அடி, உதை, கொல்! கருமிகளுக்கு எதிராக தமிழ்வேதமும் ரிக் வேதமும்! (4328)

அடி, உதை, கொல்! கருமிகளுக்கு

எதிராக தமிழ்வேதமும் ரிக் வேதமும்! (4328)

 

Written by London Swaminathan

 

Date: 23 October 2017

 

Time uploaded in London- 11-30 am

 

 

Post No. 4328

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

கருமிகளையும் கஞ்சர்களையும் கண்டால் இந்துக்களுக்குப் பிடிக்காது. வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை அவர்களைச் சாடியிருக்கிறார்கள். வள்ளுவர் கருமி களின் தாடையில் குத்துவிட்டு கரும்பு போலக் கசக்கிப் பிழி என்கிறார். வேத கால ரிஷிகள் கருமிகளைத் தீர்த்துக் கட்டுங்கள் என்கின்றனர். செல்வத்தின் பயனே ஈதல் என்கிறார் புறநானூற்றுப் புலவர்.

 

இதோ சில பொன்மொழிகள்:

 

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு!

 

தமிழ் வேதம் ஆகிய திருக்குறள் சொல்லும்:

 

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

 

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

 

பரிதியார் உரை:கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர்

காளிங்கர் உரை: கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூனிய கையினை உடையோர்.

 

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

ரிக் வேதம் சொல்கிறது:

 

இந்திரனுக்கு பரிசு கொடுக்காதவர்களை அவன் எப்போது தன் காலடியில் களைகளைப் போட்டு மிதிப்பது போல மிதிப்பான்? (1-84-8)

 

(இங்கே இந்திரன் என்பது கடவுள் என்ற பொருளில் வந்துள்ளது; தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கடவுளுக்கும் அரசனுக்கும் ஒரே சொல்தான்; நிறைய எடுத்துக் காட்டுகள் உண்டு; இதோ ஒன்று மட்டும்; கோ= அரசன், கடவுள்; கோவில்= அரண்மனை, இறைவன் உறைவிடம்; வேதங்களில் இந்திரன் என்பது அரசனையும், இறைவனையும் குறிக்கும்; இன்றுவரை நாம் கூட ராஜேந்திரன், மஹேந்திரன் என்று பெயர் வைத்துக் கொள்கிறோம்; இந்திரன் என்ற பெயர் இல்லாத நாடே மனித குலமே உலகில் கிடையாது. ஆங்கிலத்தில் ANDREW ஆன்ரூ என்பர்; அயிந்திர= அண்டிர= ஆன்ருANDREW; ஆய் அண்டிரன் என்ற தமிழ் மன்னன்= அஜேந்திரன்; எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)

கருமிகளிடம் செல்வம் தங்காது/நிலைக்காது–RV 7-32-21

 

கருமிகளைக் கொல்லுங்கள்– 1-184-2

 

கொல்லச் சுரப்பதாம் கீழ் – என்ற வரிகள் மூலம் ரிக் வேத கருத்தை நாலடியாரும் ஆதரிக்கிறது (இரவலர் கன்றாக ஈவர்……..கொல்லச் சுரப்பதாம் கீழ்).

 

தொல்காப்பியரும் கருமிகளைத் திட்டுகிறார்:

கொடுப் போர் ஏத்திக் கொடா அர்ப்பழி த்தலும் -1036

 

MY OLD ARTICLES

வள்ளுவனும் வன்முறையும் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/வள்ளுவனும்-வன்ம… – Translate this page

வள்ளுவனும் வன்முறையும் · வள்ளுவர் சிலை. எழுதியவர் லண்டன் சுவாமிநாதன். ” அன்பென்று கொட்டு முரசே — மக்கள் அத்தனை பேரும் …

 

31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194). tolkappian-katturai. Written by London swaminathan. Date: 27 September 2016. Time uploaded in London:8-17 AM. Post No.3194. Pictures are taken from various …

 

–SUBHAM—