ஹிந்தி படப் பாடல்கள்- 16 – கலையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்! (Post No.7874)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7874

Date uploaded in London – – 24 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 16 – கலையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

R.Nanjappa

கலையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

உலகில் ஒவ்வொரு கலையும் ஒரு பரிணாம விதிக்கு உட்பட்டது போலும். எங்கோ, எப்படியோ தோன்றி வளர்ச்சியடைந்து ஓர் உன்னத நிலை எய்துகிறது; பின்னர், படிப்படியாகச் சரிந்து விடுகிறது. அஜந்தா, சித்தன்னவாசல் போன்ற சித்திரக்கலை இன்று இல்லை. நம் புராதனக் கோவில்கள் போன்று இன்று கட்ட முடியாது. கலை இருக்கிறதுஆகம, சில்ப சாஸ்திரம் இருக்கிறது. ஆனால் அந்த புராதனக் கோவில் போன்று இன்று கட்ட முடியுமாஅதற்கு ஆதரவு இல்லை. பெரிய அளவில் செய்ய இயலாது.

கோவில் கட்டும் கலை

ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் பகவானின் தாயார்ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் – கோவில் 1939ல் கட்டத் தொடங்கி 10 ஆண்டுகள் சிரமப்பட்டு 1949ல்  நிறைவுபெற்றது. மிகச் சிறிய கோவில்தான். ஆனால் அற்புத   சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதுஆகம விதி மீறாமல் கட்டப்பட்டது. இதைப் பார்வையிட்ட அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி  அசந்துபோனார். இத்தகைய கலை அழிந்துபோகக் கூடாது என நினைத்தார். அதன் விளைவாக அரசினர் சிற்பக் கல்லூரி மஹாபலிபுரத்தில் தோன்றியது. இந்தக் கோவில் கட்டிய ஸ்ரீ வைத்யநாத ஸ்தபதியே அக்கல்லூரியின் முதல் முதல்வரானார். கலை அழியவில்லைஆனால்  முன்புபோல்  massive scale இன்று நடக்குமா? அந்த சகாப்தம் இன்று இல்லையே.

இதற்கும் சினிமா இசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?  சொல்கிறேன்.  

1930களில் தொடங்கிய திரை இசை 40களில் வளர்ச்சியடைந்தது. 1950களில் புதிய உத்தி, வடிவம், பொலிவு பெற்று உச்ச நிலை எய்தியது. அதற்குப் பிறகு சரிவுதான். அந்தத் துறையைச் சேர்ந்தவர்களே 50களைத்தான் பொற்காலம் என்று சொல்கிறார்கள்நடப்பது பிளாஸ்டிக் காலம் போலும்!

இசை என்று அங்கங்கும் கூப்பாடு போடுகிறார்கள்.ஆரவாரம் மிகுந்துவிட்டது. ஆனால் முன்பிருந்த தரம் இல்லையே! இன்று டாப் ஹிட் என்று ஒரு பாடலை கொண்டாடுகிறார்கள் மூன்று  மாதத்தில் அதை மறந்துவிடுகிறாகள். எல்லாம் இன்ஸ்டன்ட் காஃபி மாதிரிதான். பழைய கோவில்கள் போன்று 50களின் இசை இன்னும் மதித்துக் கேட்கப்படுகிறது. இன்று வியாபார உத்திகள் பெருகிவிட்டன, கலையம்சம் குறைந்துவிட்டது. தொழில் நுட்பம் வளராத அந்த நாட்களில் உன்னத இசை படைத்தார்கள். தொழில் நுட்பம் மிகுந்துவிட்ட இந்த நாட்களில், அந்தத் தரம் இல்லை. நடைபாதைக் கோயில்கள் போன்று ஏதோ நடக்கிறது!

ரமணாசிரமக் கோயில் எங்கோ மூலையில் இருப்பதுபோல். நல்ல இசையும் எங்கோ முடங்கிக்கிடக்கிறது!

டூயட்சிறப்புச் செல்வம்!

