியது (PLEASE READ MY ARTICLE POSTED EARLIER TODAY)
மந்திரம் 15, சிங்கத்தின் கர்ஜனையால் நோய்கள் நடுங்கும் என்பது ஒரு உவமை ஆகும். அடுத்த வரியே நோய்கள் மெழுகு போல கரையும் என்கிறது.

மந்திரம் 20, தர்ப்பைப் புல் , அஸ்வத்தம் என்னும் அரச மரம், தாவர அரசன் ஆன சோமம் ஆகியன பற்றிப் பாடுகிறது ; அரச மரக் குச்சிகளையும், தர்ப்பை புல்லையும் இன்று வரை பிராமணர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
28ஆவது மந்திரத்தை கற்பனை எண்கள் என்று வெளிநாட்டார் ஒதுக்கிவிட்டனர். அவர்களுக்கு அர்த்தம் தெரியாத எல்லா எண்களுக்கும் இப்படி கற்பனை எண்கள் (FANCIFUL NUMBERS) என்று முத்திரை குத்திவிட்டனர். 28ஆவது மந்திரம் ,
“பஞ்ச சரம், பத்து சரத்தினின்றும் நான் உன்னை விடுதலை செய்துள்ளேன். யமனது பாசத்தினின்றும், தேவர்களின் எல்லாக் குற்றத்தினின்றும் உன்னை நீக்கியுள்ளேன்” என்று முடிகிறது. ஏதோ ஒரு ஜுரத்தை இப்படி பத்து அம்பு, ஐந்து அம்பு என்று அழைக்கிறார்கள் என்று வியாக்கியானம் செய்வது சரியில்லை என்றே தோன்றுகிறது.
சரக , சுஸ்ருத சம்ஹிதைகளில் வல்லோர் அமர்ந்து ஆராய வேண்டிய விஷயம் இது. 90 நதிகள், 99 நதிகள் என்று வந்த இடங்களுக்கும் இப்படி கற்பனை எண்கள் என்று வெள்ளைக்காரர்கள் சொல்லுவார்கள். 101 என்ற எண்ணை மட்டும், வேதங்கள் துரதிருஷ்ட எண் என்று சொல்லுவதாக எழுதியுளளனர். அங்கு கற்பனை என்ற பதம் வரவில்லை !!!

XXX


MY OLD ARTICLES ON SAME THEME

அருகம்புல் ரகசியங்கள் | Tamil and Vedashttps://tamilandvedas.com › அரு…· Translate this page12 Jul 2013 — அருகம் புல் ரகசியங்களை இந்துக்கள் ஆதியிலேயே அறிந்திருந்தனர். நெல்லும் …You visited this page on 17/12/21.

வையாக்ரோ மணி | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ…· Translate this page7 hours ago — வேங்கை | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ… … Tamil children were given talismans made up of tiger nails or tiger ..

—subham—

tags- பிராணிகள், மூலிகை, கண்டுபிடிப்பு, அதர்வண வேதம், கீரி , பாம்பு, பன்றி

ரிக் வேதத்தில் புறா ஜோதிடம் & தமிழர்களின் அதிசயக் கண்டுபிடிப்பு -2 (Post.10,293)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,293

Date uploaded in London – –   3 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நேற்று வெளியான ‘ரிக் வேதத்தில் புறா ஜோதிடம், தமிழர்களின் அதிசயக் கண்டுபிடிப்பு -1’– என்ற முதல் பகுதியைப் படித்துவிட்டு இதையும் படிக்கவும் .

