பிராக்ருத மொழி அதிசயங்கள் -2000 கல்வெட்டுகள் (Post No.7522)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7522

Date uploaded in London – 1 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

1.இந்தி, மராட்டி, குஜராத்தி, வங்காளி முதலிய வட இந்திய மொழிகள் பிராகிருத வடிவத்திருந்து பிறந்தன; இம்மொழி பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம்.

2.பிராகிருதம் பற்றிய வியப்பான விஷயம் அதில் முதலில் கிடைப்பது உரை நடை (Prose) ஆகும். உலக மொழிகள் அனைத்திலும் முதலில் கிடைப்பது (Poetry) கவிதைகள். ஆனால் பிராக்ருதத்திலோ அசோகனின் கல்வெட்டு வாசகங்கள். அது கவிதை நடை இல்லை.

3.சமண மதம்

சமண தீர்த்தங்கரர்களின் போதனைகள் ப்ராக்ருதத்தில் உள்ளன. அவர்களுடைய முக்கிய மந்திரங்களும் இதே மொழியில் உள்ளன.

4.வாக்பதிராஜ என்ற புகழ்பெற்ற கவிஞர் கூறுகிறார் ,

“கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறி மழையாகப் பொழி  ந்து ஆறாக ஓடி கடலையே அடைவது போல எல்லா மொழிகளும் பிராக்ருதத்திலிருந்து தோன்றி  பிராக்ருதத்திலேயே சங்கமம் ஆகின்றன”.

சயலாவோ இமாம் வாயா விசந்தி எத்தோ யா னேந்தி வாயாவோ

ஏந்தி சமுத்தம் ச்சிய னேந்தி சாயராவோ ச்சிய ஜலாயிம்

—-கௌடவாஹோ

5.மஹாவீரர் , மாமன்னன் அசோகன், காரவேலன் ஆகியோர் செய்திப் பரிமாற்றத்துக்கு பிராகிருத மொழியையே பயன்படுத்தினர்.

6.சமண ஆகமங்களும் அசோகர், காரவேலன் கல்வெட்டுகளும் இம்மொழியில் இருக்கின்றன. 2000 கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் உள்ளன. தமிழ் நாட்டின் பல பழைய பிராமி லிபி கல்வெட்டுகளும் இதில் அடக்கம்.

7.வியப்பான ஒரு விஷயம் பிராகிருத மொழி இலக்கணத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதினர்

8.பிராக்ருதத்தில் பல வகைகள் உண்டு- மஹாராஷ்ட்ரீ , சூரசேனி ,மாகதி , பைசாசி , ஆபப்ராஹ்மச

பிராகிருத பல்கலைக்கழகம்

9.கர்நாடகத்திலுள்ள சிரவண பெலகோளாவில் மிகப்பெரிய பிராகிருத நூலகம் உள்ளது. அங்குதான் மௌர்ய சந்திரகுப்தர் தவம் செய்து உயிர்விட்டார். அவருடைய குருவின் பெயர் ஸ்ருதகேவலன்  பத்ரபாஹு . ஆகவே இந்த இடம் 2500 ஆண்டு வரலாறு உடையது . அங்குள்ள கோமடேஸ்வரரின் பிரம்மாண்டமான ஒற்றைக் கல் சிலை , சமண மத நம்பிகை இல்லாதோரையும் ஈர்த்திழுக்கும். .அங்குள்ள மடத்தின் தலைவர் ஸ்வஸ்தி ஸ்ரீ சாரு கீர்த்தி பட்டாராக பட்டாச்சார்ய சுவாமிகள் பெரிய அறிஞர் ; பல் மொழி வித்தகர். அவர் போன்களையோ மொபைல் போன்களையோ பயன்படுத்தாத அதிசயப்பிறவி. பெரிய சொற்பொழிவாளர் ; நூலாசிரியர்  அவருடைய முயற்சியின் பேரில் அங்கு பிராகிருத பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுள்ளது.

10.தர்ம அறிவுரை

அசோகரின் கிர்னார் கல்வெட்டு எண் மூன்றில் காணப்படும் வாசகம்

‘பிராணானாம் சாது அனாரம்போ , அபவ்யயதா ஆபத்பாந்ததா சாது’

அஹிம்சை என்பது எல்லா உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும்.குறைவாக செலவு செய்வதும், குறைவாக சேர்த்துவைப்பதும் ன்மை பயக்கும்.

கிர்னார் மலையின் 12ஆவது கல்வெட்டில் அசோகன் சொல்கிறார்,

‘ஸவபாசந்தா பஹூசுதா வ அ சு , கலா னாகமா வ அசு’

எல்லா சமய பிரிவினரும் மற்றவர் சொல்வதையும் கேட்டு, பொது நல சேவை செய்ய வேண்டும் .

இவ்வாறு உயரிய கருத்துக்களை இம்மொழி பரப்பியதோடு வரலாற்றை அறியவும் உதவுகிறது.

