நான் திருமணப் பெண் போல மணக்க வேண்டும் – புலவன் ஆசை (Post.10,551)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,551

Date uploaded in London – –    11 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – 9

நான் திருமணப் பெண் போல மணக்க வேண்டும் – புலவன்  வேண்டுகோள்

மந்திரம் 21

(பாடல் 21;)- அ .வே.12-ஆவது காண்டம் ; முதல் துதி)

அக்னிவாசாஹா ப்ருதிவ்யஸித ஜூஷ்விஷிமந்தம் ஸம்சிதம் மா க்ருணோது — 21

பொருள்  21

கனலை அணிந்துள்ள கருமையான அங்கங்களை உடைய பூமி  எனக்கு அறிவு ஒளியை கொடுப்பாளாகுக; என் அறிவை கூர்மை ஆக்குவாளாகுக -21

எனது கருத்துக்கள் :_

21- கிட்டத்தட்ட காயத்ரீ மந்திரத்தின் பொருள்தான் இது. எனது அறிவை பிரகாசம் ஆக்கு; கூர்மை ஆக்கு  என்று புலவர் வேண்டுகிறார். காயத்ரீ மந்திரத்தை மொழிபெயர்த்த பாரதியாரும்

“செங்கதிர்த் தேவன் ஒளியைத் தேர்ந்த்து தெளிகின்றோம்.

அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடந்துக” –என்றே பாடுகிறார்.

இன்னும் ஒரு  இடத்தில் ஒளி படைத்த கண்ணினாய் வா  வா, உறுதி கொண்ட நெஞ்சினாய்   வா வா  என்று பாடுகிறார்.. வேதத்தில் இருந்து பெறப்பட்ட கருத்தே அது.

XXX

மந்திரம் 22

பூம்யாம் தேவேப்யோ தததி  யக்ஞம் ஹவ்யமரங்க்ருதம்

பூம்யாம் மனுஷ்யாம் ஜீவந்தி ஸ்வதயான்னேன மர்த்யாஹா

ஸா நோ பூமிஹி  ப்ராணமாயுர் ததாது ஜரதஷ்டிம்  மா ப்ருதிவீ க்ருணோது – 22

பொருள்  22

எந்த பூமியில்  தேவர்களுக்கு மக்கள் அவியையும் யக்ஞத்தையும் அலங்காரங்களுடன் அளிக்கிறார்களோ , எங்கு மக்கள் உண்டும் குடித்தும் வாழ்கிறார்களோ , அந்த பூமாதேவி எங்களுக்கு நல்ல சுவாசக் காற்றையும் , நீண்ட ஆயுளையும் அளிப்பாள் ஆகுக;  நாங்கள் கிழவர்கள் ஆகும் வரை வாழவேண்டும்  –22

எனது கருத்துக்கள்

யாக மேடை, யூப ஸ்தம்பம்  ஆகியவற்றை அலங்கரித்த செய்தி

ரிக் வேதத்திலேயே வருகிறது. மணப்பெண்ணின் அலங்காரம் பற்றி கல்யாண மந்திரத்தில் வருகிறது .ஒரு குழந்தையை தாயார் அலங்கரிப்பது போல அலங்கரி யுங்கள் என்ற  உவமை RV 9-104-1 மந்திரத்தில் வருகிறது. பெண்கள் நகை அணிந்த காட்சிகளும் உலகின் மிகப்பழைய நூலில் வருவதால், வேத கால  மக்கள் மஹத்தான நாகரீகத்தில்,  செழிப்புடன் வாழ்ந்ததை அறிகிறோம்..

xxx

மந்திரம் 23

யஸ்தே கந்தஹ ப்ருதிவி ஸம்பபூவ யம் பிப்ரத்யோஷ தயோ யமாபஹ

யம் கந்தர்வா அப்சரஸ் ச  பேஜிரே தேன மா ஸுரபிம் க்ருணு  மா நோ த்விக்ஷத கஸ்சன -23

ஓ பூமியே உன்னிடமிருந்து மண் வாசனை வருகிறது.; உன்னிடம் தாவரங்களும் , மூலிகைகளும்  நீரும் வாசனையுடன் மிளிர்கின்றன ; கந்தர்வர்களும், அப்சரஸ்களும் அவற்றைப் பகிர்கிறார்கள்  அந்த இனிமையை எனக்கும் அருள்வாயாகுக; என்னை எவரும் வெறுக்கமால் இருக்கட்டும் -23

எனது கருத்துக்கள்

மண் வாசனை என்பது நல்ல ஒரு கருத்து. கிராமப் புறத்தில் வாழ்வோருக்கு இது நன்கு தெரியும். ரிக் வேதம் முழுதும் கந்தர்வர்கள், அப்ஸரஸ்களை வருணிக்கும்போது அவர்களை வாசனை மிகுந்தவர்கள் என வருணிக்கின்றனர். கந்தம் Good Smell இருப்பதால்தான் அவர்களை கந்தர்வர்கள் என்று அழைக்கிறோம். மேலும் அப்சரஸ் என்றால் சென்ட், பெர்ப்யூம் Scent, Perfume என்றும் பொருள்; அவர்களுடைய பெயர்கள் அனைத்தும் பூக்களின் பெயர்கள்; செடிகளின் பெயர்களே என்றும் வியாக்கியானங்கள் உள்ளன. கந்தர்வர்கள் 6333 பேர் உள்ளதாக  ஒரு அதர்வண வேத துதி பாடுகிறது. அவர்கள் ஆடல், பாடலில் வல்லவர்கள்; பெண்களிடத்தில் பிரியம் உள்ளவர்கள்; தேவர்களுக்கு சோம ரசம் தயாரிப்பவர்கள். ஆடல்-பாடல் கலைகளுக்கே காந்தர்வ வேதம் என்றே பெயர்; புராணங்களில் இவர்கள் பற்றி நிறைய கதைகள் உள்ளன. அப்ஸரஸ் கள் என்னும் அழகிகள் அவர்களுடைய மனைவியர். இந்தப் பின்னணியை நோக்கும்போது இந்தப் புலவன் அத்தைகைய இனிமையை நன்மணத்தை எனக்கும் கொடு என்று வேண்டுவது ஏன் என்பது புரிகிறது .

