தமிழகத்தில் புதிய கட்சி மு.மு.க. — தேர்தலில் போட்டியிடுமா?(Post No 2575)

fool

Written by S Nagarajan

 

Date: 26  February 2016

 

Post No. 2575

 

Time uploaded in London :–  4-44 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

நையாண்டி மடல்  (மடல் எண் 1)

 

முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்!

 

ச.நாகராஜன்

 

 

அன்புடையீர்,

 

நீஙகள் வெகு ஆவலுடன் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முமுக ( முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்) ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம்.

 

இதை ஏன் தமிழகத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது உங்களுக்கே மிக நன்றாகத் தெரியும்.

 

இங்கு இதன் உறுப்பினர்கள் ஒரே நாளில் ஆயிரக் கணக்கில் சேர்ந்து விடுவார்கள் என்பதே காரணம்.

 

இதில் சேர எந்த விதமான தகுதியும் தேவையில்லை என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

 

brit parties

தமிழகத்தின் ஒரு சில துர்பாக்கியசாலிகளைத் தவிர மற்ற அனைவருமே இதில் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

நான் முட்டாள் இல்லையே என்று சொன்னால், ஹ.. ஹ.. ஹ.., நிச்சயமாக நீங்கள் முட்டாள் தான்!

 

நான் முட்டாள், என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் சொன்னால், அப்புறம் என்ன, நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள், நீங்கள் கழகத்தின் ஆயுள் கால உறுப்பினர் தான்!

 

 

நீங்கள், ‘நான் முட்டாளா, இல்லையா என்று எனக்கே தெரியவில்லை என்ற முட்டாள் குழப்பத்தில் இருந்தால், கவலைப் பட வேண்டாம். சேர்க்கப்பட்டவுடன் கியாரண்டியாக நீங்கள் முட்டாள் ஆகி விடுவீர்கள்.

 

ஆக, சேருவதைப் பற்றிய பிரச்சினை இத்தோடு தீர்ந்தது.

அடுத்து நமது கழகத்தின் ஆலோசகர்களாக யார் வேண்டி விரும்பிச் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.

 

இந்தியாவின் தலை நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் தாம் நமது ஆலோசகர்கள்.

 

 

இவர்களது அபார அறிவுத் திறனையும் அனைவரையும் வழி நடத்தும் பாங்கையும் கண்டு உலகமே வியக்கிறது; அதிசயிக்கிறது.

 

நமது கொள்கைகளை வீடு வீடாக எப்படிக் கொண்டு சேர்க்கிறது என்ற கவலையே எந்த முட்டாளுக்கும் (அது தான் நீங்கள் உறுப்பினர் ஆகி விட்டீர்களே) வேண்டாம்.

 

 

டெல்லியில் உள்ள அனைத்து டெலிவிஷன் சானல்களும் நம்மை வெகுவாக விளம்பரப்படுத்த ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

இதற்காகவே, நரைத்த விக் வைத்த தடியர்( சற்று உடல் பருமனைக் குறிப்பிடுகிறோம்) கீச்சுக் குரலில் கத்திப் பேசும் பேராசிரியர், எதிராளியைப் பேச விடாமல் தானே காச் மூச் என்று கத்திக் கொண்டே இருக்கும் காம்ரேட், மற்றும் அழகிய சல்வார் கமீஸ், நல்ல லிப்ஸ்டிக் மற்றும் மேக்-அப்பில் கவனம் செலுத்தி ஸ்டுடியோவுக்கு வருகை புரியும் பெண்ணியப் போராளி ஆகிய அனைவரும் இந்த டெலிவிஷ சானல்கள் வாயிலாக நமக்கு நல்லாதரவு தினமும் தருவது உறுதி.

 

 

“இந்தியா அறிய விரும்புகிறது” என்ற கர்ஜனைக் குரலுடன் தினமும் நமது நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படும்.

நீங்கள் அறிவாளிகள் (யாராவ்து இருந்தால்) பற்றிப் பயப்பட வேண்டாம்.

 

நமது புதிய அகராதியை அவர்கள் முன் வீசி எறியுங்கள். அவர்கள்  சற்று மறுத்துப் பேசினால்..  .. ஹ. ஹ. அவர்களையே வீசி எறியுங்கள்.

 

 

எடுத்துக் காட்டாக ஒரு வார்த்தையைச் சொல்லி இந்த எமது முதல் மடலை  முடிக்கிறோம்.

 

செகுலரிஸம் என்றால்  மதச்சார்பின்மை என்று அந்த ஆக்ஸ்போர்டும் இதர அகராதிகளும் சொல்வது சுத்தப் பத்தாம் பசலித்தனம். செகுலரிஸம் என்றால் ஹிந்து மதத்தையும் அதைச் சார்ந்த தொன்மத்தையும் நம்பிக்கையையும் அதில் இருக்கும் உறுப்பினர்களையும் இழிவு படுத்துவதே! கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய கொள்கைகளைப் பற்றியோ அவர்களின் தொன்மம், நம்பிக்கை பற்றியோ பேசவே கூடாது. (நமக்கு எதற்கு உடல் ரீதியான விபரீதம்?) இதுவே செகுலரிஸம்.

 

IMG_9517 (2)

இப்படிப் பல புதிய விஷயங்களை நமது ஆலோசகர்கள் அவ்வப்பொழுது கூறிக் கொண்டே இருப்பார்கள். அதனால் நமது முட்டாள்தனம் நீண்ட நெடு நாளாய் இருக்கப் போவது உறுதி.

யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்த மடல் விரைவில் வரும்.

 

அன்புடன்

முமுக தலைவர்

 

 

கழகத்தில் சேராதே: தமிழர்களுக்கு எச்சரிக்கை!!

mahabharata-game-of-dice

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1229 ; தேதி 12 ஆகஸ்ட் 2014.