டூயட் பாடல்களை உருவாக்குவது ஒரு சிறப்புக் கலை. பாடகர்படகி குரல்கள் அடிப்படையிலேயே வித்தியாசமானவைசுருதிகள் வேறுபடும். பாடகர்கள் பாடும் பாட்டை பாடகிகள் பாடுவதாக சில சமயம் அமையும், அவற்றைக் கவனமாகக்  கேட்டுப் பாருங்கள்வித்தியாசம் புரியும். ஆனால் இருவரும் சேர்ந்து பாடும்போது அவை தனிச் சிறப்புப் பெறுகின்றன, இது நம் இசைஞர்களின் திறமைக்கு ஒரு சான்று!

இப்படி அமைந்த சில பாடல்களைப் பார்ப்போம்.

தேகே தோ  
वो देखे तो उनकी इनायत, ना देखे तो रोना क्या
जो दिल गैर का हो उसका होना क्या और ना होना क्या

தேகே தோ உன் கீ இனாயத் நா தேகே தோ ரோனா க்யா

ஜோ தில் கைர் கா ஹோ உஸ்கா ஹோனா க்யா ஔர் நா ஹோனா க்யா

அவள் என் பக்கம் பார்த்தாள் என்றால், அது அவள் நல்ல மனது.

பார்க்கவில்லையென்றால் அதற்காக அழவேண்டுமா?

அறிமுகமாகாதவரின் மனது உன் பக்கம் இல்லையென்றால்,

அதனால் ஆவதென்ன, ஆகாததென்ன? ( நமக்கென்ன?)

इश्क दिलों का मेल है प्यारे, ये नज़रों का खेल नहीं
जब तक दो दिल एक ना हो ले, दिल की लगी का रोना क्या

இஷ்க் திலோ(ன்) கா மேல் ஹை ப்யாரே, யே நஃஜ்ரோ(ன்) கா கே நஹீ

யே நஃஜ்ரோ(ன்) கா கேல் நஹீ

ஜப் தக் தோ தில் ஏக் நா ஹோலே, தில் கீ லகீ  கா  ரோனா க்யா

காதல் என்பது மனங்கள் ஒன்று சேர்வதே யாகும்.

இது கண்களின் கூத்தில்லை, கண்களின் விளையாட்டு இல்லை!

இப்படி இரு மனங்கள் ஓன்றுபடவில்லையெனில்அது காதல் இல்லையே

அதற்காக ஏன் அழவேண்டும்?


इश्क की बाजी सीधी बाजी, दिल जीतो और दिल हारो
इस सौदे में दिलवालों, पाना क्या और खोना क्या

இஷ்க் கீ பாஜீ ஸீதீ பாஜீ, தில் ஜீதோ ஔர் தில் ஹாரோ

இஸ் சௌதே மே தில்வாலோ, பானா க்யா ஔர் கோனா க்யா

இந்த காதல் என்னும் விஷயம் நேரடியானது

ஒருவர் மனதில் இடம்பிடி, உன் மனதைக் கொடுத்துவிடு!

இந்த விவகாரத்தில்  எது லாபம்? எது நஷ்டம்?

நல்ல மனதுடையவர்களே, யோசியுங்கள்!

Song: Wo Dekhe tho unki inayat Film: Funtoosh 1956 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman  Singers: Kishore Kumar & Asha Bhonsle

What a fantastic song! What a tremendous message the poet is bringing! Love is not light hearted  affair. It is serious and straight. It is not a plaything.

What a composition by Burmanda!

People said KIshore was not formally trained. They should listen to how he sings the passages ‘Haiya ho haiyaa” and ‘Ishq  ki baaji”.  This song is based on the Raag Gaud Sarang and Kishore sang it with  such verve! And yet how modern it sounds! That is the genius of our old music directors. To repeat a Raga note by note-swara by swara- is not art. It is imitation. Creation is taking some notes and making a tune! Out of three notes, a star is born, as Browning said!