Xxx

மந்திரம் 24

யஸ்தே கந்தஹ புஷ்கரமாவிவேச யம் சஞ்ஜப்ருஹு ஸுர்யாயா விவாஹே

அமர்த்யாஹா ப்ருதிவி கந்தமக்ரே மா ஸுரபிம் க்ருணு  மா நோ த்விக்ஷத கஸ்சன -24

பொருள்  24

உன்னுடைய எந்த நல்ல மணம் தாமரைப்பூவில் நுழைந்ததோ, எந்த மணத்தை வைத்து திருமணப் பெண் சூர்யாவை கந்தம் உள்ளவராக ஆக்கினார்களோ அந்த இனிமையான மணத்தை எனக்கும் அளிப்பாயாகுக .; என்னை எவரும் வெறுக்கமால் இருக்கட்டும் -24

எனது கருத்துக்கள்

மந்திரம் 24-ம் இதையே மேலும் விளம்புகிறது . இந்தியாவின் தேசீய மலர் தாமரை Lotus. தேவியர் அனைவரும் வீற்றிருப்பது தாமரை; தமிழில் மலர் (பூ) என்றாலே தாமரை. வேதத்தில் நூற்றிதழ் தாமரை என்ற சொற்றோடர் உளது. அதை சங்க இலக்கிய பாடலிலும் காண்கிறோம். அத்தகைய தாமரை மலர் மணமும் உன்னுடையதே என்று புலவன் பூமியைப் போற்றுகிறான்.

இந்த 24 ஆவது மந்திரத்தில் சூர்யாவின் வாசனை வருகிறது. அவள்தான் முன் உதாரணமான மணப்பெண் Exemplary Bride ; ரிக் வேதம் 10-85 ஆவது துதியில் நீண்ட கல்யாண மந்திரம் உளது. அதில் சூர்யாவை காண்கிறோம். அதர்வண வேதத்தில் அந்தக் கல்யாண மந்திரத்தோடு கூடுதல் மந்திரங்களை சேர்த்துள்ளார்கள் ; மணப் பெண் அலங்கா ரம் பற்றி இந்துக்களுக்குச் சொல்லத் தேவையே இல்லை. இந்து மதம் போல நாலு நாள்  திருமணச் சடங்கு உலகில் வேறு எங்கும் இல்லை. மலர்களும் மணப் பெண்ணும் ஒன்று என்னும் அளவுக்கு அவள் மீது வாசனை மலர்கள் இருக்கும். இது தவிர சந்தனம் , குங்குமம், கஸ்தூரீ என்று கூடுதல் வாசனையும் இருக்கும். அதையெல்லாம்  நினைவு கூறும் புலவன் எனக்கும் அந்த மணமும்  இனிமையும் கிடைக்கட்டும் என்கிறான். இவ்வளவு இருந்தால் அவனை வெறுப்பாரும் இருப்பாரோ !! பூமியை வெறுப்பாரும் இல்லை ; மணப் பெண்ணை விரும்பாதவ ரும் இல்லை !!!

ரிக் வேத கல்யாண மந்திரம் குறித்தும், அகநா நூறு கல்யாணப் பாடல்கள்  86, 136  குறித்தும் முன்னரே  விரிவாக எழுதியுள்ளேன்.

தொடரும் …………………………….

xxx

tags–திருமணம், வாசனை, மணப்பெண் , கல்யாணம் , பூமிஸூக்தம்-9

அடடா தப்பாப் போச்சே…….!!! (Post No.8734)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8734

Date uploaded in London – –25 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அடடா தப்பாப் போச்சே…….!!!

Kattukutty

ரேடியோ ஜாக்கியை கல்யாணம் பண்ணிகிட்டது தப்பாப் போச்சு???

ஏன்???

இரவு லைட்டை அணைத்து, ‘படு’ என்றால் “இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிந்தது. உங்களிடம் வணக்கம் கூறி விடை பெறுவது

உங்கள் அன்பு ஜெயலட்சுமி” என்று சத்தம் போட்டு சொல்றா….

கிராமத்து ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு??

ஏன்???

‘36 சைஸ் ப்ரா வாங்கிட்டி வா’ன்னா 36 புறாக்களை வாங்கிட்டு வந்து

நிக்கிறாரு…..

சினிமா டைரக்டடரை கல்யணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

பர்பெக்ஷனை எதிர்பார்த்து என்ன செஞ்சாலும் “கட் கட் “என்கிறார்

ஸ்கூல் வாத்தியாரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சே

ஏன்???

‘கல்யாணத்திலே மொய் எழதாதவங்க கையை தூக்குங்க’ என்கிறார்……

அரசியல்வாதியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் பேச்சே??

ஏன்???

ராத்திரிலெ கட்டில்ல ஏறி நின்னுக்கிட்டு கூடி இருக்கும் மக்கள்

அனைவருக்கும் வணக்கம்ன்னு சத்தம் போட்டு சொல்றார்……

பூக்காரியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சே???

ஏன்???

தினமும் என் தலையில தண்ணி தெளிச்சு எழுப்பறா……

பஸ் கண்டக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சே??

ஏன்???