11.பிராகிருத மொழி வளர்ச்சி

ஏழு வகை பிராக்ருதத்திலும் நிறைய நூல்கள் தோன்றின. இரண்டாம் நூற்றாண்டு இந்திய வரைபடத்தில் மொழிகளைக் குறித்து, இலக்கியப் படைப்புகளை எழுதினால், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் நூல்கள் அல்லது கல்வெட்டுகள் அல்லது ஓலைச்  சுவடிகள் இருப்பதைக் காணலாம். அத்தனை பேரும் தர்ம, அர்த்த, காம , மோக்ஷத்தைப் போற்றி எழுதினர். ஒரே பண்பாடு, ஒரே நம்பிக்கைகள்!

xxx

பத்தாம் நூற்றாண்டு முதல் ஸுரசேனி வகையே கவிதையிலும் நாடகத்திலும் பயன்பட்டது. 18ம் நூற்றாண்டு வரை ‘சத்தக’ (SATTAKA) இலக்கியத்திலும் இதைக் காணலாம் . இதன் பிறப்பிடம் மத்திய இந்தியா என்றும் மற்ற கிளை மொழிகள் இதிலிருந்து உதித்ததாகவும் அறிஞர்கள் செப்புவர். இது திகம்பர பிரிவினரின் முக்கிய மொழியாகத்  திகழ்ந்தது.

நாடகங்களில் பயன்பட்டது – ஸுரசேனி . காளிதாசர் முதலியோர் எழுதிய சம்ஸ்க்ருத நாடகங்களிலும் பிராகிருத வசனம் உண்டு. முக்கிய சில கதாபாத்திரங்கள் சம்ஸ்க்ருதத்திலும், ஏனையோர் பிராக்ருதத்திலும் பேசுவதைக் காணலாம். சூத்ரகர் எழுதிய ம்ருச்சகடிக நாடகத்தில் இதைத் தெளிவாகக் காணலாம்

சம்ஸ்கிருத நாடகங்களில் பெண்கள், வேலைக்காரர்கள் இப்படி கொச்சை மொழியில் பேசுவர்.

18ம் நூற்றாண்டு வரை சம்ஸ்க்ருத நாடகங்களில் இந்தப் போக்கைப் பார்க்கிறோம்

சமணர்களின் புனித நூல்கள் பயன்படுத்துவது அர்த்தமாகதி ; பௌத்தர்கள் பயன்படுத்துவது மாகதி ; இலக்கண கர்த்தாக்கள் பின்பற்றுவது ஆர்ச ; ஒவ்வொருவரும் தங்கள் மொழியே மூல மொழி என்பர்.

xxxx

சம்ஸ்கிருதம் என்பது செம்மை செய்யப்பட மொழி. பேச்சு வழக்கில் இருந்த கொச்சை மொழிக்கு பிராகிருதம் என்று பெயர். ஆனால் காலப்போக்கில் அதற்கு என்று தனி இலக்கணம் வகுத்தனர். அதில் கவிதை நூல்கள், அறிவியல் நூல்கள் தோன்றின. அதுவே பெரிய இலக்கியமாக உருவெடுத்தது. மூல சம்ஸ்கிருத மொழி தெரியாதவர்களுக்கு அது புது மொழியாகத் தோன்றும் . வட இந்தியா முழுதும் பரவியதால் காலப்போக்கில் அவைகளே தனி மொழியாக வளர்ந்தன . 2000 ஆண்டுகளுக்கு மேல் இப்படி வளர்ந்து வந்திருக்கிறது இன்றும் கூட சம்ஸ்கிருதம் அறிந்தோர் வட இந்திய மொழிகள் எதுவானாலும் அதைப் புரிந்துகொள்ள முடியும். தர்ம என்பதை பாலி மொழியில் ‘தம்ம’ என்பர். இந்திக்காரர்கள் ‘தரம்’ என்பர்.தமிழர்கள் ‘அறம்’ என்பர். சம்ஸ்கிருத வேதத்திலுள்ள ‘தர்ம’ தெரிந்தவர்களுக்கு மற்ற மூன்று சொற்களையும் புரிந்து கொள்வது எளிது.

இதற்கு இணையாக எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமானால் தமிழில் இப்போது வரும் கதைப் புத்தக நடையை பிராக்ருதத் தமிழ் என்றும், நாட்டுப்புறப் பாடல்களை பிராக்ருதத் தமிழ் கவிதைகள் என்றும் சொல்லலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பேச்சு மொழி பிராகிருதம்; இலக்கண /இலக்கிய மொழி சம்ஸ்கிருதம்.

இதை புரிந்து கொள்ள தமிழ்த் திரைப்பட மொழி உதவும். அரசர் வேடத்தில் வருவோர் பேசுவது இலக்கிய மொழி; ஆண்டி வேடத்தில் வருவோர் பேசுவது கொச்சை மொழி.

பாலி என்னும் பிராகிருத மொழியை பௌத்தர்கள் அதிகம் பயன்படுத்தினர். பிராக்ருதத்தை சமணர்கள் அதிகம் பயன்படுத்தினர். சம்ஸ்க்ருதம் இதற்கெல்லாம் மூல மொழி. அதை இந்துக்கள் பயன்படுத்தினர். சம்ஸ்க்ருதம் அறிந்தோர் இவ்விரு மொழிகளையும் புரிந்துகொள்ள முடியும்.