கிஷோர்குமாரின் ‘ஜீனியஸ்’ஸிற்கு எல்லையே இல்லை! மேற் கண்ட பாட்டிலிருந்து முற்றும் மாறுபட்ட ஒரு பாடலைக் கேளூங்கள்:

யே ஸமா ஹம் தும் ஜவான்

adi odley ae oyee
ki yodley ae oyee  

ये समाँ, हमतुम जवाँ, पहलू से दिल सरक जाए
ये प्यार की टेढ़ी गली, अब छोड़ी जाए, हाय रे हाय

யே ஸமா ஹம் தும் ஜவா(ன்), ஃபஹலூ சே தில் ஸரக் ஜாய்

யே ப்யார் கீ  டேதீ கலீ, அப் சோடீ ஜாய், ஹாய் ரே ஹாய்

இனிய பொழுது, நாம் இருவரும் இளவயது, மனம் நழுவிப் போகிறதே!

காதலின் இந்த வளைந்து போகும் பாதைஅது விலகாமல் இருக்கவேண்டுமே!


मिल जाए गर तुझसे नज़र, नन्हासा दिल धड़क जाए
ये प्यार की टेढ़ी गली, अब छोड़ी जाए, हाय रे हाय

மில் ஜாயே கர் துஜ் ஸே நஃஜர்  நன் ஹா ஸா தில் தடக் ஜாய்

யே ப்யார் கீ  டேதீ கலீ, அப் சோடீ ஜாய், ஹாய் ரே ஹாய்

உன்னைக் கண்டதும்  இந்தச் சிறிய மனது  படபடக்கிறதே!

காதலின் இந்த வளைந்த பாதை விலகாமல் இருக்க வேண்டுமே!

la la la laa laa
la la la laa laa

adi odley ae oyee
ki yodeli ae oyee

भीगीभीगी ये चाँदनी रात आँखोंहीआँखों में जाए रे
मैं कुछ कहूँ दिल कुछ कहे, याद बैरी बलम की सताए रे
बिन तेरे मुझको ग़म घेरे, रहे मेरा दिल उदास हरदम
चिकी बम चिकी बम चिकी चिकी बम बम
ये तो चोरीचोरी मिलने का मौसम
ये समाँ, हमतुम जवाँ

…  

பீகீ பீகீ யே சாந்த்னீ ராத் (ன்)கோ ஹீ (ன்)கோ மே ஜாயேரே

மை குச் கஹூ(ன்) தில் குச் கஹே, யாத் பைரீ பலம் கீ ஸதாயேரே

பின் தேரே முஜ் கோ கம் கேரே, ரஹே மேரா தில் உதாஸ் ஹர் தம்

சிகி பம் சிகி பம் சிகி சிகி பம் பம்

யே  தோ சோரீ சோரீ மில்னே கா மௌஸம்

யே ஸமா, ஹம் தும் ஜவா(ன்)……..

நிலவொளி தவழும் இந்த இரவுமெல்ல மெல்ல கண்களைத் தழுவுகிறதே!

நான் ஏதோ சொல்கிறேன், மனது ஏதோ சொல்கிறது

அன்பரின் நினைவு மனதை அலைக்கிறதே!

நீ இல்லாமல் என்னை வருத்தம் அணைத்துக்கொண்டுவிட்டது

மனது சதாகாலமும் வருத்தமாகவே இருக்கிறது!

நாம் ரகசியமாகச் சந்திக்கவேண்டிய நேரமிது.

la la la laa laa
la la la laa laa

adi odley ae oyee
ki yodley ae oyee

मेरीमेरी, नज़रों के भेजे हुए तार का तो जवाब दो
मेरेमेरे, थी क्या ख़बर तुम भी नीयत के इतने ख़राब हो
तेरी बांकी नज़र की झांकी, लड़खड़ाती है मेरे क़दम
चिकी बम चिकी बम चिकी चिकी बम बम
ये तो चोरीचोरी मिलने का मौसम
ये समाँ, हमतुम जवाँ …  

மேரீ மேரீ நஃஜ்ரோ கே பேஜே ஹுயே தார் கா தோ ஜவாப்  தோ

மேரே மேரே தீ க்யா கபர் தும் பீ னீயத் கே இத்னே கராப் ஹோ

தேரீ பா(ன்)கீ நஃஜர் கீ ஜாங்கீ, தட்கடாதீ ஹை மேரே ஸனம்

சிகி பம் சிகி பம் சிகி சிகி பம் பம்

யே தோ சோரீ சோரீ மில்னே கா மௌஸம்

யே ஸமா ஹம்  தும் ஜவா(ன்)……..

லல லாலா, லல லாலா..

