இரண்டு கை தட்டி பாராட்டினான் – இறந்தான் கலைஞன் கொசு! (Post.8892)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8892

Date uploaded in London – – 5 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புத்தி புகட்டும் பொன் மொழிகள்

Compiled by Kattukutty

ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன???

ஏழை நம்ம வீட்டுக்கு வந்து கடன் கேட்பான்

பணக்காரன் அவன் வீட்டுக்கு நம்மை வரவழைத்து கடன் கேட்பான்!!!

XXXX

வாழ்க்கை என்பது அளவு போதாத போர்வை……

தலைக்கு மேல் இழுத்தால் கால் குளிரும்,

காலை போர்த்திக் கொண்டால் தலை சில்லிட்டு விடும்…..

புத்திசாலி போர்வைக்குள் உடம்பை சுருட்டிக் கொண்டு

சுகமாய் தூங்குவான்!!!

XXXX

கைகளைக் கொண்டு உழைப்பவன் பாட்டாளி!!!

கைகளையும் மூளையையும் பயன்படுத்தி உழைப்பவன்

தொழில் வினைஞன்!!!

கைகள், மூளை, இவற்றுடன் இதயத்தையும் செலுத்தி

உழைப்பவன் கலைஞன் !!!

XXXX

இருவரை ஒருவராக்கும் அறை எது???

பெட் ரூம் !!!

ஒருவரை இருவராக்கும் அறை எது ???

பிரசவ அறை !!!

XXXX

நீண்ட நாள் உயிரோடு இருக்க என்ன வழி!!!

வேறென்ன, சாகாமல் இருப்பதுதான்!!!

XXX

பேருந்தில் சிதறியது நாணயங்கள்,

தேடலுக்குப் பின் கிடைத்து சில நாணயங்கள்,

தொலைந்தது சிலர் நாணயங்கள்……….

XXX

C B I

எனக்கு எப்ப விடுதலை என்று கேட்டது கூண்டுக்கிளி

பக்கத்து ஜோசியக் கூண்டுக் கிளியிடம்!!!

XXX

எவரொருவர் ஊதியத்தில் வியர்வை வாடை வீசுகிறதோ

அதுவே உழைப்பூதியம்!!!

மற்றதெல்லாம் ஏய்ப்பூதியம்………

XXXX

வாழ்க்கையில் வெற்றி பெற நண்பர்கள் தேவை…..

ஆனால் வாழ்க்கை முழுவதும் வெற்றி பெற எதிரிகள் தேவை!!!!

XXXX

இரண்டு கைகள் தட்டி

பாராட்டியதில்

இறந்து போனது

இம்சைக் கலைஞன் கொசு!!!

XXX

வெட்டுப்பட்ட கடாவைப் பார்த்தது

அய்யனாரின் நிமிர்ந்த வாள்!!!

XXXX

வீட்டிற்குப் பெயரோ அன்னை இல்லம்

அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்

XXXX

மாங்கல்யத்தின் மகிமையை

மனைவி அறிவாள், மணவாளன் அறிவான்,

மார்வாடியே அதிகம் அறிவான் !!!

XXXX

ரேஷன் கடைக்காரருக்கு

குழந்தை பிறந்தது எடை குறைவாக……..

XXXX

மகனின் மாற்றத்தை திருமணத்திற்கு பிறகு உணரலாம்,

மகளின் மாற்றத்தை வாலிப வயதில் உணரலாம்,

கணவனின் மாற்றத்தை மனைவியின் நோயின் போது உணரலாம்,

மனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமையில் உணரலாம்,

நண்பனின் மாற்றத்தை துன்ப காலத்தில் உணரலாம்,

சகோதரனின் மாற்றத்தை சண்டையில் உணரலாம்,

சகோதரியின் மாற்றத்தை சொத்துப் பரிமாற்றத்தில் உணரலாம்,

பிள்ளைகளின் மாற்றத்தை நமது முதுமை காலத்தில் உணரலாம்.

COMPILER KATTUKUTY

tags-  கலைஞன் கொசு, புத்தி ,பொன்மொழிகள்

***