கருணையுள்ள வேலைக்காரி! (Post No.2935)

maid

Written by London swaminathan

 

Date: 1 July 2016

Post No. 2935

Time uploaded in London :– 18-45

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வில்லியம் டீன் ஹோவல்ஸ் என்பவர் சிறந்த நாவல் ஆசிரியர். அவருடைய மனைவி, ஒரு வேலைக்காரியை வீட்டு வேலைக்கு வைத்திருந்தார். நாவல் ஆசிரியர் என்பதால் வில்லியம் எப்போதும் வீட்டிலிருந்தே கதை எழுதி வந்தார். இதைப் பார்த்த வேலைக்காரிக்கு கருணை ஏற்பட்டது.

 

ஒரு நாள், சமையல் அறைக்குள், திருமதி  ஹோவல்ஸ் நுழைந்தார்.

வேலைக்காரி: அம்மா, உங்களிடம் கொஞ்சம் பேசலாமா?

திருமதி ஹோவல்ஸ்: என்ன வேணும்? மேரி, சொல்லு.

 

ஒன்றுமில்லை, அம்மா, நீங்கள் எனக்கு வாரத்துக்கு நாலு டாலர் சம்பளம் தருகிறீர்கள்…………….

 

திருமதி ஹோவல்ஸ்: – இதோ பார் இதற்கு மேல் என்னால் தரமுடியாது.

 

வேலைக்காரி: அம்மா, அதை நான் சொல்லவில்லை. ஐயா வீட்டிலெயே இருக்கிறாரே. எனக்குப் பார்க்க கஷ்டமாய் இருக்கிறது. அவருக்கு வேலை கிடைக்கும் வரை என் சம்பளத்தை மூன்று டாலராகக் குறைத்துக் கொடுங்களேன்.

 

 

வேலைக்காரிக்கு இவ்வளவு கருணை உள்ளமா? என் று திகைத்துப்  போனார் திருமதி ஹோவல்ஸ்.

KWS Mona Lake dead fish 6.JPG

Dead fish float on the shoreline of Mona Lake along Wellesley Drive just east of Ross Park in Norton Shores Wednesday. Date shot: 4/2/08.

கருவாடு நாற்றம்!!

 

வில்லியம் வாண்டபில்ட் என்பவர் தக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு ஹோட்டலில் (விடுதியில்) தங்கி இருந்தார். ஹோட்டல் அறையில் இருந்த ஒரு துண்டு, துவைக்காத துண்டுபோல அழுக்காக இருந்தது.

 

ஹோட்டல் ஊழியரை அழைத்து, அதைக் காண்பித்தார்.

 

“ஸார், வழக்கமான லாண்டரியில்தான் சார், எல்லாம் சலவைக்குப் போய் வருகிறது.”

 

வாண்டர்பில்ட்: “இந்த துண்டை முகர்ந்து பார். கருவாட்டு நாற்றம் வீசுகிறது.”

 

“ஓ, அதுவா? ஸார்? ஒரு வேளை நீங்கள் முன்னதாகப் பயன்படுத்தி இருப்பீர்கள். பின்னர் மறந்து போயிருக்கலாம் அல்லவா?”

 

(வாண்டர்பில்ட் தலையில் அடித்துக்கொள்ளாததுதான் குறை!!)

–subham-