
WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 28 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – -7-37 AM
Post No. 7027
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அக்டோபர் 2019 நற்சிந்தனை காலண்டர்
கர்ம வினை, செயல்பாடு பற்றி 31 பொன்மொழிகள்
பண்டிகை நாட்கள்-அக்.2- காந்தி ஜயந்தி; 7- சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை; 8-விஜயதசமி; 26-தந்வந்திரி ஜயந்தி27-தீபாவளி, லக்ஷ்மி-குபேர பூஜை; 28-ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்
பௌர்ணமி-13; அமாவாசை-27; ஏகாதசி விரதம்- 9,24
முஹூர்த்த தினங்கள்—24, 30
அக்டோபர் 1 செவ்வாய்க் கிழமை
ஸ்வார்ஜிதான்யேவ கர்மாணி ப்ரயான்ந்த்யேவ ஸஹாயதாம் – ராமாயண மஞ்சரி
உன் செயல்களே உனக்குத் துணை வரும்
XXX
அக்டோபர் 2 புதன் கிழமை
ஸ்வார்த்தமேவ ஸமீஹஸ்வ கிம் பரார்த்தஸ்ய சிந்தயா- கஹாவத் ரத்னாகர்
உன் வேலையைக் கவனி, மற்றவர்களைப் பற்றி என்ன பேச்சு?
XXX
அக்டோபர் 3 வியாழக் கிழமை
ஸ்வே ஸ்வே கர்மண்யபிரதஹ ஸம்சித்திம் லபதே நரஹ – பகவத் கீதை 18-45
அவரவர் கடமையில் ஈடுபடுவோர் பக்குவ நிலையை அடைவர்
XXX
அக்டோபர் 4 வெள்ளிக் கிழமை
ஸ்வயமக்ஷிணீபன்க்த்வாந்தோ பவஸி
உன் கண்களைக் குத்திக்கொண்டால் நீயே குருடாவாய்– கஹாவத் ரத்னாகர்
XXX
அக்டோபர் 5 சனிக் கிழமை
ஸ்னிக்தேஸ்வாசஜ்யாம் கர்ம யதுஷ்கரம் ஸ்யாத்
கடினமான வேலைகளை முயற்சியுடையோரிடம் தாருங்கள்- பிரதிக்ஞா யௌகந்தராயண
-XXX


அக்டோபர் 6 ஞாயிற்றுக் கிழமை
ஸுகம்ஹி ஸுக்ருதாத் துக்கம் துஷ்க்ருதாதேதி நான்யதஹ – கதா சரித் சாகரம்
நல்லன செய்தால் இன்பம்; தீயன செய்தால் துக்கம்
XXX
அக்டோபர் 7 திங்கட் கிழமை
ஸுகம் துக்கம் ஸ்வயம் புங்தே ந சான்யே ஸவஸ்ய கர்மணஹ – கஹாவத் ரத்னாகர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறநானூறு)
XXX
அக்டோபர் 8 செவ்வாய்க் கிழமை
ஸ்வஹ கார்யமத்ய குர்வீத பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் – சம்ஸ்க்ருத பொன்மொழி
நாளைய வேலையை இன்றே செய்க; பிற்பகல் வேலையை முற்பகல் செய்க
-XXX


அக்டோபர் 9 புதன் கிழமை
விரமேதஸமாப்ய நாரப்தம்-சதாபதேச பிரபந்த
எடுத்த காரியத்தை தொடுத்து முடி
XXX
அக்டோபர் 10 வியாழக் கிழமை
வக்தும் ஸுகரம் துஷ்கரமத்யவஸிதும் – வேணி சம்ஹாரம்
சொல்லுதல் எளிது, செய்வது கடினம்
XXX
அக்டோபர் 11 வெள்ளிக் கிழமை
லோகபீடகரம் கர்ம ந கர்தவ்யம் விசக்ஷணே – வால்மீகி ராமாயணம்
நல்லோர் செய்கை எதுவும் உலகத்தைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
XXX
அக்டோபர் 12 சனிக் கிழமை
யதா கர்ம ததா பலம்
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
XXX
அக்டோபர் 13 ஞாயிற்றுக் கிழமை
யத்யதாத்மவசம் கர்ம தத்தத்ஸேவேத யத்னதாஹ- மநு ஸ்ம்ருதி 4-159
உனது சக்திக்குட்பட்டதை செய்து வா
XXX
அக்டோபர் 14 திங்கட் கிழமை
யோகஹ கர்மஸு கௌசலம் – பகவத் கீதை 2-50
யோக்ம் என்பது திறமையாகச் செயல்படுவதாகும் (சமபுத்தியுடன் செயல்படுவோரைப் புண்ணிய, பாவம் தொடராது)
-XXX
அக்டோபர் 15 செவ்வாய்க் கிழமை
யஹ காரயதி ஸ கரோத்யேவ – பழமொழி
உழைப்பவனே மற்றவர்களுக்கு ஊற்றுணர்ச்சி தருகிறான்
XXX