–subham—

திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

WRITTEN BY  LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 24 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-32 am

Post No. 6925

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

–subham–

அதிசயம் நிறைந்த ‘தேர்தல் புகழ்’ உத்தரமேரூர் (Post No.6239)

SUNDARAVARADARAJA TEMPLE, UTTARAMERUR

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 8 April 2019


British Summer Time uploaded in London – 8519 AM

Post No. 6239

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

உத்தரமேரூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய பின்னர் அது பற்றிய அருமையான புத்தகம் கிடைத்தது. அடக் கடவுளே! இந்தப் புத்தகம் முன்னரே கிடைத்திருந்தால் ஒரு நாள் முழுதும் உத்தரமேரூருக்கு ஒதுக்கியிருக்கலாமே என்று வருத்தப் பட்டேன்.

உத்தரமேரூர் , செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கிறது. சென்னையிலிருந்து இரண்டரை மணி நேர்த்தில் செல்லலாம்.

சென்னையிலிருந்து லண்டனுக்குப் புறப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற தொல்பொருட்துறை நிபுணர் டக்டர் இரா. நாகசாமியைச் சந்தித்து (2-4-2019) ஆசிபெற்றேன். அவர் எழுதிய உத்தரமேரூர் என்ற புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அளித்தார். அத்துடன் மேலும் பல புத்தககங்களையும் அன்புடன் வாரி வழங்கினார். 2 கிலோ 3 கிலோ எடையுள்ள புஸ்தகங்களை அடுத்த முறை எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு ஐந்தாறு புஸ்தகங்களுடன் விமானம் ஏறினேன்.

அவர் புஸ்தகத்தில் எழுதிய விஷயங்களைவிட வேறு எவரும் எழுத முடியாது. ஆகையால் அந்தப் புத்தகத்தின் தலைப்புகளை மட்டும் தருகிறேன். அடுத்த முறை உத்தரமேரூருக்குச் செல்லுகையில் அதைப் படித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

உலகிலேயே ஜன நாயகம் பற்றிய முதல் குறிப்பு ரிக்வேதத்தில் சபை பற்றிய குறிப்பில் வருகிறது. இன்றுவரை அந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை தமிழிலிலும் (அவை) இந்தியிலும் (லோக் சபா, ராஜ்ய சபா) பயன்படுத்தி வருகிறோம்.

இதற்கு அடுத்தபடியாக தேர்தல் பற்றிய தெளிவான, விரிவான ஜனநாயக முறை– குடவோலை முறை– சோழர் காலத்தியது. ஆயிரம் ஆண்டுப் பழமையான அக் கல்வெட்டு உத்தர மேரூர் கோவிலில் உளது. அதனால் அது நாடு முழுதும் புகழ் பெறுவிட்டது. யார் தேர்தலில் நிற்கலாம், நிற்கக்கூடாது என்ற முழுத் தகவலையும் டாக்டர் நாகசாமி விரிவாக எழுதியுள்ளார்.

ஊர்ச்சபா மண்டபத்தில் தேர்தல் கல்வெட்டு இருக்கிறது இப்பொழுது அது வைகுண்டப்பெருமாள் கோவிலுடன் சேர்ந்துவிட்டது

நந்தி வர்மன் (கி.பி 750) காலம் முதல் தற்காலம் வரை 100 கல்வெட்டுகளுக்கு மேல் கிடைக்கின்றன.

ஆண்டுதோறும் இங்கே மஹபாரதம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது

உத்தரமேர்ரூரில் உள்ள முக்கியக் கோவில்கள்

சுந்தரவரதர் கோவில்

வைகுண்டப் பெருமாள் கோவில்

கைலாசநாதர் கோவில்

கேதாரீஸ்வரர் கோவில்

பாலசுப்ரமண்யர் கோவில்

எல்லாக் கோவில்களிலும் கல்வெட்டுகள் உள்ளன.

1300 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்ட கிராமம் இது. ஆயினும் அதற்கு முன்னரே கிராமம் மக்கள் வாழும் இடமாக இருந்தது.

டாக்டர் நாகசாமி புத்தகத்தில் உள்ள விவரங்களின் தலைப்புகள்:-

பத்துக்கும் மேலான கோவில் விவரங்கள்

தேர்தல் பற்றிய முழு கல்வெட்டு

பாபுக்கடி மருந்து கல்வெட்டு

ஆகம சாத்திர கல்வெட்டு

பேராசிரியர் நியமன கல்வெட்டுக

இலக்கணப் பள்ளிகள்

வேதப் பள்ளிகள்

வைரமேக தடாகம்

திருப்புலிவனம்

நிறைய படங்கள்

சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில் மூன்று தளங்களில் அமைந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் அடித்தளத்தில் உள.

பாலசுப்ரமண்யர் கோவில்- எட்டாம் நூற்றாண்டு – அருணகிரிநதரால் பாடப்பெற்றது.

கைலாசநாதர் கோவில், சப்தமாதர் கோவில், கேதாரேச்வரர் கோவில்களிலும் கல்வெட்டுகள் உள.

