
Post No. 9350
Date uploaded in London – – 7 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் போர் நடந்த பொழுது, கும்பகர்ணன்
ராமரைப் பார்த்து “ இராமா, இந்தப் போரில் நீ வெற்றி பெறுவதும்
நான் இறப்பதும் உறுதி. அப்படி இருக்கும் போது நமக்குப் பின்னால்
வரக்கூடிய சந்ததியினர் உன்னையும், இராவணனைப் பற்றியும்
பெருமை பேசுவார்களே தவிர என்னைப் பற்றி நினைக்கக் கூட
வகையில்லாமல் போய் விட்டதே என்று கூறி வருந்தினான்.
“ வருந்தாதே, கும்பகர்ணா, எங்களைப் பற்றி பேசும் இடங்களில்
உன்னைப் பற்றி பத்து பேராவது நினைக்கும்படி செய்துவிடுகிறேன்”
என்றாராம் ராமர்!!!
அதனால் தான் இராமயணம் நடக்கும் இடங்களில் குறைந்தது பத்து
பேராவது கும்பகர்ணனை நினைத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
(புலவர் கீரனின் சொற்பொழிவிலிருந்து)
****
அற்பதங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?? என்று பிரபல
ஓவியர் பிக்காசோவைப் பார்த்து ஒருவர்கேட்டார்.
உண்டு, உண்டு, நான் இதுவரை சுமார் 5000 படங்களை வரைந்திருக்கிறேன். ஆனால நான்
வரைந்ததாக உலகில் சுமார் 10,000 படங்கள் உலவுகின்றனவே??? இது அற்புதம் இல்லையா ???
மருத்துவக்கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது
பேராசிரியர் ஒரு மாணவனிடம் கேட்டார்” இந்த மருந்தை நோயாளிக்கு எந்த அளவில் ஊசி
மூலம் செலுத்த வேண்டும்?
“இரண்டு ஸி ஸி “ என்றான் மாணவன்.
இரண்டு நிமிடம் கழித்து என்ன நினைத்துக் கொண்டானோ,
அந்த மாணவன் “ஐ யாம் சாரி சார், ஒரு ஸி ஸி தான்” என்றான்.
பேராசிரியர் அமைதியாக சொன்னார், “டூ லேட், உன் பேஷன்ட்
இறந்து போய் ஒரு நிமிடம் ஆகி விட்டது………….”
****
வால் உண்டு, வயிறில்லை,
வால் உண்டு , கால் இல்லை,
வாய் வழியே குடிப்பதெல்லாம்
வால் வழியே விட்டிடுவான்?
நான் யார்??
விடை : Funnel- புனல்
***

இந்தியாவில் மிகவும் “கவர்ச்சி” மிகுந்த கிராமம் எது?
குஜராத் மாநிலத்தில் உள்ள “ சாரதா” என்னும் கிராமம்!!!
எப்படியா? அதன் P I N கோடு 36 – 22 – 35 !!!
****
அரசியல் இப்போ ரொம்ப மோசமாகிவிட்டது……..
எப்படிச் சொல்கிறீர்கள்?
தேர்தலில் தோற்றுப் போவதற்குக் கூட நிறைய செலவு செய்ய
வேண்டியிருக்கிறது !!!
***
“நமது இளைஞர் சமுதாயம் ஆடம்பரத்தை நாடுகிறது.
கட்டுப்பாடுகளை மீறுகிறது. பெரியவர்களை மதிப்பதில்லை.
இந்தக் குழந்தைகள் யதேச்சிகாரத்தை விரும்புகின்றன.
பெற்றோர்களை மதித்து நடப்பபதில்லை”
சொன்னது – இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்
வாழ்ந்த சாக்ரடீஸ் SOCRATES !!!
–subham—
tags-கவர்ச்சி , கிராமம்