என் கண்கள் அனுப்பிய செய்திக்குப் பதில் என்ன?

நீ இப்படியெல்லாம் நியதி மீறி நடந்துகொள்வாய் என எப்படித் தெரியும்?

உன் கண்களின் அசைவைக் கண்டு என் கால்கள் தள்ளாடுகின்றன!

நாம் ரகசியமாக சந்திகவேண்டிய நேரமிது!

Song: Ye sama hum tum jawan  Film: Mshuka 1953 Lyricist: Shailendra

Music; Roshan Singers: Kishore Kumar & Meena Kapoor.

இது ஷைலேந்த்ராவின் சிறந்த பாடல் எனச் சொல்லமுடியாது, பண்பாடு உள்ளவர்கள்   cultured circles பேசக் கூசும் சில சொற்களைப் பயன்படுத்துகிறார்.[ தேரே பா(ன்)கீ, நஜர் கீ ஜா(ன்)கீ, நஜ்ரோனே பேஜே ஹுயே தார், etc] இதற்குக் காரணம் இருக்கவேண்டும்!

இந்தப் படம் பாடகர் முகேஷ் எடுத்தது, அவரே ஹீரோ. அதனால் இந்தப் பாட்டு அவருக்காக எழுதியதல்ல. காமெடி நடிகர் ஆகாவுக்காக எழுதியது. அதனால் இப்படிப் பட்ட நமக்குப் பொருந்தாத சொற்கள் வருகின்றன போலும்! ஆனால் நாம் இங்கு கவிதைக்காக இந்தப் பாடலைப் பார்க்கவில்லை! அதன் இசைக்காகவே பார்க்கிறோம்.

எத்தனை racing, light-hearted பாடல், பாருங்கள். இரண்டு சுருதி  நிலை உள்ளவர்களின் குரலை இழைத்திருகிறார்! மீனா கபூரின் குரலில் தான் எத்தனை குழைவு! இனிமையோ இனிமை! கடைசி வரிகளில் இரண்டு சுருதி உள்ள இருவரையும் சேர்ந்தே, இரண்டு சுருதிகளிலேயே இணைந்து பாடவைத்திருகிறார்மீண்டும் கேளுங்கள். ஆனால் காதுக்கு இதமாகவே இருக்கிறது! இது அசாத்யச் செயல். சபாஷ் ரோஷன்!

இந்தப் பாடலில் Yodeling என்னும் உத்தியை முதன் முதலில் இந்தியத் திரை இசைக்கு அறிமுகப் படுத்தினார் கிஷோர்குமார்! இவருக்கு முன்னும் பின்னும் இந்த யாடலிங்க் வேறு எவருக்கும் வராத புதுமை! சபாஷ் கிஷோர்!

மீனா கபூர் நல்ல பாடகர். பாவம். லதாவின் நிழலில் அவருக்கு அதிக வாய்ப்பு இல்லை!

ரோஷன் சிறந்த, ரசனைமிக்க sensitive இசைஞர், பாவம் அதிக நாள் இருக்கவில்லை. “பர்ஸாத் கீ ராத்” (1960) என்ற படத்தில் இவர் அமைத்தகவ்வாலி” [  தோ கார்வான் கீ தலாஷ் ஹை}]  நமது சினிமா உலகிலேயே  இன்றுவரை தலையிடத்தைப் பெற்றுத் திகழ்கிறது! அதை மிஞ்ச ஆளில்லை!

இந்த மஷூகா படம் படுதோல்வி கண்டது. அதனால்  இந்தப் பாட்டு பிரபலமடையவில்லை.

கேட்டு ரசிப்பதற்கு  நமக்கென்ன தடை!

இனி, இன்னொரு கிஷோர் பாடிய டூயட் பார்ப்போம்:

ஆங்கோ(ன்) மே க்யா ஜீ

आँखों में क्या जी, रुपहला बादल
बादल में क्या जी, किसी का आँचल
आँचल में क्या जी, अजब सी हलचल

(ன்)கோ மே க்யா  ஜீ, ருபஹலா பாதல்

பாதல் மே க்யாஜீ, கிஸீ கா ஆஞ்சல்

ஆஞ்சல் மே க்யாஜீ, அஜப் ஸீ ஹல்சல்!