அருமையான அப்சரஸ் ஓவியத்தின் வண்ணப்படமும் புத்தகத்தில் உள்ளது.

VAIKUNDA PERUMAL TEMPLE WITH IMPORTANT INSCRIPTION, UTTARAMERUR
KAILASANATHAR TEMPLE

–SUBHAM–

கடல் போர், கடல்பயணம் 6 பற்றிய கல்வெட்டுகள் (Post No.5162)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –  16-52 (British Summer Time)

 

Post No. 5162

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கடல் போர், கடல்பயணம் 6 பற்றிய கல்வெட்டுகள் (Post No.5152)

 

மும்பய் நகருக்கு அருகில் ஏக்சார் (EKSAR) என்னுமிடத்தில் ஆறு நடுகற்கள் (வீர  கல்) இருக்கின்றன. இவை கடல் பயணத்திலேயோ கடல் போரிலேயோ இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்ப ட்ட கற்கள். வீர மரணம் எய்தியோருக்கு நடுகல் நடும் பழக்கமும் அவைகளை பூஜிக்கும் பழக்கமும் 2000 ஆண்டுப் பழமையான சங்க நூல்களில் காணக்கிடக்கின்றன. ஆயினும்  அதற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்தே கல்வெட்டுகள் கிடைக்கின்றன.  பம்பாய் அருகில் 11 ஆம் நூறாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இன்று வரை அவை ‘கல்’ என்னும் தமிழ்ச் சொல்லுடனும் ‘வீர’ என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுடனும் — வீர கல் – என்றே அழைக்கப்படுகின்றன. இவை பொரிவலி (BORIVILI) ஸ்டேஷனுக்கு ஒரு மைல் தொலைவில் உள.

 

இவற்றில் நிலத்தில் நடந்த சண்டைகளும் காட்டப்பட்டுள்ளன.

ஹேமாத்ரி பண்டிதர் இயற்றிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நூலில் யாதவ மன்னன் மஹாதேவனுக்கும் ஷிலாஹார மன்னன் சோமேஸ்வரனுக்கும் நடந்த போர் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அதுதான் இந்தக் கல்லின் பின்னணி என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 1265 ஆம் ஆண்டில் சோமேஸ்வரா கொல்லப்பட்டார்.

 

இவை தவிர கோவா மியூஸியத்தில் கடம்பர் கால கல்வெட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் 950 முதல் 400 ஆண்டுகள் ஆண்டனர். ஏக்சார் கல்வெட்டுகள் போஜ மன்னன் (1020) காலத்தியவை. இதற்கு நெடுங்காலத்துக்குப் பின்னர் குஜராத்தில் எழுப்பிய கல்வெட்டுகளும் குறிப்பிடத்தக்கவை.

தமிழர்கள் பரப்பினார்களா?

இலக்கியங்களைப் பொறுத்வரையில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள குறிப்புதான் மிகப் பழமையானவை. ஆனால் வேத காலம் முதல் நினைவுக்கல் எழுப்பும் பழக்கம் பிராமணர் குடும்பத்தில் இருந்துள்ளது. இப்பொழுதும் பத்து நாள் கிரியைகளுக்குப் பின்னர் பிராமணர்கள் வீட்டிலோ, சுடுகாட்டிலோ கல் புதைப்பர்.

 

நடு கற்கள் நாடு முழுதும் கிடைக்கின்றன. ரா ஜஸ்தான், கர்நாடகத்தில் உயிர்நீத்த பத்தினிகளுக்கும் ‘சதி’யில் புகுந்த வீர மங்கையருக்கும், தென் மாநிலங்கள், மஹாராஷ்டிராத்தில் வீர தீரச் செயல் புரிந்தோருக்கும் நடுகற்கள் எழுப்பப்பட்டுள்ளன. பல நடு கற்கள் பாதுகாக்கப்படாமல் அழிந்தும் மறைந்தும் வருகின்றன.

 

மஹாராஷ்டிரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான இடங்களில் நடு கற்கள் இருப்பதாக தற்கால நூல்கள் காட்டுகின்றன. எல்லா இடங்களிலும் இவை வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏக்சார் கல்வெட்டுகளை மக்கள் போராதேவி என்று வழிபடுகின்றனர். தொல்பொருட் துறை இவைகளைப் பாதுகாக்கததால் சில கற்களை வரலாற்றுத் திருடர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

 

 

முதல் கல்

முதல் கல் (HERO STONES, VEERA GAL) 10’X 3’X 6” அளவில் உள்ளது. இதில் நான்கு பிரிவுகள் அல்லது வரிசைக் காட்சிகள் உள்ளன. அடியில் இரண்டு குதிரை வீரர்கள் ஒரு வில்லாளியைக் கொல்கின்றனர். கொல்லப்பட் டவர்கள் மேகத்தினூடே இந்திர லோகத்துக்குச் செல்லும் காட்சி உளது (போரில் இறந்தால் சுவர்கம் புகலாம் என்ற கருத்து பகவத்கீதை, புற நானூறு ளில் முதலிய நூல்களில்  விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசையில் குதிரை வீரர்கள் புறப்படுவதும், வில்லாளி மேலும், ஆறு குதிரை வீரருடன் பொருதுவதும் இருக்கின்றது.