ரிக் வேத RV.10-165 பாடலில் புறா பற்றிய ஆரூடத்தை நேற்று கண்டோம். ஆனால்  முதலாவது மண்டலத்தில் உள்ள பாடல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் போல காதல் புறாக்களைக் காட்டுகிறது. புறாக்களை சமாதான தூதுவர்களாக தற்போது மேலை நாடுகள் சித்தரிக்கின்றன. இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிந்த 50-வது ஆண்டு விழாவினைக் கொண்டாட 1995-ல் பிரிட்டன் வெளியிட்ட இரண்டு பவுன் நாணயத்தில் கூட சமாதானப் புறா ஆலீவ் / ஒலிவ மர இலைகளுடன் பறப்பதை சித்தரித்துள்ளனர்

இந்துக்களின் பரத நாட்டிய முத்திரையில் கபோத / புறா முத்திரையும் ஒன்று.

இந்துக்களின் யோகாசனத்தில் கபோத / புறா ஆசனமும் ஒன்று .

ஆயினும் இணை பிரியா புறா ஜோடிகளை இந்தியா முதலிய நாடுகள் தபால் தலைகளாக வெளியிட்டுள்ளன. இதுவே ரிக் வேத முதலாவது மண்டல மந்திரமும் சங்கத் தமிழ் இலக்கியமும் நமக்குக் காட்டுகின்றன .

இதோ முதலாவது மண்டல மந்திரம் –

இது ரிஷி சுனச்சேபன் , இந்திரனை நோக்கிச் சொல்லும் துதி

ரிக். 1-30-4

இந்த சோமரசம் உனக்காக்கத்தான் படைக்கப்படுகிறதுதன்னுடைய மனைவியான புறவிடம் அன்புடன் நெருங்கும் ஆண் புறா போல நீயும் வருகிறாய் ; எங்கள் துதியை ஏற்றுக் கொள்வாயாக” –1-30-4

எனது உரை

பத்தாவது மண்டலத்தில் ஒரு பயங்கரக் காட்சியைக் கண்டோம்.

இதற்கு அடிக்குறிப்பு எழுதிய Ralph T H Griffith ரால்ப் கிரிப்பித் சொல்கிறார்- “புறாவை அபசகுனப் பறவையாக மக்கள் கருதுகின்றனர். மரண தேவனின் தூதனாகக் கருதுகின்றனர் ; இங்கிலாந்தில் வடக்கு லிங்க்கன்ஸைர் பகுதியில் இப்படி ஒரு நம்பிக்கை இருப்பது, ‘கேள்வி பதில்’ பகுதியில் வெளியாகி இருக்கிறது. மரத்தில் உட்கார்ந்திருக்கும் புறவு வீட்டிற்குள் நுழை ந்தாலோ அல்லது ஆனந்தமாக ஆடி ஓடும்  புறா திடீரென்று சாதுவாகி பேசா மடந்தையாக நின்றாலோ அது சாவுக்கு அறிகுறி” .

இது பற்றி நான் சொல்லுவது – இங்கும் கூட புறா சாகப்போகிறதா அல்லது வீட்டிற்குள் இருக்கும் ஒருவர் சாகப்போகிறாரா என்று தெளிவாக இல்லை.

மேலும் 10-165- 4 மந்திரத்தில் ஆந்தை (screeching owl ) காரணமில்லாமல் அலறுவது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இரண்டையம் இணைத்துப் பார்த்தால் ஆந்தை திடீரென்று அலறுவதும் வீட்டிற்குள் தினசரி அவுபாசனம் செய்யும் இடத்தில் திடீரென்று புறா அமர்ந்ததும் ஏதோ கெட்டது நடக்கப்போவதைத் தெளிவாகக் காட்டுகிறது; ஆந்தை அலறுவதும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் அது குரல் கொடுப்பதும், மரணத்தின் அறிகுறி என்பது தமிழர்களின் நம்பிக்கை. சங்கத் தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களிலும் ஆந்தை, கோட்டான், கூகை இருக்கும் இடங்கள் சுடுகாடு அல்லது பாழடைந்த இடமாகவே இருக்கிறது. புறம். 364 காண்க.

