நல்ல ஒரு ஆன்மீக ஆங்கில இதழ் இனி வராதா?(Post.9148)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9148

Date uploaded in London – –16 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நல்ல ஒரு ஆன்மீக ஆங்கில இதழ் இனி வராதா?

ச.நாகராஜன்

இன்று (12-1-2021) மணி ஆர்டர் மூலமாக ரூ 140/ ரூ வந்தது. பெற்றேன் – வருத்தத்துடன்!

நான் ஆங்கில மாத ஆன்மீக இதழான கல்யாண கல்பதருவுக்கு (Kalyana-Kalpataru) வருடாந்திர சந்தாவாக அனுப்பி இருந்த தொகை திரும்பி வந்தது.ஏன்?

அந்த அருமையான பத்திரிகை இனி வராது.

அதன் செப்டம்பர் 2020 இதழில் கீழ்க்கண்ட அறிவிப்பு கடைசிப் பக்கத்தில் வெளியாகி இருந்தது.

For Kind Information to Respected Readers

With respect we are informing that ‘Kalyana-Kalpataru’ Annual Visesanka ‘Upasana Number’ for October 2020 is not going to be printed due to unavoidable circumstances and this ‘Anka’ will be available on-line free of charge on our website www.gitapress.org.

We will return amount receive from our respected customers agains Annual subscription and we request all our customers to note:

Plesae ‘DO NOT SEND SUBSCRIPTION’ towards ‘Kalyana-Kalpataru’/

We are pleased to inform that we are planning for ‘KALYAN’ monthly magazine in English.

We shall inform about new publication in future.

(The Management)

Date of Publication 1.9.2020

ஆக அருமையான ஒரு ஆன்மீக இதழ் நின்று விட்டது; ஆனால் ஆறுதலூட்டும் செய்தி மிக்க தரம் வாய்ந்த ஹிந்தி இதழான கல்யாண் இனி ஆங்கிலத்தில் வரப் போகிறது.

வரவேற்கிறோம் – ஆங்கில கல்யாணை!

65 வருடங்கள் பயணத்தைக் கடந்து வந்த எனது அருமை இதழான கல்யாண-கல்பதரு இதழை இனி பார்க்க முடியாது. இதயம் கனக்கிறது. என்றாலும் கல்யாண் என்ற மறு உருவில் வருவது இனிக்கிறது!

தமிழ் இதழ்கள் பல பக்கங்களில் சுருங்கி விட்டன – கொரானாவால்.

பாக்யா மாதம் இரு முறை இதழ் ஏப்ரல் 2020  முதல் வரவில்லை.

இன்னொரு வருந்தத் தக்க செய்தியையும் பார்க்க நேர்ந்தது. இனி கல்கி வார இதழை அச்சுப் பதிப்பாகப் பார்க்க முடியாது என்று. ஆனால் கல்கி இதழை டிஜிடலாகப் பார்க்கலாம்; படிக்கலாம்.

பழைய காலத்தில் சிவகாமியின் சபதம் (திரு கல்கி அவர்கள் எழுதிய தொடர் சரித்திர நாவல்) தொடர் வரும் போது கல்கியை வீட்டில் உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலில் படிக்க விரும்புவர்.

தில்லானா மோகனாம்பாள் (திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய தொடர் நாவல்) ஆனந்த விகடன் வார இதழில் வந்த போது அதைப் படிக்க வீட்டில் கியூவரிசையில் நின்றதையும் நான் பார்த்திருக்கிறேன்.

இன்றோ யுகம் மாறி விட்டது; கணினிகள்; டிஜிடல் பதிப்புகள்; கிண்டில்.. இத்யாதி!

யூ டியூபில் YOU TUBE யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்கின்ற காலம் இது!

உண்மை எது; தரமானது எது என்பதை நிர்ணயிக்கக் கஷ்டப்படும் காலம் இது!

கலி காலம் என்று சொல்லலாமா? கணினி காலம் என்று சொல்லலாமா?

TAGS- கல்யாண-கல்பதரு

***