யானை வீரர்களும் காணப்படுகின்றனர். வீர சுவர்க்கம் புகுவோரை அப்சரஸ்கள் (தேவலோக அழகிகள்) வரவேற்பதும் அவர்கள் சிவலோகத்தில் சிவலிங்கத்தை வழிபடுவதும் சித்தரிக்கப்படுகிறது.

 

இரண்டாவது கல்

 

இரண்டாவது கல்லிலும் போரில் இறந்தோரின் சடலங்களும் மன்னர், மந்திரி ஆகியோரும் இருக்கின்றனர். தேவ லோக மங்கையரான அப்ஸரஸ்கள் அவர்கள் மீது பூமாரி பொழிகின்றனர்.

 

மன்னருக்கு ஒருவர் குடை பிடிக்க, மற்றொருவர் பன்னீர் தெளிக்க நிற்கிறார்; யானை ருவரை துதிக்கை யால் பிடித்து காலால் இடறும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. யானை முகபடாமுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

 

மூன்றாவது கல்

இதுதான் முக்கியமான கடற்போர் கல். கப்பல் சண்டைக் காட்சி உளது. முந்தைய இரண்டைப் போலவே இதுவும் நான்கு வரிசைகளாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது; ஐந்து கப்பல்கள் உள்ள வரிசையில் ஒன்பது துடுப்புகள் தெரிகின்றன. சண்டைக்குத் தயாராக வீரர்கள் காட்சி தருகின்றனர் ; ஐந்தாவது கப்பலில் பெண்களும் இருப்பதால் மன்னர் கப்பலாக இருக்கலாம். இரண்டாவது வரிசையில் 4 கப்பலகளின் அணிவகுப்பு. அவர்கள் பெரிய ஒரு கப்பலைத் தாக்குவதும் அந்தக் கப்பலின் வீரர்கள் கடலில் குதிப்பதும் செதுக்கப்பட்டு இருக்கிறது

பதினோறாம் நூற்றாண்டு எழுத்துக்கள் படிக்க இயலாதபடி சிதைந்துவிட்டன. இதே கல்லில் இமயம் உறை பார்வதி பரமேஸ்வரனும், சிவலிங்க வழிபாடும் , எலும்புகள் வைக்கும் பெட்டியும் இருக்கின்றன.

நாலாவது வீர கல்

இதில் எட்டு வரிசைகள் உள்ளன. ஆனால் அளவு ஏனைய மூன்றைப்போல 10X 3X 6” என்றே இருக்கிறது. அடி வரிசையில் 11 கப்பல்கள் ஒரு கப்பலைத் தாக்குகின்றன. மற்றொரு வரிசையில் ஐந்து கப்பல்கள் ஒரு படகைத் தாக்குகின்றன. .

மற்றொரு வரிசையில் ஒன்பது கப்பல்கள் வெற்றியுடன் திரும்பி வருகின்றன. பலர் வரவேற்கிறார்கள்

ஏனையவற்றில் சிவலிங்க வழிபாடு, அப்சரஸ்கள் வரவேற்கும் காட்சி சங்கு முழக்கம், சிவன் உறையும் கைலாசம் ஆகியவற்றைக் காண்கிறோம்.

 

ஐந்தாவது வீர கல்

அளவு 6’ X3’ X6’’ ; வரிசைகள் நான்கு; ஒரு கப்பலில் மன்னர் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்துள்ளார்.

மற்றொரு வரிசையில் கடற்போர்; வீரர்கள் தண்ணீரில் வீழும் காட்சி.

இறந்தவீரகள் மீது அப்சரஸ்கள் (தேவலோக அழகிகள் ) மலர் மாலை வீசுகின்றனர். மற்றொரு வரிசையில் சிவலிங்க வழிபாடு; பெண்கள் வழிபாட்டுப் பொருட்களுடன் காட்சி. தேவலோக கந்தர்வர் ஆனந்தக் கூத்து; மன்னர் தர்பாரில்: அபசரஸ்கள் அவரை வாழ்த்தும் காட்சி

Kannada hero stone from wikipedia

ஆறாவது கல்

அளவு 4X 15X 6”

இரண்டு வரிசையில் படங்கள்.

ஒரு வரிசையில் கப்பல் சண்டை.

மற்றொரு வரிசையில் ஒரு வீரர் சுவர்கத்தில் இருக்கும் காட்சி.

 

இவை கடம்பர்களுக்கும் சீலஹாராக்களுக்கும் இடையே நடந்த கடல் போர் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. இதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் சோழ மன்னர்களின் கடற்படை இலங்கை, பர்மா, இந்தோ நேஷியா வரை சென்று வெற்றிக் கொடி நாட்டின. அதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கடற்படை அனுப்பி அந்நாட்டு மன்னனைக் காப்பாற்றினான் நரசிம்ம பல்லவன். அதற்கு முன்னர் சோழர்களும் அவர்களுக்கு முன்னர் சாதவாஹன அரசர்களும் அதற்கு முன்னால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் வெற்றிக் கொடி நாட்டினர். சேரர்கள், கடலில் வாலாட்டிய யவனர்களைச் சிறைப்பிடித்து, மொட்டையடித்து, கைகளைப் பின்புறம்கட்டி, தலையில் எண்ணை ஊற்றி ஊர்வலம் விட்ட காட்சி  தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது.