உன் கண்ணில் தான் என்னவோ?

அதுவா, அழகிய மேகம்!

மேகத்தில் தான் என்னவோ?

யாரோ ஒருவரின் முந்தானை!

அந்த முந்தானையில் தான் என்னவோ?

, அங்கு வினோத அசைவு!

रंगीं है मौसम
तेरे दम की बहार है
फिर भी है कुछ कम
बस तेरा इंतज़ार है
देखने में भोले हो पर हो बड़े चंचल
आँखों में क्या जी…  

ரங்கீ(ன்) ஹை  மௌசம்

தேரே தம் கீ பஹார் ஹை

ஃபிர் பீ  ஹை குச் கம்?

பஸ், தேரா இந்தஃஜார் ஹை!

தேக் நே மே போலே ஹை பர் ஹோ படே சன்சல்

ஆன்) கொ மே க்யா ஜீ

பொழுது ரம்யமாக இருக்கிறது!

அது  உன் மூச்சுக் காற்றால்  உண்டான வசந்தம்!

இருந்தாலும் ஏதோ குறைகிறதோ?

அதுவா, அது உனக்காகக் காத்திருப்பதுதான்! ( நீ இன்னமும் வரவில்லையே, அதுதான்)

பார்ப்பதற்கு சொத்தையாய் இருக்கிறாய், ஆனால் நீ குறும்பு பிடித்த  ஆள் தான்!

झुकती है पलकें

झुकने दो और झूम के
उड़ती है ज़ुल्फें
उड़ने दो होंठ चूम के
देखने में भोले हो पर हो बड़े चंचल
आँखों में क्या जी…  

ஜுக்தீ ஹை பல்கே(ன்)

ஜுக்னே தோ ஔர் ஜூம் கே

உட்தீ ஹை  ஜுல்ஃபே(ன்)

உட்னே தோ ஹோன்ட் சூம் கே

தேக்னே மே போலே ஹோ பர் ஹோ படே சன்சல்

(ன்)கோ மே க்யாஜி..

கண் இமைகள் கீழே தாழ்கின்றனவே?.

இன்னும் தான் ஜோராகத் தாழட்டுமே!.

கூந்தல் விரிந்து எழுகின்றதே?

எழுந்து உதடுகளைத் தான் தழுவட்டுமே!

பார்ப்பதற்கு சொத்தையாய் இருக்கிறாய், ஆனால் குறும்பு போகவில்லையே!

झूमें लहराएं

नयना मिल जाये नैन से
साथी बन जाएँ
रस्ता कट जाये चैन से
देखने में भोले हो पर हो बड़े चंचल
आँखों में क्या जी…  

ஜூமே லஹராயே

நைனா மில் ஜாயே நைன் ஸே

ஸாதீ பன் ஜாயே(ன்)

ரஸ்தா கட் ஜாயே சைன் ஸே

தேக்னே மே போலே ஹோ பர் ஹோ படே சன்சல்

(ன்) கோ மே க்யா ஜீ……

மகிழ்ச்சி அலை பொங்குகிறதே!

நம் கண்களின் பார்வை இணையட்டுமே!

நாம் சேர்ந்தே பயணம் செய்வோமே!

ஐயோ, பாதை கண்களிலிருந்து மறைந்துவிடுமே!

நீ பார்ப்பதற்கு சொத்தை, ஆனல் குறும்பு போகவில்லையே

கண்ணில் தான் என்னவோ?

Song: Ankhon mein kya ji Film: Nau Do Gyarah 1957 Lyricist: Majrooh Sultanpuri

Music: S.D.Burman  Singers: Kishore Kumar & Asha Bhonsle

இதுவும் ஒரு கேள்விபதில் பாடல் Teasingகுறும்புத்தனம் வெளியாகிறது. .மஜ்ரூஹ் சுல்தான்புரியின் கவிதை இதை அழகாக கொண்டுசெல்கிறது!

கிஷோர்ஆஷா பாடிய பல ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. குறும்புத்தனம் பாடல் தொனியிலேயே தெரிகிறது!

Ideal romantic song, polished expressions, and sung in a jovial spirit!  S.D.Burman was 51 years old when he composed this youngish melody! Makes one feel young!