கல்யாணம் முடிஞ்சவுடன் எல்லோரும் சில்லரை எடுத்து வைச்சுகங்கறாரே…..

வாரப்பத்திரிக்கை ஆசிரியரை கலயாணம் பண்ணிக்கட்டது தப்பாப்

போச்சே???

ஏன்???

எங்க கல்யாண பத்திரிக்கை அடியிலே மேலே கூறியஅ னைத்தும்

கற்பனையே. ஆசிரியர் எதற்கும் பொறுப்பாக மாட்டார் என்று

அடிச்சிருக்காரே….

காபரே டான்ஸர் வீட்டுக்கு திருடப்போனது தப்பாப்போச்சு…

என்ன ஆச்சு???

மரியாதையா எல்லாத்தையும் கழட்டுன்னு சொன்னத்துக்கு

ஜட்டியும் கழட்டிப்புட்டா……

மாசக் கடைசீல திருடப் போனது தப்பாப் போச்சு

ஏன்??? ஒண்ணும் கிடைக்கலியா???

அதில்ல, அந்த வீட்டுக்காரன் என் கால்ல விழுந்து கதறி அழுது

கெஞ்சி எங்கிட்டேர்ந்து 50 ரூபாய் கடன் வாங்கிட்டாம்பா…..

டாக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு???

ஏன்???

தினமும் எனக்கு டெம்ப்ரேச்சர் பார்த்துட்டுத் தான் படுத்துக்கிறார்….

கம்பவுண்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

ரூபாய் 50 குடுத்து டோக்கன் வாங்கின பிறகு தான் பெட் ரூமுக்குள்ளையே விடறார்…..

வாட்சுமேனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

ரூம் லைட்டை அணைச்சவுடன் ஸ்டூலை தூக்கிக்கிட்டு

வாசல்ல போய் உக்கார்ந்துகிறாரு……..

ஸ்கூல் வாத்தியாரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

ஏதாவது தப்பா சொன்னா கையில பிரம்பால அடிக்கிறார்…….

நகைக் கடைக்காரர் மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டது

தப்பாப் போச்சு…

எப்படி????

நீ தங்கச்சிலை மாதிரி இருக்கேன்னு நேத்திக்கு

சொல்லிப்புட்டேன்.இன்னைக்கு அவ அப்பா வந்து செய் கூலி

சேதாரம் கேட்கிறார்.

காமிரா மேனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு…

எப்படி???

இரவு “லைட் “போட்டாதான் மூடு வரதுன்னு எல்லா லைட்டையும்

“ஆன் “பண்ணி “ஆக்‌ஷன் “ ன்னு வேற சத்தம் போடறார்……….!

***

ஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம்-சாணக்கியன் (Post No.4685)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 15-07

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4685

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ஆண்களை விட பெண்களுக்கு எல்லா அம்சங்களிலும் அ பார சக்தி இருப்பதாக உலக மஹா ஜீனியஸ்/ மஹா புத்தி சாலி, மேதாவிப் பிராஹ்மணன் சாணக்கியன் ,2300 ஆண்டுகளுக்கு முன்னர் இயம்பியதைப் படித்தால் அதிசயமாக இருக்கும்.

 

“ஆண்களை விட ஒரு பெண் இரண்டு மடங்கு சாப்பிடுவாள்;

ஆண்களை விட பெண்களுக்கு நான்கு மடங்கு புத்தி அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு துணிச்சல் ஆறு மடங்கு அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் (Sex drive) விஷயங்களில் எட்டு மடங்கு ஆர்வம் அதிகம்”.

ஆஹாரோ த்விகுணஹ ஸ்த்ரீணாம் புத்திஸ்தாஸாம் சதுர்குணா

ஷட்குணோஅத்யவஸாயஸ்ச காமஸ்சாஷ்டகுணஹ ஸ்ம்ருதஹ

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 17

 

xxx

 

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு!

 

 

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அசிங்கமான அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

 

புறநானூற்றிலும் மநு ஸ்ம்ருதியிலும் இதற்கு இணையான கருத்துக்கள் உள்ளன.

 

xxx

 

பெண்களின் அழகு எது?

“குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;

பெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);

அவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;

யோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.

 

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்

வித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 9

 

திருக்குறளிலும் கற்பு மற்றும் கணவனைத் தொழுவது பெரிதும் போற்றப்படுகிறது. அதே போல குணம் என்னும் குன்றேறி நின்றார் உடனே மன்னித்துவிடுவர் என்றும் வள்ளுவன் கூறுவான்.

 

 

 

xxxx

 

 

பெண்களை தூய்மையாக்குவது எது?

வெண்கலத்தை சாம்பலால் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பித்தளையை அமிலத்தைத் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பெண்களுக்கு மாதவிடாய் (விலக்கு) வந்தால் சுத்தமாகிவிடுவர்

ஒரு நதியை வேகமாக ஓடும் தண்ணீர் சுத்தமாக்கும்.

பஸ்மனா சுத்யதே காம்ஸ்யம் தாம்ரமம்லேன சுத்யதி

ரஜஸா சுத்யதே நாரீ நதீ வேகேன சுத்யதி

–6-3

 

XXXX

யார் பாபம் யாருக்கு?

நாட்டு மக்கள் செய்த பாபம் அரசனைச் சாரும்;

அரசன் செய்த பாபம் புரோஹிதனைச் சாரும்;

மனைவி செய்த பாபம் கணவனைச் சாரும்;

மாணவன் செய்த பாபம் ஆசிரியரைச் சாரும்;

 

ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராக்ஞஹ பாபம் புரோஹிதம்

பர்தா ச ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷய பாபம் குருஸ்ததா

6-9

 

XXX

கல்யாணம் கட்டாதே!

கெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;

கெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;

கெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;

கெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.