மேலும் பிராமணர்களின் அக்கிரஹாரம் மிகவும் சுத்தமான இடம். அங்கு நாயும் கோழியும் கூட நுழையாது என்கிறார் சங்கப்  புலவர்- பார்ப்பனர் உருத்திரன் கண்ணனார் – காண்க பெரும். 299, இன்னாநாற்பது -3

ஆக, நாயோ கோழியோ நுழையாத இடத்தில் திடீரென்று ஆந்தையும் புறவும் வந்ததே அப  சகுனமாகக் கருதப்படுகிறது. புறவினால் மட்டும் அப்படி வந்ததாகக் கூற முடியாது என்பதே  என்னுரை.

முதலாவது மண்டலப் ‘பா’வை மொழிபெயர்த்த ஜம்புநாத ஐயர் , கருத்தரித்த பெட்டையிடம் வரும் புறாப் போல என்கிறார். ஒருவேளை கர்ப்பிணிப் புறவு என்பது சாயனர் உரையாக இருக்கும். இது மேலும் அன்பைக் காட்டுகிறது

xxx

தமிழர்கள் கண்ட அற்புதக் காட்சி!

சிபிச் சக்ரவர்த்தி கதையை இந்தியர்கள் எல்லோரும் அறிவர். அக்நி தேவன் புறா வடிவில் வர, அதை கழுகு வடிவில் இந்திரன் துரத்த, அந்தப்புறா சிபிச் சக்ரவர்த்தியின் மடியில் தஞ்சம புகுந்தது. அதைக் காப்பாற்ற அவன் த ன் உடலையே தருவதற்கு துலாபாரம் செய்ய முயன்று தராசுத் தட்டில் ஏறினான். அப்போது இரண்டு தேவர்களும் அவன் பெருந்தன்மையை  உலகத்துக்குக் காட்டவே அவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர். இந்தக் கதை புறநானூறு, சிலப்பதிகாரம் நெடுகிலும் உளது. கண்ணகி தான் வாழ்ந்த சோழர்குடி மன்னனாக சிபியை சித்தரிக்கிறாள். அதற்கு முன் சங்க இலக்கியத்திலும் உளது. (என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க – சோழர்கள் தமிழர்களா?) . இரண்டு புறாக்கள் ஒரு வேடனுக்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்ட புறாக்கதையும் மஹாபாரதத்தில் உளது.)

ஆக வடக்கும் தெற்கும் – இமயம் முதல் குமரி– வரை  புறாவை அன்பின் சின்னமாகவே காட்டியுள்ளன.

ஆண்புறா, வெய்யிலில் வாடிய பெண் புறாவுக்கு விசிறி வீசிய பாடல் கலித்தொகையில்  பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடலில் வருகிறது:

அன்புகொள் மடப்பெடை அசை இய  வருத்தத்தை

மென் சிற கரால் ஆற்றும் புறவு (பாலைக் கலி , பாடல் 10, )

இதைவிட அருமையான ஒரு காட்சியைப் பிராமணப் புலவன் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில் படம் போட்டுக் காட்டுகிறார். புறவுகள் ‘கல் உண்ணும் காட்சி’ அது.

உலகம் முழுதும் பல பறவைகள் கற்களை உண்ணுவதும் அது ஜீரணத்துக்காக செய்யப்படும் நிகழ்வு என்பதும், இப்போது யூ ட்யூப்பில் You Tubeல் மலிந்து கிடக்கிறது. மகேஷ் ராஜா என்பவர் நீலகிரி காடுகளில் கல் உண்ணும் பறவையைப் படம்பிடித்துப் போட்டுள்ளார். வடக்கில் ஒரு இந்திக்காரர், இந்தி மொழி வீடியோவில், செம்மை நிற கற்களைப் பொடித்து, பரப்ப அதை புறாக்கள் ஆனந்தமாக உண்ணுவதை யூ ட்யூபில் காணலாம். ஆக இப்போது இது எல்லோரும் அறிந்த செய்தியாகிவிட்டது; ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பார்ப்பான் இதைப்பார்த்து அதை அப்படியே எதிர்கால சந்ததிக்கு எழுதிவைத்த அற்புதத்தைக் காணுங்கள் :-