அக்டோபர் 16 புதன் கிழமை
மஹத்சு நீசேஷு ச கர்ம சோபதே- பஞ்ச தந்திரம்
ஒரு செயல் பெரிதா, சிறிதா எனபதை அந்த செயலே காட்டிவிடும்
XXX
அக்டோபர் 17 வியாழக் கிழமை
மனஸா சிந்திதம் கார்யம் வாசா நைவ ப்ரகாசயேத்- சானக்ய நீதி 10-7
மனதில் தோன்றுவதை எல்லாம் வார்த்தையில் வடித்துக் கொட்டாதே
XXX
அக்டோபர் 18 வெள்ளிக் கிழமை
பஹ்வாரம்பே லகுக்ரியா – கஹாவத்ரத்னாகர்
சின்ன காரியத்துக்கு ஆடம்பரமான ஆரம்பம்!
Xxx
அக்டோபர் 19 சனிக் கிழமை
பத்ரக்ருத்ப்ராப்னுயாத்பத்ரம் அபத்ரஞ்சாப்யபத்ரக்ருத் – கதாசரித் சாகரம்
இனம் இனத்தோடு சேரும்(நல்லோர் நல்லோரை நாடுவர்; தீமை தீயதை நாடும்)
Xxx
அக்டோபர் 20 ஞாயிற்றுக் கிழமை
பத்ர அபத்ரம் வா க்ருதமாத்மனி கல்ப்யதே – கதா சரித் சாகரம்
நல்லதோ கெட்டதோ- செய்தது அவனுக்கே திரும்பிவரும்
Xxx
அக்டோபர் 21 திங்கட் கிழமை
ந குப்ஸிதம் கர்ம குர்வதி – சதோபதேச பிரபந்த
சான்றோர் ப ழிக்கும் வினையை செய்யற்க
xxx

அக்டோபர் 22 செவ்வாய்க் கிழமை
ந சிகீர்ஷத்துஷ்கரம் கர்ம– சதோபதேச பிரபந்த
செய்ய முடியாத செயலில் இறங்காதே
xxxx
அக்டோபர் 23 புதன் கிழமை
நிஜம் கர்ம ப்ரகுர்வாணைர்லஜ்யதே நஹி ஜந்துபிஹி- ப்ருஹத் கதா கோச
ஆண்மகன் அவனுக்கே உரித்தான செயல்களைச் செய்ய அஞ்சுவதில்லை (வினையே ஆடவர்க்கு உயிரே)
xxx
அக்டோபர் 24 வியாழக் கிழமை
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல் – குறள் 676
செயலைத் துவங்கும் முன் அதன் முடிவு, இடையூறு, இறுதியில் கிடைக்கும் பலன் ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்
Xxx
அக்டோபர் 25 வெள்ளிக் கிழமை
தூங்கற்க தூங்காது செய்யும் வினை – குறள் 672
ஒத்திப் போடாமல் உரியகாலத்தில் அதை அதைச் செய்யவேண்டும்
Xxx
அக்டோபர் 26 சனிக் கிழமை
— மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண் துஞ்சார் – கருமமே கண்ணாயினார் – நீதி நெறி விளக்கம்
Xxx



அக்டோபர் 27 ஞாயிற்றுக் கிழமை
செய்வன திருந்தச் செய் – ஆத்திச்சூடி
Xxx
அக்டோபர் 28 திங்கட் கிழமை
தூக்கி வினை செய்– ஆத்திச்சூடி
Xxx
அக்டோபர் 29 செவ்வாய்க் கிழமை
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் – உலக நீதி
Xxx
அக்டோபர் 30 புதன் கிழமை
கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி – தமிழ் பழமொழி
முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு
ஆவின்பால் கன்றினாற் கொள்
(கன்றைக் காட்டி பால் கற
xxx


அக்டோபர் 31 வியாழக் கிழமை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி – கொன்றைவேந்தன்
—subham —