ஸாஹிர் லுதியான்வி பிரிந்தபின், மஜ்ரூஹ் பர்மன் படங்களுக்கு பாடல்கள் எழுதினார். சிலர் படங்களில் டூயட் எடுபடுவதில்லை என்று சொல்லி வந்தனர். மஜ்ரூஹ் ஒப்பவில்லை. ஆடத்தெரியாத ஆசாமி கூடம் பத்தாது என்று சொல்வதைப் போன்றது இது, பாட்டு நன்றாக இருந்தால் ரசிப்பார்கள் என்று சொன்னர். பல ஹிட் டூயட்களை எழுதினார்.1992 வரை எழுதினார். தீவிர கம்யூனிஸப் பற்றுள்ள இவர் புரட்சி அரசியலில் சம்பந்தப்பட்டதாகக்  கருதப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸம் போன போக்கைக் கண்டு வெறுப்படைந்தார், கவிதையிலேயே காலம் கழித்தார். சிறந்த  உருதுக் கவிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 16 ,  கலை,  வளர்ச்சி, 

***

.

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்! (Post No.4679)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-45 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4679

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

இலக்கியத் திருட்டு

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்!

 

ச.நாகராஜன்

 

1

கவிஞர் கண்ணதாசன் எழுதியதைத் தன் பெயரில் போடத் துடித்த கலைஞர்கள் காலத்திலிருந்து இன்று வரை காப்பி அடிக்கும் கலைவாணர்கள் பெருகியே வந்திருக்கிறார்கள்.

இதை ஒரு குற்றமாக அவர்கள் நினைப்பது இல்லை என்பது தான் மெய்; வருத்தப்பட வைக்கும் விஷயமும் இது தான்!

இதில் ஒரு அற்ப ஆசை; தானும் ஒரு படைப்பாளி தான் என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடி மனத்து ஆசை.

புரிகிறது; ஆனால் இது பெரும் தவறல்லாவா! ஒரிஜினல் படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகமல்லவா?!

 

 

படித்ததில் பிடித்ததை நண்பர்களுக்கு அனுப்பலாம்; தளங்களில் வெளியிடலாம்- உரியவரின் அனுமதி பெற்று; அது இந்தக் கால கட்டத்தில் மிகவும் கஷ்டம் என்றால், படித்த நல்ல விஷயத்தைப் பகிர வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி இருந்தால், அதை எழுதியவர் யார், அதை வெளியிட்ட பத்திரிகை அல்லது இணையதளம் எது, அதை விரும்பக் காரணம் என்ன என்பதையும் சேர்த்து வெளியிட வேண்டும். உள்ளதை உள்ளபடி வெளியிட்டால் போதும்; என் அபிப்ராயம் எல்லாம் எதற்கு என்றால், அதுவும் சரிதான், படைப்பை அப்படியே அதை எழுதியவர், வெளியிட்ட தளம், பத்திரிகை எது என்பதுடன் வெளியிட வேண்டும்.

இது குறைந்த  பட்ச கர்டஸி.(Courtesy)

 

2

நாளுக்கு நாள் எனது படைப்புகளை உடனுக்குடன் “திருடி” என் பெயரை ‘கட்’ செய்து விட்டு, தங்கள் பெயரில் வெளியிடும் சாமர்த்தியசாலிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

இப்படி அவர்கள் பெயரில் வெளியாகியுள்ள திருட்டுக் கட்டுரை எனது உடனடி கவனத்திற்கு சில மணி நேரங்களுக்குள்ளாகவே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

 

 

சுமார் எட்டாயிரம் பேர்கள் தினசரி எனது கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும், இவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் நல்லவர்கள், வல்லவர்கள், அதி புத்திசாலிகள், ஸ்மார் பீபிள் என்பதும் ஒரு காரணம் – இது உடனடியாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு

 

3

எனது எழுத்துக்களை திருடிய சில “திருடர்கள்”, திருடிகள் பற்றி எழுத வேண்டாம் என்று தான் இத்தனை நாள் இருந்தேன். ஆனால் சமீபத்திய “காதல் எத்தனை வகை” என்ற எனது கட்டுரை திருடப்பட்டு வெளியிடப்பட்ட விதம் தான் என்னை வருத்தமுறச் செய்தது, கோபமுறச் செய்தது.