 

வரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்

வரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.

6-12

 

–Subham–

 

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

 

Written by London Swaminathan 

 

Date: 5 DECEMBER 2017 

 

Time uploaded in London-  6–53 am

 

 

Post No. 4461

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்பதற்கு கிரேக்க நாட்டறிஞன் சாக்ரடீஸ் சொன்ன பதில் நமக்குத் தெரியும்:

 

“மகனே! வாய்ப்பு கிடைத்தால் விடாதே; கல்யாணம் கட்டு; நல்ல மனைவி வாய்த்தால் நீ சுகமாக இருப்பாய்; கெட்ட மனைவி கிடைத்தாலோ நீ (என்னைப் போல) தத்துவ ஞானி ஆகிவிடுவாய்; உலகமே பயனடையும்!”

 

இன்னொரு சாக்ரடீஸ் கதையும் உங்களுக்குத் தெரிந்ததே! சாக்ரடீஸ் வழக்கம்போல இளஞர்களைக் கண்டவுடன் கதைத்தார். இதைப் பிடிக்காத அவரது மனைவி மேல் மாடியிலிருந்து அவரைத் திட்டித் தீர்த்தாள்; அசராது, அலங்காது அவர்பாட்டுக்கு உபதேசத்தைத் தொடர்ந்தார். மேல் மாடியிலிருந்து அவரது மனைவி ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் தலையில் கொட்டினாள்; அவர் சொன்னார்: “இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது!”

 

 

வள்ளுவரும் மனுவும் திருமணம் செய்துகொள்; ஏனெனில் கிருஹஸ்தன் என்பவனே மற்ற மூவர்க்கும் உதவுபவன் ; ஆகையால் அவனுக்கு மற்ற மூவரை விட புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி ஆகிய மூவர்க்கும் சோறுபோட்டு ஆதரவு கொடுப்பவன் இல்வாழ்வான்தான் (கிரஹஸ்த) என்று செப்புவர் அவ்விருவரும்.

 

கண்ணகியும் சீதையும் ‘அடடா! இந்த மூவரையும் கவனிக்கும் வாய்பை இழந்துவிட்டோமே’ என்று புலம்புவதை சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயாணத்திலும் காண்கிறோம்.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மனு புகல்வது யாது?

“மற்ற மூவர்க்கும் அறிவினாலும் உணவினாலும் ஆதரவு அளிப்பதால் மனை   வி யுடன் வாழ்பவனே மற்ற மூவரையும்விடச் சிறந்தவன்” என்பார் மனு (3-78)

 

இன்னும் பல இடங்களிலும் கிரஹஸ்தனே சிறந்தவன், மனைவியே குடும்ப விளக்கு என்கிறார் மனு.

 

ஆனால் நாலடியார் இயற்றிய சமண முனிவர்களோ நேர் மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். திருவள்ளுவர் சமணர் அல்ல என்பதற்குக் கொடுக்கப்படும் ஏராளமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அதாவது கல்யாணம் வேண்டுமா, வேண்டாமா என்னும் பட்டிமன்றத்தில் சமண முனிவர் கல்யாண எதிர்ப்பு கோஷ்டி; வள்ளுவனும் மனுவும் கல்யாண ஆதரவு கோஷ்டி!

 

கல்லால் அடித்துக்கொள்வதே திருமணம்

 

இதோ நாலடியார் பாடல்கள்:

 

கடியெனக் கேட்டும் கடியான் வெடிபட

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் – பேர்த்துமோர்

இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே

கற்கொண்டு எறியும் தவறு – நாலடியார் 364

 

பொருள்:

கல்யாணம் கட்டாதே என்று பெரியோர் சொல்லக்கேட்டும் அதை ஏற்காமல், தலை வெடிக்கும்படி சாக்கொட்டு ஒலித்து, அதைக்கேட்டும், இல்வாழ்க்கை நிலை இல்லாதது என்பதை உணராதவனாய் மறுபடியும் ஒருத்தியை மணம்புரிந்து இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்து தன் தலையிலேயே போட்டுக்கொண்டது போலாகும் என்பர் சான்றோர்.

 

திருமணம் என்பதே துன்பம்

 

மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்

பூண்டான் கழித்தற்கு அருமையால் — பூண்ட

மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக்கண்ணே

கடியென்றார் கற்றறிந்தார் — நாலடியார் 56

 

பொருள்:

நல்ல குணங்களும் புத்திரப்பேறு என்னும் பாக்கியமும் மனைவியிடம் இல்லாவிட்டாலும் கல்யாணம் செய்துகொண்ட புருஷன் அவளை விட்டுவிட முடியாது. எனவே திருமணம் என்பது ஒருவன் தானே வலிய ஏற்றுக்கொண்ட துன்பம் ஆகும். ஆகையால்தான் உயர்ந்த ஒழுக்க நூல்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் திருமணம் செய்து கொள்ளாதே என்றனர்.

 

ஆக, நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள் திருமண எதிர் கோஷ்டி; தீவிர இந்துக்களான திருவள்ளுவனும் மநுவும் திருமண ஆதரவு கோஷ்டி.

 

 

TAGS: -சாக்ரடீஸ், திருமணம், கல்யாணம், சமண முனிவர், மநு, வள்ளுவன்

 

 

சுபம், சுபம் —

சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு (Post No.3723)

Picture of a Traditional Tamil Wedding

 

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 20-55

 

Post No. 3723

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாபிலோனியா, மெசபொடோமியா, சுமேரியா என்றெல்லாம் அழைக்கப்படும் பகுதி இராக், சிரியா, துருக்கி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் நாடுகளாகும். அருகாமையிலுள்ள வேறு சில நாடுகளின் பகுதிகளும் இந்த வரம்பிற்குள் வரும். அங்கு சுமார் 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை இந்துக்களின் திருமணத்துடன் ஒப்பிடுவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம்.