 

ஆனால் அதை சித்திரமாக நடு கல்லில் — –வீரக் கல்லில்— காணும் போது பசுமரத்தாணி போல மனதில் பதிகிறது.

 

Kannada hero stone, Not Eksar

 

–சுபம்–

 

 

 

 

 

டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

Written by London Swaminathan 

 

Date: 28 May 2018

 

Time uploaded in London – 7-43 am

 

Post No. 5054

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

தாய்லாந்து நாட்டில் குனோய் KUNOI என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருத்துவமனை கல்வெட்டுகள், அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த டாக்டர்கள், நர்ஸ்கள், அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தகவலகளை பொறித்துள்ளன. இது ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள கல்வெட்டு. குனோய் KUNOI என்னும் இடத்தில் தோண்டும் வேலைகள் நடந்தபோது இந்தக் கல்வெட்டுகள் கிடைத்தன. இதில் பெரிய, நடுத்தரமான, சிறிய கல்வெட்டுகள் உள. நடுத்தர அளவு கல்வெட்டுகளில் இந்தச் செய்திகள் உள. இவை ஏழாவது ஜயவர்மன் காலத்தியவை. அவன் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தை ஆண்டனன். மருத்துவமனை பற்றிய கல்வெட்டு அடிப்பகுதி உடைந்து காணாமற்போய்விட்டது

 

 

கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேயா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மத ராஜாக்கள் ஆட்சி நடந்தது. அந்த நாடுகள் அனைத்திலும் முக்கியமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் இருக்கின்றன. அவைகளில் இருந்து மிக முக்கியமான செய்திகள் கிடைக்கின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள் பாங்காக், காங்கேயன் முதலிய நகரங்களில் மியூஸியங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகள் ஆயிரத்துக்கும் அதிகம்.

 

வட தாய்லாந்து வழியாக KHMER க்மேர் (குமரிக் கண்ட?) நாகரீகம் தாய்லாந்தில் நுழைந்தது. வியட்நாமில்தான் மிகப்பழைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டு உளது. இது ஸ்ரீஇமாறன் (திருமாறன்) என்ற பாண்டிய மன்னனுடையது. அதன்பிறகு கம்போடியாவில் நிறைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. சம்பா என்று அழைக்கப்பட்ட வியட்நாம் ஆட்சியில் மட்டுமே 800 ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகள் உள.

 

வட தாய்லாந்தில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்தது. இதுதான் தாய்லாந்தின் பழைய கல்வெட்டு. இதில் மஹேந்திரவர்மன் என்ற மன்னன், சிவனின் வாஹனமான நந்தியை நிர்மாணம் செய்தி உளது.

இதில் விநோதம் என்னவென்றால் அதேகாலத்தில் காஞ்சீபுரத்தில் மாபெரும் பல்லவ மன்னனான மஹேந்திர பல்லவன் நந்தி சின்னத்தோடு ஆட்சி புரிந்துள்ளான். இருவருக்குமிடையேயான தொடர்பு ஆராயப்படவேண்டியது. கம்போடிய, தாய்லாந்து மன்னர்களும் பல்லவர்களைப் போல  ‘வர்மன்’ பட்டத்துடன் ஆண்டனர் என்பதும் குறிப்பிடற்பாலது.

 

மஹேந்திரவர்மன் கல்வெட்டு சூரின் (SURIN PROVINCE) மாகாணத்தில் கிடைத்   தது; அவன் எல்லா நாடுகளையும் வெற்றிகொண்டதற்காக சிவ பிரானுக்கு ‘நந்தி’ அமைத்ததாகக் கல்வெட்டு செப்புகிறது

 

இந்தியாவை போலவே அங்கும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானம் கொடுத்தது, கோவில் கட்டியது முதலிய செய்திகள் உள. இவை இல்லாவிடில் அந்த நாட்டின் வரலாறே அழிந்து போயிருக்கும். தமிழ் நாட்டிலும் இப்படி பிரம்மதேய (பிராமணருக்கு தானம்), தேவதான (கோவிலுக்கு தானம்) கல்வெட்டுகள் இல்லாவிடில் வரலாறே தெரியாமல் போயிருக்கும். இலக்கியங்களில் தேதி தெரியாது; கல்வெட்டுகளில் ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கும்.