 

 

அதில் என் பெயரை வெளியிடவில்லை; பரவாயில்லை!

வெளியிட்ட www.tamilandvedas.com தளத்தின் பெயர் வெளியிடப்படவில்லை, பரவாயில்லை.

ஆனால் போஜ மஹாராஜன் எழுதிய சிருங்காரபிரகாஸம் என்ற அரிய நூலை 1908 பக்கங்களையும் கைப்பிரதியாக எழுதி அதை ஆராய்ந்து உலகிற்கு வெளியிட்டாரே பேரறிஞர் டாக்டர் வி.ராகவன், அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.

 

 

அந்தப் பகுதியை கட் செய்து விட்டார் “உத்தம வில்லன்”!

ஏன் அப்படிச் செய்தார் என்பது தான் தெரியவில்லை!

தன் பெயரில் வெளியிட்ட இந்தக் கட்டுரையை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஹெல்த்கேர் இதழ் ஆசிரியரும் என் நண்பருமான ஆர்.சி. ராஜா,” நன்றி கூட இல்லையே” என்று வருத்தப்பட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் – இதை எடுத்துப் போட்டவரின் தளத்தின் லிங்கை அனுப்பி!

என்ன சொல்லித் திட்டுவது? படிப்பவர்கள் தாம் தீர்மானித்துத் திட்ட வேண்டும்.

 

சிலர் தனக்கு வந்த மெயிலிலிருந்து அப்படியே அனுப்பி விடுகிறார்கள் – அவர்களுக்கு ‘லிஃப்ட்” ஆனது தெரியாது!

ஆகவே உடனடியாக யாரையும் திட்ட முடியாது!

 

4

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தை சென்னையில் இருந்தால் காலையில் கேட்பது வழக்கம். காரணம், சுமார் இருநூறுக்கும் (இன்னும் அதிகமாகவே) மேற்பட்ட  அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை நான் அளித்திருப்பதாலும் இன்னும் அளித்து வருவதாலும், அந்தச் சிந்தனைகள் ஒலிபரப்பப்படுவதை  கேட்பேன்.

ஒரு நாள். ஒரு ஒலிபரப்பு என்னை திடுக்கிட வைத்தது.

ஒரு டாக்டர். ஜானகி என்று பெயர். எனது நூறு அறிவியல் கட்டுரைகளைத் தொகுத்து ‘வியப்பூட்டும் விஞ்ஞானப் புதுமைகள் நூறு” (நவம்பர் 2005 வெளியீடு) என்று ஒரு நூலாக வெளியிட்டிருந்தேன்.

 

 

அதில் பத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து  மாற்றாமல் அம்மையார் அனுப்ப, அதை நமது வானொலி நிலையமும் ஏற்றுக் கொண்டிருந்தது.

உடனடியாக புரோகிராம் எக்ஸிகியூடிவிடம் (திரு செல்வகுமார் அருமையான நண்பர்; சிறந்த நிர்வாகி; நல்லனவற்றைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்) விஷயத்தைச் சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘என்ன செய்வது? எல்லா நூல்களையும் என்னால் படிக்க முடியாதே! இப்படி ஒரு டாக்டர் செய்யலாமா’, என்று வருந்தினார்.

பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நான் ஊகித்தேன்.

 

5

பாக்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சுமார் 19 வருடங்களாக வாரம் தோறும் எழுதி வருகிறேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தினத்தந்தியில் அப்படியே எனது அறிவியல் கட்டுரை காப்பியாக ஒரு  முறை வந்ததை தற்செயலாகப் பார்த்துத் திடுக்கிட்டேன். என்ன செய்வது?

 

 

6

இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை தினக்குரல். சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சுளா ரமேஷ் அவர்களின் குழுமத்திலிருந்து வெளியாகும் சினேகிதி பத்திரிகையில் மாதம் ஒரு கட்டுரை எழுதுவது எனது வழக்கம். அதில் வெளியான 64 கலைகள் பற்றிய எனது கட்டுரை அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் இந்தப் பத்திரிகையில் எனது பெயரும், கட்டுரை எடிட் செய்யப்படாமலும் வந்திருந்தது. இதை எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

திருட்டு உலகிலும் ஒரு நல்ல குரல்!