 

1.1மத்தியக் கிழக்கு (Middle East) அல்லது அருகாமைக் கிழக்கு (Near east) என்று அழைக்கப்படும் இப்பகுதிகளில் கல்யாணத்தை நடத்தும் பொறுப்பு தந்தையிடமே இருந்தது.

 

இந்துமதத்திலும் தந்தைதான் இதை ஏற்பாடு செய்வார். ஆனால் பெண் அல்லது மாப்பிள்ளையை முடிவு செய்வதில் தாயார் பெரும் பங்காற்றுவார். இது காளிதாசன் முதலியோர் எழுதிய நாடகங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் தெரிகிறது.

 

2.பெண்கள் 13 வயது முதல் 19 வயதுக்குள்ளாக கல்யாணம் செய்தனர். ஆண்கள் வயது, திருமணத்தின்போது 10 வயது கூடுதலாக இருந்தது.

இந்துக்களும் பெண்ணின் வயது 10 முதல் 20 வரை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். (உ.ம். வால்மீகி ரா மா யணம், சிலப்பதிகாரம்).

 

3.ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டத்து. ஆனால் முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாவிடில் இரண்டாவது மனைவிக்கு அனுமதி உண்டு.

இந்துக்களின் மனு தர்ம சாத்திரமும் இதையே செப்பும். அரசர்கள் மட்டும் அருகாமை நாட்டு உறவு நீடிக்கவும், படைபல உதவிக்கும் என பல மனைவியரை மணந்தனர். ஆனால் ராமன் போன்ற மன்னர்கள் “இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று சொன்னார்கள்.

 

4.முதலில் சம்மதம், பின்னர் கல்யாணம் என்ற நடைமுறை இருந்தது.

பெண்ணுக்கு பணம் (சீதனம்) கொடுக்க வேண்டும்.

 

நிச்சயதார்த்தம் பின்னர் திருமணம் என்பது இந்துக்களின் வழக்கம்.

சங்கத் தமிழ் நூல்களிலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் வழக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

5.திருமண ஒப்பந்தம் எழுத்தில் இருந்தது. ஆனால் வாய்மூலம் சொன்னாலும் அதுவும் ஏற்கப்பட்டது. சுமேரியாவில் திருமணத்தைப் பற்றி சட்ட விதிகள் இருந்தன.

 

இந்துக்களும் நிச்சயதார்த்த்தின்போது பத்திரிக்கை படிக்கும் வழக்கம் உண்டு. இரு தரப்பினரும் அதை கைமாற்றிக்கொள்வர். சில நேரங்களில் இந்தப் பெண், இந்தப் பையனுக்குத்தான் என்று சொல்லிவிட்டால், வார்த்தை மாறாமல் அதை மதித்து நடந்தனர். இந்துக்களின் நீதி நூல்களில் திருமண விதிகள் உள்ளன.

 

6.மெசபொடோமியாவில் இ ருதரப்பாரும் பெண்ணுக்குக் கொடுத்த சீதனம் பற்றி எழுதி வைத்தனர். பெண்ணின் சொத்து குழந்தைகளையே சாரும். குழந்தை இல்லாவிடில் கணவருக்கும் பங்கு உண்டு. பெண்ணுக்கான  சீதனத்தை குழந்தை பெறும்வரை தவனை முறையில் செலுத்தினர்..

இந்துமத்தில் இது பற்றி விதி இல்லாவிடினும் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைப் போடுவர். ஆடி, கிருத்திகை, வளைகாப்பு, குழந்தை பிறப்பு, தலை தீபாவளி என்று ஏதேனும் ஒரு சாக்கில் கொடுப்பர். அதை எல்லாம் மொத்த சீதனக் கணக்கில் சேர்ப்பர். இடை க்  காலத்தில் ஆண்களுக்கு கிராக்கி அதிகம் இருந்ததால் ஆண்களுக்கு   வரதட்சிணைப் பணம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பழங்காலத்தில் இவ்வாறு இல்லை.

 

6.சுமேரிய, பபிலோனிய திருமணங்கள், 5 முதல் 7 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் என்னென்ன சடங்குகள் நடந்தன என்ற விவரம் இல்லை.

 

இந்துக்களின் திருமணம் ஐந்து நாட்களுக்கு நடந்தது. இப்பொழுது அது இரண்டு நாட்களாகச் சுருங்கிவிட்டது. இந்துக்களின் 5 நாள் சடங்குகளும் நீதி நூல்களில் உள்ளன.

 

 

7.பெண்ணின் முகத்தை மூடியிருக்கும் திரையை, மாப்பிள்ளை அகற்றுவது முக்கிய சடங்காக இருந்தது.

 

இந்த வழக்கம் வட இந்திய இந்துக்களிடையே  – குறிப்பகத் தமிழ்நட்டுக்கு – வடக்கில் இன்றும் உள்ளது. தமிழ்நாடு ஏனைய எல்லா மாநிலங்களையும் விட வெப்பம் அதிகமான இடம் என்பதால் காலப்போக்கில் இந்த வழக்கம் விடுபட்டுப் போயிருக்கலாம். மாப்பிள்ளையும் வேட்டி துண்டுடந்தான் நிற்பார்; வடக்கில் குளிர் என்பதால் ஆணும் கூட உடம்பு முழுதும் மூடியிருப்பார்.

8.பெண்களின் தோழிகள் அந்தப் பெண் கன்னிப் பெண் தான் என்பதை உறுதி செய்யும் வழக்கம் இருந்தது.