1500 அண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பேரறிஞன் திருவள்ளுவன் தமிழர்களைக் கடுமையாக எச்சரிக்கிறார்:

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலைப் புகின் (குறள் 937)

கழகத்தில் காலத்தைக் கழித்தால் பரம்பரையாக அவனுக்குக் கிடைத்த செல்வமும் தொலையும். அவனிடமுள்ள எல்லா நல்ல குணங்களும் அழிந்து போகும்!
கழகம்= சூதடும் இடம்.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் ( குறள் 935)

கழகத்தை நம்பி பொருள் எல்லாவற்றையும் கோட்டை விட்டவர் பலர் உண்டு! காரணம்? சூதாடும் இடம் (கழகம்), சூதாடும் கருவி, தனது சூதாட்டத் திறமை —- இவற்றை எல்லாம் நம்பி, ‘’இல்லாமல்’’ போனவர்கள் பலர்!

சுருக்கமாகச் சொன்னால் கழகத்தில் சேராதே, கழகத்துக்குப் போகாதே, போனால் நீ அழிந்து போவாய்!
வாழ்க வள்ளுவன்! வளர்க அவன் அறிவுரை!!

இதற்கு முன்னும் பின்னும் உள்ள எட்டு குறள்களில் முத்து முத்தாய் உதிர்க்கிறான் வள்ளுவன்:

sokkattan

புல்லட் பாயிண்ட் 1:
மீனைப் பார்த்தாயா? தூண்டிலைப் பார்த்தாயா? என்ன தெரிந்தது. உன் கதியும் அதே கதிதான் (குறள் 931)

புல்லட் பாயிண்ட் 2
நேற்று லட்டரியில் பத்து ரூபாய் விழுந்ததா? இனிமேல் உனக்கு நூறு முறை தோல்விதான், நீ ஒரு ஏமாளி (குறள் 932)

புல்லட் பாயிண்ட் 3
காயை உருட்டினால் பொருள் கிடைக்கும் என்று சொன்னாயா? உன் கிட்ட நல்ல வழியில் வந்த பொருளும் உருளப் போகுது! (குறள் 933)

புல்லட் பாயிண்ட் 4
டேய்! மண்டு! ‘பெட்’ கட்டினாயா? ரேசுக்குப் போனாயா? லாட்டரி சீட்டாய் வாங்கிக் குவிக்கிறாயா? இனிமேல் உனக்கு வறுமை, சிறுமை ஒன்றுக்கும் குறைவே இல்லை, போ! (குறள் 934)

புல்லட் பாயிண்ட் 5
சூதாட்டத்துக்கு இன்னொரு பெயர் முகடி (மூதேவி). அவள் உன்னை விழுங்கினால் சோற்றுக்கே லாட்டரிதான் (குறள் 936)

புல்லட் பாயிண்ட் 6
சூதாடினாயா? இனிமேல் உன் வாயில் பொய் நிறையவே வரும், அருள் எல்லாம் ஓடிப்போகும் (குறள் 938)

புல்லட் பாயிண்ட் 7
உனக்கு இனிமேல் —- “ரோடி, கப்டா அவ்ர் மகான்” — கிடைக்காது. அதாவது உணவு, புகழ், கல்வி, உடை, செல்வம் ஆகிய ஐந்தும் ‘அவுட்’! (குறள் 939)

புல்லட் பாயிண்ட் 8
நோய் வந்தவுடன் உடம்பின் மேலே கூடுதல் காதல் வருது இல்ல! அதே போல சூதாட்டத்தில் பொருளை இழக்க இழக்க அதன் மேல உனக்கு “லவ்” அதிகரிக்கும், ஜாக்கிரதை! (குறள் 940)

banu karnan 2

ரிக்வேதம் என்ன சொல்கிறது?

சூதாடாதே, நிலத்துக்குப் போய் சோளம் விதை!
கொஞ்சம் ஜெயித்தவுடன் அதைப் பற்றி உயர்வாக எண்ணி விடாதே!
உன்னுடைய ஆடு மாடுகளை எண்ணிப் பார், உனக்கு மனைவியும் உண்டு!
இதுதான் சாவித்ரியே என் கிட்ட சொன்னாள்!
(மண்டலம் 10-34-13)

உலகின் மிகப் பழைய சமய நூல் கூறிய அறிவுரை இது!
கவச ஐலூசர் என்ற முனிவர் காதில் ஒலித்த மந்திரம் இது. வேத மந்திரங்களை சங்க காலப் புலவர்கள் ‘’கேள்வி’’ (காதில் விழுந்தது) என்றும் ‘’மறை’’ (ரகசியம்) பாடுகின்றனர்.

கம்பன் என்ன சொன்னான்?

வள்ளுவனுக்கு சளைத்தவனா கம்பன்? அவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்?

சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்
நீதி மைந்த! நினக்கிலை ஆயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவையென ஓர்தியே (கம்ப ராமாயணம், மந்தரை-2)
ஒப்பிடுக : குறள் 934

banu karnan

அறநெறிச்சாரம் (147) என்ன சொல்கிறது?

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் – சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
இருளாம் ஒருங்கே இவை
ஒப்பிடுக: குறள் 939.

பாரதி என்ன சொன்னான்?

“கோயிற் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்பான் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்து இழந்தான் — சீச்சீ! சிறியர் செய்த செய்கை செய்தான்”
என்ற பாரதியாரின் பாஞ்சாலி சபதப் பாடல் சூதாடிய தர்மபுத்திரனைச் சாடுகிறது!

வள்ளுவன் வாழ்க ! (சூதாட்டக்) கழகங்கள் அழிக !!