 

 

எனது சம்பந்தி சந்தேகாஸ்பதமாக இருக்கும் கட்டுரைகள் என்னுடையது தானா என்று சுலபமாகக் கண்டுபிடிக்க ஒரு வழி வைத்திருக்கிறார்.

 

 

இதை அவர் சொன்ன போது சிரித்து மகிழ்ந்தேன்.

காப்பி அடிக்கப்பட்டுள்ள கட்டுரையின் சில முக்கிய சொற்றொடர்களை அப்படியே கூகுளில் போடுவாராம். எனது ஒரிஜினல் கட்டுரை வெளியான தளம்/ அல்லது பத்திரிகை, வெளியான தேதி உள்ளிட்டவை வந்து விடுமாம். உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துவார்.

இது போல எனது நண்பர்கள் பலரும் உடனடியாக போனில் கூப்பிட்டுச் சொல்லி விடுகிறார்கள்!

 

7

ரவி என்று ஒரு ஆசாமி. அப்படியே அப்பட்டமான காப்பியாளர். எனது கட்டுரையைத் தன் போட்டோவுடன் போட்டுக் கொண்டார். இதைச் சுட்டிக் காட்டிய போது, “இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவருக்கு காப்பிரைட், திருட்டு இலக்கியம் என்றெல்லாம் பாடமா எடுக்க முடியும்? இதற்கு தண்டனை உண்டு என்றவுடன் ஆசாமி வழிந்தார்; வழிக்கு வந்தார்.

 

 

8

ஒரு நல்ல ஆன்மீக மாதப் பத்திரிகை. ‘அமிர்தமாக வர்ஷிக்கும்’ நல்ல கருத்துக்களைக் கொண்டது. இதில் ஒரு கட்டுரை வந்தது. இதைச் சுட்டிக் காட்டியவுடன் ஆசிரியர் வருத்தப்பட்டார். ஏனெனில் இப்படி ஒரு காப்பி கட்டுரையைத் தான் வெளியிட்டு விட்டோமே என்று!

 

 

சென்ற வாரம் எனது சம்பந்தி அனுப்பிய கட்டுரை ஒன்று வந்தது. மஞ்சுளா ரமேஷ் ஞான ஆலயம் குழுமம் நடத்தும் ஜோஸிய இதழான ஸ்ரீ ஜோஸியத்தில் நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை ஒன்றை அப்படியே ஒரு பெண்மணி தன் பெயரில் இணைய தளத்தில் வெளியிட, அது “உலா” வந்தது! ஆனால் ஒரிஜினல் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகங்களை (என்னென்ன கிழமைகளில் என்னென்ன செய்யலாம்?) வெட்டி விட்டார்.

 

9

கட்டுரை நீண்டு விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

அனுமதியுடன் பிரசுரியுங்கள், உரிய கட்டுரையாளரின் பெயரைப் போடுங்கள், அது வெளியான பத்திரிகை அல்லது தளத்தின் பெயரைச் சுட்டிக் காட்டுங்கள் என்று தான் சொல்லலாம்; இதற்கு அதிகமாக என்னத்தைச் சொல்ல, காப்பி அடிக்கும் கலை(ஞ)-வாணர்-களுக்கு?!

1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது :

‘திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க  முடியாது!’

 

10

ஒழிக்க முடியாவிட்டாலும் கூட கண்டிக்கலாம் இல்லையா?

இப்படி இலக்கியத் திருடு செய்யும் குருடர்களை ஒரு வார்த்தை கண்டித்து எழுதிப் போடுங்கள்.

வெட்கமடைபவர்கள், அப்புறம் அதில் ஈடுபடமாட்டார்கள், உரியவரின் பெயரை வெளியிடுவார்கள்!

அத்துடன் எனது நலம் விரும்பிகள் செய்வது போல ஒரிஜினல் படைப்பாளருக்கு இப்படிச் செய்பவர் யார் என்பதைத் தெரிவிக்கலாம்!

***