 

இந்துக்களிடையேயும் இவ்வழக்கம் இருந்தது. முதல் இரவுக்குப் பின்னர் அந்த வேஷ்டி முதலிய துணிகளை நாவிதனுக்குத் தானம் செய்துவிடுவர். அந்தக் காலத்தில் அவர்கள்தான் மருத்துவச்சி; மகப்பேறு வேலைகளைக் கவனித்து வந்தனர். ஆகையால் ஏதேனும் இசகு பிசகு இருந்தால் அவர்கள் மூலம்  கிசு ,கிசு ஊர் முழுதும் பரவிவிடும்.

 

  1. திருமணத்தின் முக்கிய நோக்கம் சந்ததி விருத்தி என்று நூஜி (Nuzi) முதலிய இடங்களில் உள்ள களிமண் (Clay tablets) கல்வெட்டுகள்/ பலகைகள் சொல்கின்றன.

 

இந்துக்களின் வேத மந்திரங்களும் இதையே வலியுறுத்துகின்றன. காளிதாசனும் ரகு வம்ச மன்னர்களின் 14 குண நலனகளை அடுக்குகையில் சந்ததி விருத்திக்காகவே ரகுவம்ச மன்னர்கள் திருமணம் செய்தனர் (செக்ஸ் இன்பத்துக்காக அல்ல) என்று அடிக்கோடிட்டுக் காட்டுவான்.

 

10.குழந்தையின்மை/ மலட்டுத் தனமை என்பது அக்காலத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது ஹமுராபி (Hammurabi Code) மன்னனின் சட்ட ஷரத்துகளில் ஒரு மணப்பெண், ஒரு அடிமைப் பெண்ணையும் கண்வனுக்கு அளிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது.

 

இது இந்துமதத்தில் இல்லை. ஆனால் மன்னர்களுக்குக் குழந்தை இல்லையென்றால் உறவினர் மூலம் குழந்தை பெற அனுமதி உண்டு. அம்பா, அம்பாலிகா மூலமே வியாசர், திருதராஷ்டிரனும் பாண்டுவும் பிறக்க உதவினார்.

 

11.கனவனுடனோ, அல்லது கணவனும் மனைவியும் பெண்ணின் தந்தை வீட்டிலோ வசிக்கும் இரண்டு வகையான ஏற்பாடுகள் இருந்தன. குழந்தை இல்லாமல் இருக்கும் போது கணவன் இறந்துவிட்டால் மாமனார் தனது மகன்களில் வேறு ஒருவனுக்குக் கல்யாணம் செய்யும் ஏற்பாடு இருந்ததை நூஜி களிமண் படிவங்கள் காட்டுகின்றன.

 

அர்ஹல்பா (Arhalba) என்ற மன்னன் தான் இறந்தால் தனது சகோதரனைத் தவிர வேறு எவரையும் தன் மனைவி மணக்கக் கூடாது என்று உயில் எழுதிவைத்ததை உகாரித் (Ugari) களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

 

12.ஹிட்டைட் (Hittite) களிமண் பலகைகள் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் 2 முதல் 4 ஆண்டுகள் வரை திருமணம் செய்துகொள்ளாமலேயே கூடி வாழ்ந்தால், அதை சட்டபூர்வமாக கருதலாம் என்று சொல்கின்றன.

இது இந்துமத்தில் இல்லை

 

14.விவாக ரத்து பற்றி, சொத்து பிரிவினை பற்றி சட்ட விதிகள் இருந்தன. பெண்களுக்கு எதிராகவே பல சட்ட விதிகள் இருந்தன.

இந்து சட்ட நூல்கள் (மனு முதலான நீதி நூல்கள்) விவாக ரத்து, சொத்துக்களின் பாகப் பிரிவினை பற்றி விரிவாகச் சொல்கின்றன. இது விஷயத்தில் வேற்றுமை பாராட்டவில்லை

.

13.இந்துக்கள் இறைவனுக்கு ஆன்டுதோறும் கல்யாண உற்சவங்கள் நடத்துவது போல ((மதுரை மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், ஆண்டாள் போன்றவை) சுமேரியாவிலும் கடவுளர் கல்யாண மஹோத்சவங்கள் நடந்துவந்தன.

 

 

இப்போது முஸ்லீம் சட்ட விதிகள் இருக்கும் அந்த நாடுகளில் முன்காலத்தில் தலாக், தலாக் விவாக  ரத்து, ஐந்து மனைவி திருமணம் முதலியன இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

Source for Middle East: “ Dictionary of the Ancient Near East” by  British Museum.

 

–Subham–

 

ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!

camel-stamp-du-t

Compiled by London swaminathan

Post No.2211

Date: 3rd   October 2015

Time uploaded in London: 13-29

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

கீழே சில அழகான சம்ஸ்கிருதப் பழமொழிகளையும் அவைகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளையும் கொடுத்துள்ளேன்.

1).அங்குலீ ப்ரவேசாத் பாஹு ப்ரவேசம்

விரல் அளவு இடமிருந்தால் உடலையே (தோள் மூல) நுழைத்துவிடுவர்.

ஒப்பிடுக: இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவர்

இந்தி பழமொழி: அங்குலீ பகங்கர் போங்சா பகட்னா

Xxx

2).அதி கஹனம் தமோ யௌவனப்ரபவம் – காதம்பரி

இளமையில் உண்டாகும் இருட்டு ஆழமானது.

ஒப்பிடுக: தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

இளமையில் கல்

Xxx

3).அபராதானுரூபோ தண்ட: – சாணக்யநீதி

குற்றத்துக்கேற்ற தண்டணை

Xxx

4).அம்புகர்போ ஹி ஜீமூதஸ்சாதகைர் அபிவந்த்யதே – ரகுவம்சம்

நீர் நிறைந்த மேகத்தைத் தான் சாதக பட்சிகள் வழிபடும்.