 

பாங்காக் நகர மியூஸியத்தில் இரண்டாவது உதயாதித்ய  வர்மணின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டு பல சுவையான செய்திகளைத் தருகிறது பிராமண அர்ச்சகர் பரம்பரை பற்றிய செய்தி இது. தமிழ்நாட்டில் வேள்விக்குடி சாசனம் எப்படி பிராமணர்களுக்கு பாண்டிய மன்னர்கள் பழங்காலம் முதல் தானம் செய்ததைக் குறிப்பிடுகிறதோ அதே போல இந்த தாய்லாந்து கல்வெட்டு கைவல்ய சிவாச்சார்யார்கள் பற்றி சுமார் 400 ஆண்டுக் கதைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது

 

இது பிரசாத் கோக் சுதோத் தாம் என்னும் இடத்தில் கிடைத்தது. இப்பொழுது பாங்காக் தேஸீய மியூஸியத்தில் இருக்கிறது

 

க்மேர் வன்ம்சத்தை ஸ்தாபித்த ஜயவர்மன் காலத்தில் இருந்து அந்த பிராமணக் குடும்பம் மன்னர்களுக்கு சேவை செய்து வருவதாகக் கூறும் இக் கல்வெட்டு 1052 ஆம் ஆண்டினது ஆகும்; ஜயவர்மன் 802-ல் வம்சத்தை நிறுவினான். அவன் ஜாவவிலிருந்து (இந்தோநேஷியா) வந்து இந்திரபுரத்தில் அரசு நிறுவிய கதை; பின்னர் அதை ஹரிஹராலயத்துக்கு மாற்றிய கதை ஆகிய அனைத்தையும் இக் கல்வெட்டு விளம்புவதால் தாய்லாந்து வரலாற்றுக்கும் க்மேர் வரலாற்றுக்கும் இன்றியமையாதது இது என வரலாற்றுப் பேரறிஞர்கள் உரைப்பர்.

 

 

அத்தோடு க்மேர் அரசாட்சி முறை, அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுக்குக் குருவாக விளங்கிய பிராமணர்கள் ஆகியோர் பற்றிய செய்திகளையும் மொழிகிறது.

11 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

பிரஸாத் பனம் ரங் (PRASAT PHNOM RUNG) என்னும் இடம் மிகப் பிரஸித்தமானது. அங்குதான் நிறைய இந்துக் கடவுளரின் சிலைகள், சிற்பங்கள் இடம் பெறுகின்றன. அங்கு 11 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. இதிலிருந்து வட தாய்லாந்தின் 400 ஆண்டு வரலாற்றை அறிகிறோம். பத்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நரேந்திர ஆதித்யன், அவன் மகன் ஹிரண்யன் ஆகியோரின் வீரப் பிரதாபங்களை இவை நுவலும்.

 

27க்கு 53 (27×53) செண்டிமீட்டர் உடைய (ஒன்றரை அடிக்கும் மேல் உயரம்) உள்ள ஒரு ஸம்ஸ்க்ருத கல்வெட்டு சிவ பெருமானின் துதியோடு துவங்குகிறது. சிவ பெருமானை மஹா யோகி என்று புகழ்கிறது. அதில் ஹிரண்யன் தனது தந்தைக்குத் தங்கத்தினால் சிலை செய்து வைத்ததாகப் புகல்வான். சைவ மடங்களுக்குப் புதுக் கட்டிடங்கள் கட்டியதைக் கொண்டாடும் முகத்தான் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது.

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸம்ஸ்க்ருத கல்வெட்டு நாலே வரிகளில் உளது.

 

மடங்களில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள், சிவன், விஷ்ணு, லிங்கம் ஆகிய மூர்த்திகளை நிறுவியது ஆகியான பற்றிப் பகரும் கல்வெட்டுகளும் உள. அனைத்தும் அரிய பெரிய செய்திகளைத் தருகின்றன.

 

தமிழர் ஒருவர் சென்று ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோவில்களுடன் ஒப்பிடுவது பல முக்கிய செய்திகளைத் தரக்கூடும். ஸம்ஸ்க்ருத மொழி அறிவின்றி பழந் தமிழர்களின் கடலாதிக்கத்தை அறிவது அரிதிலும் அரிது.

 

ஆங்கிலேயர்கள் எழுதிய 1992 ஆம் ஆண்டு நூலில் உள்ள தகவல்களை நான் வடித்துத் தந்தேன். அவர்களுக்கு ஆழமான அறிவும் பற்றும் இல்லை என்பதால் நாம் ஆராய வேண்டியது அவஸியமாகும். ஆயிரம்   ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளை ஆராயும் கடமை நமக்குளது.

ஸம்ஸ்க்ருதம் படிக்க! தமிழ்  வாழ்க!!

 

-சுபம்,சுபம்-

தாய்லாந்தில் 44 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள்! (Post No.4993)

Written by London Swaminathan 

 

Date: 9 May 2018

 

Time uploaded in London – 19-17 (British Summer Time)

 

Post No. 4993

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

உலகெங்கிலும் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் இருக்கும் அளவுக்கு வேறு எந்த மொழிக்காவது இருக்குமா என்பது சந்தேகமே. அது மட்டுமல்ல இப்பொழுது உபயோகத்திலுள்ள மொழிகளில் இதைப் போல பழைய கல்வெட்டுகள் இருக்குமா என்பதும் ஐயப்பாடே.