பட்டினப்பாலை நூலை இயற்றிய பார்ப்பனன் உருத்திரங்கண்ணனாரும் குறிஞ்சிக்கலி இயற்றிய  பார்ப்பனன் கபிலனும் நிறைய இயற்கை அற்புதங்களை நமக்கு அளிக்கின்றனர். பார்ப்பான் கபிலன் நமக்கு 99 மலர்களை குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அளித்தான். குருவி, கிளி மூலம் பாரிக்கு உணவு சேகரித்து மூவேந்தர் முற்றுகையை முறியடித்தான்.’ புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று போற்றப்பட்டான்; ஜாதி வெறியை ஒழித்த முதல் தமிழனும் அவன்தான். அங்கவை , சங்கவை என்ற க்ஷத்ரிய குலப் பெண்களை தனது மகள்கள் போலாகி கருதி திருமணம் செய்வித்தான். இப்படி இரண்டு பிராஹ்மணர்கள் நமக்கு அற்புதமான  செய்தியை 2000 ஆண்டுக்கு முன் எழுதிவைத்தனர்.

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கு

மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்

மாயிரும் பெடையோ டிரியல் போகிப்

பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்

தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு

—பட்டினப்பாலை , வரிகள் 54-58

xxxx

ஆய் தூவி அனம்என, அணிமயில் பெடை எனத்

 தூதுணம் புறவு எனத் …………………………..

கலித்தொகை 56, கபிலன்  பாடிய குறிஞ்சிக் கலி

தூதுணம் புறவு என்பதற்குக் கல் = தூது , உணம் = உண்ணும் என்று உரைகாரர்கள் செப்புவர்

இதை உலகிற்குப் பதிவு செய்து கொடுத்த 2 அந்தணர்க்கும் வந்தனம் சொல்லுவோம். இப்போது நிறைய You Tube வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

ஜோடிப் புறாக்களையும் காதல் புறாக்களையும் கீழ்கண்ட பாடல்களில் காணலாம் :-

குடவாயில் கீரத்தனார் அக நானூறு பாடல் 287, 315ல் புறா பற்றிப் பேசுகிறார்.

குன்றியனார், குறுந்தொகை நூலில் பாடல் 79ல் புறாவைப் பாடுகிறார் .

மகிழ்ச்சியுடன் கொஞ்சும் இரண்டு புறாக்களை கள்ளி மரக்  காய்கள் வெடித்து , ஒலி உண்டாக்கி விரட்டும் காட்சியை வெண் பூதியார் குறுந்தொகைப் பாடல் 174ல் காட்டுகிறார்; ஆக பல இடங்களில் ஜோடிப் புறாக்கள் பறப்பதை தமிழ்ப் புலவர்கள் காணத் தவறவில்லை.

முடிவுரையாக நான் சொல்லுவது புறாக்கள் மூலம் சகுனம் பார்ப்பது இல்லை. ஆனால் அசாதாரண சூழ்நிலையில் அவை வீட்டிற்குள் வந்து, அப்போது ஆந்தையும் அலறினால் மரணம் சம்பவிக்கும் என்பதே சரி  ; பூகம்பம், சுனாமி  போன்ற இயற்கை உற்பாதங்கள்  வருவதற்கு முன்னரும் இப்படி பிராணிகள் அலறுகின்றன.

வாழ்க ஜோடிப் புறாக்கள்  !!

from You Tube

–subham–

tags- ரிக் வேதத்தில் ,புறா ஜோதிடம், தமிழர் ,கண்டுபிடிப்பு , சிபிச் சக்ரவர்த்தி, தூதுணம் புறவு,கல் உண்ணும்,