ஒப்பிடுக: பழமரத்தை நாடும் பறவைகள்

பணக்காரனைச் சுற்றி பத்துப் பேர் பைத்தியக்காரனை சுற்றிப் பத்துப் பேர்

ஜப் லகி பைசா காண்ட் மேம், தப் லகி தாகோ யார்

Xxx

5).ஆகரே பத்மராகாணாம் ஜன்ம காச்மணே: குத:  — ஹிதோபதேசம்

புஷ்பராகம் இருக்குமிடத்தில் கண்ணாடி மணிகள் எங்கிருந்து வந்தன?

ஒப்பிடுக: இவன் எப்படி இங்க வந்தான்!!!

xxx

camel india   donkey-240x300

6).உஷ்ட்ராணாம் விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா:

பரஸ்பரம் ப்ரஸம்சந்தி அஹோ ரூபமஹோ த்வனி: – சமயோசித பத்ய மாலிகா

ஒட்டகத்தின் கல்யாணத்தில் கழுதைகள் பாடுகின்றன. ஒருவருக்கொருவர் புகழ்ந்து தள்ளினர். என்ன அழகு, என்ன குரல் வளம் என்று!

ஒப்பிடுக: ஜைசா கர், வைசா வர்

ஊண்டோம் கே விவாஹ் மேம் கதே கவையே

ஆபஸ் மேம் ஹீ ஏக் தூஸ்ரே கீ பரசம்ஸா கர்னா

Xxx

7).கஞ்சுகமேவ நிந்ததி பீனஸ்தனீ நாரீ

சிறிய மார்பகமுள்ள பெண், ரவிக்கையை வைதாளாம்!

ஒப்பிடுக: ஆடத் தெரியாத ………….ள் , தெருக்கோணல் என்றாளாம்

Xxx

8).கரீ ச சிம்ஹஸ்ய பலம் ந மூஷிகா

யானைக்குத்தான் சிங்கத்தின் பலம் தெரியும்; எலிக்குத் தெரியாது

ஒப்பிடுக: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!

Xxx

9).காக யாசகயோர் மத்யே வரம் காகோ ந யாசக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

காகம், பிச்சைக்காரர் ஆகிய இருவரில் காக்கையே உயர்ந்தது; பிச்சைக்காரர் அல்ல.

(காகத்தினால் பயனுண்டு; அசுத்தங்களை அகற்றுகின்றன)

crow plate crow plate2

Xxx

10).காகோபி ஜீவதி சிராய பலிம் ச புங்க்தே – பஞ்சதந்திரம்

காகம் கூட பலிச் சோற்றை உண்டே நீண்ட காலம் வாழ்கின்றன.

(மனிதர்கள் வயிறு வளர்க்கவே வாழ்கின்றனர். காகமோ, பலிச் சோற்றை உண்டு நமக்கு நீத்தாரின் அருளைப் பெற்றுத் தரும். ஊரையும் சுத்தமாக வைக்க உதவும்)

Xxx

11).காணேன சக்ஷுசா கிம் வா சக்சு: பீடைவ கேவலம் – சாணக்யநீதி

தொடர்ந்து வலி இருந்தால் காதால் என்ன பயன்? கண்களால் என்ன பயன்?

Xxx

12).கிம் வா அபவிஷ்யத் அருண: தமசாம் விபேத்தா

தம் சேத் சஹஸ்ரகிரணோ துரி நாகரிஷ்யத்- சாகுந்தலம்

இருளைப் பிளப்பவனாகிய சூரியன், அருணனைச் சாரதியாகக் கொள்ளாவிடில் இருளிலா மூழ்கி விடுவான்?

Xxx

13).குகர்மாந்தம் யசோ ந்ருணாம் – பஞ்ச தந்திரம்

மனிதர்களின் புகழ் கெட்ட செயலால் முடிந்துவிடும்

Xxxx

14).க்ஷணே க்ஷணே யன்னவதாம் உபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம்

அழகின் லக்ஷணம், நொடிக்கு நொடி புதுமை அடைவதாகும்.(எது நொடிக்கு நொடி புதுமை அடைகிறதோ, அதுவே அழகு)

ஒப்பிடுக: பெண்களின் ‘பேஷன்’!!!!!!!!!!!!

Xxx

15).க்ஷதே ப்ரஹாரா நிபதந்தி அபீக்ஷணம் – பஞ்ச தந்திரம்

விழுந்த இடத்திலேயே அடி விழுகிறது

ஒப்பிடுக:- பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.

Xxx

India-stamp5886asiatic-lion-lioness

16).க்ஷுதார்த்தோ ந த்ருணம் சரதி சிம்ஹ: — சாணக்ய சூத்திரம்

சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது

ஒப்பிடுக: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

-சுபம்–

வன்னிய குல கல்யாணப் பாடல்

tamil bride

Compiled by London swaminathan

Date : 4 September  2015

Post No. 2123

Time uploaded in London : 9-34 am

வெளியான ஆண்டு 1894/ 1895

இருப்பிடம்: பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்

காப்பி எடுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்

மொத்த பக்கங்கள்: எட்டு+1

ஸைஸ்: பாக்கெட் புக் ஸைஸ்

IMG_4675 (2)

IMG_4676 (2)

IMG_4677 (2)

IMG_4678 (2)

IMG_4679 (2)

IMG_4680 (2)

IMG_4681 (2)

IMG_4682 (2)

IMG_4683 (2)

—subham—

பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

Written by London swaminathan

Research Article No: 1833

Date: 28 April 2015; Uploaded in London at 9-22 am

பங்குனி உத்தரம் ஆன பகற்போது

அங்க இருக்கினில் ஆயிரநாமச்

சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்

மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான்

–கம்ப ராமாயணம், பால காண்டம், கடிமணப் படலம்

வசிட்ட முனிவன் பங்குனி மாத உருத்திர நட்சத்திரம் கூடிய அந்த நல்ல நாளில், அங்கங்களோடு கூடிய வேதங்களில் சொல்லப்பட்ட, ஆயிரம் திருநாமங்களை (ஸஹஸ்ரநாமம்) உடைய – சிங்கம் போன்ற ராமனது திருமணச் சடங்கைச் செய்த முறைமைக்கு ஏற்ப, மங்கலமான ஓமாக்கினியை (ஹோம அக்னி) வளர்த்து மண வினையை முடித்தான்.