 

ரிக் வேதத்திலுள்ள கடவுளின் பெயரில் கைச்சாத்திட்ட உடன்படிக்கை சிரியா- துருக்கி எல்லையில் கிடைத்தது. இந்த பொகஸ்கோய் கல்வெட்டு கி.மு.1380-ஐச் சேர்ந்தது. இது முழுக்க முழுக்க ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு அல்ல. ஆனால் இதற்குப் பின்னர் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. நீளமான கல்வெட்டுகளில் மிகவும் பிரபலமானது ருத்ரதாமனின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டாகும். இது குஜராத்தில் ஜூனாகட்டில் இருக்கிறது.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ருத்ரதாமன் கல்வெட்டு அருமையான ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டு உள்ளது.

 

இதை விட பெரிய அதிசயம் தாய்லாந்தில் நீளமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டு இருப்பதாகும்.

 

டில்லி பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருத பேராசிரியர் ஸத்ய வ்ரத சாஸ்திரி இரண்டு ஆண்டுகளுக்கு தாய்லாந்தில் தங்கி 1982 ஆம் ஆண்டில் பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். அதற்குப் பின்னரும் பல புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம். அவர் 44 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளைக் கணக்கிட்டு விவரங்களைத் தொகுத்துள்ளார். அதனடிப்படையில் சில சுவையான விவரங்களைக் காண்போம்.

 

 

தாய்லாந்தில் ஒரே வரியுள்ள ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டிலிருந்து 412 வரிகள் உள்ள கல்வெட்டு வரை கிடைத்து இருக்கின்றன.

 

லிங்கேஸ்வரம்  என்ற சொல் மட்டும் பொறிக்கப்பட்ட ஒரு சொல் கல்வெட்டிலிருந்து 128 ஸ்லோகங்களைக் கொண்ட ப்ராசீனபுரி கல்வெட்டு வரை இருப்பதால் அறிஞர்களுக்கு விருந்து படைத்தது போலாயிற்று.

இவை ஆறாம் நூற்றாண்டு முதல் 1250 CE வரை கிடைக்கின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள், செப்பேடுகள் கவிதை நடையில் எழுதப் பட்டு இருக்கின்றன.

 

 

ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட கவிதைகளின் நடை, அணிகள் யாப்பு, உவமைகள் மிகவும் அற்புதமானவை.

 

அவைகளில் பிரஸ்தாபிக்கப்படும் விஷயங்கள் இந்தியக் கல்வெட்டுகள் போலவே கோவில், குளங்கள், கிணறுகள் பற்றியவைதான். மேலும் அரசர்களை ‘ஆஹா’ ‘ஓஹோ’ என்று புகழ்வதிலும் நம்மையே பின்பற்றுகின்றனர்!

 

கவிஞனும் பிரம்மாவும்

ஒரு ஸம்ஸ்க்ருதக் கவிதை, கவிஞன் என்பவன் பிரம்மா (படைப்போன்) என்கிறது.

அபாரே காவ்ய சம்சாரே கவிர் ஏவ ப்ரஜாபதிஹி

யதாவை ரோசதே விஸ்வம்  ததேதம் பரிவர்த்ததே

 

பிரம்மா தான் நினைத்தபடி உலகைப் படைத்தான்; கவிஞனும் அப்படியே. அவனது உலகப் பார்வை ஏனையோரைப் போன்றது அன்று.அவன் நெடு நோக்கோடு மட்டும் பார்ப்பவன் அல்ல. புதிய கண்ணோட்டத்திலும் காண்பான்.

 

கங்கையை ஏன் ஜடாமுடியில் சிவன் ஏன் தரிக்கிறான்? அவனிடமுள்ள வெப்பத்தைத் தனிப்பதற்கே என்பான் ஒரு புலவன்.(பனம் ரங் கல்வெட்டு).

 

சிவனுடைய மூன்று கண்கள் சூரியன், சந்திரன், தீ என்பான் மற்றொரு புலவன் (பாங்காக் அரண்மனைக் கல்வெட்டு)

 

இவ்வாறு நிறைய கற்பனைகள் ஒவ்வொரு கல்வெட்டிலும் சிறகடித்துப் பறக்கும்; லெட்சுமி ஏன் விஷ்ணுவின் மார்பில் இருக்கிறாள்; சிவ பெருமான் உடலில் பாதிப் பகுதியை உமை அம்மை ஏன் எடுத்துக் கொண்டாள் என்பதற்கெல்லாம் புலவர்கள் காரணம் கற்பிக்கின்றனர் கல்வெட்டுகளில்.

 

ஆக வரலாறு மட்டுமின்றி இலக்கிய நயமும் கல்வெட்டுகளில் உள. ஸம்ஸ்க்ருதம் அறிந்தவர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும்.

 

ஸத்ய வ்ரத சாஸ்த்ரி அனதக் கல்வெட்டுகளில் அனுஷ்டுப் சந்தஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்று சொல்லிவிட்டு வேறு கல்வெட்டுகளின் யாப்பிலக்கண த் தையும் விவரித்துள்ளார்.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்,1500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி பாடியிருப்பது ஸம்ஸ்க்ருத மொழியின் சிறப்பைக் காட்டுகிறது.

–சுபம்—