வால்மீகி கூறியதையே கம்பரும் கூறி இருக்கிறார் (பால காண்டம், சர்கம் 72)

பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தது என்பதற்கு தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமும், சங்க இலக்கிய நூல்களும் சான்று தருகின்றன. மனு தர்ம சாத்திரம் சொல்லும் எண் வகைத் திருமணத்தைத் தொல்காப்பியர் சொன்னதை முன்னர் கண்டோம். அவர் தச விதப் (பத்து) பொருத்தங்களையும் கூறுகிறார். இதைவிட முக்கியமானது கல்யாணத்துக்கு உரிய நட்சத்திரங்கள் என்று வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதையும் ஏனைய பல சம்ஸ்கிருத நூல்களும் சொல்லும் ரோகிணி , உத்தர பல்குனி முதலிய நட்சத்திரங்களில் தமிழர்கள் கல்யாணம் செய்ததும் ஒரே பண்பாட்டை உறுதி செய்கின்றன.

Kalyana sundara (Parvati–Paramasiva) picture from wikipedia (choza Bronzes)

அகநானூறு பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் தெய்வ வழிபாட்டுடன் ரோகிணி நட்சத்திரத்தில் தமிழர்கள் திருமணம் செய்து கொண்டதை முன்னர் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டோம். இதே போல கண்ணகி திருமணமும் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்தது.

இதே போல பங்குனி உத்தரமும் முக்கிய முகூர்த்த நாளானதால் தமிழ் நாட்டில் எல்லா பெரிய சிவன் கோவில்களிலும் அன்று சிவன் – உமை கல்யாணம் நடத்தப் படுகிறது. முருகன் கோவில்களில் தேவயானை—முருகன் திருமணம் நடத்தப்படுகிறது.. தமிழ்நாட்டில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் சிறப்பு ஆராதனைகளும் நடக்கின்றன. இவை எல்லாம் கி.மு முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற காளிதாசனுக்கும் முந்தைய வழக்கம். காளிதாசன் எழுதிய குமார சம்பவம் (Chapter 7, Sloka 6)

என்னும் காவியத்திலும் சிவன் – உமை திருமணம் பங்குனி உத்திர நன்னாளில் நடந்ததாக எழுதிவைத்துள்ளான். அதே நாளில்தான் ராமன் – சீதா கல்யணமும் நடந்துள்ளது.

பங்குனி உத்தரப் பெருவிழாக்கள் ஏழாம் நூற்றாண்டில் வழ்ந்த திருஞான சம்பதருக்கும் முந்தைய வழக்கம் என்பது தேவாரப் பாடலில் இருந்து தெளிவாகிறது:–

பலவிழாப் பாடல் செய் பங்குனி

உத்திர நாள் ஒலி விழா – சம்பந்தர் தேவாரம்

 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் ஒரு காலத்தில் பங்குனி உத்தரத்தில் நடந்ததாகவும், சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்காகவும், நடைமுறை வசதிகளுக்காவும் திருமலை நாயக்கர் இரண்டு விழாக்களை ஒன்றுபடுத்தி சித்திரைத் திருவிழா ஆக்கியதாகவும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

ஆக புற நானூறு, அக நானூறு பாடல் ஒவ்வொன்றும் ஆரிய- திராவிட இன வெறிக் கொள்கையை தவிடு பொடியாக்கி வருவதைக் கண்டு வருகிறோம். எட்டு வகைத் திருமணங்கள், பத்துவிதப் பொருத்தங்கள், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், தீ வலம் வருதல், கடவுளை வணங்கி தீர்க்க சுமங்கலிக்களை வைத்து திருமணத்தை  நடத்தல் முதலிய எவ்வளவோ விசயங்களில் ஒற்றுமை காண்கிறோம்.

பங்குனி உத்தரத்தில் காம தஹனம், ஹோலி பண்டிகைகளும் நடைபெறுகின்றன.

தமிழர்கள் வாழக்கூடிய இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முருகன் கோவில்களில் தேர், காவடி சகிதம் பங்குனி உத்தரம் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் பௌர்ணமி நாட்களில் நடைபெறும் 1880 ஆம் ஆண்டுக்கு முன் உலகில் மின்சார விளக்குகள் இருந்ததில்லை. ஆகையால் எல்லாப் பௌர்ணமி நாட்களையும் பெரும் கோவில் திருவிழா நாட்களாகக் கொண்டாடினர் இந்துக்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து கட்டுச் சோறுடன் மாட்டு வண்டிகளிலும் நடைப் பயணமாகவும் வருவதற்கு இந்த முழு நிலவு நாட்கள் உதவின. அவைகளிலும் குறிப்பாக மாசி முதல் வைகாசி வரையுள்ள முழுநிலவு நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. காலநிலை ரீதியில் இவை மழை இல்லாமல் மிகவும் அனுசரணையாக இருந்தது இதற்குக் காரணம் ஆகும்.